Saturday, 31 December, 2011

எனக்கு பிடித்த பாடல் - உங்கள் மனதை மயக்குமே: இசையும் கதையும் 3

நம்ம தலைவர் நாகேஷ் அவர்கள் நடித்த ஆடிய பாடல் தான் எப்பொதுமே மனதை கொள்ளை கொள்ளும்
பறவைகளில் எது அழகு என்றால் பலரும், கிளி, லவ் பேர்ட்ஸ் இப்படி நிறைய வண்ண பறவைகளை தான் சொல்லுவோம்... ஆனால் நம் பாரதி காகத்தை ரசித்து அதன் அழகை எவ்வளவு அருமையாக பாடலாக எழுதியிருக்கிறார்....பாரதி படத்தை பார்த்துக்கொண்டிருக்கும்பொழுது இந்த பாடல் வந்தவுடன் என்னை அறியாமல் என் கன்னம் குளித்துகொண்டே இருந்தது கண்ணீரால்...
அந்த கண்ணீருக்கு காரணம் ஆனவர்கள் இசைஞானி அவர்கள், இயக்குநர் ஞானசேகரன் அவர்கள், சாயஜி ஷிண்டே அவர்களது நடிப்பு .....வாழ்க்கையில் ஏற்ற தாழ்வு இறைவனின் சாபமா இல்லை பிழையா, முன் ஜென்ம பாவமா எதுவென தெரியவில்லை .எல்லாம் எல்லாருக்கும் கிடைத்துவிடுவதில்லை ஆனால் ஒரு சிலருக்கு உரிமைகள் மறுக்கபட்டு வலிகள் மட்டுமே கொடுத்தால் அவனின் மன வேதனை சொல்லும் பாடலாக வைரமுத்து அவர்களது வரிகள்...
வைரமுத்து அவர்களின் வரிகளில் இசைஞானி அவர்களின் இசையில் மனதை கீறும் பாடல்.....
உலக வாழ்க்கை நடனம் நீ ஒப்புக்கொண்ட பயணம்
அது முடியும்போது தொடங்கும் நீ தொடங்கும்போது முடியும்
மனிதன் தினமும் அலையில் அலையும் துளிநீர்
தெரியும் தெரிந்தும் மனமே கலங்காதிரு நீ
தாளமிங்கு தப்பவில்லை யார் மீதும் தப்பு இல்லை
கால்கள் போன பாதை எந்தன் எல்லை


பாரதி படத்தில் இன்னொரு பிடித்த பாடலுடன் இசையும், கதையும் நிறைவு செய்கிறேன்...
அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு புத்தாண்டு வாழ்த்துக்கள்..
உங்களது வாழ்வில் எல்லா வளமும் பெற்று என்றும் நீங்கள் மகிழ்ச்சியோடு இருக்க எல்லாம் வல்ல இறைவன் உங்களுக்கு துணையிருக்கட்டும்....


இது வரை என் மீது அன்பும் ஆதரவும் செலுத்திவந்த அனைத்து அன்பர்களுக்கும் எனது நன்றியை தலை வணங்கி கூறிக்கொண்டு ... பதிவுலகை விட்டு விடைபெறுகிறேன்...

உங்கள் பிரியமானவன்,

21 comments:

ஷைலஜா said...

எனக்கும் பிடித்த பாடல்கள்....இனிய புத்தாண்டு வாழ்த்துகள் சகோ.

Lakshmi said...

எல்லா பாடல் கலெக்‌ஷனுமே அருமை.
இனிய ஆங்கில புத்தாண்டு நல் வாழ்த்துகள்.

suryajeeva said...

ஆங்கில புத்தாண்டு வாழ்த்துக்கள் தோழரே

மகேந்திரன் said...

அத்தனையும் மனதை வருடும் பாடல்கள்.
தொகுப்பித்து அளித்தமைக்கு நன்றிகள் பல நண்பரே.

athira said...

அடடா மாயா... 2,3 நாட்கள் எட்டிப்பார்க்க முடியவில்லை.. அதனால இப்போதான் பார்க்கிறேன் 2ம் பகுதி வந்து போய்விட்டதே.... இப்பவே படித்து விடுகிறேன்....

நில்லுங்க வாறேன்...

athira said...

வாழும் வரை போராடு பாடல்... மறக்க முடியாதெனக்கு....

எங்கள் சித்தப்பாவின் திருமணத்தன்று இரவு, விடிய விடிய வீட்டில.. திருமணப்பந்தலில் படம் போட்டார்கள், அதில் இதுவும் ஒன்று...இந்தப் பாட்டை எப்ப கேட்டாலும் அந்த நினைவு வந்துவிடும்....

///மாடி வீட்டு ஜன்னல்கூட சட்டை போட்டிருக்கு, சேரிக்குள்ள சின்னப்புள்ள அம்மணமாயிருக்கு...//

என்ன ஒரு கற்பனை.. சூப்பர் வரிகள்...

athira said...

காக்கைச் சிறகினிலே, சலங்கை ஒலி.. சூப்பர் பாடல்கள் மாயா... மறந்து போவதை எல்லாம் தேடித் தேடிப் போட்டிருக்கிறீங்க சூப்பர் தொகுப்பு.

athira said...

இசையும் கதையும் நிறைவுக்கு வந்திட்டுதோ.... அழகாக கொண்டு வந்து முடிச்சிட்டீங்க மாயா, அனைத்துக்கும் மிக்க நன்றி.

நிரூபன் said...

வணக்கம் மாயா..
நீங்கள் மேலே போட்ட ரசனையான பாடல்கள் மூலம் கிடைத்த உணர்வு கூட, கீழே உள்ள அறிவிப்பினைப் பார்த்ததும் பறந்து போச்சு..


ஏன்பா...எங்கே போறீங்க?

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ரைட்டு...

கவிதை வீதி... // சௌந்தர் // said...

தங்கள் ரசனைக்கு ஒரு சபாஷ........

கவிதை வீதி... // சௌந்தர் // said...

மற்றும் எனது புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்...

இந்திரா said...

புத்தாண்டு வாழ்த்துக்கள்..

அப்பு said...

என்ன ராஜேஷ்...
என் இந்த முடிவு...

வாருங்கள்... விரைவில்... மீண்டும்.

சென்னை பித்தன் said...

நன்று
நீண்ட வராமைக்கு மன்னிக்கவும்.இனி தொடர்ந்து வருவேன்.

இனிய புத்தாண்டு வாழ்த்துகள்.

புத்தாண்டில் புதிய பொலிவோடு புறப்படட்டும் உங்கள் பதிவுகள்.

இராஜராஜேஸ்வரி said...

அனைத்துமே அருமையான பிடித்த இனிய பாடல்கள்.

பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான புத்தாண்டு நல்வாழ்த்துகள்..

RAMVI said...

பாடல்கள் அருமை.

புத்தாண்டு நல் வாழ்த்துக்கள்.

சந்திரகௌரி said...

உண்மையில் ரசிக்கக் கூடிய அற்புதமான பாடல்களை தேடித் தந்திருக்கின்றீர்கள் . பாரதி பாடல்களுக்கு நிகர் என்ன இருக்கிறது. வைரமுத்து பாடல்கள் கூட எனக்கு நன்றாகப் பிடிக்கும் . மிக்க நன்றி

angelin said...

காக்கை சிறகினிலே பாட்டுக்கும் நிற்பதுவே நடப்பதுவே பாடலுக்கும் மயங்கி இருக்கும்போது பதிவின் கடைசி வரிகள் .................
why ராஜேஷ் ?????
நீங்க உங்க வேலை பளு காரணமா இம்முடிவை எடுத்திருந்தா .நேரம் கிடைக்கும்போது எங்க பக்கமாவது வந்து ஒரு ஹாய் சொல்லி போங்க .
ஒன்று மட்டும் தெரிஞ்சுக்கோங்க .பிரச்சினை இல்லா மனிதருமில்லை /வாழ்க்கையுமில்லை .நானே இதே முடிவை எடுத்து மீண்டு மீண்டும் வந்திருக்கேன் .நேரமிருக்கும்போது எழுதுங்கள்

இராஜராஜேஸ்வரி said...

இனிய பொங்கல் திரு நாள் வாழ்த்துகள்..


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out