Saturday 15 October, 2011

விலைமகள் - அ(வி)பச்சாரம்

கல்கத்தாவில் பணக்கார நண்பர்கள் பலர் விவேகானந்தரை உல்லாசமாக இருக்கலாம். என்று சொல்லி அழைத்துக்கொண்டு போனார்கள்.
'உல்லாசம்' என்பதற்கு இன்னொரு உள் அர்த்தமும் உண்டு என்பதை அறியாத விவேகானந்தரும் மகிழ்ச்சியுடன் புறப்பட்டு அவர்களுடன் சென்றார்.

இவர்கள் சென்ற வண்டி ஒரு மாளிகையின் முன்பாக நின்றது. எல்லாரும்
இறங்கினார்கள். மாளிகைத் தோட்டத்தில் விருந்து பாட்டு, கூத்து. என்று
கலகலப்பாக நேரம் சென்றது.

விவேகானந்தருக்கு இந்த நிகழ்ச்சி அந்நியமாக பட்டதால் தனியாக ஒரு அறைக்குச் சென்று படுத்துவிட்டார். இதைப் பார்த்த அவரின் நண்பர்கள் ஒரு நடன மாதைக் கூப்பிட்டு அவரின் அறைக்கு அனுப்பி வைத்தனர்.

அவள் எதற்காக வந்திருக்கிறாள் என்பதை அறியாத விவேகானந்தரும் அவளுடன் சரளமாக பேசலானார். அவளும் தன் வாழ்க்கையின் அவலங்களை எடுத்துச் சொல்ல இவரும் அக்கரையுடன் கேட்டப்படி அவ்வப்போது ஆறுதலான வார்த்தைகளைச் சொன்னார்.


 இவரின் ஆறுதல், அனுதாபம் அவளை உசுப்பிவிட்டது. தன்னுடைய இச்சையை அவள் பச்சையாகவே சொல்லிவிட்டாள்.

அவ்வளவு தான் நடுங்கிப்போனார் விவேகானந்தர். ராமகிருஷ்ணரும், பவதாரினியும்தான் கண்களுக்குத் தெரிந்தனர்.


"மன்னித்துக்கொள் தாயே! நான் அவசரமாக வெளியே போகவேண்டும்" என்று வெளியேறிவிட்டார்.

விவேகானந்தரின் நண்பர்களிடம் திரும்பிச்சென்ற அந்த பெண். " உங்கள் வேடிக்கைக்கும் ஒரு அளவு இல்லையா.

போயும் போயும் ஒரு சாமியாரிடம் என்னை அனுப்பிவைத்தீர்களே" என்று கடிந்து கொண்டாள் என்பது தான் அந்த நிகழ்வு.

இதிலிருந்து நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளவேண்டியது என்னவென்றால் ஒரு இலக்கை நோக்கி நாம் நடந்து செல்லும்போது இடையில் சில மலிவானவை நமது மனதை கெடுத்துவிடப்பார்க்கும். அதற்கு இடம் கொடுத்து விடக்கூடாது.
======================================================================
நம்ம தலைவரின் கலக்கலான காட்சிகளை கண்டுகளியுங்கள்...

ஆரம்பம்:


======================================================================
திருக்குறள்:

பயன்தூக்கிப் பண்புரைக்கும் பண்பின் மகளிர்
நயன்தூக்கி நள்ளா விடல்.



பொருள் :வரும் பயனறிந்து, அதற்குத் தக்க பண்புள்ள சொற்களைக் கூறாத பெண்களின் இன்பத்தை ஆராய்ந்தறிந்து அவர்களைக் கூடாது விலகுக.


பொருட்பெண்டிர் பொய்ம்மை முயக்கம் இருட்டறையில் 
ஏதில் பிணந்தழீஇ அற்று.


பொருள் : பொருளையே நாடுகின்ற பெண்களின் பொய்யான தழுவல், இருட்டு அறையில் முன்பின் தெரியாமல் கிடந்த பிணத்தைத் தழுவியது போலாகும்.


வரைவிலா மாணிழையார் மென்தோள் புரையிலாப்
பூரியர்கள் ஆழும் அளறு.



பொருள் : சேர்க்கையில் வரைமுறை இல்லாத பொதுமகளிரின் மென்மையான தோள், மேன்மையில்லாத கயவர் வீழ்ந்து அழியும் நரகமாகும்.

==================================================================

விலை மகளின் சத்தியத்தில் நம்பிக்கை கொள்கிறவன் பைத்தியக்காரன்.
                                                                              -திரு.ஷேக்ஸ்பியர் அவர்கள்.

==================================================================
ஒரு நிமிசம்:

ஒரு மாணவன் தேர்வில் "கண்ணகியின் கணவன் பெயர்?'' என்ன என்ற கேள்விக்கு கேவலன் என்று எழுதிவைத்துவிட்டான். ஆசிரியர் கூப்பிட்டு கோவமாக "ஏன்டா கோவலன் என்று எழுதுவதற்கு பதிலாக கேவலன் என்று எழுதினாய்" என்று கேட்டார்... மாணவன் சற்றும் தயங்காமல் "ஐயா அவன் கட்டிய மனைவிக்கு துரோகம் செய்துவிட்டு மாதவி வீட்டிற்குப் போகும் கேவலமான செயலைச் செய்தான். அதனால் தான் காலை ஒடித்து கேவலன் ஆக்கினேன்".. என்று கோவமாகவே பதிலை சொன்னான்...

முடிவு:



=================================================================

இரண்டு பதிவுகளுக்கு முன்பதிவில் ஏங்க இப்படியெல்லாம் பண்றாங்க என்ற பதிவில் தான் சொல்லியிருந்தேன்..  அது போல் சமீபத்தில் நடந்த சம்பவத்தை...
(ஒருவர் துரோகம் செய்வதால்... அதில் கண்டிப்பாக ஒரு நல்லவர் பாதிக்கப்படுகிறார்...   காதலை விரும்பிய கணவன்.. காமத்தை தேடிய காமுகியின் கதி என்ன ஆகிற்று என ...)
http://www.maalaimalar.com/2011/10/13085858/Betrayed-met-with-cultural-deg.html
இந்த லிங்கில் சென்று படிக்கவும் நண்பர்களே...

=================================================================

உங்கள் பிரியமானவன்,

70 comments:

கவி அழகன் said...

மலிவானது மட்டுமல்ல இலவசங்களும் வந்து வாழ்வின் இலட்சியத்துக்கு தடை போட்டுது நண்பா


கப்பலுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் துறைமுகம்

ஆனால்

அங்கே நிற்பதற்காக கப்பல் கட்டப்படவில்லை .......

Unknown said...

கலக்கலா விஷயங்கள சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி..!

மகேந்திரன் said...

மலிவாய்க் கிடைப்பதைக்கண்டு
சுளுவாய்ப் போகாதே
தெளிவாய் இருந்து விடு

அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே ..
விவேகானந்தரின் கதை, அதற்கேற்ற குறள்கள்
பொன்மொழி...
உங்களின் உழைப்பு அசாத்தியமானது.

மாணவன் மழுப்பிய பதில் நல்லா இருந்துச்சு..
ஆனாலும் அவன் சொன்னதும் சரிதானே..

அருமையான பதிவு நண்பரே.

கூடல் பாலா said...

காலையிலேயே நல்ல அறிவுரை தந்திருக்கீங்க ....

M.R said...

அறியா விசயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சகோ

தமிழ் மணம் ஏழாவது வாக்கு

நிரூபன் said...

இனிய காலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
விபச்சாரம் எனும் ஒப்பீட்டு விளக்கத்தோடு
எம் வழியில் எது குறுக்கிட்டாலும் நாம் இலக்கில் தவறக் கூடாது என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.

SURYAJEEVA said...

உங்கள் கொள்கையில் விடாப் பிடியாய் நிற்கும் வரை எதுவும் அசைக்க முடியாது... ஜமீலாவின் கதை என்று ஒரு புத்தகம் உண்டு, படிக்கவும்...

K.s.s.Rajh said...

நல்ல தொகுப்புக்கள் பாஸ்...

அதிலும் விவகானந்தர் கதை மிகவும அருமை

கோகுல் said...

வணக்கம் மச்சி,சுய அடக்கம் தேவை என்பதை பல விசயங்களை மேற்க்கோள் காட்டி தெளிவாக புரிய வைச்சிட்டிங்க!
காமமே அது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா! அதானே நண்பா!

ஜெய்லானி said...

//மலிவாய்க் கிடைப்பதைக்கண்டு
சுளுவாய்ப் போகாதே
தெளிவாய் இருந்து விடு //
மலிவுன்னு எந்த அர்த்துல சொல்றீங்க பாஸ்...பலப்பேரோட உழைப்பு , கெளரவம் பணம் எல்லாமே இதில போய் இருக்கே ...!!!

சாக்கடைபக்கம் போகிறவன் நந்தவனமா போய் சேருவான் ???? :-))

ஜெய்லானி said...

தன் மனதை கட்டுப்படுத்த முடியாதவன் பற்றி ஒற்றும் சொல்வதுக்கில்லை :-)))

ம.தி.சுதா said...

பல ஆழமான கருத்தை விதைத்துள்ளீர்கள்...

நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
இணையத் தளங்களின் அராஜகமும் ஈழத்தைக் கற்பழிக்கும் இணையத் தளங்களும்

அம்பலத்தார் said...

வணக்கம், அடடா,விவேகானந்தர் வாழ்க்கையில் இந்தமாதி சமாச்சாரமெல்லாம் நடந்திருக்கா? எனக்கும்தான் நண்பர்கள் நிறைய இருக்காங்க. ம்.... ஆனால் பைசா பிரயோசனம் இல்லை

அம்பலத்தார் said...

நண்பா கேவலன் super

சென்னை பித்தன் said...

ஹா,ஹா,கேவலன் மிகப் பொருத்தம்!

Unknown said...

நல்லா சொல்லி இருக்கீங்க பதிவுக்கு சரியான திருக்குறள் அருமை

அந்த வீடியோவும் சூப்பர்

சந்திர வம்சம் said...

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcRByeEvdInBlsUYsVfKygOkxH5MDmc6M7pOD7y_fgoqVp77rXlW[/im]




[co="red"]விஸ்வாமித்திரரும் ஏமாந்து தானே மேனகையின் வலையில் வீழ்ந்தார்?[/co]

Unknown said...

மதிப்பீடுகள் மங்கி வரும் வேளையில், விவேகானந்தர் வாழ்க்கை நிகழ்ச்சி நமக்கு முன்னுதாரணமே.

Angel said...

மிகவும் அருமையான அவசியமான பகிர்வு ராஜேஷ் .வாழ்த்துக்கள் .

rajamelaiyur said...

நல்ல பதிவு

rajamelaiyur said...

இன்று என் வலையில்

சிபியை போட்டுதள்ள விக்கி போட்ட திட்டங்கள்

RAMA RAVI (RAMVI) said...

ஸ்வாமி விவேகானதரை பற்றிய அபூர்வமான தகவல். பகிர்வுக்கு நன்றி.

சக்தி கல்வி மையம் said...

அறிவுரைக்கு நன்றி.,

ராஜா MVS said...

நல்ல சிந்தனையை தூண்டும் தொகுப்பு... நண்பா...

shanmugavel said...

அருமையான தொகுப்பு!

Aathira mullai said...

நல்ல பதிவு.
இது மட்டுமல்ல ராஜேஷ்.
அவரிடம் ஒரு மங்கை உங்களைப்போல ஒரு அறிவான குழந்தை எனக்கு வேண்டும். அதனால் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாராம்.

அதற்கு விவேகானந்தர் ”என்னைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பிறந்து, அவன் அறிவாளியா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆதால் என்னை இப்போதே தங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றாராம்.

குறையொன்றுமில்லை. said...

விவேகானந்தர்பற்றிய தகவல் எல்லாரும் தெரிஞ்சுக்கனௌம் அதிரா சொன்ன விஷயமும் நல்லா இருக்கே/

Unknown said...

தலைப்பு எப்படியோ
தந்த செய்தி சிறப்பே!




புலவர் சா இராமாநுசம்

முற்றும் அறிந்த அதிரா said...

landed...

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQwGJhKdTy7PyQFOouyHNzBe-8iCZerVgjfESOCiQmhRIdHpODB[/im]

நில்லுங்க வாறேன்ன்ன்ன்ன்ன்:)))

முற்றும் அறிந்த அதிரா said...

[co="red"]”உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக்கூடாது”[/co]..... கண்ணதாசன்.

முற்றும் அறிந்த அதிரா said...

லக்ஸ்மி அக்கா என்ன சொல்லுறா?:), மாயா எனப் போடுவதற்குப் பதில், அதிரா எனப் போட்டு விட்டாவோ?:)))).

மாய உலகம் said...

கவி அழகன் said...
மலிவானது மட்டுமல்ல இலவசங்களும் வந்து வாழ்வின் இலட்சியத்துக்கு தடை போட்டுது நண்பா


கப்பலுக்கு மிக மிக பாதுகாப்பான இடம் துறைமுகம்

ஆனால்

அங்கே நிற்பதற்காக கப்பல் கட்டப்படவில்லை .......//

வாங்க நண்பா... இப்ப எங்க பார்த்தாலும் இல்லீகல் இல்லீகல் காண்டக்ட்... என்ன செய்வது... அரசு முறையாக கவனித்தால் அடங்குவார்கள்... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா...

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
கலக்கலா விஷயங்கள சொல்லி இருக்கீங்க மாப்ள நன்றி..!//

வாங்க மாம்ஸ்... கருத்துக்கு நன்றி...

மாய உலகம் said...

மகேந்திரன் said...
மலிவாய்க் கிடைப்பதைக்கண்டு
சுளுவாய்ப் போகாதே
தெளிவாய் இருந்து விடு

அழகாய் சொல்லி இருக்கிறீர்கள் நண்பரே ..
விவேகானந்தரின் கதை, அதற்கேற்ற குறள்கள்
பொன்மொழி...
உங்களின் உழைப்பு அசாத்தியமானது.

மாணவன் மழுப்பிய பதில் நல்லா இருந்துச்சு..
ஆனாலும் அவன் சொன்னதும் சரிதானே..

அருமையான பதிவு நண்பரே.//

வாங்க நண்பா...மாணவன் சொன்னது சரிதான்.. தங்களது விரிவான பின்னூட்டத்திற்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ம் ...

15 October //

வாங்க சகோ!நன்றி

மாய உலகம் said...

koodal bala said...
காலையிலேயே நல்ல அறிவுரை தந்திருக்கீங்க ....//

வாங்க நண்பா.. இன்றைய காலகட்டத்தில் வியாதி வராமல் குடும்பத்துடன் அனைவரும் நலமுடன் வாழவேண்டும் நண்பா... அதற்காகத்தான்...

மாய உலகம் said...

M.R said...
அறியா விசயங்கள் அறியத்தந்தமைக்கு நன்றி சகோ

தமிழ் மணம் ஏழாவது வாக்கு//

வாங்க... தங்களது கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
இனிய காலை வணக்கம் பாஸ்,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.
விபச்சாரம் எனும் ஒப்பீட்டு விளக்கத்தோடு
எம் வழியில் எது குறுக்கிட்டாலும் நாம் இலக்கில் தவறக் கூடாது என்பதனை அழகுறச் சொல்லியிருக்கிறீங்க.//

வாங்க பாஸ்... ஆமா பாஸ்... குறுக்கிட்டால் தேவையில்லாம கெட்ட பேரு உருவாகிடும்... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா

மாய உலகம் said...

suryajeeva said...
உங்கள் கொள்கையில் விடாப் பிடியாய் நிற்கும் வரை எதுவும் அசைக்க முடியாது... ஜமீலாவின் கதை என்று ஒரு புத்தகம் உண்டு, படிக்கவும்...//

வாங்க சகோ! கண்டிப்பாக வாங்கி படிக்கிறேன்.. கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
நல்ல தொகுப்புக்கள் பாஸ்...

அதிலும் விவகானந்தர் கதை மிகவும அருமை//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க ந்னறி

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
நல்ல தகவல் பாஸ்//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

கோகுல் said...
வணக்கம் மச்சி,சுய அடக்கம் தேவை என்பதை பல விசயங்களை மேற்க்கோள் காட்டி தெளிவாக புரிய வைச்சிட்டிங்க!
காமமே அது பொய்யடா வெறும் காற்றடைத்த பையடா! அதானே நண்பா!//

வாங்க நண்பா.. சரியாக சொன்னீர்கள் வெறும் காற்றடைத்த பைக்கு ஆசைப்பட்டு.. காற்றை சீராக சுவாசிக்காத நிலையை உருவாக்கிடும்.. கருத்துக்கு மிக்க ந்னறி...

மாய உலகம் said...

ஜெய்லானி said...
//மலிவாய்க் கிடைப்பதைக்கண்டு
சுளுவாய்ப் போகாதே
தெளிவாய் இருந்து விடு //
மலிவுன்னு எந்த அர்த்துல சொல்றீங்க பாஸ்...பலப்பேரோட உழைப்பு , கெளரவம் பணம் எல்லாமே இதில போய் இருக்கே ...!!!

சாக்கடைபக்கம் போகிறவன் நந்தவனமா போய் சேருவான் ???? :-))

தன் மனதை கட்டுப்படுத்த முடியாதவன் பற்றி ஒற்றும் சொல்வதுக்கில்லை :-)))//

பல பேரோட உழைப்பு ,கவுரவம், பணம் இப்படி மதிப்புமிக்க விசயங்கள்... மலிவான விசயத்திற்கு அடகு வைக்க வேண்டாமுன்னு சொல்லிருக்கு பாஸ்... மிக அழகாக சொன்னீங்க சாக்கடை பக்கம் போறவன் நொந்தவனம் தான் சேருவான்... அருமையான பின்னூட்டத்துக்கு மனம்கனிந்த நன்றி பாஸ்....

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said...
பல ஆழமான கருத்தை விதைத்துள்ளீர்கள்...

நன்றி..//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க ந்னறி

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
வணக்கம், அடடா,விவேகானந்தர் வாழ்க்கையில் இந்தமாதி சமாச்சாரமெல்லாம் நடந்திருக்கா? எனக்கும்தான் நண்பர்கள் நிறைய இருக்காங்க. ம்.... ஆனால் பைசா பிரயோசனம் இல்லை//

வாங்க சகோ! உங்களது பின்னூட்டம் படித்தவுடன் குபீரென்று சிரிப்பு தான் வந்தது... ஹா ஹா வெகு நேரம் சிரித்த பிறகே பதில் பின்னூட்டம் போடுகிறேன்.. பிரயோஜனம் உள்ள நண்பர்கள் கிடைக்க வாழ்த்துக்கள்....

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
நண்பா கேவலன் super//

ஹா ஹா மிக்க நன்றி நண்பரே!

மாய உலகம் said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
நல்லா சொல்லி இருக்கீங்க பதிவுக்கு சரியான திருக்குறள் அருமை

அந்த வீடியோவும் சூப்பர்//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
ஹா,ஹா,கேவலன் மிகப் பொருத்தம்!//

வாங்க ஐயா...! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

[co="red"]விஸ்வாமித்திரரும் ஏமாந்து தானே மேனகையின் வலையில் வீழ்ந்தார்?[/co]//

ஒழுங்கா தவம் பண்ன கூட விடலையே... ஹா ஹா ... நன்றி

மாய உலகம் said...

அப்பு said...
மதிப்பீடுகள் மங்கி வரும் வேளையில், விவேகானந்தர் வாழ்க்கை நிகழ்ச்சி நமக்கு முன்னுதாரணமே.//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

angelin said...
மிகவும் அருமையான அவசியமான பகிர்வு ராஜேஷ் .வாழ்த்துக்கள் .//

வாங்க... வாழ்த்துக்கும் அருமையான கருத்துக்கும்
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSFZW5xq3u24tITNnnYHSTFPLxgr4s59TDFtT7N6f-EI7sohXIv[/im]

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நல்ல பதிவு//

நன்றி நண்பா!

மாய உலகம் said...

Online Works For All said...
பயனுள்ள அருமையான தகவல் //

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி!

மாய உலகம் said...

RAMVI said...
ஸ்வாமி விவேகானதரை பற்றிய அபூர்வமான தகவல். பகிர்வுக்கு நன்றி.//

வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அறிவுரைக்கு நன்றி.,//

வாங்க கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said...
நல்ல சிந்தனையை தூண்டும் தொகுப்பு... நண்பா...//

வாங்க நண்பா! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

shanmugavel said...
அருமையான தொகுப்பு!//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

ஆதிரா said...
நல்ல பதிவு.
இது மட்டுமல்ல ராஜேஷ்.
அவரிடம் ஒரு மங்கை உங்களைப்போல ஒரு அறிவான குழந்தை எனக்கு வேண்டும். அதனால் என்னைத் திருமணம் செய்து கொள்ளுங்கள் என்றாராம்.

அதற்கு விவேகானந்தர் ”என்னைத் திருமணம் செய்து கொண்டு பிள்ளை பிறந்து, அவன் அறிவாளியா இல்லையா என்று தெரிந்து கொள்ள ஒரு பத்து ஆண்டுகளாவது ஆகும். ஆதால் என்னை இப்போதே தங்கள் மகனாக ஏற்றுக்கொள்ளுங்கள்” என்றாராம்.//

வாங்க! வாவ் விவேகானந்தரைப்பற்றி அருமையான கதையை சொல்லி அசத்திவிட்டீர்கள்..அவரது உறுதியை காட்டுகிறது.,கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
விவேகானந்தர்பற்றிய தகவல் எல்லாரும் தெரிஞ்சுக்கனௌம் அதிரா சொன்ன விஷயமும் நல்லா இருக்கே//

வாங்கம்மா! கருத்துக்கு மிக்க நன்றிம்மா.

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
தலைப்பு எப்படியோ
தந்த செய்தி சிறப்பே!




புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா.. கருத்துக்கு மிக்க நன்றிங்க

மாய உலகம் said...

athira said...
landed...

நில்லுங்க வாறேன்ன்ன்ன்ன்ன்:)))


[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcQMh4hO_BpZL1kXrWMIolD4nXo15gxwM2FO36R6NgfoF468o30jBQ[/im]
எவ்வளவு நேரம் நிக்கிறது.... அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said...
[co="red"]”உணர்வுகளும் உணர்ச்சிகளும், நமக்கு அடங்க வேண்டுமே தவிர, நாம் அதற்கு அடிமையாகிடக்கூடாது”[/co]..... கண்ணதாசன்.

[co="blue"]மிக சரியாக சொன்னீங்க.. தியானம் அதற்கு ஒரு சிறந்த வழி...அனைவரும் தியான செய்து பழக வேண்டும்[/co]

மாய உலகம் said...

athira said...
லக்ஸ்மி அக்கா என்ன சொல்லுறா?:), மாயா எனப் போடுவதற்குப் பதில், அதிரா எனப் போட்டு விட்டாவோ?:)))).//

அது ஆதிராவின் பக்கங்கள் ஆதிரா.... அம்மாவுடைய கருத்துக்கு முன்னால் பின்னூட்டம் பாருங்கோ... :-)

தமிழ்வாசி பிரகாஷ் said...
This comment has been removed by the author.
மாலதி said...

மிக சிறந்த பரதிவு பாராட்டுகள் இலவசம் இப்படித்தான் ம் ....

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said:

[im]http://tshit.com/supergoofy/Super-Goofy.jpg [/im]

வாங்க நண்பா... படம் நல்லாருக்கு நன்றி.

மாய உலகம் said...

மாலதி said...
மிக சிறந்த பரதிவு பாராட்டுகள் இலவசம் இப்படித்தான் ம் ....//

வாங்க.. தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
அருமை//

வாங்க கருத்துக்கு நன்றி

Vijayan Durai said...

அரிய தகவல்,அறிந்து கொள்ளா வேண்டிய தகவல். தங்கள் பதிவில்
//..ராமகிருஷ்னரும், பவதாரணியும்..//
என்று குறிப்பிட்டுள்ளீர்கள் பவதாரணி என்பவர் யார் நன்பா??

Vijayan Durai said...

"கேவலன்..." மாணவனின் பதிலடி சூப்பர்
:-)

பாரதி பற்றிய பதிவு:
"என்றும் அழியா பாரதி"
http://vijayandurai.blogspot.com/2011/12/blog-post_10.html


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out