Friday 23 December, 2011

எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்! - இசையும் , கதையும் - பகுதி1

இன்றும் இந்த டைலாக்கை பெரியவர்களும், பாதிப்ப்படைந்தவர்களும் சொல்வதை கேட்போம்.. ஆனாலும் கவுண்டமணி ஒரு படத்தில் இந்த டைலாக்கை பேசிய பிறகே இந்த வார்ததைகள் பிரபலம் அடைந்தது... யாராவது சீரியஸாக இந்த வார்த்தையை சொன்னால் கூட
நம்மை அறியாமலே சிரிப்பு வந்து விடும்.... அந்த அளவுக்கு சினிமா சமூகத்தை தாக்கியிருக்கிறது...  சினிமா பாடல்களும், காட்சிகளும் அமைத்து இசையும், கதையும் எழுத வேண்டுமென சகோ அதிரா மியாவ் அவர்கள் கூறியிருந்தார்... என்ன எழுதுவதென்று தடுமாற்றம் இருந்தது... சரி வீடியோ இணைப்புகளும், சில ஞாபகங்களும் எழுதி ஒப்பேத்திருவோம்.. எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்.என முடிவு பண்ணி அவர் எழுத சொன்ன தொடர் பதிவாக இசையும், கதையும் உங்கள் பார்வைக்கு...

ஞாபகம் வருதே! ஞாபகம் வருதே!

பள்ளி பருவத்திலருந்தே வருவோம்...நம்ம தலைவர் நடிகர் திலகம் நடித்த கந்தன் கருணை படத்தில் சிவாஜி கணேசன் அவர்கள் வெற்றிவேல், வீர வேல் பாட்டில் நடந்து வருவதை போல் . பள்ளி இடைவேளையில் நண்பர்களும், நானும் நடந்து பார்ப்போம்... ஒவ்வொருவரையும், மாறி மாறி கேளி செய்வோம்...  ஒவ்வொருவரும் நடக்க, நடக்க ஏன் ஃபைல்ஸா, அடுத்த ஸ்டெப் வைக்க முடியலையா, நரம்பு தளர்ச்சியா,.. ஏன் முக்குற... இப்படி கலாய்ப்போம்... இந்த பாடல் இப்பொழுது பார்த்தாலும் ... அந்த நிகழ்ச்சி ஞாபகம்...



பெல் அடிக்க.. வேக வேகமாக ஓடி அவரவர் இடத்தில் உட்கார்ந்து அடுத்து ஓடி வருபவர்களை பார்க்க காத்திருக்க.. அவர்கள் நாளை நமதே பாடல் எம்.ஜி.ஆர் ஸ்டைலில் ஆடியவாறே வந்து உட்கார்வார்கள்.. ஒருவன் போர்டில் உள்ள கரிகளை முகத்தில் அப்பிக்கொண்டு முழித்தவாறே சிரிப்பூட்டுவான்... இதே பாடலை பல படங்களிலும் காமெடிக்காக பயன்படுத்துவதை பார்க்கும் பொழுது அந்த பள்ளியில் நடந்த ஞாபகம்..



ஏழாம் வகுப்பு படிக்கும்பொழுது - வரலாறு வாத்தியார் எல்லா மாணவர்களையும் எழுந்து நிற்க சொல்லி.. நன்றாக படிக்கும் மாணவியை அழைத்து புக்கை கொடுத்து எல்லோரிடம் பாடம் சம்பந்தமாக கேள்வியை கேட்க சொல்லிவிட்டு சென்றுவிடுவார்... பதிலளிக்கும் மாணவ, மாணவியர்கள் அமர்ந்து கொள்ளலாம். அந்த மாணவியும் கேள்வி கேட்டுக்கொண்டே வர சக மாணவ, மாணவியரும் பதில் தெரியாமல் நின்றுக்கொண்டே இருக்க... என்னிடமும் அந்த மாணவி வந்து கேள்வி கேட்க, நானும் பதில் தெரியாமல் முழிக்க.. அந்த மாணவியே மெதுவாக பதிலையும் சொல்லித்தர.. நானும் சொல்ல.. என்னை அமர சொல்லிவிடுவாள். பக்கத்திலிருக்கும் நண்பனுக்கு காதில் புகைவர எங்கள் இருவரையும் முறைப்பான்... வெளியே சென்ற ஆசிரியரும் உள்ளே வந்து பதில் தெரியாமல் நிற்கும் மாணவர்களை பிரம்பால் அடித்து உட்கார வைத்துவிடுவார்...

நான் நன்றி கடனாக இடைவெளியில் புளியமரம் ஏறி புளியங்காய்களை நிறைய பறித்து வந்து அந்த மாணவியிடம் கொடுப்பேன்... இதைப்பார்த்த மாணவன் வரலாறு வாத்தியாரிடம் போட்டுக்கொடுக்க.. அப்பறம் என்ன எனக்கும், அந்த மாணவிக்கும் ஸ்பெசல் அடிகள்.....

சில வருடங்களுக்கு முன் அந்த பெண்ணை பார்த்த பொழுது அவள் அவர் கணவருடன் வந்து கொண்டிருந்தாள்.. பேசுவாள் என எதிர்பார்த்தேன்.. அவள் கண்டும் காணாமல் சென்று விட்டாள்.. புளியங்காய்களை பறித்துகொடுத்ததை மறந்துவிட்டாள் போல என ஃபீல் செய்தவாறே நடந்து சென்று விட்டேன்..  அவ்வ்வ்வ்வ்

9-ம் வகுப்பில் நடந்த சம்பவம் - தமிழ் வாத்தியார் எங்களிடம் "யார், எல்லா பாடங்களையும் மனப்பாடம் செய்து ஒப்பிக்கிறார்களோ அவர்களுக்கு ஃபைன் காசிலேருந்து பரிசு வாங்கி தருவேன்... எங்கே கையை தூக்குங்கள்" என்று கேட்க.. பாய்ஸில் நானும், கேர்ள்ஸில் 8 பேரும் கையை தூக்கினோம்... உடனே வாத்தியார் அந்த ஏழு மாணவிகளிடமும் 8வது மாணவியிடம் ஒப்பியிங்கள்... 8வது மாணவியை என்னிடம் படித்து மனப்பாடமாக ஒப்பித்து சொல்லவேண்டும், நான் அந்த மாணவியிடம் ஒப்பித்து சொல்லவேண்டும்.... பின் அந்த மாணவி தப்பாக ஒப்பித்தாலும் நான் சரியென்று தலையாட்டுவேன்... ஹி ஹி ஹி ஹி...
நான் ஒரு புள்ளி, கமா வை விட்டாலும் தவறு என்று சொல்லிவிடுவாள்  அந்த மாணவி ரொம்ப ஸ்டிரிக்ட்டு ... ஒருவழியாக ஒப்பித்து காண்பித்து பரிசுக்காக காத்திருந்தோம்... பரிசு வாங்க வேண்டுமென்பதறகாக எதற்க்கெடுத்தாலும் ஃபைன் போட பட்டது. பேசினால் ஃபைன், லேட்டா வந்தா ஃபைன், ஹோம் வொர்க் செய்யலனா ஃபைன், இப்படி மாணவர்களிடம் வசூல் செய்து வாத்தியாரிடம் கொடுக்கப்பட்டது.. அவர் 9 பேருக்கும் ஆளுக்கொரு ஸ்கேல் பரிசாக வாங்கி கொடுத்து மீதியை அவர் வைத்துக்கொண்டார்...

நண்பர்கள் வொயரிங் வேலைக்காக காடி எடுக்கும் வேலைக்கு அழைத்து சென்றனர்.. முதல் முறையாக 20 ரூபாய் சம்பளம் வாங்கினேன்... பெருமை தாளவில்லை



வொயரிங் மொதலாளி பசங்க எல்லாரையும் அழைத்து சென்று பீர் வாங்கி கொடுத்தார்.. எனக்கு பழக்கம் இல்லை என்று சொல்ல நண்பர்கள் பீர் நல்லதுடா வேலை அலுப்பு தெரியாது என்க.. நானும் முதல் முறை அருந்தினேன்... ஒரு மிதப்பிலயே நண்பர்களுடன் நடந்துவர.. அந்த 9 ம் வகுப்பு என்னுடன் படித்த மாணவி பஸ் ஸ்டேண்டில் பஸ்ஸிற்காக நின்று கொண்டிருக்க... பாவாடை தாவனியில் பார்த்த உருவமா இவள். என்று வியந்தவாறே எங்கே நம்மிடம் பேச போகிறாள் என நான் பாட்டுக்கும் நடந்து செல்ல.... அவள் என்னை பார்த்துவிட்டு " ஹே ராஜேஷ்" என்று கூப்பிட.... நான் பதிலுக்கு ஹாய் சொல்லியவாறே அருகில் சென்றேன்..


எங்கே ஸ்மெல் காட்டிக்கொடுத்துவிடுமோ என்று டிஸ்டென்ஸ் கீப் அப் செய்து நின்று கொண்டே பேசினேன்...அவள் " ஹாய் ராஜேஷ் எப்படி இருக்கீங்க.. என்ன பண்ணிட்டிருக்கீங்க?.." என்று கேட்க... நான் வொயரிங்க் வேலைக்கு போறேன்.... நீங்க?"என்று பதிலுக்கு கேட்க...  அதற்கு அவள் "நான் டீச்சர் டிரையினிங்ல இருக்கேன்..".. என்று சொல்ல....
நான் நண்பர்கள் மத்தியில் பந்தவாக பேசுவதாக நினைத்து " நம்ம G.H லயா டிரையினிங்ல இருக்கீங்க?"என கேட்க...
அவள் கூட நின்று கொண்டிருந்த நண்பி சிரித்துவிட்டாள்... அவள் சமாளித்தவாறே "G.H.S.S "(Government Higher Secondary School) ல என்று சொல்ல... நான் அசடு வழிந்தவாறே bye சொல்லிவிட்டு நண்பர்களுடன் நகர....  நண்பர்கள் அசிங்கபட்டுட்டாண்டா ஆட்டோக்காரன் என்பது போல என்னை நக்கலாக கேலி செய்தவாறே வந்தனர்....

நண்பர்களிடம் மூக்கு படைத்துக்கொண்டு... நான் தப்பில்லாம ஒரு நாள் பேசிக்காமிக்கிறண்டா...... என சவால் விட்டேன்....அவ்வ்வ்வ்வ்வ்வ்



( நம்ம சூப்பர் ஸ்டார் சவால் விட்டு ஆக்ரோசமாக நடிக்கும் இந்த காட்சி பார்க்க பார்க்க... ஒரு உத்வேகம் நம்முள் எழும்.... வேறு எந்த ஒரு நடிகரையும் இந்த காட்சிக்கு கற்பனை கூட செய்து பார்க்க முடியவில்லை.... அவருக்கு நிகர் அவரே)

சுற்றிவிட்டு தாமதமாக சென்று வீட்டின் கதவை தட்ட.. கோபத்துடன் அப்பா ஏண்டா இவளோ லேட்டு... சரி சரி உள்ளே போ... என்றார்....


நம்ம சூப்பர் ஸ்டாரின் ஸ்டைலும், ஸ்பீச்சும், தேவாவின் பின்னனி இசையும் எத்தனை முறை பார்த்தாலும் இந்த காட்சி மட்டும் அலுக்கவே, அலுக்காது.. கொஞ்சம் சத்தமா வச்சி கேளுங்களேன்...........

                                                                                                   தொடர்பதிவு தொடரும்........

அன்பு சகோதர, சகோதரிகள் மற்றும் நண்பர்களுக்கு கிருஸ்துமஸ் நல்வாழ்த்துக்கள்




உங்கள் பிரியமானவன்,

39 comments:

Angel said...

புள்ளி ,கமா வெல்லாம் எப்படி ஒப்பிக்க முடியும் ஆனாலும் அந்த பெண் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்திருக்காங்க .

ஆட்டோ கிராஃப் நினைவுகள் இனிமையா இருக்கு தொடர்கிறேன்

Angel said...

உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்

Anonymous said...

நல்ல பதிவு மாயா. பாட்டு மலரும் நினைவுகள் ன்னு கலக்குறீங்க. சில மாதங்களுக்கு முன்னே என்னை உங்க வலைத் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அதுக்கப்புறம் வேலை பளுவில் வர முடியாத சூழ்நிலை

Anonymous said...

புளியங்காய் பறிச்சு கொடுத்தது எல்லாம் ஞாபகம் இருந்திருக்கும் கணவருடன் வந்ததால் கண்டுக்காம போய் இருப்பாங்க don 't பீல் யா

சசிகுமார் said...

//ஆனாலும் கவுண்டமணி ஒரு படத்தில் இந்த டைலாக்கை பேசிய பிறகே இந்த வார்ததைகள் பிரபலம் அடைந்தது...//

உண்மை தான் நண்பா...எப்ப கேட்டாலும் சிரிப்பு தான் வருது..

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

அருமை.
வாழ்த்துக்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஆஆ அஞ்சுவுக்கோ வடை நோ..... முடியாது எனக்கும் பிச்சுப் பிச்சுத் தரோணும்.... நான் கொஞ்சம் பொறுத்து வாறேன்... மாயாவை ஆராவது கண்டனீங்களோ? இல்ல சும்ம ஒரு டவுட்டு:)

மகேந்திரன் said...

நடிகர் திலகத்தின் அந்த ராஜநடை..
அப்பப்பா அந்த நடையில் தான் என்ன ஒரு கம்பீரம்..

பள்ளிக்காலம் ஒரு பட்டாம்பூச்சி காலம் நண்பரே..
சுதந்திரமாய் சுற்றித் திரிந்த அந்த காலம் திரும்பி வாராதா....

அழகாக சம்பவங்களை புனைந்திருக்கிறீர்கள் நண்பரே..
அருமை அருமை.

Yoga.S. said...

இரவு வணக்கம்,ராஜேஷ்!அருமையாக இருந்தது,இருக்கும்!பிகருங்க கிட்ட"பல்பு"வாங்கிறது,ஒரு தனி சுகம்தான்,ஹி!ஹி!ஹி!!!

கவி அழகன் said...

பள்ளி பருவ அனுபவங்கள் இனிமை பாடல் அருமை

மாய உலகம் said...

angelin said...
புள்ளி ,கமா வெல்லாம் எப்படி ஒப்பிக்க முடியும் ஆனாலும் அந்த பெண் ரொம்ப ஸ்ட்ரிக்டா இருந்திருக்காங்க .

ஆட்டோ கிராஃப் நினைவுகள் இனிமையா இருக்கு தொடர்கிறேன்


உங்களுக்கும் அட்வான்ஸ் வாழ்த்துக்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

En Samaiyal said...
நல்ல பதிவு மாயா. பாட்டு மலரும் நினைவுகள் ன்னு கலக்குறீங்க. சில மாதங்களுக்கு முன்னே என்னை உங்க வலைத் தளத்தில் அறிமுகப்படுத்தியதற்கு நன்றி. அதுக்கப்புறம் வேலை பளுவில் வர முடியாத சூழ்நிலை

புளியங்காய் பறிச்சு கொடுத்தது எல்லாம் ஞாபகம் இருந்திருக்கும் கணவருடன் வந்ததால் கண்டுக்காம போய் இருப்பாங்க don 't பீல் யா//

வாங்க சகோ! வலைச்சரத்தில் அறிமுகப்படுத்திருந்தேன்.. கருத்துக்கு மிக்க நன்றி சகோ!.

மாய உலகம் said...

சசிகுமார் said...
உண்மை தான் நண்பா...எப்ப கேட்டாலும் சிரிப்பு தான் வருது..//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said...
அருமை.
வாழ்த்துக்கள்.//

வாங்க சகோ... நன்றி.

மாய உலகம் said...

athira said...
ஆஆஆஆஆஆஆ அஞ்சுவுக்கோ வடை நோ..... முடியாது எனக்கும் பிச்சுப் பிச்சுத் தரோணும்.... நான் கொஞ்சம் பொறுத்து வாறேன்... மாயாவை ஆராவது கண்டனீங்களோ? இல்ல சும்ம ஒரு டவுட்டு:)//

வாங்க மியாவ்... தொடர் பதிவிடும் தாமதத்திற்கு மன்னிக்கவும் சகோ! நன்றி.

மாய உலகம் said...

மகேந்திரன் has left a new comment on your post "எல்லாம் மேல இருக்குறவன் பாத்துக்குவான்! - இசையும் ...":

நடிகர் திலகத்தின் அந்த ராஜநடை..
அப்பப்பா அந்த நடையில் தான் என்ன ஒரு கம்பீரம்..

பள்ளிக்காலம் ஒரு பட்டாம்பூச்சி காலம் நண்பரே..
சுதந்திரமாய் சுற்றித் திரிந்த அந்த காலம் திரும்பி வாராதா....

அழகாக சம்பவங்களை புனைந்திருக்கிறீர்கள் நண்பரே..
அருமை அருமை.//

வாங்க நண்பா... கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

Yoga.S.FR said...
இரவு வணக்கம்,ராஜேஷ்!அருமையாக இருந்தது,இருக்கும்!பிகருங்க கிட்ட"பல்பு"வாங்கிறது,ஒரு தனி சுகம்தான்,ஹி!ஹி!ஹி!!!//

வாங்க சகோ! வணக்கம்...ஹா ஹா தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

மாய உலகம் said...

கவி அழகன் said...
பள்ளி பருவ அனுபவங்கள் இனிமை பாடல் அருமை//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா சொன்ன சொல்லின்படி உடனே வர முடியேல்லை மாயா.. கொஞ்சம் தாமதமாகிட்டேன்... பதிவைப் படிக்க நேரமிருக்கவில்லை, இப்போதான் பார்க்கிறேன். என் அழைப்பை ஏற்று தொடர்ப் பதிவு அதுவும் பழைய ஞாபகங்களை இசையும் கதையுமாக்கி.. சூப்பர் ஐடியா, சூப்பராக இருக்கு மாயா... மிக்க நன்றிகள்.

முற்றும் அறிந்த அதிரா said...

ஒரு கல்லில் 2 மாங்காய் அடிக்கிறீங்க... தொடர்ப்பதிவிலும் தொடர் கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:)).. தொடருங்கோ...

முற்றும் அறிந்த அதிரா said...

படிக்கும்போது புளியம்பழம் பறித்துக் கொடுத்தீங்களோ?:).

எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டு நண்பன் என்னோடு படித்தவர் 5ம் வகுப்புவரை, அவர் எனக்கு மீனாட்சிப்பழம் பறித்துத் தருவார்... அந்த ஞாபகம் வந்திட்டுது. ஆனா இப்பவும் நாங்க குடும்ப நண்பர்கள். சந்திக்கும்போது பேசிக்கொள்வோம்.

அந்த நண்பியால் மாயாவை அடையாளம் காண முடியாமல்கூட போயிருக்கலாம்... ஆனா பழகியவர்கள் தெரியாததுபோல போகும்போது மனவருத்தமாகத்தான் இருக்கும்.

கொஞ்ச நாள் பழகியவர்களே.. தெரியாததுபோல பின்னூட்டம் இடாமல் போனாலே மனம் கவலைப்படுது என்னாச்சோ ஏதாச்சோ என, அப்போ பழகியவர்கள் அதுவும் நேரில் பார்க்கும்போது தெரியாததுபோனால்?

முற்றும் அறிந்த அதிரா said...

அப்பா உள்ளே போகச் சொல்லிவிட்டு... ஒருவேளை கதவைச் சாத்திப்போட்டு, மாயாவுக்கு லெவ்ட் அண்ட் ரைட்டாக.... சே..சே. அப்பூடியெல்லாம் அவசரப்பட்டுக் கற்பனை பண்ணக்குடா... மீ வெயிட்டிங்...:))).

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி!
படிக்க! சிந்திக்க! :
"உங்களின் மந்திரச் சொல் என்ன?"

மாய உலகம் said...

athira said...
அடடா சொன்ன சொல்லின்படி உடனே வர முடியேல்லை மாயா.. கொஞ்சம் தாமதமாகிட்டேன்... பதிவைப் படிக்க நேரமிருக்கவில்லை, இப்போதான் பார்க்கிறேன். என் அழைப்பை ஏற்று தொடர்ப் பதிவு அதுவும் பழைய ஞாபகங்களை இசையும் கதையுமாக்கி.. சூப்பர் ஐடியா, சூப்பராக இருக்கு மாயா... மிக்க நன்றிகள்.

படிக்கும்போது புளியம்பழம் பறித்துக் கொடுத்தீங்களோ?:).

எனக்கும் எங்கள் பக்கத்து வீட்டு நண்பன் என்னோடு படித்தவர் 5ம் வகுப்புவரை, அவர் எனக்கு மீனாட்சிப்பழம் பறித்துத் தருவார்... அந்த ஞாபகம் வந்திட்டுது. ஆனா இப்பவும் நாங்க குடும்ப நண்பர்கள். சந்திக்கும்போது பேசிக்கொள்வோம்.

அந்த நண்பியால் மாயாவை அடையாளம் காண முடியாமல்கூட போயிருக்கலாம்... ஆனா பழகியவர்கள் தெரியாததுபோல போகும்போது மனவருத்தமாகத்தான் இருக்கும்.

கொஞ்ச நாள் பழகியவர்களே.. தெரியாததுபோல பின்னூட்டம் இடாமல் போனாலே மனம் கவலைப்படுது என்னாச்சோ ஏதாச்சோ என, அப்போ பழகியவர்கள் அதுவும் நேரில் பார்க்கும்போது தெரியாததுபோனால்?

அப்பா உள்ளே போகச் சொல்லிவிட்டு... ஒருவேளை கதவைச் சாத்திப்போட்டு, மாயாவுக்கு லெவ்ட் அண்ட் ரைட்டாக.... சே..சே. அப்பூடியெல்லாம் அவசரப்பட்டுக் கற்பனை பண்ணக்குடா... மீ வெயிட்டிங்...:))).//

வாங்க சகோ! ஹா ஹா விரிவான பின்னூட்டத்துக்கு மிக்க நன்றி :-)))).

மாய உலகம் said...

திண்டுக்கல் தனபாலன் said...
அருமை! வாழ்த்துக்கள்!
பல நாட்கள் கழித்து பதிவுகளைப் படிக்க ஒரு சந்தர்ப்பம் கிடைத்தது...
பகிர்விற்கு நன்றி! //

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

இனிமையான மலரும் நினைவுகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இராஜராஜேஸ்வரி said...

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்....

முற்றும் அறிந்த அதிரா said...

karrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)

மின்னலே வந்திட்டுப் போம்மா....

http://www.youtube.com/watch?v=6qnf9nx706w&feature=related

அம்பலத்தார் said...

உங்க இளமைக்கால அனுபவப்பகிர்வு சுவாரசியமாக இருக்கு

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
இனிமையான மலரும் நினைவுகள் பகிர்வுக்குப் பாராட்டுக்கள்..

இனிய கிறிஸ்மஸ் வாழ்த்துகளும் புத்தாண்டு வாழ்த்துகளும்....//

வாங்க சகோ! தங்களது கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

athira said...
karrrrrrrrrrrrrrrrrrrrrrrrr:)

மின்னலே வந்திட்டுப் போம்மா....//

ஹா ஹா அருமை சகோ!

மாய உலகம் said...

அம்பலத்தார் said...
உங்க இளமைக்கால அனுபவப்பகிர்வு சுவாரசியமாக இருக்கு//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோ .உங்களுக்கு எங்கள் கிறிஸ்மஸ்
வாழத்துக்கள் உரித்தாகட்டும் .

அம்பாளடியாள் said...

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..

Unknown said...

ராஜேஷ்
நினைவலைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Angel said...

உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் rajesh

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
அருமையான பகிர்வுக்கு மிக்க நன்றி
சகோ .உங்களுக்கு எங்கள் கிறிஸ்மஸ்
வாழத்துக்கள் உரித்தாகட்டும் .

அருமையான பகிர்வு!..பகிர்வுக்கு மிக்க நன்றி வாழ்த்துக்கள் சகோ ..//

வாங்க சகோ! உங்களது வாழ்த்துக்கு நன்றி... எனது வாழ்த்துக்கள் உங்களுக்கும் உங்கள் குடும்பத்துக்கும்.

மாய உலகம் said...

அப்பு said...
ராஜேஷ்
நினைவலைகளுக்கும் வாழ்த்துகளுக்கும் நன்றி..
புத்தாண்டு வாழ்த்துக்கள்.//

வாங்க சகோ! கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி... தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

angelin said...
உங்களுக்கு இனிய புத்தாண்டு வாழ்த்துக்கள் rajesh//

வாங்க சகோ! தங்களுக்கும் புத்தாண்டு நல்வாழ்த்துக்கள்.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out