Saturday 31 December, 2011

உங்கள மாதிரி நல்லவங்க யாருமே இல்லைங்க - இசையும் கதையும் 2


ஞாபகம் வருதே ஞாபகம் வருதே !

முதல் முறையாக இண்டர்வியுக்கு சென்றதைப் பற்றி...

ஒரு முறை வாட்டர் புயூரிஃபையர் கம்பெனிக்கு மார்க்கெட்டிங் ஃபீல்டுக்கான இண்டர்வியூக்கு சென்றேன்.. அந்த கம்பெனியின் ஜென்ரல் மேனேஜர் இண்டர்வியூ எடுத்தார்.... நான் அந்த கம்பெனியை பற்றியும், அந்த புரடக்ட் பற்றியும் விவரங்களை சேகரித்து தெரிந்துகொண்டு இண்டர்வியூக்கு பிரிப்பேராக போயிருந்தேன்..  ஆனால் அந்த மேனேஜர் என்னிடம் ஒரு பேனாவைக்கொடுத்து என்னிடம் இதை விற்பனை செய் என்றார்... நான் அந்த  பேணாவை பார்த்துவிட்டு அதன் சிறப்பும்சங்களை எடுத்து கூறி வாங்கிக்கொள்ளுமாறு அவரிடமே சொன்னேன்...  உங்களுக்கு லட்சியம் என்ன வெனக்கேட்டார்.. சினிமா என சொன்னேன்.. அந்த துறையில் யாரை பிடிக்கும் எனக்கேட்டார்.. நான் ரஜினி என்றேன்... ரஜினியின் வெற்றிக்கு முக்கிய சிறப்பம்சமாக எதை சொல்கிறீர்கள் என்றார்.. நான் அவருடைய ஸ்டைல் என்றேன்... அதற்கு அவர் ரஜினியின் வெற்றிக்கு காரணம் அவருடைய பேச்சு தான் என்றார்... மார்க்கெட்டிங் ஃபீல்டுலயும் பேச்சு திறமை இருந்தால் தான் பணியாற்ற முடியும்...  என்று வித்தியாசமாகவும் சுவராசியமாகவும் இண்டர்வியூவை நடத்தி முடித்தார்....

ஒவ்வொரு வீடாக, ஒவ்வொரு கடையாக, ஒவ்வொரு ஆஃபிஸாக ஒன்றை விடாமல் சென்று கேட்டு.. சில நேரம் அதிர்ஷ்ட வசமாக ஆர்ட்ரை பிடித்து கஸ்டமரிடம் டெலிவரி டேட் வாங்கி வந்துவிடுவேன்... ஒரு நாளைக்கு இரண்டு முறை கம்பெனி ஆஃபிசில் மீட்டிங் வேறு ... அதில் என்ன ஆர்டர் கிடைத்தது எந்த ஏரியா சென்ற விவரம் சொல்ல வேண்டும்...  எங்கு சென்றாலும் மீட்டிங் நேரத்தில் ஆஃபிசில் ஆஜர் ஆக வேண்டும்.. இப்படி மீட்டிங்கில் சொல்லும் விவரங்கள் கேட்ட மற்ற எக்ஸ்கியூட்டிவ்கள் அடுத்தது அந்த கஸ்டமரிடம் லாகவமாக பேசி ஆர்டர் அவர்கள் வாங்கி விடுவார்கள்...  சில கஸ்டமர்கள் மாற மாட்டார்கள்.. இருந்தாலும் வெரைட்டி சைஸில் பெரிய ஆர்டர் எல்லாம் இது போல் நிறைய மிஸ் ஆகும்... பிழப்புக்காக அங்கும் அரசியல்..அடுத்த மீட்டிங்கில் மேனேஜரிடம் நான் டோஸ் வாங்குவேன்... . மேனேஜரிடம் ஆர்கியூமெண்ட்டுடன் நான் காரணம் சொல்வேன்.நோ எக்ஸ்கியூஸ் என்ற பதிலுடன் உள்ள மேனேஜரை ஆர்டர் பிடித்த எக்ஸ்கியூட்டிவ்கள் காக்கா பிடிப்பார்கள்.. பார்ட்டி நடக்கும்... இது போன்ற விசயங்கள் திரைத்துறையிலும் நடக்கும் சில இயக்குனர்களின் கதை டிஸ்கனில் அவர்களுக்கு ஜால்ரா அடித்தால் மேற்கொண்டு அந்த கம்பெனியில் நீடிக்கலாம்... கதை நல்லா வர வேண்டும் என்ற நோக்கத்தில் ஆர்கியூமெண்ட் செய்தால் சிலருக்கு பிடிக்கும்.. சிலருக்கு பிடிக்காமல் போகும்...  முடிந்தவரை மேலதிகாரிளுக்கு தாளம் தட்டி சென்றால் பிழைப்பு நடத்தலாம்...

(நானே ராஜா நானே மந்திரி - படத்தில் கேப்டன் விஜயகாந்திடம் ஒருவர் வேலை கேட்டு "உங்கள மாதிரி நல்லவங்க யாருமே இல்லைங்க " என்று சொல்லும் காமெடி வயிறு குலுங்க சிரிக்க வைக்கும்... )



கஷ்டம் வரும் நேரத்தில் யாராவது ஆறுதல் சொல்கிறவர்கள் அமைந்தால் மனதிற்கு இதமாக தான் இருக்கும்.... அந்த ஆறுதல் கூறுகிறவர்கள் நல்லவர்களாக இருக்கும் பட்சத்தில் வாழ்வின் சுமை குறையும்...

அதுவே அது சூட்சமாக நினைத்து ஆட்டம் போட்டால் அது அர்த்தமற்ற ஆனவம்.

 எதிரிகள் தரும் சோதனைகள் கூட நெஞ்சுக்கு உரம்..  நட்பு என்ற பெயரில் நஞ்சு விதைக்கும் நயவஞ்சகர்களிடம் தான் எச்சரிக்கையாக இருக்க பழக வேண்டும்.

யாராரோ நன்பன் என்று, ஏமாந்த நெஞ்சம் உண்டு!
பூவெண்று முள்ளைக் கண்டு, புரியாமல் நின்றேன் இன்று.
பால் போல கள்ளும் உண்டு, நிறத்தாலே ரெண்டும் ஒன்று.
நானென்ன கள்ளா? பாலா? நீ சொல்லு நந்த லாலா!



உங்கள் பிரியமானவன்,

4 comments:

குறையொன்றுமில்லை. said...

பாடல்களும் பதிவும் நல்லா இருக்கு. இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

பூத்துவரும் பொன்னெழிலாய்
பூக்கட்டும் புத்தாண்டு!
ஏழுவண்ண வானவில்லாய்
வண்ண வண்ண இன்பங்கள்
நிலைத்திருக்கட்டும் இவ்வாழ்வில்!

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் என் அன்பிற்கினிய புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மகேந்திரன் said...

வணக்கம் நண்பரே
பாடல்களையும் காட்சிகளையும்
அழகாக தொடுத்து தந்திருக்கீங்க.
அழகு.

சி.பி.செந்தில்குமார் said...

நல்ல தொகுப்பு


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out