Sunday, 16 October, 2011

ஸ்ரீவித்யா

ஸ்ரீவித்தியாவுக்கு கணவராக சமீபகாலத்து மலையாள டெலிவிஷன் தொடர்களில் நடித்தவர்,பிரேம் பிரகாஷ். அவர் ஸ்ரீவித்யாவின் இறுதிக்காலத்தைப் பற்றிய நினைவுகளைச் சொல்கிறார்.


அவர் தனது 25 ஆண்டுகால வேதனைகளை என்னிடமும் என் குடும்பத்தினருடமும் சொன்னபோது,
'இவ்வளவு வேதனைகளை மறைத்துக்கொண்டு இவரால் எப்படி சிரித்துக்கொண்டே இருக்க முடிகிறது'- என்று நான் அதிசியத்தேன்.

ஆனால் அவருடைய அவ்வளவு வேதனைகளும் சேர்ந்துதான் அவரை இப்படி ஒரு நோய்க்கு இரைக்கிவிட்டது என்று நினைக்கிறேன்.

நான் தயாரித்த தொடரில் அவருக்கு புற்று நோயாளி வேடம். அதில் நடித்துக்கொண்டிருக்கும்போது என்னிடம், 'எனக்கும் இப்படி ஒரு நோய் வருமா?' என்றார். 'வாழ்க்கையில் இவ்வளவு வேதனைகளை அனுபவித்த உங்களுக்கு அப்படிப்பட்ட நோயெல்லாம் வராது'- என்றேன்.

இப்படி நாங்கள் பேசிக்கொண்டிருக்கும்போது அவருக்கு தொடர்ச்சியான இருமல் வந்தது. நான் உடனே 'இப்படிப்பட்ட இருமலை வைத்துக்கொண்டிருக்க கூடாது. இதை அலட்சியப்படுத்தக்கூடாது'- என்றேன். பதிலுக்கு அவர் சிரித்து சமாளித்து விட்டு போய்விட்டார். சில நாட்கள் கழித்து ஒரு நாள் திடிரென்று என்னிடம் யாருக்கும் கேட்காத மெல்லிய குரலில், 'நான் டாக்டரைப் போய் பார்த்தேன். அவர் புற்று நோய்தான் என்று உறுதிபடுத்தி விட்டார்' -என்றார். நான் அப்படியே நடுங்கிப்போனேன்.

உடனே அவர் என்னைத் தேற்றினார். அந்த நோய் இருப்பதை அவர் பொருட்டாகவே எடுத்துக்கொள்ளவில்லை. அது யாருக்கும் தெரியக்கூடாது என்பதில் மிக உறுதியாக இருந்தார். தன் நோய்க்கு மருந்துகளை விட நடிப்புதான் சிறந்த மருந்து என்று அடிக்கடி கூறுவார்.

நோயை அவர் மறைத்து வைத்து எல்லோரையும் சிரிக்க வைத்துக்கொண்டிருந்தார். அவர் இறப்பதற்கு ஒரு வாரத்திற்கு முன்பு என்னிடம் போனில் பேசினார். "உங்கள் வீட்டில் காரம் இல்லாமல் கோழி இறைச்சி சமைப்பீர்களே அது எனக்கு வேண்டும்"- என்றார்.பயப்படாதீர்கள் டாக்டர் பர்மிசன் கொடுத்துவிட்டார் என்றார்.

 நான் உடனே திருவனந்தபுரத்தில் உள்ள என் சகோதரி மூலம் அதை தயாரித்து கொடுத்து அனுப்பினேன். மரணத்திற்கு மூன்று நாட்களுக்கு முன்பு என்னிடம் போனில் பேசியபோது அவருடைய குரல் மிக பலகீனமாக இருந்தது.

"எனக்கு யாரும் இல்லை. எனக்காக பிரார்த்தனை செய்யுங்கள்" - என்றார். நாங்கள் அவருக்காக பிரார்தித்தோம். சதி, துரோகம், ஏமாற்றுதல் போன்ற எதுவும் இல்லாத அந்த உலகத்திற்கு கடவுள் அவரை அதிகம் வேதனைப்படுத்தாமல் கொண்டு சேர்த்துவிட்டார்.


ஒரு நிமிசம்:

கல்வி ஒருவனை அறிவுள்ளவனாக மாற்றலாம், ஆனால் அன்பு மட்டுமே ஒருவனை மனிதனாக மாற்றும்

உனக்கு தெரியாததை தெரியாது என்று ஒப்புக் கொள்வதற்குப் பெயர்தான் அறிவு.

பொறுமை கசப்பு அதன் கனி இனிப்பு....

உங்கள் பிரியமானவன்,

59 comments:

இராஜராஜேஸ்வரி said...

அன்பு மட்டுமே மனிதனாக்கும்/

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

இராஜராஜேஸ்வரி said...

ஸ்ரீவித்யா மரணம் கலங்க வைத்தது.

RAMVI said...

ஸ்ரீவித்யா அருமையான நடிகை, அவருடைய கடைசி காலம் கலங்க வைத்துவிட்டது.

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ரைட்டு.

MyKitchen Flavors-BonAppetit!. said...

Actress Srividyavin kadaisi naatkal varutha pada vaikirathu. Anaal avarum Tamilnattai vittu Kerala poi othungi kondar.Athai thavirthirunthal nalla manitharkal kidaithiruparkal.Thanks for sharing it Bro.

Ramani said...

உண்மை அந்தக் கண்களில் நான் என்றுமே
கவலையின் ரேகைகளைக் கண்டதே இல்லை
உண்மையில் அவர் இறந்தபோது ஒரு சகோதரியை
இழந்த உணர்வை முழுமையாக உணர்ந்தேன்
மனம் கனக்கச் செய்து போகும் தரமான பதிவு
த.ம 5

thendralsaravanan said...

நெகிழ வைத்த உண்மை!

Vinodhini said...

நெகிழ்ச்சியான பதிவு, கண் கலங்க வைத்தது, வாழ்த்துக்கள்..

Lakshmi said...

பெரும்பாலான சினிமா நடிக நடிகையருக்கு கடைசிகாலம் வலியும் வேதனையும் நிறம்பியதாகத்தான் இருந்திருக்கு.

நிரூபன் said...

வணக்கம் தல,
நலமா?

மற்றையவர்களைச் சிரிக்க வைக்கும் புன்னகை இளவரசியின் வாழ்க்கையின் பின்னே பொதிந்துள்ள அறியப்படாத பக்கங்கள் கண்களைக் கலங்கச் செய்திருக்கிறது.

எம் வாழ்க்கையும் ஒரு நாடக மேடை தான் என்பதனை இப் பதிவு எனக்கு நினைவூட்டுகிறது.

மகேந்திரன் said...

ஒரு மாபெரும் நடிகை பற்றிய இயல்பியல் கட்டுரை.

மகேந்திரன் said...

ஒருமுறை நடிகர் கமலஹாசன் தொலைகாட்சி பேட்டியில் பேசுகையில் இன்று இருக்கும் நடிகைகளின் புகழில் பத்து சதவிகிதம் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்திருந்தால் அவர் புகழின் உச்சிக்கு சென்றிருப்பார்.என்று சொன்னார்.

மகேந்திரன் said...

நடிப்பின் பரிமாணங்களில் அசத்தியவர் நடிகை ஸ்ரீவித்யா. தாயின் புகழில் ஏணி ஏறாமல். தன் சொந்த முயற்சியால் திறமையால் திரையில் காவியம் எழுதியவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
அன்பு மட்டுமே மனிதனாக்கும்/

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

ஸ்ரீவித்யா மரணம் கலங்க வைத்தது.//

வாங்க மேம்., தங்களது கருத்துக்கும் பாராட்டுக்கும் மனம்கனிந்த நன்றிகள்

மாய உலகம் said...

RAMVI said...
ஸ்ரீவித்யா அருமையான நடிகை, அவருடைய கடைசி காலம் கலங்க வைத்துவிட்டது.//

வாங்க... கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
ரைட்டு.//

வாங்க சகோ.. கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

MyKitchen Flavors-BonAppetit!. said...
Actress Srividyavin kadaisi naatkal varutha pada vaikirathu. Anaal avarum Tamilnattai vittu Kerala poi othungi kondar.Athai thavirthirunthal nalla manitharkal kidaithiruparkal.Thanks for sharing it Bro.//

வாங்க சகோ! இல்லை சகோ..அவர் இரு மாநிலங்களிலும் வாழ்ந்தவர் தான்.. சூழ்ச்சிகளாலும், ஏமாற்றங்களாலும் பாதிக்கப்பட்டு.. திருவனந்தபுரம் கேன்சர் ஹாஸ்பிட்டலில் மருத்துவம் மேற்கொண்டு தனிமையை ஏற்றுக்கொண்டார்.. கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said...
உண்மை அந்தக் கண்களில் நான் என்றுமே
கவலையின் ரேகைகளைக் கண்டதே இல்லை
உண்மையில் அவர் இறந்தபோது ஒரு சகோதரியை
இழந்த உணர்வை முழுமையாக உணர்ந்தேன்
மனம் கனக்கச் செய்து போகும் தரமான பதிவு
த.ம 5//

வாங்க சகோ!... ஏனைய பேரை கண்கலங்க வைத்த நடிகையின் முடிவு தான் சகோ! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

thendralsaravanan said...
நெகிழ வைத்த உண்மை!//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி!

மாய உலகம் said...

Vinodhini said...
நெகிழ்ச்சியான பதிவு, கண் கலங்க வைத்தது, வாழ்த்துக்கள்..//

வாங்க... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி.

மாய உலகம் said...

Lakshmi said...
பெரும்பாலான சினிமா நடிக நடிகையருக்கு கடைசிகாலம் வலியும் வேதனையும் நிறம்பியதாகத்தான் இருந்திருக்கு.//

வாங்கம்மா.. உண்மை தான் நிறைய நடிகைகளின் கதை கடைசியில் வேதனையில் தான் முடிந்திருக்கிறது...

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் தல,
நலமா?

மற்றையவர்களைச் சிரிக்க வைக்கும் புன்னகை இளவரசியின் வாழ்க்கையின் பின்னே பொதிந்துள்ள அறியப்படாத பக்கங்கள் கண்களைக் கலங்கச் செய்திருக்கிறது.

எம் வாழ்க்கையும் ஒரு நாடக மேடை தான் என்பதனை இப் பதிவு எனக்கு நினைவூட்டுகிறது.//

வாங்க பாஸ்! உண்மை தான் அன்புக்காக ஏங்கியவரின் வாழ்க்கையில்... ஏமாற்றங்களும், சூழ்ச்சிகளும் மட்டுமே அனுபவித்து வேதனையுடன் இறந்து போனவர்... நமது வாழ்க்கையும் ஒரு நாடக மேடை தான் நண்பா... நமது கதாபாத்திரத்தில் அன்புக்கு முக்கியதுவம் தந்து வாழ்வோம்... மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

மகேந்திரன் said...
ஒரு மாபெரும் நடிகை பற்றிய இயல்பியல் கட்டுரை.//

வாங்க நண்பா!

மாய உலகம் said...

மகேந்திரன் said...
ஒருமுறை நடிகர் கமலஹாசன் தொலைகாட்சி பேட்டியில் பேசுகையில் இன்று இருக்கும் நடிகைகளின் புகழில் பத்து சதவிகிதம் நடிகை ஸ்ரீவித்யாவுக்கு கிடைத்திருந்தால் அவர் புகழின் உச்சிக்கு சென்றிருப்பார்.என்று சொன்னார்.//
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSRnpkHyf1g2_6U9QUY47qrPWyPL7083_0M8ygq9rPB_eGX0LDu[/im]
உண்மை தான் நண்பா.. நமது உலக நாயகன் கூறியது. அது போல் கடைசி கட்டத்தில் கமலஹாசன் ஸ்ரீவித்யாவை சென்று பார்க்கும்போது.. ஸ்ரீவித்யா அழுதுவிட்டாராம்.. தனது தோழியின் நிலை கண்டு கமலஹாசனும் மிகவும் கண்கலங்கிவிட்டார்...கௌவுதமிக்கும் கேன்சர் பாதிக்கபட்டிருப்பதால் தான் இன்று ஸ்ரீவித்யாவின் நிலை கவுதமிக்கும் வந்துவிடக்கூடாது என கவுதமியை தன் கூடவே வைத்திருக்கிறார் கமல்... அதில் அவரது நல் உள்ளமும் நட்புக்கு கொடுக்கும் மரியாதையும் புரிந்துகொள்ள வேண்டும்..
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQTAYfp1NY6790-M7IXZOKfUrp59CEDjocaz-ycAx59gd8QjuHLXg[/im]

மாய உலகம் said...

மகேந்திரன் said...
நடிப்பின் பரிமாணங்களில் அசத்தியவர் நடிகை ஸ்ரீவித்யா. தாயின் புகழில் ஏணி ஏறாமல். தன் சொந்த முயற்சியால் திறமையால் திரையில் காவியம் எழுதியவர்.
அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்.//

தங்களது விரிவான விசத்துடன் கூடிய கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா.. அன்னாரின் ஆத்மா சாந்தியடையட்டும்...

வைரை சதிஷ் said...

ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் வேதனையும் வருத்தமும் தான்

வைரை சதிஷ் said...

ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் வேதனையும் வருத்தமும் தான்

athira said...

எனக்கு ஸ்ரீ வித்தியாவை நன்கு பிடிக்கும்.

படிக்கும்போதே மனம் கனக்கிறது மாயா. அவர் இறந்தபோது அவர்பற்றி சில தவறான கருத்துக்களும் வெளியிடப்பட்டது, அவை எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.

மிகச் சிறந்த ஒரு நடிகை அவ.

athira said...

என்னது கமலும் கெளதமியும் பற்றிக் கதைக்கிறீங்க... கமலின் மனைவி கெளத...மியா மாயா?(இது வேற மியா:))

மாய உலகம் said...

வைரை சதிஷ் said...
ஸ்ரீவித்யாவின் கடைசி காலம் வேதனையும் வருத்தமும் தான்//

வாங்க சதீஷ்... கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

athira said...
எனக்கு ஸ்ரீ வித்தியாவை நன்கு பிடிக்கும்.

படிக்கும்போதே மனம் கனக்கிறது மாயா. அவர் இறந்தபோது அவர்பற்றி சில தவறான கருத்துக்களும் வெளியிடப்பட்டது, அவை எந்தளவுக்கு உண்மை எனத் தெரியவில்லை.

மிகச் சிறந்த ஒரு நடிகை அவ.

என்னது கமலும் கெளதமியும் பற்றிக் கதைக்கிறீங்க... கமலின் மனைவி கெளத...மியா மாயா?(இது வேற மியா:))//

சில விசயங்கள் உண்மையாக இருந்தாலும் சமூகத்தால் முலாம் பூசப்பட்டு மெருகேற்றபட்டு விடும்.. பாதிப்பு பாதிப்படைந்தவருக்கே.. மனைவி அல்ல... தோழி... வேற மியாவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வாஆஆஆ

athira said...

உண்மைதான் மாயா... அன்புக்கு மட்டுமே எதையும் மாற்றிவிடக்கூடிய வல்லமை உண்டு... அழகாகச் சொல்லிட்டீங்க....

athira said...

என்னாது தோழியா?
[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSj4kAYFrgmTbz970JoxMsLCjS9_ZqIzv6B4qfPSXZ6ow8H_UVhzw[/im]

மாய உலகம் said...

athira said...
உண்மைதான் மாயா... அன்புக்கு மட்டுமே எதையும் மாற்றிவிடக்கூடிய வல்லமை உண்டு... அழகாகச் சொல்லிட்டீங்க....//

நன்றி மியா

மாய உலகம் said...

athira said...
என்னாது தோழியா?//

கமலஹாசனுக்கும் கடவுளுக்குமே தெரியும்... இருந்தாலும் அதில் ஒரு அன்பு கலந்த நட்பே தெரிகிறது... :-)

கவி அழகன் said...

அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

கவி அழகன் said...
அருமையான பகிர்வுக்குப் பாராட்டுக்கள்.//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

Mano Saminathan said...

ஸ்ரீவித்யா ஒரு அருமையான நடிகை! அவரின் ‘அபூர்வ ராகங்களும்’ ‘ சொல்லத்தான் நினைக்கிறேன்’ படங்களும் மறக்க இயலாதவை! மன வேதனைகளுடனும் நோயின் வலியுடனும் பிரியமானவர்கள் யாருமே அருகில் இல்லாமல் தனிமையில் அவர் இறந்ததும் மிகவும் சோகமான விஷயம்!
உங்களின் பதிவு மனதை கனமாக்கி விட்டது!

அமைதிச்சாரல் said...

நல்லதொரு அருமையான நடிகை.. பகிர்வுக்கு நன்றி.

K.s.s.Rajh said...

சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி...

ஒரு அருமையான நடிகை பற்றிய பதிவு எனக்கு இங்களை மிகவும் பிடிக்கும் அவரது நடிப்பு காலத்தால் அழியாதது

Anonymous said...

நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதனை ஆரம்பத்திலே கண்டு பிடித்திருந்தால், உணவு செயல்பாடுகளை மாற்றி சரியான சிகிச்சை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காதே!
அலட்சியம் தான் காரணம்.
நன்றும் தீதும் பிறர் தர வாரா!

athira said...

தேம்ஸ்ல குதிச்ச மாயாவைக் காணேல்லை:(((.. தகவல் பிபிசி.

[im]http://www.awesomemyspacecomments.com/1/morning/250.gif[/im]

சென்னை பித்தன் said...

ஒரு நல்ல நடிகை.பாவம்!

Anonymous said...

ஒரு நல்ல நடிகை...கதாபாத்ரமாகவே மாறிவிடுபவர்...எனக்கும் மிகவும் பிடிக்கும்...மலையாள திரையுலகம் அவரை அரவணைத்து திறமையை உலகுக்கு கொண்டு வந்தது...நல்ல பகிர்வு நண்பரே...

ஹேமா said...

மனதிற்குப் பிடித்த நிறைவான நடிகை.எத்தனையோ படங்களில் தன்னை நிலைநாட்டியவர்.
ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள் மீண்டும் !

விமலன் said...

வணக்கம் மாய உலகம் சார்.நலம்தானே?கூட்டு வண்டிக்கு வருகைதந்த உங்களுக்கும், கருத்துரைக்கும் நன்றி.

சி.பிரேம் குமார் said...

(box)அருமையான பதிவு வாழ்க்கையின் இறுதி பக்கங்கள் ரணம் மிகுந்தவை அவுங்களுக்கு ..(/box)

மாய உலகம் said...

Mano Saminathan said...
ஸ்ரீவித்யா ஒரு அருமையான நடிகை! அவரின் ‘அபூர்வ ராகங்களும்’ ‘ சொல்லத்தான் நினைக்கிறேன்’ படங்களும் மறக்க இயலாதவை! மன வேதனைகளுடனும் நோயின் வலியுடனும் பிரியமானவர்கள் யாருமே அருகில் இல்லாமல் தனிமையில் அவர் இறந்ததும் மிகவும் சோகமான விஷயம்!
உங்களின் பதிவு மனதை கனமாக்கி விட்டது!//

வாங்க சகோதரி! தங்களது வருகையும்.. ஆழமான கருத்துக்கும் மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...
நல்லதொரு அருமையான நடிகை.. பகிர்வுக்கு நன்றி.//

வாங்க.தங்களது கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
சாரி பாஸ் கொஞ்சம் லேட்டாகிடுச்சி...

ஒரு அருமையான நடிகை பற்றிய பதிவு எனக்கு இங்களை மிகவும் பிடிக்கும் அவரது நடிப்பு காலத்தால் அழியாதது//

வாங்க நண்பா! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said...

atchaya said...
நோய் எதிர்ப்பு சக்தி இல்லை என்பதனை ஆரம்பத்திலே கண்டு பிடித்திருந்தால், உணவு செயல்பாடுகளை மாற்றி சரியான சிகிச்சை எடுத்திருந்தால், இந்த நிலை ஏற்பட்டிருக்காதே!
அலட்சியம் தான் காரணம்.
நன்றும் தீதும் பிறர் தர வாரா!//

உங்களது கருத்து பாஸிட்டிவ் அப்ரோச்சாக இருக்கிறது... தங்களது வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி

மாய உலகம் said...

athira said...
தேம்ஸ்ல குதிச்ச மாயாவைக் காணேல்லை:(((.. தகவல் பிபிசி.

நானும் அந்த நியூஸை தான் வாசிச்சுட்டு இருக்கேன்ன்ன்ன்ன்

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRjKNdcgkvJr_FXp7swWakSwGsZgY9zPQp_WmoRm-_gMvkCJRtv[/im]

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
ஒரு நல்ல நடிகை.பாவம்!//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ரெவெரி said...
ஒரு நல்ல நடிகை...கதாபாத்ரமாகவே மாறிவிடுபவர்...எனக்கும் மிகவும் பிடிக்கும்...மலையாள திரையுலகம் அவரை அரவணைத்து திறமையை உலகுக்கு கொண்டு வந்தது...நல்ல பகிர்வு நண்பரே...//

வாங்க நண்பா! கருத்துக்கு மனம்கனிந்த நன்றி

மாய உலகம் said...

ஹேமா said...
மனதிற்குப் பிடித்த நிறைவான நடிகை.எத்தனையோ படங்களில் தன்னை நிலைநாட்டியவர்.
ஞாபகப்படுத்தியிருக்கிறீர்கள் மீண்டும் !//

வாங்க... விடுமுறை நல்ல விதமாக கழிந்திருக்குமென நினைக்கிறேன்.. தங்களது கருத்துக்கு மனம்கனிந்த நன்றி...

மாய உலகம் said...

விமலன் said...
வணக்கம் மாய உலகம் சார்.நலம்தானே?கூட்டு வண்டிக்கு வருகைதந்த உங்களுக்கும், கருத்துரைக்கும் நன்றி.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

சி.பிரேம் குமார் said...
[box]அருமையான பதிவு வாழ்க்கையின் இறுதி பக்கங்கள் ரணம் மிகுந்தவை அவுங்களுக்கு ..[/box]//

வாங்க நண்பரே! அடைப்புக்குறியை மாற்றி பயன்படுத்திவிட்டீர்கள்....
[box]கருத்துக்கு மிக்க நன்றி[/box]

அம்பாளடியாள் said...

வேதனையான பகிர்வு .ஒரு அருமையான கலையுலக சித்திரம் .இவர்கள் இன்னமும் என் மனக்கண்ணைவிட்டு
மறையாமல் சிரிக்கின்றார் .இந்த அன்பு உள்ளத்துடன் உங்கள் குடும்பமே நடப்பாக இருந்ததா!...நான் பெருமைகொள்கின்றேன்
சகோ .மிகிக்க நன்றி பகிர்வுக்கு .

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
வேதனையான பகிர்வு .ஒரு அருமையான கலையுலக சித்திரம் .இவர்கள் இன்னமும் என் மனக்கண்ணைவிட்டு
மறையாமல் சிரிக்கின்றார் .இந்த அன்பு உள்ளத்துடன் உங்கள் குடும்பமே நடப்பாக இருந்ததா!...நான் பெருமைகொள்கின்றேன்
சகோ .மிகிக்க நன்றி பகிர்வுக்கு .//

வாங்க சகோ! எனது குடும்பம் அல்ல நடிகரின் பிரேம்குமார் குடும்பம் இருந்ததாக பிரேம்குமார் கூறியுள்ளார்... வருகைக்கும் கருத்துக்கும் மிக்க நன்றி...


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out