ஒரு நாள் சென்னை தூங்கிப்போன பின்னிரவில் பாரதிராஜா என்னிடம் ஒப்புச்சொல்லி புலம்பினார்.
" கமலஹாசன் என்னை புண்படுத்திவிட்டார்.
இனி ஒட்டுமில்லை உறவுமில்லை" என்றார்.
"பெரிய கலைஞர்கள் பிரியக்கூடாது; சேர்த்து வைக்கட்டுமா என்றேன். "
இனிமேல் செத்த இழவில் கூட இருவரும் சேரமுடியாது" என்று உடைந்த குரலில் சொன்னார்.
கண்ணில் எட்டிப்பார்த்துவிட்டு மீண்டும் கதவடைத்துக் கொண்டது கண்ணீர்.
"உங்களுக்கு உறவில்லாத இடத்தில் எனக்கும் உறவில்லை" என்று தேற்றினேன்.
எம்.ஜி.ஆரோடு எனக்கு ஏதோரு பிணக்கும் இல்லையென்றபோதிலும் கலைஞர் மீது கொண்ட காதலால் (பொது இடத்தில் தவிர) அவரைக் கடைசிவரை சந்திக்காமற்போனது மாதிரி,
பாரதிராஜா மீது கொண்ட பாசத்தால் கமலோடு கொண்ட தொடர்புகளையும் துண்டித்துக்கொண்டேன்.
ஒரு செயற்கை இடைவெளி சிருஷ்டித்துக்கொண்டேன்.
அதனால் அவருக்கல்ல எனக்குத்தான் இழப்பு என்ற போதிலும் எட்டியே இருந்தேன்.
சில ஆண்டுகள் கழிந்தன.
ஒரு நட்சத்திர விடுதியில் மின்னுயர்த்தி (லிஃப்ட்) வரட்டும் என்று தரைத்தளத்தில் காத்திருக்கிறேன்.
கதவு திறக்கிறது.
திறந்தால் -
ஒருவர் தோளை ஒருவர் கட்டிக்கொண்டு அதிரும் சிரிப்போடு வெள்ளைக்கார காதலர்கள் போல விளையாடிக் கொண்டே இறங்குகிறார்கள் பாரதிராஜாவும் கமல் ஹாசனும்
என்னப்பார்த்து , என்ன கவிஞரே சௌக்கியமா?' என்கிறார்கள்...
கீழே வந்த மின்னுயர்த்தி மேலே செல்வதும் அறியாமல் நின்ற நெடுஞ்சுவராய் நின்றேன் நான்.
இதிலிருந்து என்னென்ன பாடங்கள் பெறலாம் என்பதை உங்கள் மூளையின் முடிவுக்கே விட்டுவிடுகிறேன்.
(குமுதம் இதழில் திரையுலகில் நிரந்தர நண்பனுமில்லை, நிரந்தர பகைவனுமில்லை என்பது உணமையா? என்ற கேள்விக்கு கவிபேரரசு வைரமுத்து அவர்கள் சொன்னது.)
52 comments:
1st cut...
இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு சேர்த்துக்குவாங்க...அதெல்லாம் சகஜம்தானே..
நம்ம வைரம் இவ்வளவு வெள்ளந்தியானு டௌட் தான்... ராஜேஷ்...
இங்கயுமா... இருக்கட்டும் நண்பர்கள் இணைந்தால் நல்லதுதானே.
இதுல இருந்து நிறையக் கத்துக்கலாம் போலிருக்கே!
இதுல இருந்து நிறையக் கத்துக்கலாம் போலிருக்கே!
என்ன மாப்பிள பின்னாடி நீங்க படம் செய்யும் போதும் இப்பிடிதான் ஹாலிவூட் படங்கள எடுத்து போடுவீங்களா...?? ஹி ஹி இப்பிடி சொன்னதுக்காக என்ர பிளாக் பக்கம் வராம விட்டுறாதீங்கோ... இப்பிடி சொல்லீட்ட்ன்னு இப்ப அங்க ஓடாதீங்கோ நான் வயசானவன் மெல்ல மெல்லத்தான்யா போடுவன் பதிவ..
அரசியலில் மட்டும் இல்லை
அன்றாட வாழ்வில் கூட நிரந்தர
எதிரியும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை
பொருத்தமான படங்களுடன்
பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள் த.ம 5
துட்டுன்னு வந்துட்டா எதுவும் இல்ல ஹிஹி !
நிரந்தர நண்பனுமில்லை,எதிரியுமில்லை.இது அரசியலுக்கும் சினிமாவுக்கும் பொருந்தும்.பாரதிராஜாவும்,இளையராஜாவும் கூட இணைந்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என கேள்விப்பட்டேன்.உண்மையா?
நம்பர்களுக்குள் இதுலாம் சகஜம்
தமிழ்மணம் 8
திரையுலகில இதெல்லாம் சகஜமப்பா
ரெவெரி said...
இன்னைக்கு அடிச்சுக்குவாங்க நாளைக்கு சேர்த்துக்குவாங்க...அதெல்லாம் சகஜம்தானே..
நம்ம வைரம் இவ்வளவு வெள்ளந்தியானு டௌட் தான்... ராஜேஷ்...//
வாங்க நண்பா...உண்மை தான் நன்றி
Prabu Krishna (பலே பிரபு) said...
இங்கயுமா... இருக்கட்டும் நண்பர்கள் இணைந்தால் நல்லதுதானே.//
வாங்க நண்பா..கண்டிப்பாக நல்லது தான் நன்றி
செங்கோவி said...
இதுல இருந்து நிறையக் கத்துக்கலாம் போலிருக்கே!//
உண்மைதான் நண்பா நம் உணர்வை பிறருக்காக விட்டுக்கொடுக்க கூடாது.. நன்றி
காட்டான் said...
என்ன மாப்பிள பின்னாடி நீங்க படம் செய்யும் போதும் இப்பிடிதான் ஹாலிவூட் படங்கள எடுத்து போடுவீங்களா...?? ஹி ஹி இப்பிடி சொன்னதுக்காக என்ர பிளாக் பக்கம் வராம விட்டுறாதீங்கோ... இப்பிடி சொல்லீட்ட்ன்னு இப்ப அங்க ஓடாதீங்கோ நான் வயசானவன் மெல்ல மெல்லத்தான்யா போடுவன் பதிவ..//
வாங்க மாம்ஸ் காட்டான்... ஹி ஹி ஹாலிவுட் படங்கள் நமக்கெதுக்கு மாம்ஸ்... ஊறுக்காய் இருக்க வேறுக்கா எதற்கு... உங்க பிளாக்குக்கு வராம இருப்பனா மாம்ஸ்.. உங்களுடைய ஒவ்வொரு பதிவும் அதிக விரும்பதக்கது மாம்ஸ் நம்ம ரஜினி படம் மாதிரி எப்பவாவது வந்தா தான் அதற்கு மதிப்பு...நீங்கள் பதிவிடும்போது நான் அங்கு இருப்பேன் நன்றி
Ramani said...
அரசியலில் மட்டும் இல்லை
அன்றாட வாழ்வில் கூட நிரந்தர
எதிரியும் இல்லை நிரந்தர பகைவனும் இல்லை
பொருத்தமான படங்களுடன்
பயனுள்ள பதிவைத் தந்தமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள் த.ம 5//
வாங்க சகோதரரே... கரெக்டா சொன்னீங்க...வாழ்த்துக்களுக்கு நன்றி
விக்கியுலகம் said...
துட்டுன்னு வந்துட்டா எதுவும் இல்ல ஹிஹி !//
வாங்க மாம்ஸ்..கரெக்டா சொன்னீங்க நன்றி
கோகுல் said...
நிரந்தர நண்பனுமில்லை,எதிரியுமில்லை.இது அரசியலுக்கும் சினிமாவுக்கும் பொருந்தும்.பாரதிராஜாவும்,இளையராஜாவும் கூட இணைந்து ஒரு படம் பண்ணுகிறார்கள் என கேள்விப்பட்டேன்.உண்மையா?//
நம்ம இசைஞானிக்கும், கவிபேரரசுக்கும், பாரதிராஜா மூவருக்கும் மனக்கசப்பு ஏற்பட்டு பேசாமல் கொஞ்ச நாள் பேசாமல் இருந்தார்கள்... பிறகு பாரதிராஜாவும் இளையராஜாவும் பேசுகிறார்கள்..ஆனால் இதுவரை கவிபேரரசுவும் இசைஞானியும் பேசுவதில்லை... தெக்குத்தி போண்ணுல இசைஞானியையே சீரியல்க்கு கொண்டு வந்தவர் பாரதிராஜா... இருவரும் சேர்ந்து படம் பண்ணுவது ஒன்றும் ஆச்சர்யபட் ஓண்ணுமில்லையே... நன்றி நண்பா
"என் ராஜபாட்டை"- ராஜா said...
நம்பர்களுக்குள் இதுலாம் சகஜம்
தமிழ்மணம் 8//
வாங்க நண்பா.. கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி
ஜீ... said...
திரையுலகில இதெல்லாம் சகஜமப்பா//
வாங்க ஜீ... உண்மை தான் சகஜம் தான்...நன்றி
வணக்கம் பாஸ்,
வைரமுத்து இளையாராஜாவுடன் இணைந்திருந்து பிரிந்தார்.
இப்போ கமலஹாசன் கூடவா?
என்னமோ ஒன்னுமே புரியமாட்டேங்குது பாஸ்,.
எல்லாம் ஈகோ தான் நண்பரே....
நான் பெரியவன் என்பதில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோசம்...
நடக்கட்டும் நடக்கட்டும்..
தமிழ்மணம் 11
றவர்கள், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதும், அப்புறம் மாறிக் கொள்வதும் சகஜம்தான்.
நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
வைரமுத்து இளையாராஜாவுடன் இணைந்திருந்து பிரிந்தார்.
இப்போ கமலஹாசன் கூடவா?
என்னமோ ஒன்னுமே புரியமாட்டேங்குது பாஸ்,.//
வாங்க பாஸ்... அதானே பிரபலங்களின் உலகம்
மகேந்திரன் said...
எல்லாம் ஈகோ தான் நண்பரே....
நான் பெரியவன் என்பதில் எல்லோருக்கும் அவ்வளவு சந்தோசம்...
நடக்கட்டும் நடக்கட்டும்..
தமிழ்மணம் 11//
வாங்க நண்பரே... சரியாக சொன்னீங்க நண்பா நன்றி
சாகம்பரி said...
றவர்கள், அடிக்கடி உணர்ச்சிவசப்பட்டு பேசுவதும், அப்புறம் மாறிக் கொள்வதும் சகஜம்தான்.//
உண்மை தான் சகோ...சகஜம் தான் நன்றி
சின்னதூரல் said...
நிரந்தர நண்பனுமில்லை..
நிரந்தர பகைவருமில்லை...
புரிந்து கொள்ளகூடிய வாசகம்//
வாங்க சின்னதூரல்..நன்றி
கவிஞருக்குத் தெரியாதா இந்த சினிமா உலகைப் பற்றி!
அது கவுரவ நட்பு ,இப்பிடித்தான் தேவைப்படும் பொழுது வெளிப்படும் ,அல்லாத பொழுது காணாமல் போகும்
தமிழ் மணம் 13
சென்னை பித்தன் said...
கவிஞருக்குத் தெரியாதா இந்த சினிமா உலகைப் பற்றி!//
அன்பில் ஏமாறுவது தானே ஐயா
M.R said...
அது கவுரவ நட்பு ,இப்பிடித்தான் தேவைப்படும் பொழுது வெளிப்படும் ,அல்லாத பொழுது காணாமல் போகும்
தமிழ் மணம் 13//
வாங்க சகோ...சரியான கருத்து வக்களிப்புக்கு நன்றி
நண் பர்கள் பிணக்கு எல்லாம் எத்தனை நாள் நீடிக்கும்? எல்லாம் நல்லதுக்கே.
அப்பா பாருங்களன்
நட்புக்கும், பகைமைக்கும் நூல் அளவே வித்யாசம்...
நண்பனும் பகைவனாகளாம்...
பகைவன் நண்பனாகளாம்...
யார் எப்போது அந்த நூலைத் தாண்டுகிறார்கள் என்பது தான் சூட்சுமம்.
பகிர்வுக்கு நன்றி நண்பா..
Lakshmi said...
நண் பர்கள் பிணக்கு எல்லாம் எத்தனை நாள் நீடிக்கும்? எல்லாம் நல்லதுக்கே.//
வாங்கம்மா கருத்துக்கு நன்றி
கவி அழகன் said...
அப்பா பாருங்களன்//
வாங்க அழகன்... ஹா ஹா
ராஜா MVS said...
நட்புக்கும், பகைமைக்கும் நூல் அளவே வித்யாசம்...
நண்பனும் பகைவனாகளாம்...
பகைவன் நண்பனாகளாம்...
யார் எப்போது அந்த நூலைத் தாண்டுகிறார்கள் என்பது தான் சூட்சுமம்.
பகிர்வுக்கு நன்றி நண்பா..//
மத்தவங்க சண்டையில தலையிடாம இருந்துட்டாக்க நமக்கு நல்லதுன்னு புரியறது..
நெத்தியடி விஷயம்பா ராஜேஸ்...
ஒருவருக்காக தானும் அவர் பகைக்காக பேசாமல் இருக்கும்போது திடிர்னு பார்த்தால் இருவரும் ஒன்னா கைக்கோர்த்துக்கிட்டு எதிர்ல வருவதை பார்த்தால் ஹூம் மனிதனின் மனம் எப்படி எல்லாம் தடம் புரள்கிறது என்பது நன்றாக தெரிய வருகிறதுப்பா....
அன்பு வாழ்த்துகள் ராஜேஸ் மனிதனின் மனதை புரியவைத்தமைக்கு....
முதல் வரியிலேயே வைரமுத்துதான் சொல்லியிருக்கணும்னு கண்டுபுடிச்சிட்டேன் நண்பா!அவர் அவர்தான்.
தமிழ்மணம் 15
RAMVI said...
மத்தவங்க சண்டையில தலையிடாம இருந்துட்டாக்க நமக்கு நல்லதுன்னு புரியறது..//
வாங்க..சரியா சொன்னீங்க... நம்ம லட்சியத்துல மட்டும் நம் கவனம் இருந்தால் போதுங்க...நமக்கு நல்லது தான் நன்றி
மஞ்சுபாஷிணி said...
நெத்தியடி விஷயம்பா ராஜேஸ்...
ஒருவருக்காக தானும் அவர் பகைக்காக பேசாமல் இருக்கும்போது திடிர்னு பார்த்தால் இருவரும் ஒன்னா கைக்கோர்த்துக்கிட்டு எதிர்ல வருவதை பார்த்தால் ஹூம் மனிதனின் மனம் எப்படி எல்லாம் தடம் புரள்கிறது என்பது நன்றாக தெரிய வருகிறதுப்பா....
அன்பு வாழ்த்துகள் ராஜேஸ் மனிதனின் மனதை புரியவைத்தமைக்கு....//
வாங்க...சரியா புரிஞ்சுக்கிட்டீங்க... தங்களது புரிதலுக்கு அன்பு நன்றிகள்
shanmugavel said...
முதல் வரியிலேயே வைரமுத்துதான் சொல்லியிருக்கணும்னு கண்டுபுடிச்சிட்டேன் நண்பா!அவர் அவர்தான்.
தமிழ்மணம் 15//
வாங்க நண்பா...நீங்களும் என்னை மாதிரியே புத்திசாலி தாங்க அவ்வ்வ்வ்.. கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி
வந்தாச்சு ஓட்டும் போட்டாச்சு
Riyas said...
வந்தாச்சு ஓட்டும் போட்டாச்சு//
வாங்க நண்பரே...வருகைக்கும் வாக்களிப்புக்கும் நன்றி
sorry to late present
tamilmanam 17
Raazi said...
sorry to late present
tamilmanam 17//
வாங்க வருகைக்கும் வாக்குக்கும் நன்றி
அன்பின் ராஜேஷ் - அரசியலில் / திரையுலகில் / ஏன் பொதுவாகவே நட்பில் -நிரந்தர எதிரியோ நிரந்தர நண்பரோ இல்லை. நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா
cheena (சீனா) said...
அன்பின் ராஜேஷ் - அரசியலில் / திரையுலகில் / ஏன் பொதுவாகவே நட்பில் -நிரந்தர எதிரியோ நிரந்தர நண்பரோ இல்லை. நல்வாழ்த்துகள் ராஜேஷ் - நட்புடன் சீனா//
வாங்க சார்...உண்மை தான் சரியாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கு நன்றிகள்
இதே மாதிரிதான் வைரமுத்து பாரதிராஜாவின் அன்னக்கொடி விழாவில் நிறைய அவமானப்படுத்தச் சொன்னார். நல்ல presense of mind.
Post a Comment