Wednesday, 20 July 2011

உள்ளம் கவர்ந்த மகாகவி பாரதியின் பாடல் வரிகள்.




 












தேடிச் சோறு நிதந்தின்று 

பல சின்னஞ் சிறுகதைகள் பேசி 

மனம் வாடித் துன்பமிக உழன்று 

பிறர் வாடப் பல செயல்கள் செய்து 

நரை கூடிப் கிழப்பருவம் எய்தி 

கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும் 

பல வேடிக்கை மனிதரைப் போலே 

நான் வீழ்வே னென்று நினைத்தாயோ? 





======================================================


தமிழ் 
யாமறிந்த மொழிகளிலே தமிழ்மொழிபோல்
இனிதாவது எங்கும் காணோம்; 

================================
மனதில் உறுதி வேண்டும்
வாக்கினிலே இனிமை வேண்டும்
நினைவு நல்லது வேண்டும்
நெருங்கினப் பொருள் கைப்பட வேண்டும்
கனவு மெய்ப்பட வேண்டும்


கைவசமாவது விரைவில் வேண்டும்
தனமும் இன்பமும் வேண்டும்
தரணியிலே பெருமை வேண்டும்
கண் திறந்திட வேண்டும்
காரியத்தில் உறுதி வேண்டும்
பெண் விடுதலை வேண்டும்
பெரிய கடவுள் காக்க வேண்டும்
மண் பயனுற வேண்டும்
வானகம் இங்கு தென் பட வேண்டும்
உண்மை நின்றிட வேண்டும்
ஓம்! ஓம்! ஓம்! ஓம்!
===================================================================
நல்லதோர் வீணைசெய்தே-அதை
நலங்கெடப் புழுதியில் எறிவதுண்டோ?
சொல்லடி, சிவசக்தி;-எனைச்
சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய்,
வல்லமை தாராயோ,-இந்த
மாநிலம் பயனுற வாழ்வதற்கே?
சொல்லடி,சிவசக்தி!-நிலச்
சுமையென வாழ்ந்திடப் புரிகுவையோ?



விசையுறு பந்தினைப்போல்-உள்ளம்
வேண்டிய படிசெலும் உடல்கேட்டேன்,
நசையறு மனங்கேட்டேன்-நித்தம்
நவமெனச் சுடர்தரும் உயிர்கேட்டேன்,
தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்,
அசைவறு மதிகேட்டேன்;-இவை
அருள்வதில் உனக்கெதுந் தடையுளதோ?



=======================================================================================
காக்கைச் சிறகினிலே நந்த லாலா!-நின்தன்
கரியநிறந் தோன்று தையே நந்த லாலா!
பார்க்கும் மரங்க ளெல்லாம் நந்த லாலா!-நின்தன்
பச்சை நிறந் தோன்று தையே நந்த லாலா!
கேட்கு மொலியி லெல்லாம் நந்த லாலா!-நின்தன்
கீத மிசக்குதடா நந்த லாலா!
தீக்குள் விரலை வைத்தால் நந்த லாலா!-நின்னைத்
தீண்டு மின்பந் தோன்று தடா நந்த லாலா!

=================================================================

இந்தப் புவிதனில் வாழு மரங்களும்
இன்ப நறுமலர்ப் பூஞ்செடிக் கூட்டமும்
அந்த மரங்களைச் சூழ்ந்த கொடிகளும்
ஔடத மூலிகை பூண்டுபுல் யாவையும்
எந்தத் தொழில் செய்து வாழ்வன வோ?

வேறு

மானுடர் உழாவிடினும் வித்து நடாவிடினும்
வரம்புகட்டாவிடினும் அன்றிநீர் பாய்ச்சாவிடினும்
வானுலகு நீர்தருமேல் மண்மீது மரங்கள்
வகைவகையா நெற்கள்புற்கள் மலிந்திருக்கு மன்றோ?
யானெ தற்கும் அஞ்சுகிலேன்,மானுடரே,நீவிர்
என்மதத்தைக் கைக்கொண்மின்,பாடுபடல் வேண்டா;

ஊனுடலை வருத்தாதீர்; உணவியற்கை கொடுக்கும்;
உங்களுக்குத் தொழிலிங்கே அன்பு செய்தல் கண்டீர்!


===================================================================


பல்லவி
நின்னை யே ரதியென்று நினைக்கிறேனடி-கண்ணம்மா!
தன்னையே சகியென்று சரணமெய்தினேன்!                        (நின்னையே)
சரணங்கள்

பொன்னை யே நிகர்த்த மேனி மின்னை ய, நிகர்த்த சாயற்
பின்னை யே!-நித்ய கன்னியே! கண்ணம்மா!                        (நின்னையே)

மார னம்புக ளென்மீது வாரி வாரி வீச நீ-கண்
பாரா யோ? வந்த சேரா யோ? கண்ணம்மா?                          (நின்னையே)

யாவு மே சுக முனிக் கொர் ஈசனா னெக்குன் தோற்றம்
மேவு மே-இங்கு யாவு மே,கண்ணம்மா!                                (நின்னையே)
=======================================================================
சுட்டும் விழிச்சுடர் தான் - கண்ணம்மா
சூரிய சந்திரரோ ?
வட்டக் கரிய விழி - கண்ணம்மா
வானக் கருமை கொல்லோ ?

பட்டுக் கரு நீலப் - புடவை
பதித்த நல் வயிரம்
நட்ட நடு நிசியில் - தெரியும்
நஷதிரங் களடி

சோலை மல ரொளியோ - உனது
சுந்திர புன்னகை தான்
நீலக் கடலலையே - உனது
நெஞ்சில் லலைக ளடி
கோலக் குயி லோசை - உனது
குரலி னிமை யடீ
வாலைக் குமரி யடீ - கண்ணம்மா
மருவக் காதல் கொண்டேன்

சாத்திரம் பேசுகிறாய் - கண்ணம்மா
சாத்திரம் எதுக் கடி
ஆத்திரம் கொண்டவற்கே - கண்ணம்மா
சாத்திரம் உண்டோடி
மூத்தவர் சம்மதியில் - வதுவை
முறைகள் பின்பு செய்வோம் :
காத்திருப் பேனோடி - இதுபார்
கன்னத்து முத்தமொன்று


=========================================================


ராகம்-சரஸ்வதி மனோஹரி                                
   -அவள்
பெண்மையைக் கண்டு மயங்கிவிட்டேனங்கு
பள்ளிப் படிப்பினிலே-மதி
பற்றிட வில்லை யெனிலுந் தனிப்பட
வெள்ளை மலரணமேல்-அவள்
ணையுங் கையும் விரிந்த முகமலர்
விள்ளும் பொருளமுதும்-கண்டேன்
வெள்ளை மனது பறிகொடுத் தேன், அம்மா!

ஆடி வருகையிலே-அவள்
அங்கொரு வீதி முனையில் நிற்பாள்;கையில்
ஏடு தரித்திருப்பாள்-அதில்
இங்கித மாகப் பதம் படிப்பாள், அதை
நாடி யருகணைந்தால்-பல
ஞானங்கள் சொல்லி இனிமைசெய்வாள்:”இன்று
கூடி மகிழ்வ” மென்றால்-விழிக்
கோணத்தி லேநகை காட்டிச் செல்வாள்,அம்மா!

ஆற்றங் கரைதனிலே-தனி
யானதோர் மண்டப மீதினிலே,தென்றற்
காற்றை நுகர்ந்திருந்தேன்-அங்கு
கன்னிக் கவிதை கொணர்ந்து தந்தாள்;அதை
ஏற்று மனமகிழ்ந்தே-’ அடி
என்னோ டிணங்கி மணம்புரி வாய்” என்று
போற்றிய போதினிலே-இளம்
புன்னகை பூத்து மறைந்துவிட்டாள்,அம்மா!

சித்தந் தளர்ந்ததுண்டோ?-கலைத்
தேவியின் மீது விருப்பம் வளர்ந்தொரு
பித்துப் பிடித்ததுபோல-பகற்
பேச்சும் இரவிற் கனவும் அவளிடை
வைத்த நினைவை யல்லால்-பிற
வாஞ்சை யுண்டோ? வய தங்ஙன மேயிரு
பத்திரண் டாமளவும்-வெள்ளைப்
பண்மகள் காதலைப் பற்றிநின் றேன்,அம்மா!

இரண்டாவது-லக்ஷ்மி காதல்
ராகம்-ஸ்ரீராகம்                                                                          தாளம்-திஸ்ர ஏகம்
இந்த நிலையினிலே,அங்கொர்
இன்பப் பொழிலி னிடையினில் வேறொரு
சுந்தரி வந்துநின்றாள்-அவள்
சோதி முகத்தின் அழகினைக் கண்டென்தன்
சிந்தை திறைகொடுத்தேன்-அவள்
செந்திரு வென்று பெயர்சொல்லி னாள்;மற்றும்
அந்தத் தினமுதலா-நெஞ்சம்
ஆரத் தழுவிட வேண்டுகின் றேன்,அம்மா!

புன்னகை செய்திடுவாள்-அற்றைப்
போது முழுதும் மகிழ்ந்திருப்பேன்;சற்றென்
முன்னின்று பார்த்திடுவாள்-அந்த
மோகத்தி லேதலை சுற்றிடுங் காண்;பின்னர்
என்ன பிழைகள் கண்டோ-அவள்
என்னைப் புறக்கணித் தேகிடு வாள்;அங்கு
சின்னமும் பின்னமுமா-மனஞ்
சிந்தி யுளமிக நைந்திடு வேன்,அம்மா!

காட்டு வழிகளிலே-மலைக்
காட்சியிலே,புனல் வீழ்ச்சி யிலே,பல
நாட்டுப் புறங்களிலே-நகர்
நண்ணு சிலசுடர் மாடத்தி லே,சில
வேட்டுவர் சார்பினிலே-சில
வீர ரிடத்திலும் வேந்த ரிடத்திலும்,
மீட்டு மவள்வருவாள்-கண்ட
விந்தை யிலேயின்ப மேற்கொண்டு போம்,அம்மா!

மூன்றாவது-காளி காதல்
ராகம்-புன்னகவராளி                                                             தாளம்-திஸ்ர ஏகம்
பின்னோர் இராவினிலே-கரும்
பெண்மை யழகொன்று வந்தது கண்முன்பு;
கன்னி வடிவமென்றே-களி
கண்டு சற்றேயரு கிற்சென்று பார்க்கையில்
அன்னை வடிவமடா!-இவள்
ஆதி பராசக்தி தேவி யடா!-இவள்
இன்னருள் வேண்டுமடா!-பின்னர்
யாவு முலகில் வசப்பட்டுப் போமடா!
செல்வங்கள் பொங்கிவரும்;-நல்ல
தெள்ளறி வெய்தி நலம்பல சார்ந்திடும்;
அல்லும் பகலுமிங்கே இவை
அத்தனை கோடிப் பொருளினுள்ளே நின்று
விலலை யசைப்பவளை-இந்த
வேலை யனைத்தையும் செய்யும் வினைச்சியைத்
தொல்லை தவிர்ப்பவளை-நித்தம்
தோத்திரம் பாடித் தொழுதிடு வோமடா!

======================================================

அக்கினிக் குஞ்சொன்று கண்டேன்-அதை
அங்கொரு காட்டிலோர் பொந்திடை வைத்தேன்;
வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?
தத்தரிகிட தத்ரிகிட தித்தோம்.

=======================================================


ஒன்று கூடிக் கடவுளை வணங்கச் செல்லும் போது, மனிதர்களின் மனங்கள் ஒருமைப்பட்டுத் தமக்குள் இருக்கும். ஆத்மவொருமையை அவர்கள் தெரிந்து கொள்ள இடமுண்டாகும். எனவே தான் நம் முன்னோர் கோயில்களை உருவாக்கினார்கள்.
சிவன் நீ; சக்தி உன் மனைவி. விஷ்ணு நீ; லட்சுமி உன் மனைவி.
பிரம்மா நீ; சரஸ்வதி உன் மனைவி. இதைக் காட்டி மிருக நிலையிலிருந்து மனிதரை தேவநிலைக்கு கொண்டு சேர்க்கும் பொருட்டாக ஏற்பட்ட தேவப்பள்ளிக்கூடங்களே கோயில்கள் ஆகும்.
சகுனம் பார்க்கும் வழக்கமும் காரியங்களுக்குப் பெருந்தடையாக வந்து முண்டிருக்கிறது.
சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்.
சக்தியால் உலகம் வாழ்கிறது. நாம் வாழ்வை விரும்புகிறோம்.
ஆதலால் நாம் சக்தியை வேண்டுகிறோம். ஒவ்வொருவனுக்கும் அறிவு, செல்வம், தைரியம் ஆகிய மூன்று சக்திகள் வேண்டும். இந்த மூன்றும் நமக்கு இகலோக இன்பம் கிடைக்கும்படியாகவும், பரலோக இன்பங்கள் சாத்தியமாகும் படியாகவும் செய்கின்றன. ஆத்மா உணர்வாகவும், சக்தி செய்கையாகவும் உள்ளது.
விரும்புதல், அறிதல், நடத்துதல் என்ற மூவகையான சக்தி இல்வுலகத்தை ஆளுகிறது. இதை பூர்வ சாஸ்திரங்கள் இச்சா சக்தி, ஞான சக்தி, கிரியா சக்தி என்று சொல்கின்றன. பயம், சந்தேகம், சலனம் மூன்றையும் வெறுக்க வேண்டும். இதனால் சக்தி ஏற்படும்.



டிஸ்கி : பிடித்திருந்தால் தவறாமல் எனது பதிவுகளுக்கும் கீழே உள்ள பட்டனில் ஒட்டுப் போட்டுவிட்டுச் செல்லவும் நண்பர்களே.

45 comments:

இமா க்றிஸ் said...

ஆஹா! அருமையான தொகுப்பு.
பாகம் 2, 3 என்று தொடரும் இல்லையா!
பிடித்திருக்கிறது, இந்தப் பக்கத்தை அடையாளமிட்டு வைத்துக் கொள்கிறேன்.

ம.தி.சுதா said...

மிகவும் நல்லாதொரு தொகுப்பு சகோதரா மிக்க மிக்க நன்றிகள்..

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை நண்பரே,

பாரதியின் பாடல்கள்...

நம் வாழ்வின் எல்லா பருவங்களிலும் எதிரொலிக்கும்..

துரோகங்களை கண்டு கொதித்த போது,
நானும் கூட கீழ்க்கண்ட வரிகளை சொல்லி ஆறுதல் பட்டிருக்கிறேன்..


தேடிச் சோறு நிதந்தின்று
பல சின்னஞ் சிறுகதைகள் பேசி
மனம் வாடித் துன்பமிக உழன்று
பிறர் வாடப் பல செயல்கள் செய்து

நரை கூடிப் கிழப்பருவம் எய்தி
கொடுங் கூற்றுக் கிரையெனப்பின் மாயும்
பல வேடிக்கை மனிதரைப் போலே
நான் வீழ்வே னென்று நினைத்தாயோ?


http://sivaayasivaa.blogspot.com

சிவயசிவ

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

தோழரே..

பின்புலத்தை வெள்ளையாக்கி.
எழுத்தை கறுப்பாக்குங்கள்..

அதுதான் படிக்க நன்றாக இருக்கும்..
படிப்பவர்களுக்கும் கண் பாதிக்காகது.

அறிவியல் ரீதியாக இது தான் சரி..

அப்புறம் இந்த கரடி, பறக்கும் டிவிட்டர் இவையெல்லாம் படிப்பதற்கும், கருத்திடவும் தொந்தரவு தருகின்றன..

பிழையிருப்பின் பொறுத்தருள்க...


http://sivaayasivaa.blogspot.com

இராஜராஜேஸ்வரி said...

மீண்டும் மீன்டும் படிக்கத்தூண்டிய அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

M.R said...

அருமையான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

arasan said...

சேமித்து கொள்ள வேண்டிய பதிவு நண்பரே ..
தங்களின் இந்த புதிய முயற்சிக்கு மிக்க நன்றிங்க

மாய உலகம் said...

இமா said...
ஆஹா! அருமையான தொகுப்பு.
பாகம் 2, 3 என்று தொடரும் இல்லையா!
பிடித்திருக்கிறது, இந்தப் பக்கத்தை அடையாளமிட்டு வைத்துக் கொள்கிறேன்.

தாங்களின் வருகை...மனதுக்கு மகிழ்ச்சி அளித்திருக்கிறது.... தாங்களின் தண்டனையா! தவப்பயனா!பதிவில் உங்களின் நல்ல உள்ளம் பிரதிபலிக்கிறது..

இது போன்ற பதிவுகளை தொடருகிறேன் மேடம்....

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said...
மிகவும் நல்லாதொரு தொகுப்பு சகோதரா மிக்க மிக்க நன்றிகள்..

சகோ ம.தி.சுதா அவரிகளின் பாராட்டுக்கு நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
மீண்டும் மீன்டும் படிக்கத்தூண்டிய அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள். வாழ்த்துக்கள்.

தாங்களின் வருகையும் பாராட்டுதலும் எனை மேலும் பதிவிட தூண்டுகின்றன நன்றி..

மாய உலகம் said...

M.R said...
அருமையான பதிவு .
பகிர்வுக்கு நன்றி .

சகோவின் வருகைக்கும் பாராட்டுக்கும் நன்றிகள்

மாய உலகம் said...

அரசன் said...
சேமித்து கொள்ள வேண்டிய பதிவு நண்பரே ..
தங்களின் இந்த புதிய முயற்சிக்கு மிக்க நன்றிங்க

அரசன் வருகைக்கும் பாராட்டுதலுக்கும் சிவப்பு கம்பளம் காத்திருக்கும்... தொடர்ந்து வாருங்கள்

மாய உலகம் said...

சிவ.சி.மா. ஜானகிராமன் said...

அருமை நண்பரே,

பாரதியின் பாடல்கள்...

நம் வாழ்வின் எல்லா பருவங்களிலும் எதிரொலிக்கும்..

---------
சிவ.சி.மா. ஜானகிராமன் said...
தோழரே..
பின்புலத்தை வெள்ளையாக்கி.
எழுத்தை கறுப்பாக்குங்கள்..

அதுதான் படிக்க நன்றாக இருக்கும்..
படிப்பவர்களுக்கும் கண் பாதிக்காகது.

அறிவியல் ரீதியாக இது தான் சரி..

அப்புறம் இந்த கரடி, பறக்கும் டிவிட்டர் இவையெல்லாம் படிப்பதற்கும், கருத்திடவும் தொந்தரவு தருகின்றன..

பிழையிருப்பின் பொறுத்தருள்க...

-------------
உங்களை போன்றோர் வருகையும் கருத்தும் தானே சந்தோசம்... கண்டிப்பாக மாறுதலை உடனடி செய்துவிடுகிறேன்.... தொடர்ந்து ஆதரவு தாருங்கள்..

rajamelaiyur said...

நல்ல பதிவு நண்பா

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பதிவு நண்பா

நண்பரின் வருகை மகிழ்ச்சி அளிக்கிறது.... கருத்துக்கு நன்றி

சாகம்பரி said...

//தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்//
எல்லாம் வேண்டும். இது மட்டும் பலித்தாலும் போதும்.
A correction please - அப்புறம் அது //நசையறு // என்று வர வேண்டும். ஆசை இல்லாத மனம். Thank you very much for Sharing.//வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?//

மாய உலகம் said...

சாகம்பரி said...
//தசையினைத் தீசுடினும்-சிவ
சக்தியைப் பாடும்நல் அகங்கேட்டேன்//
எல்லாம் வேண்டும். இது மட்டும் பலித்தாலும் போதும்.
A correction please - அப்புறம் அது //நசையறு // என்று வர வேண்டும். ஆசை இல்லாத மனம். Thank you very much for Sharing.//வெந்து தணிந்தது காடு;-தழல்
வீரத்தில் குஞ்சென்றும் மூப்பென்றும் உண்டோ?//


தங்களது வருகையும் கருத்தும் மகிழ்ச்சியை தருகிறது சாகம்பரி.... நீங்கள் சொன்னது போல் பிழையை திருத்திக்கொண்டேன்.... நன்றி...

சென்னை பித்தன் said...

வெல்லப் பிள்ளையாரை எந்தப் பக்கம் கிள்ளினால் இனிப்பு?பாரதிய்ன் பாடல்களில் உள்ளம் கவராதது எது?

சக்தி கல்வி மையம் said...

நிஜமாகவே உள்ளம் கவர்ந்த பாடல்தான் ..
பகிர்வுக்கு நன்றிகள்..

shanmugavel said...

நன்று.வாழ்த்துக்கள்.

ஹேமா said...

மிகவும் பிடித்த பதிவாயிருக்கிறது !

Angel said...

மீசைகவிஞனின் கம்பீர வரிகள் .அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
//சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்//well said

மூன்று முடிச்சு தொடர் பதிவு எழுத உங்களை அழைக்கிறேன் இயன்ற நேரம் தொடரவும்

Mahan.Thamesh said...

பல பாரதியார் பாடல்களை தொகுத்துள்ளீர்கள் சகோ ; நல்லதொரு பதிவு

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
//வெல்லப் பிள்ளையாரை எந்தப் பக்கம் கிள்ளினால் இனிப்பு?பாரதிய்ன் பாடல்களில் உள்ளம் கவராதது எது?//

மிக சரியாக சொன்னீர்கள்
வருகைக்கும் கருத்துக்கும் நன்றி ஐயா..

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
//நிஜமாகவே உள்ளம் கவர்ந்த பாடல்தான் ..
பகிர்வுக்கு நன்றிகள்..//

தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி...

மாய உலகம் said...

shanmugavel said...
நன்று.வாழ்த்துக்கள்.

தங்கள் வருகைக்கும் கருத்துக்கும் நன்றி...

மாய உலகம் said...

ஹேமா said...
மிகவும் பிடித்த பதிவாயிருக்கிறது !

தங்களின் வருகை சந்தோசத்தை அளிக்கிறது ... நன்றி

மாய உலகம் said...

angelin said...
மீசைகவிஞனின் கம்பீர வரிகள் .அருமையான பகிர்வு பாராட்டுக்கள்
//சகல மனிதரும் சகோதரர். சகோதர உணர்ச்சியைப் பற்றி கவிதைகள் பாடுவதும், நீதி நூல்கள் புகழ்வதும் இவ்வுலகத்தில் சாதாரணமாக இருக்கிறது. ஆனால், நடைமுறையில் எந்தக் கண்டத்திலும் எந்த மூலையிலும் அந்த முயற்சி காணப்படவில்லை. அது நடைமுறைக்கு வர வேண்டும்//well said

மூன்று முடிச்சு தொடர் பதிவு எழுத உங்களை அழைக்கிறேன் இயன்ற நேரம் தொடரவும்

தங்கள் வருகையும் வாழ்த்தும் மிக்க மகிழ்ச்சி அளிக்கிறது... தொடர் ப்திவு எழுத அழைத்தமைக்கு அன்புடன் நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

மாய உலகம் said...

Mahan.Thamesh said...
பல பாரதியார் பாடல்களை தொகுத்துள்ளீர்கள் சகோ ; நல்லதொரு பதிவு

சகோவின் வருகையும் வாழ்த்துக்கும் மகிழ்ச்சி படுத்துகிறது....தொடர்ந்து வாருங்கள் நன்றி

test said...

அருமையான தொகுப்பு பாஸ்!
அதிலும் 'தேடிச்சோறு' கவிதை எனக்கு மிகப் பிடித்தது! இந்தப் பதிவின் டைட்டிலைப் பார்த்ததுமே இந்தக் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது! எதிர்பார்ப்பு வீவ் போகவில்லை! :-)

மாய உலகம் said...

ஜீ... said...
அருமையான தொகுப்பு பாஸ்!
அதிலும் 'தேடிச்சோறு' கவிதை எனக்கு மிகப் பிடித்தது! இந்தப் பதிவின் டைட்டிலைப் பார்த்ததுமே இந்தக் கவிதைதான் ஞாபகத்துக்கு வந்தது! எதிர்பார்ப்பு வீவ் போகவில்லை! :-)

வாங்க ஜி... வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

கோவை நேரம் said...

அருமையான தொகுப்பு ..வாழ்த்துக்கள் .பாரதி பாடல்கள் எப்போதும் உணர்ச்சியை தூண்டுபவை...

மாய உலகம் said...

கோவை நேரம் said...
அருமையான தொகுப்பு ..வாழ்த்துக்கள் .பாரதி பாடல்கள் எப்போதும் உணர்ச்சியை தூண்டுபவை...

வாங்க கோவை நேரம்...வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மனோ சாமிநாதன் said...

பாரதியின் அருமையான‌ பாடல்களின் தொகுப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது!

மாய உலகம் said...

மனோ சாமிநாதன் said...
//பாரதியின் அருமையான‌ பாடல்களின் தொகுப்பு மிகச் சிறப்பாக இருக்கிறது!//


தங்களின் வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சியை தருகிறது.. தொடர்ந்து ஆத்ரவு தாருங்கள் நன்றி..

Karthikeyan Rajendran said...

வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கணும், பாஸ்

மாய உலகம் said...

! ஸ்பார்க் கார்த்தி @ said...
//வீழ்வது யாராக இருந்தாலும் வாழ்வது தமிழாக இருக்கணும், பாஸ்//

வாங்க கார்த்தி.. கண்டிப்பாக... நன்றி

Anonymous said...

எல்லோருக்குமே பிடித்த பாரதி பாடல்கள் அக்கினிக் குஞ்சொன்று கணடேன்(இதை சாரணர் போல ஒரு நடையுடன் கம்பீiமாகச் சொல்ல) ஒரு சக்தியே பிறக்கும் மூச்சினிலே நல்லது. வாழ்த்துகள்.
Vetha. Elangathilakam.
http://www.kovaikkavi.wordpress.com

மாய உலகம் said...

கோவைகவியின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

Vijayan Durai said...

பாரதியின் கவிதைகளை படிக்கிற போது "சக்தி புது சக்தி பிறக்குமென் மூச்சினிலே".
நல்ல பதிவு நன்பா

மாய உலகம் said...

நண்பர் விஜயனின் வருகைக்கும் வாழ்த்துக்கும் நன்றி

இமா க்றிஸ் said...

டெம்ப்ளேட்டில் செய்திருக்கும் மாற்றங்களை வரவேற்கிறேன். படிப்பதற்கு முன்பை விடச் சுலபமாக இருக்கிறது.

RIPHNAS MOHAMED SALIHU said...

தனக்கு இணையில்லாத இன்பச் சுவை பொதிந்தது பாரதியின் கவிதைகள். வாசிக்க வாசிக்க நெஞ்சுக்குள் உற்சாகம் பொங்கிப் பிரவாகிக்கும். மிக்க நன்றி நண்பரே...

மாய உலகம் said...

இமா said...
//டெம்ப்ளேட்டில் செய்திருக்கும் மாற்றங்களை வரவேற்கிறேன். படிப்பதற்கு முன்பை விடச் சுலபமாக இருக்கிறது.//
[ma]
[co="red"]தங்களது வாழ்த்து மகிழ்ச்சி அளிக்கிறது நன்றிகள்[/co][/ma]

மாய உலகம் said...

RIPHNAS MOHAMED SALIHU said...
//தனக்கு இணையில்லாத இன்பச் சுவை பொதிந்தது பாரதியின் கவிதைகள். வாசிக்க வாசிக்க நெஞ்சுக்குள் உற்சாகம் பொங்கிப் பிரவாகிக்கும். மிக்க நன்றி நண்பரே...//

[ma][IM]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/images.jpg[/IM][/ma]
[ma][co="red"]சரியா சொன்னீங்க பாரதியின் கவிதை சுவை பொதிந்ததே... தோழியின் வருகையும் வாழ்த்தும் மனதுக்கு மகிழ்ச்சி.. நன்றிகள்[/co][/ma]


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out