வாழ்க்கையில் முன்னேற எல்லாருக்கும் ஆசை தான்... அதற்கு மூலதனமே உழைப்பு தான்... உதாரணத்திற்கு உழைப்பால் முன்னேறியவர்களையும், முன்னேற முடியாமல் இருக்கும் காரணங்களையும் இன்றைய பதிவில் பார்ப்போம் அன்பர்களே!
மனித குலத்திற்கு சேவை செய்வதையே மூச்சாகக் கொண்டு இறுதிவரை உழைத்தவர் அன்னை (ஆக்னெஸ் ) மதர்தெரஸா அவர்கள்.
கவிஞர் கண்ணதாசனிடம் அவரது தாயார் சொல்லிய வார்த்தை : "உலகில் நீ எந்த வேலை வேண்டுமானாலும் செய். குப்பை அள்ளுகிற வேலையாக இருந்தாலும் உன்னைவிட அதை வேறு யாரும் சிறப்பாக செய்ய முடியாது என்று மற்றவர்கள் சொல்ல வேண்டும். அந்த அளவிற்கு ஈடுபாட்டுடன் உழைத்து செயல்படு." அதன் படி வாழ்ந்து மறைந்த கவிஞரின் உழைப்பை இந்த உலகம் அறியும்.
திறமை இருந்தும் உழைக்காமல் இருந்திருந்தால் பல்லாயிரக்கணக்கான கவிதைகளை எழுதித் தள்ளி இருக்க முடியாது?.
ஒரு சதவீதம் அறிவு..99 சதவீதம் உழைப்பு... இது தான் எனது வெற்றிக்கு காரணமென தன்னடக்கத்துடன் கூறியவர்... தாமஸ் ஆல்வா எடிசன் அவர்கள்.
திரைப்பட நடிப்புத்துறையில் ஒரு திலகமாக இன்றளவும் போற்றப்படும் நடிகர் சிவாஜிகணேசன் அவர்கள்...
*******
திறமையிருந்தும், அறிவிருந்தும் முன்னேறாமைக்கு முக்கிய காரணம் இயல்பாகவே சிறுகுழந்தையிலிருந்தே சோம்பேறியாக இருந்து பழக்கப்பட்டவர்கள். ''தொட்டில் பழக்கம் சுடுகாடு வரை" என்பதற்கு இணங்க சிறுவயது முதலே எந்த விசயத்திலும் உழைக்கத் தயங்குவார்கள்.
இவர்கள் தாங்களாகவே தங்கள் சுறுசுறுப்பின்மையை உணர்ந்து உழைக்கப் பழகிக் கொண்டால் மட்டுமே முன்னேற்றம் காணமுடியும்.
பிறர் உழைப்பில் வாழ்ந்து பழக்கப்பட்டவர்கள் தாமாக உழைக்க நினைப்பதில்லை.
மனதளவில் தைரியம் இல்லாதவர்கள், சிறு நஷ்டம் தோல்விக்கே துவண்டு போய் விடுபவர்கள். ஒரு முறை சிறு சரிவு ஏற்பட்டால் அதையே நினைத்து கலங்கிப்போய் விடுபவர்கள்
'உழைத்தும் பிரயோஜனமில்லை' என்று பேசிக்கொண்டு உழைக்கத்தயங்குவார்கள்.
உடல் நிலையில் சிறிய கோளாறு ஏற்பட்டாலும் அதையே பெரிய வியாதியாக நினைத்து வீண்கற்பனை செய்து கொண்டு,
உழைத்தால் மேலும் உடற்கோளாறு ஏற்படும் என்று தாமாகவே முடிவு செய்து கொண்டு உழைக்க அஞ்சுபவர்கள்.
வாழ்க்கையில் பெரிய இழப்பை சந்தித்தவர்களும் உழைக்கப் பிடிக்காமல் விரக்தியடைந்த நிலையில் இருப்பவர்களும் வாழ்க்கையின் சுவராஸ்யத்தை இழந்து உழைப்பில் அக்கறை காட்டுவதில்லை.
வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் முதலில் உழைப்பை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும்.
உழைப்பையே சுவாசமாக கருத வேண்டும். உழைப்பையே தவமாக கருத வேண்டும். உழைப்பையே தியானமாகக் கொள்ளவேண்டும்.
நன்கு உழைக்கும் போது கிடைக்கும் மன நிறைவில் கடவுளையே காணலாம்.
உங்கள் பிரியமானவன்,

101 comments:
உழைப்பின் சிறப்பு பற்றிய நல்ல பதிவு ராஜேஷ்~
ஆனா உழைப்பை உறிஞ்சுபவர்களை என்ன பண்றதுன்னு தெரியல.
கடின உழைப்பின் பலாபலன் பற்றிய அருமையான பதிவு..
பகிர்வுகு நன்றி பாஸ்
மாப்ள உழைப்பை பற்றி பதிவு போட உழைச்சது தெரியுது நன்றிகள்!
ரொம்ப சிறப்பான பதிவு.
Hard work always pays.Luv ur collection of pics and video to make ur words more inspiring and interesting.Thanks for dropping in at my space brother.
உழைப்பின் வரா உறுதிகள்
உளவோ!
இதை உணர்த்தும் நல்ல பதிவு
நன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்
உழைப்பே உயர்வு தரும். நல்ல பதிவு. உபயோகமான பதிவாக இடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.
சரியாச்சொன்னீங்க ராஜேஷ்.
உழைப்பு தான் உயர்வு தரும்.
அதனால தானே, தாடிக்கார தாத்தா “மெய் வருத்தக் கூலி தரும்”-னு சொல்லியிருக்காரு.
வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் முதலில் உழைப்பை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உழைப்பையே சுவாசமாக கருதவேண்டும். உழைப்பையே தவமாக கருதவேண்டும். உழைப்பையே தியானமாக கொள்ள வேண்டும்.
மிகவும் உண்மைதான்.
அருமை.
அருமையா அருமை... உங்கள் படம் ப்ளஸ் பாடம் இரண்டும் சேர்ந்து மிக விரைவாக எல்லாரையும் சேர்ந்துவிடுகிறது.
சும்மா நிக்காதீங்க.... கோட் சூட் போட்டு நில்லுங்கோ மாயா...
மீ இப்போ எஸ்சூஊஊஉ... பின்பு வாறேன்... தேம்ஸ்ல ஆரோ வெத்தில துப்பிட்டாங்கோஓஓஒ:)))))))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கண்டுபிடிச்சுப் போலீசில குடுக்காமல் ஓயமாட்டேன்... பூஸ் ஒன்று புறப்படுதே...
எதுவும் படிக்கல்ல, வந்து படிக்கிறேன்.
உழைப்பு மட்டுமே உயர்வு தராது, தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள தெரிய வேண்டும்... ஆல்வா எடிசன் பெரிய உழைப்பாளி தான் ஆனால் அதை விட பெரிய மார்கெடிங் நிபுணர்... எவ்வளவு பெரிய விஷயம் என்றாலும் ஒழுங்காக மக்களை சென்று சேராதவரை வெற்றி பெறுவது கடினமே
பதிவு அருமை...
உழைப்பை குறித்த வரிகளும், படங்களும் மிக அருமை.
உண்மை தான் உழைப்புதான் மூலதனம்
நல்ல பதிவு ..
இன்று என் வலையில்
கிளுகிளு கில்பான்ஸ் கழகம்- துவக்க விழா
சிந்திக்கவைக்கும் பதிவு..
இந்த அருமையான பதிவில் உங்க உழைப்பு தெரிகிறது ராஜேஷ்.
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.
உழைப்பு பற்றிய பதிவிற்கான உங்கள் உழைப்பு அதிகம்..
நன்றி..பாப் அப் பாக்ஸுக்கு!
உழைப்பு உங்க பதிவில் தெரியுது
There is no other substitution for hard work.
Thank you for sharing valuable matter.
உழைப்பின் பெருமையை விளக்க நல்லா உழைச்சிருக்கீங்க :-)
உழைக்க தூண்டும் சிந்தனைப் பதிவு
பகிர்வுக்கு நன்றி சகோ
உழைப்பைப் பற்றி சிறப்பான கண்னோட்டம்!
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!
[im]http://thumb10.shutterstock.com/thumb_small/248635/248635,1226600352,2/stock-photo-several-figures-team-up-to-push-up-a-green-arrow-symbolizing-teamwork-and-growth-20475443.jpg[/im]
உழைப்பின் உயர்வை மிக அருமையான விளக்கியுள்ளீர்கள்... ராஜேஷ்...
வாழ்த்துகள் நண்பா....
இந்த பதிவிற்கான உங்க உழைப்பு நல்லா தெரியுது..
உழைப்போம், உயர்வோம்..
கடுமையான உழைப்பும் அதோடு கொஞ்சம் அறிவும் இருந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம் என்பதை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பா.
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17
சரியா சொன்னீங்க பாஸ் அருமை
அருமை அய்யா!
அருமையான பதிவு............
படங்களுடன் கனகட்சிதமாக கூறியுள்ளீர் நண்பரே அருமை
உஸ்ஸ்ஸ்ஸ்... ஆரும் சத்தம் போட்டிடாதையுங்கோ மாயாவை இன்னும் காணேல்லை...:)))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSZvYk5qyKlGRgRs1vFhVRDgED-VqF88Q11jgPJtOsBh5o14RaftQ[/im]
ஜீஸ்ஸ்ஸ்ஸ்..... புஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்... உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ்
இறுதி மூச்சு வரை உழைப்பு...உழைப்பு உழைப்பு... முயற்சி திருவினையாக்கும். நல்லாச் சொன்னீங்க மாயா.
எங்கட கண்ணதாசனையும் போட்டுக் காட்டிவிட்டீங்க அவ்வ்வ்வ்:)). அவரும் பல கஸ்டங்கள் பட்டு, விடா முயற்சியாலேயேதானே முன்னுக்கு வந்தவராம்.....
உழைப்பாளி... விவசாயி என ஒரு பழைய பாட்டு இருக்கெல்லோ... பட்டுக்கோட்டை அவர்கள் இயற்றியதாக்கும்.
கோகுல் said... 1
உழைப்பின் சிறப்பு பற்றிய நல்ல பதிவு ராஜேஷ்~
ஆனா உழைப்பை உறிஞ்சுபவர்களை என்ன பண்றதுன்னு தெரியல.//
வாங்க.. உண்மைதான் கோகுல் உழைப்பு உறிஞ்சிபவர்களிடமிருந்து விலகிவிட வேண்டும்... கருத்துக்கு நன்றி கோகுல்
மதுரன் said...
கடின உழைப்பின் பலாபலன் பற்றிய அருமையான பதிவு..
பகிர்வுகு நன்றி பாஸ்//
வாக்க நண்பா... கருத்துக்கு நன்றி.
விக்கியுலகம் said...
மாப்ள உழைப்பை பற்றி பதிவு போட உழைச்சது தெரியுது நன்றிகள்!//
வாங்க மாம்ஸ்... கருத்துக்கு மிக்க ந்னறி
பன்னிக்குட்டி ராம்சாமி said...
ரொம்ப சிறப்பான பதிவு.//
வாங்க அண்ணே நன்றி
MyKitchen Flavors-BonAppetit!. said...
Hard work always pays.Luv ur collection of pics and video to make ur words more inspiring and interesting.Thanks for dropping in at my space brother.//
thank u sister..
ஹையோஓ மாயா வந்திட்டாரா?:))) புஸ்ஸ்ஸ்ஸ் பூஸைக் கடிக்கிறார் மாயா காப்பாத்துங்கோ... ங்கோ... ங்ங்கோ...
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcR8Z6tgm9zCMFhft2KupGBR3WdiKmIdOZuQ3x9LNIU5TcfAgpCwjg[/im]
புலவர் சா இராமாநுசம் said...
உழைப்பின் வரா உறுதிகள்
உளவோ!
இதை உணர்த்தும் நல்ல பதிவு
நன்றி மாய!
புலவர் சா இராமாநுசம்//
வாங்க ஐயா... கவிதையாக கருத்து சொன்னமைக்கு நன்றி ஐயா.
கடம்பவன குயில் said...
உழைப்பே உயர்வு தரும். நல்ல பதிவு. உபயோகமான பதிவாக இடுகிறீர்கள். வாழ்த்துக்கள் சகோ.//
வாங்க சகோ.. கருத்துக்கு நன்றி.
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcTJn5P__LMJ9tUhacvW0e-w87ycoPpekuLTH3CJlCD8SrvaaAgL[/im]
பதிலுக்கு கடித்துவிட்டார்ர்ர் புஸ்ஸ்ஸூ.. ஹா ஹா ஹா
சத்ரியன் said...
சரியாச்சொன்னீங்க ராஜேஷ்.
உழைப்பு தான் உயர்வு தரும்.
அதனால தானே, தாடிக்கார தாத்தா “மெய் வருத்தக் கூலி தரும்”-னு சொல்லியிருக்காரு.//
வாங்க நண்பா... திருவள்ளுவரே மகத்தானதாக சொல்லி சென்றுவிட்டார்... சரி தான் நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றிகள்.
Lakshmi said...
வாழ்க்கையில் உயர நினைப்பவர்கள் முதலில் உழைப்பை நேசிக்கக் கற்றுக்கொள்ள வேண்டும். உழைப்பையே சுவாசமாக கருதவேண்டும். உழைப்பையே தவமாக கருதவேண்டும். உழைப்பையே தியானமாக கொள்ள வேண்டும்.
மிகவும் உண்மைதான்.//
வாங்கம்மா.. கருத்துக்கு மிக்க நன்றி.
நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.//
வாங்க சகோ! நன்றி.
அப்பு said...
அருமையா அருமை... உங்கள் படம் ப்ளஸ் பாடம் இரண்டும் சேர்ந்து மிக விரைவாக எல்லாரையும் சேர்ந்துவிடுகிறது.//
வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி
என்ன இது பதிலுக்குப் புஸ்ஸைக் கடிக்காமல், புஸ் வீட்டு வேலைக்காரம்மாவைக் கடிக்குதே பூஸ்ஸ், என்னாச்சு பூஸுக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).
athira said...
சும்மா நிக்காதீங்க.... கோட் சூட் போட்டு நில்லுங்கோ மாயா...
மீ இப்போ எஸ்சூஊஊஉ... பின்பு வாறேன்... தேம்ஸ்ல ஆரோ வெத்தில துப்பிட்டாங்கோஓஓஒ:)))))))கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்.. கண்டுபிடிச்சுப் போலீசில குடுக்காமல் ஓயமாட்டேன்... பூஸ் ஒன்று புறப்படுதே...//
கோட்டு சூட்டு தானே இதோ... போட்டூக்கடா சூட்டு...
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/r.jpg[/im]
suryajeeva said...
உழைப்பு மட்டுமே உயர்வு தராது, தன்னை விளம்பரப் படுத்திக் கொள்ள தெரிய வேண்டும்... ஆல்வா எடிசன் பெரிய உழைப்பாளி தான் ஆனால் அதை விட பெரிய மார்கெடிங் நிபுணர்... எவ்வளவு பெரிய விஷயம் என்றாலும் ஒழுங்காக மக்களை சென்று சேராதவரை வெற்றி பெறுவது கடினமே//
உண்மை தான் சகோ! விளம்பரமும் முக்கியம் தான்... அதற்கு முன் உழைப்பு முக்கியம்... கருத்துக்கு மிக்க நன்றி சகோ!
சசிகுமார் said...
பதிவு அருமை...//
வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.
Kousalya said...
உழைப்பை குறித்த வரிகளும், படங்களும் மிக அருமை.//
வாங்க.. தங்களது கருத்துக்கு நன்றி.
"என் ராஜபாட்டை"- ராஜா said...
உண்மை தான் உழைப்புதான் மூலதனம்
நல்ல பதிவு ..//
வாங்க... கருத்துக்கு மிக்க நன்றி.
முனைவர்.இரா.குணசீலன் said...
சிந்திக்கவைக்கும் பதிவு..//
வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.
RAMVI said...
இந்த அருமையான பதிவில் உங்க உழைப்பு தெரிகிறது ராஜேஷ்.
நல்ல பதிவு. பகிர்வுக்கு நன்றி.//
வாங்க..தங்களது கருத்துக்கு மிக்க ந்னறி
செங்கோவி said...
உழைப்பு பற்றிய பதிவிற்கான உங்கள் உழைப்பு அதிகம்..
நன்றி..பாப் அப் பாக்ஸுக்கு!//
வாங்க நண்பா..கருத்துக்கு மிக்க நன்றி.
சி.பி.செந்தில்குமார் said...
உழைப்பு உங்க பதிவில் தெரியுது//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.
இராஜராஜேஸ்வரி said...
There is no other substitution for hard work.
Thank you for sharing valuable matter.//
கருத்துக்கு மிக்க நன்றி மேடம்.
அமைதிச்சாரல் said...
உழைப்பின் பெருமையை விளக்க நல்லா உழைச்சிருக்கீங்க :-)//
வாங்க அமைதிச்சாரல்..கருத்துக்கு மிக்க நன்றி :-)
M.R said...
உழைக்க தூண்டும் சிந்தனைப் பதிவு
பகிர்வுக்கு நன்றி //
வாங்க தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.
தனிமரம் said...
உழைப்பைப் பற்றி சிறப்பான கண்னோட்டம்!//
வாங்க தனிமரம்.. கருத்துக்கு மிக்க நன்றி.
சந்திர வம்சம் said...
உழைத்து வாழவேண்டும், பிறர் உழைப்பில் வாழ்ந்திடாதே!//
வாங்க சந்திரவம்சம்!
[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/images33.jpg[/im]
ராஜா MVS said...
உழைப்பின் உயர்வை மிக அருமையான விளக்கியுள்ளீர்கள்... ராஜேஷ்...
வாழ்த்துகள் நண்பா....//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி
!* வேடந்தாங்கல் - கருன் *! said...
இந்த பதிவிற்கான உங்க உழைப்பு நல்லா தெரியுது..
உழைப்போம், உயர்வோம்.//
வாங்க சகோ! கருத்துக்கு நன்றி
காந்தி பனங்கூர் said...
கடுமையான உழைப்பும் அதோடு கொஞ்சம் அறிவும் இருந்தால் வாழ்க்கையில் நல்ல முன்னேற்றம் காணலாம் என்பதை அருமையாக பதிவு செய்திருக்கிறீர்கள் நண்பா.//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி
ஹையோ... மாயா கோட்டுச் சூட்டுப் போட்டு ரெடியாகிட்டார்... சாட்சி சொல்ல:)))... அப்போ தீர்ப்பு எமக்குத்தான் சாதகமா முடியப்போகுது, தீர்ப்பு எமக்குச் சாதகமானால் மாயாக்கு மொட்டைபோட்டுத் தோடு குத்துவதாக திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டியிருக்கிறேன்... அதை எப்படியும் மாயா நிறை வேத்திடுவார்:)))...
ஊசிக்குறிப்பு:
இந்தப்படத்தை எடுத்துப்போய் பொம்பிளை பகுதியிடம் குடுக்கட்டே மாயா மாப்பிள்ளைப் படம் வேணுமெண்டு ஒரே தொந்தரவாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:))).
Ramani said...
படங்களுடன் பதிவு மிக மிக அருமை
தொடர வாழ்த்துக்கள்//
வாங்க சகோ...வாழ்த்துக்கு நன்றி
ஜ.ரா.ரமேஷ் பாபு said...
சரியா சொன்னீங்க பாஸ் அருமை//
வாங்க பாஸ்.. கருத்துக்கு மிக்க நன்றி.
shanmugavel said...
அருமை அய்யா!//
வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி
காட்டு பூச்சி said...
படங்களுடன் கனகட்சிதமாக கூறியுள்ளீர் நண்பரே அருமை//
வாங்க காட்டு பூச்சி... கடிக்காமல் கருத்தை நச்சுன்னு சொல்லிட்டீங்க நன்றி
இன்று முழுக்க இருக்ககூட நேரம் கிடைக்குதில்லை நான் போகவேணும், போயிட்டுப் பிறகு வாறேன்...
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSRGNT-LxYlYWMwpci8HfGhWJLo0daDV9VU5LSf_hxTFan1pFSu[/im]
athira said...
இறுதி மூச்சு வரை உழைப்பு...உழைப்பு உழைப்பு... முயற்சி திருவினையாக்கும். நல்லாச் சொன்னீங்க மாயா.//
கருத்துக்கு நன்றி மியா...:-)
athira said...
எங்கட கண்ணதாசனையும் போட்டுக் காட்டிவிட்டீங்க அவ்வ்வ்வ்:)). அவரும் பல கஸ்டங்கள் பட்டு, விடா முயற்சியாலேயேதானே முன்னுக்கு வந்தவராம்.....
உழைப்பாளி... விவசாயி என ஒரு பழைய பாட்டு இருக்கெல்லோ... பட்டுக்கோட்டை அவர்கள் இயற்றியதாக்கும்.//
உண்மை தான் பட்டுக்கோட்டை அவர்களும் கடும் உழைப்பாளி தான் ... உதாரணங்களை சொல்லிக்கொண்டே போகலாம்... நிறைய விசயங்கள் தெரிந்து வைத்திருக்கிறீர்கள்...
athira said...
என்ன இது பதிலுக்குப் புஸ்ஸைக் கடிக்காமல், புஸ் வீட்டு வேலைக்காரம்மாவைக் கடிக்குதே பூஸ்ஸ், என்னாச்சு பூஸுக்கு.... அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).//
ஆஹா...கொவத்துல மாத்தி கடிச்சுட்டாரோ! ;-)))
athira said...
ஹையோ... மாயா கோட்டுச் சூட்டுப் போட்டு ரெடியாகிட்டார்... சாட்சி சொல்ல:)))... அப்போ தீர்ப்பு எமக்குத்தான் சாதகமா முடியப்போகுது, தீர்ப்பு எமக்குச் சாதகமானால் மாயாக்கு மொட்டைபோட்டுத் தோடு குத்துவதாக திருச்செந்தூர் முருகனுக்கு வேண்டியிருக்கிறேன்... அதை எப்படியும் மாயா நிறை வேத்திடுவார்:)))...
ஊசிக்குறிப்பு:
இந்தப்படத்தை எடுத்துப்போய் பொம்பிளை பகுதியிடம் குடுக்கட்டே மாயா மாப்பிள்ளைப் படம் வேணுமெண்டு ஒரே தொந்தரவாக்கிடக்கே அவ்வ்வ்வ்வ்:))).//
இது வரைக்கும் மாயாவுக்கு ஆரும் காது குத்தல.. குத்தவும் விடமாட்டான்... தீர்ப்பு உங்களக்கு சாதகாம வராதுங்க... அப்பறம் ஞாயம் செத்து போகும்ம்... உடுறா சண்முகம் வணடிய.... \\
என்னது என் போட்டோவ.... பொண்ணுபாக்க எடுத்து போறியளா.. ஹா ஹா அப்பறம் அனுஷ்கா அழுவாங்க... கன்ஷிகா கத்துவாங்க... தமன்னா தடுமாறிடுவாங்க... ஸ்ருதி ஸூட் பண்ணிடுவாங்க.... அவ்வ்வ்வ்வ்
athira said... 79
இன்று முழுக்க இருக்ககூட நேரம் கிடைக்குதில்லை நான் போகவேணும், போயிட்டுப் பிறகு வாறேன்...//
ஆஹா புஸ்ஸு இப்படி போட்டு அடைச்சு வச்சிட்டாங்க... அவ்வ்வ்வ்வ்
உழைப்பே உயர்வை தரும்,நல்ல பகிர்வு.
ஹா...ஹா..ஹா... காட்டுப்பூச்சி என்ற பெயரையும், அதுக்கு மாயாவின் 79 ம் நம்பர் பதிலையும் பார்த்ததும் என்னை மீறிச் சிரிச்சிட்டேன்... ட்டேன்.....ட்டேன்ன்ன்ன்:))))).
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSFhaXBNDhBGmhP5BAeH-d1dIzGAgp3Wz6Js9PNJ2ZXVydmMNK5[/im]
என்னாது தீர்ப்பு சாதகமா வராதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... ஜெய்..ஜெய்... எனக்கொரு 1000 கடிக்கிற தேள் உடனடியாகத் தேவை, தேம்ஸ்ல விட:)))))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTpzQWH_Rsx9ApLAmivpcu5cuRFOYsfLSsqFJfoD3VHWkWZi5jOKQ[/im]
உழைப்பின் உன்னதம் சொல்லும்
ஊக்கம் கொடுக்கும் பதிவு..
அருமை அருமை...
asiya omar said...
உழைப்பே உயர்வை தரும்,நல்ல பகிர்வு.//
வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி.
athira said...
ஹா...ஹா..ஹா... காட்டுப்பூச்சி என்ற பெயரையும், அதுக்கு மாயாவின் 79 ம் நம்பர் பதிலையும் பார்த்ததும் என்னை மீறிச் சிரிச்சிட்டேன்... ட்டேன்.....ட்டேன்ன்ன்ன்:))))).//
இந்த சிரிப்ப தான் எதிர் பார்த்தேன்...
athira said...
என்னாது தீர்ப்பு சாதகமா வராதோ? கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)))... ஜெய்..ஜெய்... எனக்கொரு 1000 கடிக்கிற தேள் உடனடியாகத் தேவை, தேம்ஸ்ல விட:)))))//
ஹா ஹா அவர் புளியமரத்த விட்டு எறங்க மாட்டாரு.. இப்ப நாந்தான் நண்டுவாக்குலியெல்லாம் வாடகைக்கு விட்டுருக்கென்ன்ன்... 1 ரூபாய்க்கு மூணு.. 1 ரூபாய்க்கூ மூணு... ;-)))))))))))))))))))))
♥ !முனைங்♥ ! ♥ ! (சாருஜன்)♥ ! ♥ ! said...
நல்ல பகிர்வு//
வாங்க நண்பா.. கருத்துக்கு நன்றி
மகேந்திரன் said...
உழைப்பின் உன்னதம் சொல்லும்
ஊக்கம் கொடுக்கும் பதிவு..
அருமை அருமை...//
வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி
உழைப்பின் மகிமையையும். வெற்றிக்கான வழிகளையும் அருமையான பதிவு
Mahan.Thamesh said...
உழைப்பின் மகிமையையும். வெற்றிக்கான வழிகளையும் அருமையான பதிவு//
வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.
நல்லா இருந்துச்சு..ஆமா உழைப்பு பதிவுக்கு அன்னை திரேசா, கண்ணதாசன் , சிவாஜி படமெல்லாம் ஓகே.. ரஜினி பாட்டும் ஓகே.. பட் எதுக்கு அந்த நடிகை படம்(அது இலியானவா?)
வணக்கம் பாஸ்,
உழைப்பின் சிறப்பினையும், உழைப்பால் உயர்ந்தோரின் பெருமைகளையும் அருமையாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.
மொக்கராசு மாமா said...
நல்லா இருந்துச்சு..ஆமா உழைப்பு பதிவுக்கு அன்னை திரேசா, கண்ணதாசன் , சிவாஜி படமெல்லாம் ஓகே.. ரஜினி பாட்டும் ஓகே.. பட் எதுக்கு அந்த நடிகை படம்(அது இலியானவா?)//
வாங்க பாஸ்... ஹா ஹா இலியான தான உங்க கண்ண உறுத்துறாங்க.. ஹா ஹா
நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
உழைப்பின் சிறப்பினையும், உழைப்பால் உயர்ந்தோரின் பெருமைகளையும் அருமையாகச் சொல்லி நிற்கிறது இப் பதிவு.//
வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.
சாகம்பரி said...
என் மனம் கவர்ந்த இந்தப் பதிவை நாளைய (2/11/11 -புதன் கிழமை) வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தவிருக்கிறேன். நேரம் கிட்டும்போது வந்து பாருங்கள். http://blogintamil.blogspot.com/ நன்றி.//
மனம் கனிந்த நன்றி... கண்டிப்பாக வந்து பார்க்கிறேன்...
Post a Comment