Thursday, 3 November 2011

சிலருடைய பழக்க வழக்கம்

மனிதப் பிறவியினுடைய ஓர் இயல்பு நிலையானது பழக்கங்களுக்கு அடிமையாவது ஆகும்.


நல்ல பழக்கமாக இருந்தாலும் தீய பழக்கமாக இருந்தாலும் சிலகாலம் தொடர்ந்து பழகிவிட்டால் அந்தப் பழக்கத்திலிருந்து மனிதன் மீளுவது கடினம்.

நல்ல பழக்கங்களுக்கு அடிமையாகம்பொழுது அது தனிப்பட்ட அவனுக்கும் அவன் வாழும் சமுதாயத்துக்கும் அதனால் நன்மை கிடைக்கிறது.

சில பழக்கங்களை ஒரேடியாக தீமை தருவன என்று சொல்ல முடியாவிட்டாலும் அது பொதுவாக மற்றவர்கள் பார்வையில் ஒரு வித தாழ்வான - கேவலமான எண்ணத்தைத் தோற்றுவிக்கக் கூடும்.

சிலர் ஏதாவது அங்க சேஷ்டைகளைச் செய்துக் கொண்டேயிருப்பார்கள். தலையயோ கைகால்களையோ தேவையில்லாமல் அவலட்சணம் தோன்ற ஆட்டிக்கொண்டிருப்பார்கள்.

சிலர் தனிமையில் இருக்கும்பொழுது தமக்குத்தாமே பேசிக் கொள்வார்கள் அல்லது சிரித்துக் கொள்வார்கள்.

சிலர் சதா வளவளவென பேசிக் கொண்டிருப்பார்கள். காரணம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் இவர்கள் பேசத் தவறமாட்டார்கள்.

தமது பேச்சை எதிரில் இருப்பவர்கள் விரும்புகிறார்களா காது கொடுத்துக் கேட்கிறார்களா என்றெல்லாம் இவர்கள் யோசிக்க மாட்டார்கள்.

மற்றவர்கள் பேசுவதை இவர்கள் காதில் வாங்கிக்கொள்ள மாட்டார்கள். மற்றவர்கள் பேச வாய்ப்பே கொடுக்காமல் இவர்கள் பேசிக்கொண்டிருப்பார்கள்.

இப்படிப்பட்ட உளறு வாயர்களைக் கண்டாலே அனுபவப்பட்ட பலர் மெல்ல அவர்களைக் காணாததுபோல நழுவி விடுவார்கள். அவர்களிடம் மாட்டிக் கொண்டவர்களும் அவரிடமிருந்து எப்படி தப்பித்துக் கொள்வது என்று துடிப்பார்கள்.

இவர்களது உளறுவாய் பேச்சால் நண்பர்கள் இவர்களை மனதில் திட்டிக்கொண்டே வெளியில் காண்பிக்காமல் இருப்பார்கள்.

சிலருக்கு மற்றவர்களுடன் வாதம் செய்வதே வழக்கம். இவர்கள் வாதம் செய்வதற்கு பிரமாதமான விசயம் ஏதும் தேவையில்லை. அற்ப காரணங்களுக்காக தீவிரமாக வாதத்திலிருந்து விடுவார்கள்.

வாதம் செய்யும் போது பரஸ்பரம் விட்டுக் கொண்டு விவாதம் செய்வதற்காக பேசுவதாக இவர்கள் பேச்சு இருக்காது.

'தாம் பிடித்த முயலுக்கு மூன்றே கால்' எனபது போல தாங்கள் நினைப்பதையே பிறர் மீது திணிக்க முற்படுவார்கள்.

மற்றவர்கள் சொல்வதில் நியாயம் இருந்தால் கூட அதை ஒப்புக் கொள்ள மாட்டார்கள். தாங்கள் சொல்வதே சரியென வாதிப்பார்கள்.

இதுவும் ஒருவிதமான வெறுக்கத் தக்க பழக்கந்தான்.

புறங்கூறுவது சிலருக்கு பழக்கமாகவும், வழக்கமாகவும் இருக்கும்.
சிலர் எப்பொழுது பார்த்தாலும் மற்றவர்களைக் குறை சொல்லிக் கொண்டேயிருப்பார்கள். அப்படி ஒரு பழக்கம் இவர்களுக்கு.

மற்றவர்களைக் கேலியும் கிண்டலும் செய்து கொண்டிருப்பது சிலருடைய வழக்கம்.

இந்த மாதிரிப் பழக்கங்களால் தொடர்புடையவர்களுக்கு நன்மை ஏதும் இருப்பதில்லை. ஆனால் அவற்றால் விளையக் கூடிய தீமைகளோ சொல்லி அடங்காது.

=============================================================
ஒரு நிமிசம்:

முற்றிலும் பலம் வாய்ந்த பலவீனமே இல்லாத மனிதர் என்று உலகத்தில் யாரும் இல்லை. அதே போல், வெறும் பலவீனத்தை மட்டுமே அடிப்படையாகக் கொண்டு பலமே இல்லாத மனிதரும் உலகத்தில் இல்லை.

பலமும் ஆற்றலும், அறிவும் பெற்ற ஒரு மனிதன் தன்னிடம் அமைந்திருக்கும் அற்புத சக்திகளை உணர்ந்து சமுதாய நலனுக்குப் பயன்படுத்துவதன் மூலம், தனக்கும் தன் வாழ்க்கைக்கும் பயன்படுத்திகொள்ளத் தெரியாதவன் பலமிருந்தும் பலவீனனாகிவிடுகிறான்.

இதே போல் தனது பலத்தை ஆற்றலை ஆக்க ரீதியில் அல்லாமல் அழிவுக் கண்ணோட்டத்தில் சமுதாயத்தைச் சீரழிக்கும் நோக்கில் பயன்படுத்துபவனும் பலவீனனாகி, தோல்விகளை அடைகிறான்.

இதை இன்னும் சற்று விரிவாகக் கூறுவதாயின் பலவீனம் என்று தனியாக ஒன்று இல்லை. நமது பலம் சரியாக பயன்படுத்த முடியாத போது, தவறாக பயன்படும்போது அது பலவீனமாக மாறுகிறது. அவ்வளவு தான்.

உங்கள் பிரியமானவன்,

75 comments:

stalin wesley said...

நல்லா சொன்னிங்க

சாகம்பரி said...

குறிப்பிட்டுள்ள அனைத்துமே புரிந்து கொண்டு தவிர்க்க வேண்டியவை. நல்ல பகிர்வு.

Yaathoramani.blogspot.com said...

அருமை அருமை
தன்னுடைய பலவீனத்தை அறிந்தவன் பலசாலி
தன்னுடைய பலத்தை அறியாதவன் பலவீனன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3

RAMA RAVI (RAMVI) said...

பலம்,பலவீனம் ஆகியவற்றை பற்றிய அருமையான அலசல்.நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு.

சசிகுமார் said...

பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்...தமிழ்மணம்4

நிரூபன் said...

மச்சி
நான் வெளியே கிளம்புறேன்
மாலை வாரேன்..

கவிதை வீதி... // சௌந்தர் // said...

ஒரு மனிதனுடைய சூழ்நிலையும் அவனது வம்சாவழி பழக்க வழக்கங்களும் அவனை அதிகம் ஆட்கொள்கிறது...

சூழ்நிலைகளே இதில் அனைத்திலும் விஞ்சி நிற்கிறது..


அழகிய பதிவு..
வாழ்த்துக்கள்..

SURYAJEEVA said...

fantastic

மகேந்திரன் said...

வாதம்..
அருமையான ஒரு தலைப்பை எடுத்து
அற்புதமான படைப்பை கொடுத்திருக்கீங்க நண்பரே..

மகேந்திரன் said...

வாதத்திற்கு மருந்துண்டு ஆனால் பிடிவாதத்திற்கு
மருந்தில்லை என்பது போல ...
தான் நினைப்பதை தன் நாக்கில் நீர் உள்ளமட்டும் பேசிப்பேசியே
எதிரில் இருப்பவரை மசியச் செய்பவர்களும் இருக்கிறார்கள்...

மகேந்திரன் said...

வீண்வாதம் விடுத்து
விளையும் எண்ணங்களை
அறிவைப் பயன்படுத்தி
ஆக்கப்பாதையில் எடுத்துச் செல்லவேண்டும்..

உட்கார்ந்து ஒன்பதுமநிநேரம் பேசுவதால்...
எந்த பிரயோசனமும் இல்லை...

மீண்டும்.....
அருமையான படைப்புக்கு நன்றி நண்பரே..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க மாயா....
அதுக்கு என்ன தீர்வெனத்தான் தெரிவதில்லை. ஏனெண்டால் இப்படியானவர்களைக் கண்டால், நாம் நைசாக நழுவி ஓடிவிடுவோமே தவிர, திருத்த முயல்வதில்லையல்லவா... அப்போ அவர்களுக்கும் தம் தவறு புரியாது...

இதுக்கு என்னதான் வழி?:))

test said...

அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
அதுவும் நம்மாளுங்க எதுக்கெல்லாம் வாதம் செய்றாங்கன்னு பாத்தீங்கன்னா .......முடியல!!!! :-)

குறையொன்றுமில்லை. said...

பலம்,பலவீனம் ஆகியவற்றை பற்றிய அருமையான அலசல்.நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு.

rajamelaiyur said...

//நல்ல பழக்கமாக இருந்தாலும் தீய பழக்கமாக இருந்தாலும் சிலகாலம் தொடர்ந்து பழகிவிட்டால் அந்தப் பழக்கத்திலிருந்து மனிதன் மீளுவது கடினம்.
//

100 % உண்மை

rajamelaiyur said...

இன்று என் வலையில்

தலை, தளபதி மற்றும் புத்தர்

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

நான் ஏற்கனவே சொன்னேனே ஒரு பஞ்சாபி பெண் இருக்கிறார் என... ஜய் ஜய் என்பார் என.

அவவுக்கு பஞ்சாபி தவிர வேறு பாஷை தெரியாது, ஆங்கிலம் சிறிது மட்டுமே தெரியும். ஆனா அவ எல்லாப் பாஷையினரோடும் போய் வலிய கதைப்பா. எப்படியெனில் ஆரம்பம் அந்தமொழி.. தொடர்ந்து பஞ்சாபி.... இதனால் மற்றோருக்கு இடைஞ்சல் என நினைப்பதில்லை. தான் சொல்ல வந்ததை சொல்லிடுவா.

என்னோடும் அப்படித்தான் கண்டால் விடமாட்டா... கஃப் ஆ யூ என ஆரம்பிப்பா... பின் பஞ்சாபியில் வெழுத்துக் கட்டுவா, நான் சொல்லி அலுத்திட்டேன் எனக்கு பஞ்சாபி தெரியாதென:))

இப்போ அவ கட்சிக்கு நான் மாறிட்டேன்:)) வேறு வழியில்லையே... அவ கதைப்பா, நான் சிரித்துவிட்டாலே அவவுக்குப் போதும் தொடர்ந்து கதைப்பா..:))))

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

இப்படி நிறையச் சொல்லலாம்...

உங்கள் பதிவால் பலரை நினைக்க வைத்திட்டீங்க...

தாமாகத் திருந்தினால் ஒழிய, ஆராலும் திருத்தவே முடியாது இப்படியானவர்களை.

இதுக்குத்தான் சின்ன வயதிலேயே பெற்றோர் இவற்றைக் கவனித்து திருத்திட வேண்டும். 5 இல் வளையாதது 20 க்கு மேல வளைப்பது கொஞ்சம் கஸ்டம்தான்:))))))).

பாலா said...

கரெக்டா சொன்னேங்க. வாயை அடக்குவது என்பது முடியாத காரியம். ஆனால் வாயை அடக்கிவிட்டால் பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

ஒரு நிமிஷம் அருமை....

நம்மிடமுள்ள பலத்தை, நாம் அநியாயமாக தேவையில்லாத விஷயத்தில் செலவழிக்கும்போது, நாம் பலமற்றவர்களாகிவிடுகிறோம்...

சே..சே... இப்புடிச் சொல்லியே நானே இவ்வளவு தூரம் அலட்டிவிட்டேனோ?:))) அவ்வ்வ்வ்வ்:)) அதுதான் மாயாவையும் வெளியில காணேல்லை.... :)))))

[im]http://www.babydon.com/wp-content/uploads/2009/03/cute20pinky20cat-101109-500x375.jpg[/im]

கூடல் பாலா said...

நல்ல அறிவுரை !

Unknown said...

ராஜேஷ்
தேவையான பதிவு...

Unknown said...

///அற்ப காரணங்களுக்காக தீவிரமாக வாதத்திலிருந்து விடுவார்கள்.////

இன்றைய நிலையில் தமிழக ... நிலைமை கூட அப்படித்தான் இருக்கிறது...

Unknown said...

ரொம்ப சரி நண்பரே

செங்கோவி said...

அளவான பேச்சு எப்போதும் நல்லது என்று சொல்லுங்கள்...

சக்தி கல்வி மையம் said...

சரியாகச் சொன்னீர்கள்..

சக்தி கல்வி மையம் said...

சரியாகச் சொன்னீர்கள்..

சக்தி கல்வி மையம் said...

சரியாகச் சொன்னீர்கள்..

சாந்தி மாரியப்பன் said...

அருமையான அலசலுடன் நல்லதொரு பகிர்வு..

பலத்தை உணராமல் இருப்பதும்கூட ஒரு வகை பலவீனம்தான்..

Angel said...

பலம் ,பலவீனம் ,விளக்கமான அலசல் .வாழ்த்துக்கள் ராஜேஷ் .

Anonymous said...

பலம்..பலவீனம் பற்றி அருமையான அலசல்... நன்றி ராஜேஷ் பகிர்வுக்கு...

ராஜா MVS said...

திருத்திக்கொள்ள வேண்டிய குணம்...

அருமை... நண்பா...

Anonymous said...

stalin wesley said...
நல்லா சொன்னிங்க//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

Anonymous said...

சாகம்பரி said...
குறிப்பிட்டுள்ள அனைத்துமே புரிந்து கொண்டு தவிர்க்க வேண்டியவை. நல்ல பகிர்வு.//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Ramani said...
அருமை அருமை
தன்னுடைய பலவீனத்தை அறிந்தவன் பலசாலி
தன்னுடைய பலத்தை அறியாதவன் பலவீனன்
மனம் கவர்ந்த பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 3//

வாங்க சகோ! கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம் கனிந்த நன்றி.

Anonymous said...

RAMVI said...
பலம்,பலவீனம் ஆகியவற்றை பற்றிய அருமையான அலசல்.நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு//

வாங்க.. கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

சசிகுமார் said...
பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்...தமிழ்மணம்4//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

நிரூபன் said...
மச்சி
நான் வெளியே கிளம்புறேன்
மாலை வாரேன்..//

வாங்க..மறக்காம மாலை வாங்க பாஸ்.

Anonymous said...

கவிதை வீதி... // சௌந்தர் // said...
ஒரு மனிதனுடைய சூழ்நிலையும் அவனது வம்சாவழி பழக்க வழக்கங்களும் அவனை அதிகம் ஆட்கொள்கிறது...

சூழ்நிலைகளே இதில் அனைத்திலும் விஞ்சி நிற்கிறது..


அழகிய பதிவு..
வாழ்த்துக்கள்..//

வாங்க நண்பரே! தங்களது கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

suryajeeva said...
fantastic//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

மகேந்திரன் said...
வாதம்..
அருமையான ஒரு தலைப்பை எடுத்து
அற்புதமான படைப்பை கொடுத்திருக்கீங்க நண்பரே..

வாதத்திற்கு மருந்துண்டு ஆனால் பிடிவாதத்திற்கு
மருந்தில்லை என்பது போல ...
தான் நினைப்பதை தன் நாக்கில் நீர் உள்ளமட்டும் பேசிப்பேசியே
எதிரில் இருப்பவரை மசியச் செய்பவர்களும் இருக்கிறார்கள்...

வீண்வாதம் விடுத்து
விளையும் எண்ணங்களை
அறிவைப் பயன்படுத்தி
ஆக்கப்பாதையில் எடுத்துச் செல்லவேண்டும்..

உட்கார்ந்து ஒன்பதுமநிநேரம் பேசுவதால்...
எந்த பிரயோசனமும் இல்லை...//

தங்களது விரிவான பின்னூட்டத்துக்கு மனம் கனிந்த நன்றி நண்பா!

மீண்டும்.....
அருமையான படைப்புக்கு நன்றி நண்பரே..

Anonymous said...

athira said...
நல்ல விஷயங்கள் சொல்லியிருக்கிறீங்க மாயா....
அதுக்கு என்ன தீர்வெனத்தான் தெரிவதில்லை. ஏனெண்டால் இப்படியானவர்களைக் கண்டால், நாம் நைசாக நழுவி ஓடிவிடுவோமே தவிர, திருத்த முயல்வதில்லையல்லவா... அப்போ அவர்களுக்கும் தம் தவறு புரியாது...

இதுக்கு என்னதான் வழி?:))//

வாங்க.. அந்த தவறை அவர்களாகவே உணர்ந்தால் தான் உண்டு... கருத்துக்கு மிக்க நன்றிகள்.

Anonymous said...

ஜீ... said...
அருமையாகச் சொல்லியிருக்கிறீர்கள்!
அதுவும் நம்மாளுங்க எதுக்கெல்லாம் வாதம் செய்றாங்கன்னு பாத்தீங்கன்னா .......முடியல!!!! :-)//

வாங்க ஜீ.. உண்மை தான் நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

Lakshmi said...
பலம்,பலவீனம் ஆகியவற்றை பற்றிய அருமையான அலசல்.நல்ல பதிவு. நன்றி பகிர்வுக்கு.//

வாங்கம்மா... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
//நல்ல பழக்கமாக இருந்தாலும் தீய பழக்கமாக இருந்தாலும் சிலகாலம் தொடர்ந்து பழகிவிட்டால் அந்தப் பழக்கத்திலிருந்து மனிதன் மீளுவது கடினம்.
//

100 % உண்மை//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி.

Anonymous said...

athira said...
நான் ஏற்கனவே சொன்னேனே ஒரு பஞ்சாபி பெண் இருக்கிறார் என... ஜய் ஜய் என்பார் என.

அவவுக்கு பஞ்சாபி தவிர வேறு பாஷை தெரியாது, ஆங்கிலம் சிறிது மட்டுமே தெரியும். ஆனா அவ எல்லாப் பாஷையினரோடும் போய் வலிய கதைப்பா. எப்படியெனில் ஆரம்பம் அந்தமொழி.. தொடர்ந்து பஞ்சாபி.... இதனால் மற்றோருக்கு இடைஞ்சல் என நினைப்பதில்லை. தான் சொல்ல வந்ததை சொல்லிடுவா.

என்னோடும் அப்படித்தான் கண்டால் விடமாட்டா... கஃப் ஆ யூ என ஆரம்பிப்பா... பின் பஞ்சாபியில் வெழுத்துக் கட்டுவா, நான் சொல்லி அலுத்திட்டேன் எனக்கு பஞ்சாபி தெரியாதென:))

இப்போ அவ கட்சிக்கு நான் மாறிட்டேன்:)) வேறு வழியில்லையே... அவ கதைப்பா, நான் சிரித்துவிட்டாலே அவவுக்குப் போதும் தொடர்ந்து கதைப்பா..:))))//

ஹா ஹா படித்தவுடன் சிரிப்புதான் வந்தது... அப்ப பஞ்சாபிய கத்துக்குங்க... ஹா ஹா இல்லைன்னா காதுல ஹெட்போன் மாட்டிக்கிட்டு கேப்பது போல்.. பாட்டை கேளுங்க.. எப்படி என் கிட்னி ஐடியா ;-)

Anonymous said...

athira said...
இப்படி நிறையச் சொல்லலாம்...

உங்கள் பதிவால் பலரை நினைக்க வைத்திட்டீங்க...

தாமாகத் திருந்தினால் ஒழிய, ஆராலும் திருத்தவே முடியாது இப்படியானவர்களை.

இதுக்குத்தான் சின்ன வயதிலேயே பெற்றோர் இவற்றைக் கவனித்து திருத்திட வேண்டும். 5 இல் வளையாதது 20 க்கு மேல வளைப்பது கொஞ்சம் கஸ்டம்தான்:))))))).//

உண்மை தான் பெற்றோர் சரியாக இருந்தால் பிள்ளைகளும் சரியாக இருப்பார்கள்... இது என்ன 5 ல் வளையாதது 50 ல் தானே வளையாது என்று சொல்வார்கள்...20வதா மாறிடுச்சா ஹா ஹா.. கருத்துக்கு நன்றி....

Anonymous said...

பாலா said...
கரெக்டா சொன்னேங்க. வாயை அடக்குவது என்பது முடியாத காரியம். ஆனால் வாயை அடக்கிவிட்டால் பல பிரச்சனைகளை தவிர்த்து விடலாம்.//

உண்மை தான் நண்பா..! வாயை அடக்கினால் பிரச்சனை இல்லை.. கருத்துக்கு மிக்க நன்றி ந்ண்பா

Anonymous said...

athira said...
ஒரு நிமிஷம் அருமை....

நம்மிடமுள்ள பலத்தை, நாம் அநியாயமாக தேவையில்லாத விஷயத்தில் செலவழிக்கும்போது, நாம் பலமற்றவர்களாகிவிடுகிறோம்...

சே..சே... இப்புடிச் சொல்லியே நானே இவ்வளவு தூரம் அலட்டிவிட்டேனோ?:))) அவ்வ்வ்வ்வ்:)) அதுதான் மாயாவையும் வெளியில காணேல்லை.... :)))))//

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcTiBBXdrrZzCmq4GEtqwWAdv0J2QCFGipEo6GBq9bnWae5jto_emQ[/im]

ஹா ஹா... அடுத்தவர் ரசிக்கும்படி பேசினால் பிரச்சனை இல்லை.. வெறுக்கம்படி தான் பேசக்கூடாது..

Anonymous said...

koodal bala said...
நல்ல அறிவுரை !//

வாங்க நண்பா! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

சென்னை பித்தன் said...
நன்று.//

வாங்க ஐயா! கருத்துக்கு நன்றி.

Anonymous said...

அப்பு said...
ராஜேஷ்
தேவையான பதிவு...

///அற்ப காரணங்களுக்காக தீவிரமாக வாதத்திலிருந்து விடுவார்கள்.////

இன்றைய நிலையில் தமிழக ... நிலைமை கூட அப்படித்தான் இருக்கிறது...//

மிக சரியாக சொன்னீர்கள் சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ஜ.ரா.ரமேஷ் பாபு said...
ரொம்ப சரி நண்பரே//

வாங்க நண்பா.. கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
சரியாகச் சொன்னீர்கள்..//

வாங்க சகோ! கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

அமைதிச்சாரல் said...
அருமையான அலசலுடன் நல்லதொரு பகிர்வு..

பலத்தை உணராமல் இருப்பதும்கூட ஒரு வகை பலவீனம்தான்..//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

angelin said...
பலம் ,பலவீனம் ,விளக்கமான அலசல் .வாழ்த்துக்கள் ராஜேஷ் .//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ரெவெரி said...
பலம்..பலவீனம் பற்றி அருமையான அலசல்... நன்றி ராஜேஷ் பகிர்வுக்கு...//

வாங்க ரெவரி... கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

ராஜா MVS said...
திருத்திக்கொள்ள வேண்டிய குணம்...

அருமை... நண்பா...//

வாங்க ராஜா... கருத்துக்கு மிக்க நன்றி.

இராஜராஜேஸ்வரி said...

உளறு வாயனுக்கு
ஊமையே பரவாயில்லை
என்பார்கள்..

இராஜராஜேஸ்வரி said...

பலமே பலவீனங்களாய் மாறும் தருணங்களும்,

பல்வீனம் பலமாய் மாறும் த்ருணங்களும் உண்டே..

இராஜராஜேஸ்வரி said...

பதிவின் பகிர்வுகளுக்கு,
பின்னூட்டங்களும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

பின்னூட்டங்களில் படங்கள் வரவழைக்க்க முயற்சித்தேன்..

வெற்றி கிட்டவில்லையே!

இன்னும் பயிற்சி வேண்டுமோ!!

அன்புடன் மலிக்கா said...

அருமையான அலசல் அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு..

பொன்னியின்செல்வனைப் படிக்கும்:) ) அதிரா said...

கண்டு பிடிக்க முடியுதில்லையே... இதில எது மாயா:))).... இவராத்தான் இருக்கும்... தாடி தெரியுதே:)))))

[im]http://www.theseekerchurch.com/sunna_funny_cat.jpg[/im]

சந்திர வம்சம் said...

[im]http://oi56.tinypic.com/2cs9j43.jpg[/im]

சந்திர வம்சம் said...

[im]http://s5.tinypic.com/29gd6rs_th.jpg[/im]

சந்திர வம்சம் said...

ம்.ம்.ம் உங்க காட்டில்..........




[im]http://www.stevemcgraw.com/em_lin/animated/rain.gifs[/im]

Anonymous said...

இராஜராஜேஸ்வரி said...
உளறு வாயனுக்கு
ஊமையே பரவாயில்லை
என்பார்கள்..

பலமே பலவீனங்களாய் மாறும் தருணங்களும்,

பல்வீனம் பலமாய் மாறும் த்ருணங்களும் உண்டே..//

வாங்க சகோ! உண்மை தான்.. பலம் பலவீனமாய மாறுவது யோசிக்க மறுக்கும்போது... பலவீனம் பலமாய் மாறுவது நிரந்தரமில்லை... கருத்துக்கு மிக்க நன்றி சகோ!

Anonymous said...

இராஜராஜேஸ்வரி said...
பதிவின் பகிர்வுகளுக்கு,
பின்னூட்டங்களும் சுவாரஸ்யம் கூட்டுகின்றன.

பின்னூட்டங்களில் படங்கள் வரவழைக்க்க முயற்சித்தேன்..

வெற்றி கிட்டவில்லையே!

இன்னும் பயிற்சி வேண்டுமோ!!//

பிராக்கட் சிம்பள் மாற்றி இடாமல்... கருத்துபெட்டிக்கு மேலே குறிப்பிட்டவாறு [im]நீங்கள் பதிவிட விரும்பும் படத்தின் url [/im] மீண்டும் சைடு பார் போட்டு க்ளோஸ் செய்தால் முடிந்தது ;-)

Anonymous said...

அன்புடன் மலிக்கா said...
அருமையான அலசல் அருமையான விளக்கத்துடன் கூடிய பதிவு..//

வாங்க கருத்துக்கு மிக்க நன்றி.

Anonymous said...

athira said...
கண்டு பிடிக்க முடியுதில்லையே... இதில எது மாயா:))).... இவராத்தான் இருக்கும்... தாடி தெரியுதே:)))))//

[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcT0f1RMHEilWEFDl0tUWpbDjkW3LX4_SNBD6qKsAP9pjrvFMwqJ8A[/im]

ஹா ஹா நாங்களும் சுடுவோம்ல..

Anonymous said...

சந்திர வம்சம் said...//

[im]http://www.stevemcgraw.com/em_lin/animated/rain.gif[/im]

ஹா ஹா மிக்க நன்றி

Anonymous said...

Ashok said...
உங்கள் தளத்திற்கு நிறைய வாசகர்கள் வர வேண்டுமா ? உடனே உங்கள் பதிவுகளை http://talinks.webpics.co.in இணைத்து வாசகர்களை பெற்றிடுங்கள். இது இலவசம் .//

செய்திக்கு நன்றி.

நிரூபன் said...

வணக்கம் சகோ,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

எதிலுமே பிடிவாதமாக உள்ளோரின் குணவியல்புகளை அழகாக அலசியிருக்கிறீங்க.

நிரூபன் said...

ப்ளாக்கில் வர்ணப் படங்கள் பின்னூட்டங்களாக வந்திருப்பது சூப்பரா இருக்கு.
அதிரா அக்கா சுட.
நீங்கள் பதிலுக்கு சுட...கலக்கல் போட்டோஸ் .

Anonymous said...

வணக்கம் சகோ,

நல்லதோர் பதிவினைத் தந்திருக்கிறீங்க.

எதிலுமே பிடிவாதமாக உள்ளோரின் குணவியல்புகளை அழகாக அலசியிருக்கிறீங்க.

ப்ளாக்கில் வர்ணப் படங்கள் பின்னூட்டங்களாக வந்திருப்பது சூப்பரா இருக்கு.
அதிரா அக்கா சுட.
நீங்கள் பதிலுக்கு சுட...கலக்கல் போட்டோஸ் .//

வாங்க நண்பா... கருத்தில் வண்ணபடங்களே மைண்ட ரிலாக்ஸ் பண்ண ஒரு ஜாலிக்கு தான்... :-))
கருத்துக்கு மிக்க நன்றி நண்பா


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out