Monday, 5 December, 2011

எனக்குள் நான்.

நண்பர் கோகுல் அவர்கள் எனக்குள் நான் பயோடேட்டா என்ற தொடரை எழுத சொல்லியிருந்தார் அவருக்கு எனது மனம் கனிந்த நன்றியை சொல்லிவிட்டு எழுதுகிறேன்..


பதிவில் பிழையிருந்தால் மன்னிக்கவும் நண்பர்களே!

இது நண்பர் தமிழ்வாசி பிரகாஷ் அவர்களின் பயோடேட்டா பதிவை பார்த்து காப்பி அடித்து மாற்றங்கள் செய்து எழுதினேன்... அதனால் அவருக்கும் நன்றி)

பெயர் :     ராஜேஷ்
                    ( பதிவுலகில் சில நண்பர்கள் மற்றும் சகோகக்களுக்கு மாயா).

படிப்பு :     படிச்சிருக்கேன்... ( அது ஏட்டு சுரக்காய்)

லட்சியம் (வேலை): 


சொன்னா சிரிக்கப்படாது.சின்ன வயிசலருந்தே ஒரு லட்சியம்இருந்துச்சு...எப்படியாவது கேமரா முன்னால ஒரு சீனாவது நடிச்சடனும்.. சினி ஃபீல்ட எட்டிப்பாத்துரனும்னு....அது நிறைவேறிடுச்சு...(ஆமா இவரு பெரிய இவரு கமல் ரஜினி கூட.ச்சுபுட்ட மாதிரி சீன் போடுற...இதெல்லாம் ஒரு லட்சியமா . அப்படின்னு நினைக்கலாம்.. அது எதுவாக இருந்தா என்னங்க...என் மனசுக்கு நினைச்சது அடைஞ்சுட்டமேங்கிற மன திருப்தி... அதுக்கு மேல உருவாகறது அடுத்த லட்சியம் ஹி ஹி... அது அப்பறம்.பாத்துக்கலாம்) அந்த பழம் புளிக்குங்குற மாதிரி கிடையாது...
ஹி ஹி முற்றிலும் உண்மை

 சின்ன சேம்பிள்...
                               
              ஒரு ஊர்ல படத்துல இயக்குனர் ஆர்.வி. உதயகுமாருக்கு உதவி                          இயக்குநராக சும்மா சில காட்சிகள் வந்தேன்... அது போல் மேலும்
சில படங்கள்.

சில விளம்பர படங்களில் நடித்தும் உதவி இயக்குனராகவும்    இருந்திருக்கிறேன்.

உதவி இயக்குநராக சில படங்கள் (படங்களின் சிறப்பு)உதாரணத்திற்கு...

                                      நடிகர் பொன்ன்ம்பலம் அவர்களது படம் மற்றும்

சங்கரன் கோவில் - திரு. கனல் கண்ணன் அவர்களது படம்

 ஸ்கிரிப்ட் வொர்க் செய்த படங்கள் நிறைய அதில் சில..

தேநிர் விடுதி - இசை அமைப்பாளர் S.S. குமரன் அவர்கள் இயக்கிய .....                                             படம்.

பாலு தம்பி மனசிலே - இதில் திரு. ரவி IPS அவர்கள் ஒரு ... ...                                                                                     பாடல் எழுதியிருக்கிறார்.
இப்படி சில படங்களிலும்... ராஜ் டி.வி, ஏஞ்சல் டி.வி ப்ரோக்ராம்களிலும் மற்றும் நண்பர்கள் இயக்கிய குறும்படங்களிலும் வேலைசெய்திருக்கிறேன்....

       காலேஜில் கிடைத்த வேலையை விட்டுவிட்டு சினிமாக்காக அலைந்தேன்... வாய்ப்புகள் கிடைத்தாலும் பல நாள் வறுமையின் பிடியில் சுற்றினேன்.. அதை போக்க கேட்ரிங்க்.. சுண்ணாம்பு அடிக்கும் வேலை என நிறைய ... அதுவும் நிரந்தரமாக இல்லாததால் சினிமாவுக்கு தற்காலிகமாக முழுக்கு போட்டுவிட்டு... வேலையை தேடி அலைந்தேன்.. கிடைக்காமல் வெட்டி முண்டம் வீணா போனா தண்டமாக இருந்தேன்... தற்பொழுது நண்பருடன் ஹார்டுவேர் சர்வீஸில் அப்பண்டிஸ்ஸாக சேர்ந்து பணியாற்றுகிறேன்...

பிடிச்ச விசயங்கள் :  

நிறைய... அதில் சில .. ஆன்மீக சம்பந்தபட்ட விசயங்கள்.,கன்னுக்குட்டி, நாய்க்குட்டி தலையை நீவி விடுவது, சொந்தகாரர்கள் மற்றும் நண்பர்களுடன் அரட்டை அடித்து நேரத்தை செலவிடுவது, புத்தங்கள் படிப்பது,  அழகான பிகருகளைப்பார்த்தால் அசடு வழிவது (முன்பு ) தற்பொழுது படிபடியாக குறைத்துவிட்டேன் அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்), காமெடி ஃபீலிங் படம் பார்ப்பது, மனதை வருடும் பாடல் கேட்பது, தண்ணியடிப்பது ( தற்பொழுது இல்லை),இயற்கைகளை ரசிப்பது... இப்படி நிறைய சொல்லிக்கொண்டே போனால் உங்களுக்கு போரடித்துவிடுங்க..

பிடிக்காத விசயங்கள் :


என்ன எதுவென்று அறியாமல் ஜால்ரா அடிப்பவர்கள், திறமையால் முன்னேறாமல் அடுத்தவனை அமுக்கி முன்னேற நினைப்பவர்கள், நயவஞ்சக நாடகத்தை நடத்தி காரியம் சாதிப்பவர்கள், அதிகார வர்க்கத்தினர் செய்யும் அட்டூழியங்கள், துரோகம் செய்பவர்கள், தமிழுக்கு முக்கியதுவம் இல்லாமல் ஆங்கிலத்துக்கு முக்கிய துவம் தருவதை (இதனால் ஏகப்பட்ட பேரின் வாழ்க்கை பின்னடைவு ஏற்பட்டிருக்கிறது), நல்ல விசயங்களை தவறாக புரிந்துகொள்வது, கற்றுதரும் குருக்களை அவமதிப்பது, இப்படி நிறைய...

நேசிப்பது :  நண்பர்கள் மற்றும் உறவினர்கள்.. ( ஊக்கத்திற்காக..)
                        எதிரிகள் ( நமது குறைகளை உணர்த்துவதால்)

வெறுப்பது : நம்பிக்கை துரோகிகளை

அன்பு பாசத்துக்கு : இறைவன், அம்மா, சொந்தங்கள், நண்பர்கள், பதிவுலகில்       சில நண்பர்கள்....

காதல் : என்னை கிராஸ் செய்து போன மின்னல்... மறக்க நினைக்கிறேன்...

மறக்க முடியாதது : சில பேரிடம் வாங்கிய பாராட்டுகள்....

மறக்க நினைப்பது : கசப்பான அனுபவங்களை...

பலம் : இறை நம்பிக்கை, தன்னம்பிக்கை, அன்பு

பலவீனம் : கோபம் (குறைத்து கொள்ள முயற்சி செய்கிறேன்..)
                       இரக்கம், எளிதில் நம்பி விடுவது, கிடைத்த அரிதான லட்சிய  வாய்ப்புகளை சாதாரணமாக தூக்கி எறிவது (பின்னால் அவஸ்தை பட போறோம் என்று தெரிந்தாலும் )., உணர்ச்சி வசப்படுவது, அன்பாக பேசினால் ஏமாந்துவிடுவது, விண்ணை முட்டும் கற்பனையோடு வாழ்வது.

பிடிச்ச பொன்மொழி : நிறைய அதில் நண்பர் ஒருவர் சொன்னது இங்கே  குறிப்பிடுகிறேன்...
                   சில பேருக்கு முக்கியதுவம் கொடுத்தால் ஹீரோவாவோம்.
                  சில பேருக்கு முக்கியதுவம் கொடுத்தால் சீரோவாவோம் (zero)... அந்த சில பேரை கணிப்பதிலே தான் நீ அடைந்த பக்குத்தை குறிக்கிறது.

பொழுது போக்கு : புத்தங்கள் படிப்பது, எழுதுவது, படம் பார்ப்பது, பாடல் கேட்பது, தொலைக்காட்சியில் ரெஸ்லின் மற்றும் அனிமல்ஸ் நிகழ்ச்சிகளை பார்ப்பது, நண்பர்களுடன் சுற்றுவது, சமீப காலமாக பதிவுகள் எழுதுவது....

ரசிப்பது : 

குழந்தைகளின் நடத்தை, நாய்குட்டி, பசுக்களின் தலையை வருடி விட்டு அது பாசத்துடன் நிற்பதை பார்த்து, நண்பர்கள் ஜாலியாக அடிக்கும் லூட்டி, கமல்,ரஜினி,ஜாக்கிசான்,கவுண்டமணி, வடிவேல் இவர்களது நடிப்பைப் பார்த்து..

நிறைவேறாத ஆசை :

லட்சியம் பொறுத்த வரையில் எப்படியாவது திரைத்துறையில் நுழைய வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... அது போல் நுழைந்து வெளியில் வந்துவிட்டேன்.... ( இதெல்லாம் லட்சியம்ன்னு ஆரு சிரிக்கறது..... கர்ர்ர்ர்ர்ர்ர் :-)  )

நடனம் மற்றும் இசை கற்றுக்கொள்ள வேண்டும் என்று ஆசைப்பட்டேன்... அது நடக்கவில்லை...

ஆன்மீகம் : 
முழுமையாக ஈடுபட ஆசை ( ஹார்மோன் செய்யும் லீலைகளால் முழுமையாக் ஈடுபடமுடியவில்லை...  எப்பொழுதாவது தோன்றும் சபலத்தை தூக்கி எறிந்து வெற்றி பேறுவேன் என்ற நம்பிக்கை இருக்கிறது)

கடவுள் : 


ஒரே சக்தி என்று உணர்ந்தாலும் வெவ்வேறு பரிமானங்களில் உள்ள அனைத்து கடவுள்களையும் வணங்குவேன்..  முக்கியமாக அந்தந்த விசேச தினங்களில் உள்ள பண்டிகையை முன்னிருத்தி அந்த விசசேத்திற்கான கடவுளை தீவிர பக்தியுடன் வணங்குவேன்.

பதிவுலகில் : 

பெருமை படும் அளவிற்கு பதிவுலகில் சாதிக்கவில்லை...

ALEXA RANK : 1,50,000 ஐத் தொட்டது.

GOOGLE FOLLOWERS  : 150 க்கு மேல் பெற்றது...

 சில அன்பு நண்பர்களையும், சகோதர சகோதரிகளையும் பெற்றிருப்பது.... அந்த நண்பர்களுக்கும் , சகோதர சகோதரிகளுக்கும் என உள்ளம் கனிந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறேன்...

அதே போல் கருத்துக்களில் மனம் நோகும்படியோ, மனம் வெறுக்கும் படி கருத்திட்டிருந்தாலோ.. அல்லது பதிவுகள் இட்டிருந்தாலோ மன்னிக்கவும் நண்பர்களே!

மேலும் அறிய முத்தான மூன்று முடிச்சு தொடரை க்ளிக்குங்கள்.

ஏற்கனவே சகோ அதிரா மியாவ் என்பக்கம் பதிவில் தொடர் பதிவு எழுத குறிப்பிட்டீர்ந்தீர்கள்..இன்னும் எழுதாத தாமதத்திற்கு மன்னிக்கவும்.... அடுத்த பதிவாக எழுதுகிறேன் .

ஒரு நிமிசம் : 

 என் நண்பன் என்னிடம் வாழ்க்கையில சாதனைன்னா என்னான்னு கேட்டார்... அதற்கு நான் அது, இது, என லட்சியங்களை அடிக்கி கொண்டே போனேன்... அதற்கு அவர் சிரித்தவாறு..   இறக்கும் பொழுது ரத்தம் சம்பந்தமே இல்லாத ஒரு 100 பேராவது நமது சாவிற்காக கண்ணீர் விட்டு அழவேண்டும் அது தான் சாதனை என்று சொன்னார்...  மண்டையில் சுரீர் என்றது.... அவரது கையை இறுகபற்றி கைகொடுத்தேன்.

குறிப்பு : 

   நான் யாரையும் இந்த தொடரை எழுத அழைக்க விரும்பவில்லை...  ஏனென்றால் நிறைய பேருக்கு இதில் விருப்பம் இருக்காது என நினைக்கிறேன்.. அப்படி இருந்திருந்தால் புரஃபைலில் என்னைப்பற்றி என்ற இடத்தில் போட்டோவும், அவர்களைப் பற்றிய சிறு குறிப்பும் கொடுத்திருப்பார்கள்.. அது பாதுகாபின்மையாக இருக்குமோ என்று தயங்கி தான் போட மறுக்கிறார்கள்... இத்தொடரை எழுத அழைத்து அவர்களுக்கு சங்கடத்தை கொடுக்க வேண்டாம் என நினைக்கிறேன்....  இப்படி சொன்னதிலும் ஏதேனும் பிழையிருந்தால் பொருத்து மன்னிக்க வேண்டுகிறேன்... நன்றி.

உங்கள் பிரியமானவன்,

76 comments:

தமிழ்வாசி பிரகாஷ் said...

கலக்கல் ராஜேஷ். உங்களைப் பற்றிய முழுமையான? தகவல்களை பகிர்ந்து நீங்க யாருன்னு சொல்லிட்டிங்க... வாழ்த்துக்கள்.


வாசிக்க:
நடிகை அஞ்சலி பய(ங்கர) டேட்டா - ரசிகனின் காமெடி கும்மி

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.

Yoga.S.FR said...

அருமைங்க!ஒங்கள மாதிரி நம்மால ஒப்பனா இருக்க முடியல!சாதனைன்னா அந்த உங்களோட நண்பர் சொன்னது தாங்க!சத்தியம் இருக்கு அதில

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை... அருமை... வாழ்க வளமுடன்.
நம்ம தளத்தில்:
"அறிந்ததா? தெரிந்ததா? புரிந்ததா? - பகுதி 1"

நிரூபன் said...

வணக்கம் மச்சி,
நான் பதிவையும் படித்து தமிழ் மணத்தில் இணைத்திட்டேன், நீங்க ஏன் இன்னமும் இண்ட்லி, மற்றும் தமிழ் 10 இல் இணைக்கலை?

நிரூபன் said...

தேநீர் விடுதி பற்றி என்னுடைய சினிமாப் பதிவு ஒன்றில் நீங்கள் சொல்லியதன் பின்னணி இதுவா?

ஹே..ஹே...

நிரூபன் said...

மாயா, உங்கள் சினிமா இலட்சியம் நிறைவேற வாழ்த்துகிறேன்!

உங்களைப் பற்றி, உங்களின் ரசனை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஓர் அருமையான பதிவு!

நன்றி!

சசிகுமார் said...

நண்பா உங்களை பற்றி நிறைய அறிந்து கொண்டோம்... வாழ்த்துக்கள்...

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அருமையாக சொல்லியுள்ளிர்கள் ..

"என் ராஜபாட்டை"- ராஜா said...

உங்கள் பார்வைக்கு இன்று

அண்ணே.. வெட்கம், மானம், கிலோ என்ன விலை?

இராஜராஜேஸ்வரி said...

அருமையாய் பகிர்ந்திருக்கிறீகள்..

வாழ்த்துகள்..

புலவர் சா இராமாநுசம் said...

உங்களைப்பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது!
நன்றி! மாய !

புலவர் சா இராமாநுசம்

சந்திர வம்சம் said...

நடிகராக திரு.மாயா!!
[im]http://th1083.photobucket.com/albums/j395/SJNXI/Joker%20avatars/th_A1.png[/im]

angelin said...

அருமை மிக மிக அருமையான பகிர்வு
[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQ7DkvSB74Gn_uJsUoix_yQSBRtPrmRUBOeG9dP9e7eT1YTa_vuUg[/im]

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல பதிவு நண்பா..

Abdul Basith said...

தங்களை பற்றி ஒளிவுமறைவின்றி எங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி நண்பா! நீங்கள் உதவி இயக்குனர் என்று தெரியும், நடிகர் என்று இப்போது தான் தெரியும். வாய்ப்புகிடைத்தால் அந்த படங்களை பார்க்கிறேன். மேலும் பல வெற்றிகளைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.

ஆமினா said...

நண்பர் சொன்னது அருமை

K.s.s.Rajh said...

ஒரு நண்பனாக சொல்கின்றேன் எப்போதும் உங்கள் சினிமாவில் ஜெயிக்கும் இலட்சியத்தில் இருந்து பின்வாங்கவேண்டாம் எத்தகைய கஸ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு முயற்சி செய்யுங்கள் ஒரு நாள் நீங்களும் பேசப்படுவீர்கள் பாஸ் அந்த நாளுக்காக இறைவனிடம் பிராத்திக்கின்றேன்....

ஷைலஜா said...

வாவ் ! இவ்ளோ பெரிய ஆளா நீங்க? மிக்க மகிழ்ச்சி ராஜேஷ்..உங்க லட்சியம் நிறைவேறும்..வாழ்த்துகள்!

சென்னை பித்தன் said...

திறந்த புத்தகம்.நன்று.

RAMVI said...

உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது ராஜேஷ். நல்ல பதில்கள்.
சினிமாவில் தங்களின் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.

angelin said...

காலையில் முழுதுமாக கமென்ட் எழுத நேரம் கிடைக்கல /
கடைசி பாராவில் குறிப்பில் எழுதியிருப்பது ஒன்றே போதும் உங்களை பற்றிய முழு பயோடேட்ட .வாழ்க்கையில் சமயம் கிட்டினால் சிலரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறேன் .அந்த லிஸ்ட்ல முதல் பெயர் என் தம்பி ராஜேஷ் .

கோகுல் said...

இசைந்து எழுதியதற்கு நன்றி மாயா !முதலில்.

கோகுல் said...

சில இடங்களில் மகிழவும் சில இடங்களில் நெகிழவும் வச்சுட்டிங்க.

கோகுல் said...

ஒரு நிமிசத்துல சொன்னிங்க பாருங்க
நிச்சயம் சுரீர்னு எல்லாருக்கும் இருக்கும்.சூப்பர்.

கடம்பவன குயில் said...

மாயாவின் உலகத்தில் இத்தனை நெகிழ்வுகளா?? எக்ஸலன்ட் ராஜேஸ்.

ஒரு நிமிடம் என்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிட்டது.

கடம்பவன குயில் said...

உங்களைப் பற்றிய ஒளிவுமறைவற்ற பயோடேட்டா. அசத்தல். ரியலி யு ஆர் கிரேட். எல்லோராலும் எல்லாவற்றையும் உங்களைப் போல் ஒளிவமறைவின்றி பகிரமுடியாது.

athira said...

அடடா எட்டிப் பார்க்க முன் நேரமாகிவிட்டது..... அதுவும்போக நான் மாயாவோடு கோபம்... கோபமெண்டால் எப்பூடியாம் பின்னூட்டம் போடுவது கர்ர்ர்ர்:)))

athira said...

நாய்க்குட்டி பிடிக்கும் உம்பாக்குட்டி பிடிக்கும்... பூஸ்குட்டி பிடிக்காதோ கர்ர்ர்ர்ர்ர்:))).

athira said...

ஒளிவு மறைவின்றி உங்களைப்பற்றிச் சொல்லி, படங்களும் அங்கின இங்கின போட்டுக் காட்டிட்டீங்க...

நான் ரோட்டால போகேக்க வரேக்க, பின்பக்கம் பார்த்து மாயாவாக இருக்குமோ என நினைச்சிருக்கிறன்.. ஆனா பக்கத்தில முதலை இல்லை:).

athira said...

சிறிசோ பெரிசோ... நடிக்கும் வாய்ப்பும், இயக்குனர் பதவியும் கிடைச்சது பெரிய விஷயம்தானே மாயா. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது, ஆனா கிடைத்ததைப் பெரிதென நினைத்து மகிழ்ச்சி, திருப்பி அடையோணும் அதுதான் முக்கியம்... அது உங்களிடம் இருக்கு.

athira said...

எனக்கொரு சந்தேகம்... அழகான பிகரெண்டால் என்ன?:)))) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).

athira said...

என்னாது உங்களை குரொஸ் செய்த மின்னலா? இன்னுமா மறக்காமல் இருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).....

நான் மாயாவுக்கு பொம்பிளை பார்த்துக்கொண்டிருக்கிறன், அவர் இன்னும் மறக்கேல்லையாம் மின்னலை கர்ர்ர்ர்ர்ர்ர்:)).

athira said...

பலமும் அன்புதான், அதேநேரம் பலவீனமும் அன்புதான்...

athira said...

இன்னுமா இசையும் கதையும் எழுதவில்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcS75sMhzuETHsOG2qDXhhjz5q-2AXDlGrNnGijfzg91o66BQgYMJA[/im]

athira said...

நாம் செத்தால் 100 பேராவது அழவேண்டுமோ? நான் செத்தால் ரத்தம் சம்பந்தமில்லாமல் ஒரு பூஸ்கூட அழுமோ தெரியேல்லையே.... அவ்வ்வ்வ்வ்வ்:))


[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcRq01Mya6tCMbH4M0ETJppKNsla8M-o8SimXrzhVesZRSBKq_tk[/im]

athira said...

நல்ல விஷயம் செய்தீங்க... இத் தொடருக்கு ஆட்களை அழைக்காததைச் சொன்னேன்:).

athira said...

angelin said...
காலையில் முழுதுமாக கமென்ட் எழுத நேரம் கிடைக்கல /
கடைசி பாராவில் குறிப்பில் எழுதியிருப்பது ஒன்றே போதும் உங்களை பற்றிய முழு பயோடேட்ட .வாழ்க்கையில் சமயம் கிட்டினால் சிலரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறேன் .அந்த லிஸ்ட்ல முதல் பெயர் என் தம்பி ராஜேஷ் /////

avvvvvvvvvvvvvvvvvvvvv

[im]http://t0.gstatic.com/images?q=tbn:ANd9GcQOa-hg9GNGRuavqi-YTM1e37bIAxHGcJEYXdtAJEK7EXJSJuvA5A[/im]

மாய உலகம் said...

தமிழ்வாசி பிரகாஷ் said...
கலக்கல் ராஜேஷ். உங்களைப் பற்றிய முழுமையான? தகவல்களை பகிர்ந்து நீங்க யாருன்னு சொல்லிட்டிங்க... வாழ்த்துக்கள்.
//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

Yoga.S.FR said...
அருமைங்க!ஒங்கள மாதிரி நம்மால ஒப்பனா இருக்க முடியல!சாதனைன்னா அந்த உங்களோட நண்பர் சொன்னது தாங்க!சத்தியம் இருக்கு அதில//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

திண்டுக்கல் தனபாலன் said...
அருமை... அருமை... வாழ்க வளமுடன்.//

வாங்க சகொ! கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் மச்சி,
நான் பதிவையும் படித்து தமிழ் மணத்தில் இணைத்திட்டேன், நீங்க ஏன் இன்னமும் இண்ட்லி, மற்றும் தமிழ் 10 இல் இணைக்கலை?

தேநீர் விடுதி பற்றி என்னுடைய சினிமாப் பதிவு ஒன்றில் நீங்கள் சொல்லியதன் பின்னணி இதுவா?

ஹே..ஹே...

மாயா, உங்கள் சினிமா இலட்சியம் நிறைவேற வாழ்த்துகிறேன்!

உங்களைப் பற்றி, உங்களின் ரசனை பற்றி அறிந்து கொள்ள உதவும் ஓர் அருமையான பதிவு!

நன்றி!//

வாங்க பாஸ்... தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி பாஸ்.

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
அருமையாக சொல்லியுள்ளிர்கள் ..//

வாங்க நண்பா கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

சசிகுமார் said...
நண்பா உங்களை பற்றி நிறைய அறிந்து கொண்டோம்... வாழ்த்துக்கள்...//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
அருமையாய் பகிர்ந்திருக்கிறீகள்..

வாழ்த்துகள்..//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
உங்களைப்பற்றி ஓரளவு அறிந்து கொள்ள முடிந்தது!
நன்றி! மாய !

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி ஐயா!

மாய உலகம் said...

சந்திர வம்சம் said...
நடிகராக திரு.மாயா!!//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

angelin said...
அருமை மிக மிக அருமையான பகிர்வு //

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...
நல்ல பதிவு நண்பா..//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி நண்பா!

மாய உலகம் said...

Abdul Basith said...
தங்களை பற்றி ஒளிவுமறைவின்றி எங்களுடன் பகிர்ந்ததுக்கு நன்றி நண்பா! நீங்கள் உதவி இயக்குனர் என்று தெரியும், நடிகர் என்று இப்போது தான் தெரியும். வாய்ப்புகிடைத்தால் அந்த படங்களை பார்க்கிறேன். மேலும் பல வெற்றிகளைப் பெற என் மனமார்ந்த வாழ்த்துக்கள்.//

வாங்க நண்பா... நான் சின்ன கேரக்டரில் நடித்த குறும்படங்கள் மற்றும் போட்டோக்களும் ஸ்லைடு ஷோவாக போட்டிருந்தேனே.. தொடர்ந்து அது டவுன்லோட் செய்யபட்டது.. நண்பரிடம் ஆலோசனைக் கேட்க ரிமூவ் பண்ண சொல்லிவிட்டார் அதனால் அதை ரிமூவ் செய்துவிட்டேன்... அதை பார்த்திருப்பீர்களே நண்பா.. வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா.!

மாய உலகம் said...

ஆமினா said...
நண்பர் சொன்னது அருமை//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

K.s.s.Rajh said...
ஒரு நண்பனாக சொல்கின்றேன் எப்போதும் உங்கள் சினிமாவில் ஜெயிக்கும் இலட்சியத்தில் இருந்து பின்வாங்கவேண்டாம் எத்தகைய கஸ்டம் வந்தாலும் தாங்கிக்கொண்டு முயற்சி செய்யுங்கள் ஒரு நாள் நீங்களும் பேசப்படுவீர்கள் பாஸ் அந்த நாளுக்காக இறைவனிடம் பிராத்திக்கின்றேன்....//

வாங்க நண்பா... உங்களது அன்பான கருத்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா!

மாய உலகம் said...

ஷைலஜா said...
வாவ் ! இவ்ளோ பெரிய ஆளா நீங்க? மிக்க மகிழ்ச்சி ராஜேஷ்..உங்க லட்சியம் நிறைவேறும்..வாழ்த்துகள்!//

கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
திறந்த புத்தகம்.நன்று.//

வாங்க ஐயா! கருத்துக்கு மிக்க நன்றி ஐயா!

மாய உலகம் said...

RAMVI said...
உங்களைப் பற்றி தெரிந்து கொள்ள முடிந்தது ராஜேஷ். நல்ல பதில்கள்.
சினிமாவில் தங்களின் முயற்சிகள் வெற்றி அடைய வாழ்த்துக்கள்.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

angelin said...
காலையில் முழுதுமாக கமென்ட் எழுத நேரம் கிடைக்கல /
கடைசி பாராவில் குறிப்பில் எழுதியிருப்பது ஒன்றே போதும் உங்களை பற்றிய முழு பயோடேட்ட .வாழ்க்கையில் சமயம் கிட்டினால் சிலரை கண்டிப்பாக சந்திக்க வேண்டும் என்று நினைத்து வைத்திருக்கிறேன் .அந்த லிஸ்ட்ல முதல் பெயர் என் தம்பி ராஜேஷ் .//

வாங்க சகோ!உங்களது கருத்துக்கு மகிழ்ச்சியுடன் தலைவணங்குகிறேன் சகோ!

மாய உலகம் said...

கோகுல் said...
இசைந்து எழுதியதற்கு நன்றி மாயா !முதலில்.

சில இடங்களில் மகிழவும் சில இடங்களில் நெகிழவும் வச்சுட்டிங்க.

ஒரு நிமிசத்துல சொன்னிங்க பாருங்க
நிச்சயம் சுரீர்னு எல்லாருக்கும் இருக்கும்.சூப்பர்.//

வாங்க நண்பா... தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி நண்பா!

மாய உலகம் said...

கடம்பவன குயில் said...
மாயாவின் உலகத்தில் இத்தனை நெகிழ்வுகளா?? எக்ஸலன்ட் ராஜேஸ்.

ஒரு நிமிடம் என்னை ஒரு நிமிடம் சிந்திக்க வைத்துவிட்டது.

உங்களைப் பற்றிய ஒளிவுமறைவற்ற பயோடேட்டா. அசத்தல். ரியலி யு ஆர் கிரேட். எல்லோராலும் எல்லாவற்றையும் உங்களைப் போல் ஒளிவமறைவின்றி பகிரமுடியாது.//

வாங்க சகோ! சிறு வயதில் இருந்தே நடந்த அனைத்தும் என்னால் ஒளிவுமறைவின்றி பகிரகூடிய தைரியம் இருக்கு... ஆனால் இந்த சமூகத்தில் சிலர் நல்ல போர்வையை போர்த்திக்கொண்டு என் மேல் வசை பாடுவார்கள்.. அல்லது பல பேருக்கு பல வகையிலும் பாதிப்பு ஏற்பட்டு மனம் புண்படலாம்... இதுவே நண்பர் வேண்டாம் என்று தான் சொன்னார்.. நண்பர் கோகுல் பதிவு எழுத சொல்லிருந்தார் அதனால் தான் தட்ட முடியவில்லை.. கருத்துக்கு மனம் கனிந்த நன்றி சகோ!

மாய உலகம் said...

athira said...
அடடா எட்டிப் பார்க்க முன் நேரமாகிவிட்டது..... அதுவும்போக நான் மாயாவோடு கோபம்... கோபமெண்டால் எப்பூடியாம் பின்னூட்டம் போடுவது கர்ர்ர்ர்:)))

நாய்க்குட்டி பிடிக்கும் உம்பாக்குட்டி பிடிக்கும்... பூஸ்குட்டி பிடிக்காதோ கர்ர்ர்ர்ர்ர்:))).//

ஹா ஹா வாங்க மியாவ்... பூஸ்குட்டியும் பிடிக்கும் எழுதும்போது மிஸ்ஸாயிடுச்சு...

மாய உலகம் said...

athira said...
ஒளிவு மறைவின்றி உங்களைப்பற்றிச் சொல்லி, படங்களும் அங்கின இங்கின போட்டுக் காட்டிட்டீங்க...

நான் ரோட்டால போகேக்க வரேக்க, பின்பக்கம் பார்த்து மாயாவாக இருக்குமோ என நினைச்சிருக்கிறன்.. ஆனா பக்கத்தில முதலை இல்லை:).

சிறிசோ பெரிசோ... நடிக்கும் வாய்ப்பும், இயக்குனர் பதவியும் கிடைச்சது பெரிய விஷயம்தானே மாயா. எல்லோருக்கும் எல்லாம் கிடைக்காது, ஆனா கிடைத்ததைப் பெரிதென நினைத்து மகிழ்ச்சி, திருப்பி அடையோணும் அதுதான் முக்கியம்... அது உங்களிடம் இருக்கு.//

கருத்துக்கு தலைவணங்குகிறேன் சகோ! மிக்க நன்றி.

மாய உலகம் said...

athira said...
எனக்கொரு சந்தேகம்... அழகான பிகரெண்டால் என்ன?:)))) கடவுளே மீ எஸ்ஸ்ஸ்ஸ்:))).//

மீண்டும் ஒருமுறை திரும்பி பார்க்க வைக்கும் அழகு..

மாய உலகம் said...

athira said...
என்னாது உங்களை குரொஸ் செய்த மின்னலா? இன்னுமா மறக்காமல் இருக்கிறீங்க கர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))).....

நான் மாயாவுக்கு பொம்பிளை பார்த்துக்கொண்டிருக்கிறன், அவர் இன்னும் மறக்கேல்லையாம் மின்னலை கர்ர்ர்ர்ர்ர்ர்:)).//

தொபுக்கடீர்... அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said...//

தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மனம கனிந்த நன்றி மியாவ்.

மதுரன் said...

அடடா நம்ம ராஜேஷ் நடிகரா

ராஜா MVS said...

தங்களின் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்... நண்பா...

1நிமிஷம்- சூப்பர்... படித்தவர் அனைவருக்கும் சுரீர் என்று இருந்திருக்கும்...

உண்மையை எதிர்கொள்ள மனதைரியம் வேண்டும்...
உண்மையை பகிர்ந்துகொள்ள அசாத்தியமான மனபலம் வேண்டும்...
இவை இரண்டுமே தங்களிடம் நிறைந்திருக்கிறது...
வாழ்த்துகள்... நண்பா...

மகேந்திரன் said...

அன்பு நண்பர் ராஜேஷ்,
மனதில் உள்ளதை உள்ளபடி
அழகாய் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்..

மகேந்திரன் said...

பதிவுலகில் இன்று இருக்கும் பன்முகத்திறமையாளர்களுள்
நீங்களும் ஒருவர்...
நாம் நினைத்தது நடப்பது என்பது நமக்கு இறைவன் கொடுத்த மாபெரும் வரம்.

மகேந்திரன் said...

இன்னும் சாதியுங்கள் ... உங்களால் முடியும்..

ஹேமா said...

மாயா...உங்கள் எழுத்துக்களில் உங்களைக் கண்டாலும் இன்னும் அறியமுடிகிறது இந்தப்பதிவில் !

மாய உலகம் said...

மதுரன் said...
அடடா நம்ம ராஜேஷ் நடிகரா//

அது சின்ன சின்ன ரோல் செய்திருக்கேன் அவ்வளவு தான் நண்பா... நன்றி நண்பா

மாய உலகம் said...

ராஜா MVS said...
தங்களின் லட்சியம் நிறைவேற வாழ்த்துகள்... நண்பா...

1நிமிஷம்- சூப்பர்... படித்தவர் அனைவருக்கும் சுரீர் என்று இருந்திருக்கும்...

உண்மையை எதிர்கொள்ள மனதைரியம் வேண்டும்...
உண்மையை பகிர்ந்துகொள்ள அசாத்தியமான மனபலம் வேண்டும்...
இவை இரண்டுமே தங்களிடம் நிறைந்திருக்கிறது...
வாழ்த்துகள்... நண்பா...//

வாங்க நண்பா... தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா.

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அன்பு நண்பர் ராஜேஷ்,
மனதில் உள்ளதை உள்ளபடி
அழகாய் உங்களைப் பற்றி சொல்லியிருக்கிறீர்கள்..

பதிவுலகில் இன்று இருக்கும் பன்முகத்திறமையாளர்களுள்
நீங்களும் ஒருவர்...
நாம் நினைத்தது நடப்பது என்பது நமக்கு இறைவன் கொடுத்த மாபெரும் வரம்.

இன்னும் சாதியுங்கள் ... உங்களால் முடியும்..//

வாங்க அன்பரே! தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு தலை வணங்குகிறேன்.. மனம் கனிந்த நன்றி நண்பா.

மாய உலகம் said...

ஹேமா said...
மாயா...உங்கள் எழுத்துக்களில் உங்களைக் கண்டாலும் இன்னும் அறியமுடிகிறது இந்தப்பதிவில் !//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

Ramani said...

தங்கள் எழுத்து எனக்கு ரொம்பப்பிடிக்கும்
தங்கள் பயோ டேட்டாவைப் ப்டித்தது முதல்
எழுத்தை விட ராஜேஷ் மிக உயர்ந்தவர் எனப் புரிந்தது
ஏனெனில் எந்த வித போலி பாசாங்கும் இல்லாமல்
மனத்தை அப்படியே விரித்து வெளியில்
காயப் போட்டது போல இருந்தது பதிவு
நீங்கள் உறுதியாக சிகரம் தொடுவீர்கள்
வாழ்த்துக்கள்

மாய உலகம் said...

Ramani said...
தங்கள் எழுத்து எனக்கு ரொம்பப்பிடிக்கும்
தங்கள் பயோ டேட்டாவைப் ப்டித்தது முதல்
எழுத்தை விட ராஜேஷ் மிக உயர்ந்தவர் எனப் புரிந்தது
ஏனெனில் எந்த வித போலி பாசாங்கும் இல்லாமல்
மனத்தை அப்படியே விரித்து வெளியில்
காயப் போட்டது போல இருந்தது பதிவு
நீங்கள் உறுதியாக சிகரம் தொடுவீர்கள்
வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out