Tuesday 20 September, 2011

வலைச்சரம் ஆசிரியருக்கு நன்றி & நாயகி

                                        வலைச்சரம் ஆசிரியராக நான் கடந்த வாரம்




12/ 9 /2011 திங்கள் -         கும்புடுறேன் சாமியோவ் எனது மாய உலகத்தை பற்றிய
                                              அறிமுகம்.

13/ 9 /2011 செவ்வாய் -   மாதா பற்றிய பதிவு மற்றும் அம்மா பற்றிய பதிவுகளை....           ......                                          பகிர்ந்த பதிவர்களின் அறிமுகங்கள்.

14/ 9 /2011 புதன் -              பிதா பற்றிய பதிவு மற்றும் அப்பாவை பற்றிய ...       . . .........                                                    பதிவுகளை பகிர்ந்த பதிவர்களின் அறிமுகங்கள்.

15/ 9 / 2011 வியாழன்-     குரு பற்றிய பதிவு மற்றும் தொழில்நுட்ப பதிவுகளை .  . .     .                                                   பகிர்ந்த பதிவர்களின் அறிமுகங்கள்.
                                                vote பெட்டிகளில் யார் வாக்களித்திருக்கிறார்கள் என ..........                                      அறிந்து கொள்ள குருவை கிளிக் செய்து பார்க்கவும்

16/ 9 / 2011 வெள்ளி -      தெய்வம் பற்றிய பதிவு மற்றும் ஆன்மீக பதிவுகளை. . .                                        .                                      பகிர்ந்த பதிவர்களின் அறிமுகங்கள்.

17/ 9 /2011- சனி -                நட்பு பற்றிய பதிவு மற்றும் பதிவுலக நண்பர்களின் . . . . . . . .                                                    அறிமுகங்கள்.

18/ 9 /2011 - ஞாயிறு -       கலவை பதிவு மற்றும் பதிவுலக நண்பர்களின் . . . . . . . . . . . . . . .                                         அறிமுகங்கள்.

    வலைச்சர ஆசிரியராக எனக்கு வாய்ப்பளித்து சிறப்பாக பணி அமைத்து கொடுத்து ஒத்துழைப்பும் கொடுத்த மதிப்பிற்கும் மரியாதைக்கும் உரிய வலைச்சர ஆசிரியர் திரு.சீனா ஐயா அவர்களுக்கு   மனம் கனிந்த மகிழ்ச்சியுடன் நன்றியை தெரிவித்துக்கோள்கிறேன்...                                                


              அன்புடன்,

                             





      நாயகி குறும்படத்திற்கு நான் எழுதிய பாடல்

                               பல்லவி
          அம்மாவின் கனவுகள்
          உன்னாலே தீருமா
          கார்கால மேகம்போல போகுதே
          யாரரிவாரோ... யாரரிவாரோ....
          போகும் பாதை யாரரிவாரோ...
                                                                          (அம்மாவி கனவுகள்...)
                             சரணம்
         பெண்ணாக பிறந்ததினால்
         போராட்டம் தொடருமா
         இனி வரும் காலங்கள்
         பொன்னாக மாறுமா
         பூ வசந்தம் அருகே தான்
 
         உயிரின் பயணம் ஆனதே
        பாதை மாறி போனதே
        சிறையில் சிறகு முளைக்குதே
        வானம் நாளை அழைக்குதே
        ஆசைகளே மனதினிலே......
                                                                     ( அம்மாவின் கனவுகள்.. )    
கரு:                                            
(மகள் படித்து பெரிய ஆளாக வரவேண்டும் என்பது அம்மாவின் ஆசை..அம்மா இறந்துவிட... குடிகார தந்தையின் கொடுமை தாளாமல்.. ஒரு கட்டத்தில் தந்தையை கொன்றுவிட்டு சீர்திருத்த பள்ளியில் சென்று தனது படிப்பை தொடர்கிறாள் ...கதையின் நாயகி - இயக்கம் : திரு. சிவம் அவர்கள்)
           
              அன்புடன்,

84 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

அந்த பாடலின் லிங்க் இருக்கா? வரிகள் அருமையா இருக்கே

நிரூபன் said...

வணக்கம் பாஸ்.,
வலைச்சரம் சூப்பராப் பண்ணியிருந்தீங்க..
நன்றி...

RAMA RAVI (RAMVI) said...

நல் வரவு.
வித்யாசமான கதைக்கு பாட்டு எழுதியிருக்கீங்க ராஜேஷ்.பாடல் வரிகள் மிக அருமை. வாழ்த்துக்கள்.

நிரூபன் said...

வித்தியாசமான கதைக்கு ஏற்ற வகையில் பாடலினையும் எழுதியிருக்கிறீங்க...

தந்தையினைக் கொன்று விட்டு..
தன் குடும்ப முன்னேற்றத்திற்காகப் படிக்க கிளம்பும் சிறுமியின் மனதில் நம்பிக்கையொளி பரவும் வண்ணம் இறுதிப் பந்தியில் உள்ள சரணத்தின் வரிகள் அமைந்துள்ளது.

நிரூபன் said...

தல தமிழ்மணம் ஓட்டுப் போட முடியலை..
அப்புறமா வாரேன்.

கவிதை வீதி... // சௌந்தர் // said...

வாழ்த்துக்கள்....

பாடலும் அருமையாக இருக்கிறது...

kobiraj said...

பாடல் வரிகள் அருமை .ஓட்டு போட்டாச்சு

kobiraj said...

இன்று என் வலையில் சின்ன தல உங்களுக்கு ஒஸ்தி தேவைதானா ? http://kobirajkobi.blogspot.com/2011/09/blog-post_20.html

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தமிழ்மணம் இணைத்தாயிற்று...

shanmugavel said...

பாடல் நன்று.

M.R said...

பாடல் அருமையாக இருக்கிறது

Yaathoramani.blogspot.com said...

பாடல் அருமை
அசத்துகிறீர்கள் தொடர வாழ்த்துக்கள்
த.ம 5

Unknown said...

வாழ்த்துக்கள் கவிஞரே!

சென்னை பித்தன் said...

நல்ல பாடல்.
கலக்கல் வாரம்.

அந்நியன் 2 said...

வலைச்சரம் வாரமும் உங்களின் குறும்படம் பாடலும் அருமையாக இருந்தது ராஜேஷ்.

வாழ்த்துக்கள்.

தலை மறைவான அதிரா said...

முன்னாள் வலைச்சர ஆசிரியருக்கு வயக்கம்_()_ .

ஞாயிற்றுக் கிழமையும் எழுதியிருக்கிறீங்க, நான் பார்க்கவில்லை, இனிப்போய்ப் பார்க்கிறேன்.

தலை மறைவான அதிரா said...

அம்மாவின் ஆசைகள் அழகூஊஊஊஊஉ....

கவலையீனம் “போராட்டம்” எழுத்துப் பிழை திருத்திடுங்க மாயா.

Anonymous said...

வலைச்சர வாரமும் பாடலும் அருமை... ராஜேஷ்

குறையொன்றுமில்லை. said...

பாடல் வரிகள் நல்லா எழுதி இருக்கீங்க. வலைச்சர ஆசிரியர்பொறுப்பும் திறமையாக செய்திருந்தீங்க வாழ்த்துக்கள்.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

வாழ்த்துக்கள் .

Mathuran said...

கதைக்கேற்ற அருமையான பாடல் வரிகள்.. வாழ்த்துக்கள்

இன்று என் தளத்தில்
கள்ள மாங்காய் பிடுங்கிய பிரபல பதிவர்கள்

ராஜா MVS said...

பாடல் வரிகள் அணைத்தும் மிக அருமை நண்பா...

வாழ்த்துகள்... ராஜேஷ்

மகேந்திரன் said...

நாயகி குறும்படப் பாடல்
சும்மா அசத்துது நண்பரே,,,

வலைச்சரப் பணியை திறம்பட முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.

Angel said...

ராஜேஷ் வலைச்சரத்தில் உங்கள் பகிர்வு மிகவும் அருமையாக இருந்தது ,
கதம்ப மலர்களை நேர்த்தியாய் கோர்த்து இருந்தீர்கள் .

Angel said...

பாடல் வரிகள் அருமை .
ஹைலைட் செய்ய முடியல்லியே (right click disabled ), கர்ர்ர்ரர்ர்ர்ரர்

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
அந்த பாடலின் லிங்க் இருக்கா? வரிகள் அருமையா இருக்கே//

வாங்க தமிழ் வாசி... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்.,
வலைச்சரம் சூப்பராப் பண்ணியிருந்தீங்க..
நன்றி...//

வணக்கம் பாஸ்... மிக்க நன்றி தல

மாய உலகம் said...

RAMVI said...
நல் வரவு.
வித்யாசமான கதைக்கு பாட்டு எழுதியிருக்கீங்க ராஜேஷ்.பாடல் வரிகள் மிக அருமை. வாழ்த்துக்கள்.//

வாங்க... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
வித்தியாசமான கதைக்கு ஏற்ற வகையில் பாடலினையும் எழுதியிருக்கிறீங்க...

தந்தையினைக் கொன்று விட்டு..
தன் குடும்ப முன்னேற்றத்திற்காகப் படிக்க கிளம்பும் சிறுமியின் மனதில் நம்பிக்கையொளி பரவும் வண்ணம் இறுதிப் பந்தியில் உள்ள சரணத்தின் வரிகள் அமைந்துள்ளது.//

சரியாக புரிந்துள்ளீர்கள் நண்பரே.. தங்களது ரசனைக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
தல தமிழ்மணம் ஓட்டுப் போட முடியலை..
அப்புறமா வாரேன்.//

பாஸ் மறக்காம வந்துருங்க....

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
வாழ்த்துக்கள்....

பாடலும் அருமையாக இருக்கிறது...//

வாழ்த்துக்கும் கருத்துக்கும் நன்றி நண்பரே!

மாய உலகம் said...

kobiraj said...
பாடல் வரிகள் அருமை .ஓட்டு போட்டாச்சு//

வாங்க..நன்றி நண்பரே

மாய உலகம் said...

# கவிதை வீதி # சௌந்தர் said...
தமிழ்மணம் இணைத்தாயிற்று...//

நன்றி நண்பரே!

மாய உலகம் said...

shanmugavel said...
பாடல் நன்று.//

நன்றி நண்பரே!

மாய உலகம் said...

suryajeeva said...
super//

thank you bro..

மாய உலகம் said...

M.R said...
பாடல் அருமையாக இருக்கிறது//

நன்றி சகோ!

மாய உலகம் said...

Ramani said...
பாடல் அருமை
அசத்துகிறீர்கள் தொடர வாழ்த்துக்கள்
த.ம 5//

வாங்க சகோ! கருத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி

மாய உலகம் said...

அப்பு said...
வாழ்த்துக்கள் கவிஞரே!//

நன்றி சகோதரரே!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
நல்ல பாடல்.
கலக்கல் வாரம்.
//

நன்றி அன்பரே

மாய உலகம் said...

அந்நியன் 2 said...
வலைச்சரம் வாரமும் உங்களின் குறும்படம் பாடலும் அருமையாக இருந்தது ராஜேஷ்.

வாழ்த்துக்கள்.//


வாங்க அந்நியன்... கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி சகோ

மாய உலகம் said...

athira said...
முன்னாள் வலைச்சர ஆசிரியருக்கு வயக்கம்_()_ .

ஞாயிற்றுக் கிழமையும் எழுதியிருக்கிறீங்க, நான் பார்க்கவில்லை, இனிப்போய்ப் பார்க்கிறேன்.//

பாத்துட்டு மறக்காம திரும்பவும் வரணும் ஆமாஆஆஆ.... நன்றி அதிஸ்ஸ்ஸ்ஸ்

மாய உலகம் said...

athira said...
அம்மாவின் ஆசைகள் அழகூஊஊஊஊஉ....

கவலையீனம் “போராட்டம்” எழுத்துப் பிழை திருத்திடுங்க மாயா.//

நீங்க நினைச்ச மாதிரி.... மியூசிக் டைரக்டர் அழுதுகிட்டே தான் பாடுவார்...
ஆஹா முத ஆளா வந்திருக்க கூடாதா அதிஸ்ஸ்ஸ்ஸ் ... சரி சரி யாரும் பாக்குல.. மாத்திடுறேன்.... ஹா ஹா ஹலோ மியாவ் நானும் போராட்டம்னு தான் போட்ட்ருக்கேன்... ஏன் பொய் சொல்றீங்க அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ரெவெரி said...
வலைச்சர வாரமும் பாடலும் அருமை... ராஜேஷ்//

வாங்க ரெவரி.. நன்றி

2

மாய உலகம் said...

Rathnavel said...
வாழ்த்துக்கள்.
//

வாங்க வாழ்த்துக்கு நன்றிங்க

மாய உலகம் said...

Lakshmi said...
பாடல் வரிகள் நல்லா எழுதி இருக்கீங்க. வலைச்சர ஆசிரியர்பொறுப்பும் திறமையாக செய்திருந்தீங்க வாழ்த்துக்கள்.//

வாங்கம்மா.... வாழ்த்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
வாழ்த்துக்கள் .//

நன்றி சார்

மாய உலகம் said...

மதுரன் said...
கதைக்கேற்ற அருமையான பாடல் வரிகள்.. வாழ்த்துக்கள்

//

வாங்க நண்பரே நன்றி

மாய உலகம் said...

ராஜா MVS said...
பாடல் வரிகள் அணைத்தும் மிக அருமை நண்பா...

வாழ்த்துகள்... ராஜேஷ்//

வாங்க நண்பரே! கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
நாயகி குறும்படப் பாடல்
சும்மா அசத்துது நண்பரே,,,

வலைச்சரப் பணியை திறம்பட முடித்தமைக்கு வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பரே! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி நண்பரே!

மாய உலகம் said...

angelin said...
ராஜேஷ் வலைச்சரத்தில் உங்கள் பகிர்வு மிகவும் அருமையாக இருந்தது ,
கதம்ப மலர்களை நேர்த்தியாய் கோர்த்து இருந்தீர்கள் .//

வாங்க தோழி... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

தலை மறைவான அதிரா said...

மாயா... மாயா.... திரும்பவும் வந்துட்டேன்....:))).

பின்னூட்டத்தையும் லொக் போட்டு வச்சிருக்கிறீங்களே கொப்பி பேஸ்ட் பண்ண முடியாமல்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அப்பூடி என்னதான் புதையல் கிடக்கு பின்னூட்டத்தில?:)).

தலை மறைவான அதிரா said...

மாயா நீங்க பகல்லயா? நைட்லய நித்திரை கொள்ளுவீங்க?:)))

மாய உலகம் said...

angelin said...
பாடல் வரிகள் அருமை .
ஹைலைட் செய்ய முடியல்லியே (right click disabled ), கர்ர்ர்ரர்ர்ர்ரர்//

கருத்துக்கு நன்றி...அதுவா ஹா ஹா மாய உலகத்துல ஒரு மியாவ் உலாவிட்டுருக்குங்க... ஒரு சேஃபிடிக்கு... எதுக்கும் நீங்க கேர்ஃபுல்லா பதிவுகள கையாளுங்க அப்பறம் எல்லாம் தேம்ஸ் முதலைக்கு போய் சேந்துரும்.... ஹா ஹா

மாய உலகம் said...

athira said...
மாயா... மாயா.... திரும்பவும் வந்துட்டேன்....:))).

பின்னூட்டத்தையும் லொக் போட்டு வச்சிருக்கிறீங்களே கொப்பி பேஸ்ட் பண்ண முடியாமல்.... கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).

அப்பூடி என்னதான் புதையல் கிடக்கு பின்னூட்டத்தில?:)).//

இல்லையே பின்னூட்டம் லாக் ஆகிருக்காது.... நீங்க போஸ்ட் கமேண்ட க்ளிக் பண்ணாம செலக்ட் செய்து பாத்துருப்பீங்க.... முதல மியாவோட கிட்னிய களவாடிட்டியா ஹா ஹா ஹா

மாய உலகம் said...

athira said...
மாயா நீங்க பகல்லயா? நைட்லய நித்திரை கொள்ளுவீங்க?:)))//

சூரியன் தூங்கலாம்... எனது விழி தூங்காது... அவ்வ்வ்வ்

தலை மறைவான அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). இண்டைக்கு முதலையிடம் மாயா மாட்டினா அவ்ளோதான்.... வால் அடிக்கிற அடியில தேம்ஸ் தண்ணியெல்லாம் பக்கிங்காம் பலசுக்குள்ள போய், எங்கட குயினுக்கு தடிமனாக்கிட்டுது....:)).

அதால ஸ்கொட்லண்ட் யாட் போலீசூஊஊஊஊஊஊ தேடிட்டிருக்குது மாயாவை:)))

தலை மறைவான அதிரா said...

//சூரியன் தூங்கலாம்... எனது விழி தூங்காது... அவ்வ்வ்வ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஏன் தேம்ஸ் குளிருக்கு விழி விறைச்சுப்போச்சுதோ?.. முதலை விழி மூடாமல்தான் தூங்குமாமே .... என்னா பொருத்தம்.... என்னா பொருத்தம்....:)))))... மேலூருக்குக் குறிகாரன் சொன்னா சொன்னதுதான்ன்ன்ன்:)).

மாய உலகம் said...

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))). இண்டைக்கு முதலையிடம் மாயா மாட்டினா அவ்ளோதான்.... வால் அடிக்கிற அடியில தேம்ஸ் தண்ணியெல்லாம் பக்கிங்காம் பலசுக்குள்ள போய், எங்கட குயினுக்கு தடிமனாக்கிட்டுது....:)).

அதால ஸ்கொட்லண்ட் யாட் போலீசூஊஊஊஊஊஊ தேடிட்டிருக்குது மாயாவை:)))//

அய்யய்யோ... முதலைக்கு எம்மேல அவ்வளவு கோபமா.. டேய் முனியாண்டி குருவி ரொட்டி பார்சல்... முதல முதல முதல குட்டி...

என்னது ஸ்காட்லாண்ட் போலிசு தேடுதா அவ்வ்வ்வ்வ்வ்.... நான் இண்டர்நேசனல் பில்லாவையே மிஞ்சுட்டனா... மாயா அந்த ஸ்டிக்கர் போட்ட எடுத்து கன்னத்துல ஒட்டிக்க... நான் அவனில்லை தானனனா தானனா தனனா

மாய உலகம் said...

athira said...
//சூரியன் தூங்கலாம்... எனது விழி தூங்காது... அவ்வ்வ்வ்//

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:), ஏன் தேம்ஸ் குளிருக்கு விழி விறைச்சுப்போச்சுதோ?.. முதலை விழி மூடாமல்தான் தூங்குமாமே .... என்னா பொருத்தம்.... என்னா பொருத்தம்....:)))))... மேலூருக்குக் குறிகாரன் சொன்னா சொன்னதுதான்ன்ன்ன்:)).//

ஆஹா... எப்படி பால் போட்டாலும் கோல் போடுறாங்கப்பூ..... இதுல பொருத்தம் வேறய... அவ்வ்வ் முதல முழிச்சுட்டு இருக்கா தூங்கிட்டு இருக்கான்னு தெரியலையே... குறிகாரன்னுக்கு கோட்டர் வாங்கி கொடுத்தும் காட்டிக்கொடுத்துடானே... அடேய் மேலூரா.... தோ வாரேன்...

வலையுகம் said...

சகோ எப்பூடி இருக்கீக நலமா?
ஆமா அந்த குறும்பட கணொளி இருக்க?

கரு நல்லயிருக்கு ஆனா கொலை கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாயிருக்கு

ம்ம் பார்ப்போம்

பகிர்வுக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

ஹைதர் அலி said...
சகோ எப்பூடி இருக்கீக நலமா?
ஆமா அந்த குறும்பட கணொளி இருக்க?

கரு நல்லயிருக்கு ஆனா கொலை கொஞ்சம் மனசுக்கு கஷ்டமாயிருக்கு

ம்ம் பார்ப்போம்

பகிர்வுக்கு நன்றி நண்பரே//

நலம் சகோ...நீங்களும் சுகம் என நம்புகிறேன்... காணோளி கன்வெர்ட் பிராப்ளம்..இணைக்க முயல்கிறேன்... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி சகோ

யானைகுட்டி ஞானேந்திரன் திருநெல்வேலி said...

நல்ல பல தகவல்கள் ...
வாழ்த்துக்கள் ...
வாழ்த்தக்கள்

உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!

இராஜராஜேஸ்வரி said...

சிறப்பான வலைச்சரத்திற்கும்

அருமையான பாடல்வரிகளுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

பாடல்வரிகள் நாயகியின் பரிமாணத்தை காட்சிப்படுத்தும் வண்ணம் இழைத்திருப்பது அருமை.

சத்ரியன் said...

ராஜேஷ்,

பாடலின் வரிகள் கதையின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்.

கடம்பவன குயில் said...

தங்கள் பாடலின் வரிகள் அனைத்துமே கதைக்கருவை சுருங்கச் சொல்லின.

கடம்பவன குயில் said...

கடைசி 3 வரிகளில்......

சிறையில் சிறகு முளைக்குதே
சுதந்திர வானம் எனை அழைக்குதே..
ஆசைகளே மனதினிலே...

சுதந்திர வானம் என்ற சொல் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன.

நண்பர் என்ற உரிமையில் சொல்லும் கருத்து. தவறென்றால் மன்னிக்கவும்.

இந்திரா said...

பாடல் வரிகள் நல்லாயிருக்கு.
காணொளி இணைச்சிருக்கலாம்ல.

அப்புறம்ம்ம்..
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தமைக்கு வாழ்த்துக்கள்.

காட்டான் said...

பாடல் வரிகள் கலக்கல்.. வலைச்சர ஆசிரியராக இருந்து சிறப்பான பணியாற்றினீர்கள்.. அதில் என்னையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி..

dsfs said...

பாடல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்

மாய உலகம் said...

யானைகுட்டி @ ஞானேந்திரன் said...
நல்ல பல தகவல்கள் ...
வாழ்த்துக்கள் ...
வாழ்த்தக்கள்

உங்கள் பார்வைக்கு ....
பதிவர்களின் சொத்து மதிப்பு அதிகரித்துள்ளது' அரசு அதிர்ச்சி !!!//

வாழ்த்துக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
சிறப்பான வலைச்சரத்திற்கும்

அருமையான பாடல்வரிகளுக்கும் வாழ்த்துக்கள். பாராட்டுக்கள்.

பாடல்வரிகள் நாயகியின் பரிமாணத்தை காட்சிப்படுத்தும் வண்ணம் இழைத்திருப்பது அருமை.//

தங்களது புரிதலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றிகள்

மாய உலகம் said...

சத்ரியன் said...
ராஜேஷ்,

பாடலின் வரிகள் கதையின் சூழலுக்கு பொருத்தமாக இருக்கிறது. வாழ்த்துக்கள்//

வாங்க நண்பரே! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
தங்கள் பாடலின் வரிகள் அனைத்துமே கதைக்கருவை சுருங்கச் சொல்லின.//

தங்களது கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
கடைசி 3 வரிகளில்......

சிறையில் சிறகு முளைக்குதே
சுதந்திர வானம் எனை அழைக்குதே..
ஆசைகளே மனதினிலே...

சுதந்திர வானம் என்ற சொல் பொருத்தமாய் இருக்கும் என்று நினைக்கிறேன.

நண்பர் என்ற உரிமையில் சொல்லும் கருத்து. தவறென்றால் மன்னிக்கவும்.//

நண்பர்கள் கருத்து சொல்ல பரிபூரண உரிமை இருக்குங்க.... உங்களது கருத்தும் சரியானதே...ஆனால் வானம் நாளை அழைக்குதேங்குற வரியிலேயே சுதந்திரம் என்பது மறைமுகமாக ஒளிந்திருக்கு.. தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

இந்திரா said...
பாடல் வரிகள் நல்லாயிருக்கு.
காணொளி இணைச்சிருக்கலாம்ல.

அப்புறம்ம்ம்..
வலைச்சர ஆசிரியர் பொறுப்பேற்றிருந்தமைக்கு வாழ்த்துக்கள்.//

காணொளி கன்வெர்ட் பண்ணுவதில் சிக்கல் ஏற்பட்டது தோழி விரைவில் சரி செய்து இட முயச்சிக்கிறேன்... தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

காட்டான் said...
பாடல் வரிகள் கலக்கல்.. வலைச்சர ஆசிரியராக இருந்து சிறப்பான பணியாற்றினீர்கள்.. அதில் என்னையும் அறிமுகபடுத்தியதற்கு நன்றி..//

வாங்க மாம்ஸ்... நன்றி...வலையுகத்துல எனக்கு பிடிச்ச பதிவர்கள்ள நீங்களும் ஒன்னு மாம்ஸ் எப்படி விட முடியும்....

மாய உலகம் said...

பொன்மலர் said...
பாடல் நன்றாக இருக்கிறது. வாழ்த்துகள்//

வாங்க... தங்களது கருத்தும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது...மனம் கனிந்த நன்றி

கோகுல் said...

வலைச்சரம் முடிந்து மாயுலகச்சரம் தொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்!

மாய உலகம் said...

கோகுல் said...
வலைச்சரம் முடிந்து மாயுலகச்சரம் தொடுத்திருக்கீங்க வாழ்த்துக்கள்!//

நன்றி நண்பரே!

Mahan.Thamesh said...

தாமதத்துக்கு மன்னிக்கவும் . வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளையும் இன்று தான் படித்தேன் அருமை சகோ . வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

Mahan.Thamesh said...
தாமதத்துக்கு மன்னிக்கவும் . வலைச்சரத்தில் உங்கள் பதிவுகளையும் இன்று தான் படித்தேன் அருமை சகோ . வாழ்த்துக்கள்//

வாங்க நண்பரே! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி

கவி அழகன் said...

வணக்கம் நண்பா வலைச்சரத்துக்கு வர முடியாமல் போய்விட்டது மனிக்கவும்
பதிவுகளை இப்பொழுது தான் வாசிக்கின்றேன்

வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

கவி அழகன் said...
வணக்கம் நண்பா வலைச்சரத்துக்கு வர முடியாமல் போய்விட்டது மனிக்கவும்
பதிவுகளை இப்பொழுது தான் வாசிக்கின்றேன்

வாழ்த்துக்கள்//

வாங்க நண்பரே! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

Agape Tamil Writer said...
அன்பு சகோதரா, இந்த வலைபதிவு முயற்சி மிகவும் அருமை, தமிழர்கள் தமிழில் பிண்ணூட்டமிட, தமிழ் எழுதியை நிறுவி வாசகர்களுக்கு உதவலாமே, அதிக விவரங்களுக்கு இங்கே சொடுக்கவும் நன்றி//

வாங்க சகோ.... கண்டிப்பாக நிறுவுகிறேன் தங்களது வருகைக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out