Friday, 12 August, 2011

உலக மகா நடிப்புடா சாமி - 2 முகம்


வாங்க நடிச்சு பழகலாம்
face expression
பாத்திரத்தைப் பொறுத்து முகத்தை அழகாகவோ, கவர்ச்சியாகவோ, கோரமாகவோ, விகாரமாகவோ மாற்றிக்கொண்டு,
வசனங்களைப் பேசும்போது அதற்கு ஏற்ப, பொருள் உணர்ந்து முகக்குறியிலே காட்ட வேண்டும் முகக்குறிப்பிலே வெளிப்படுத்தி விடவேண்டும். 

விநாடிக்குள் உணர்ச்சி பாவம் காண்பிக்க வேண்டிவரும் அல்லது நீண்ட நேரம் காண்பிக்க வேண்டிவரும் . முகபாவங்களை, பாவனைகளை, வேகமாகவோ மெதுவாகவோ மாற்றியும் அல்லது நொடிக்கு நொடி மாறி மாறியும் காண்பிக்க வேண்டிவரும். 

முகத்தில் உள்ள ஒவ்வொரு உறுப்பையும் தசையையும் அசைக்கும்போது ஒவ்வொன்றும் பேசுவதாக இருக்க வேண்டும்.
.

 எழுச்சிமிக்க துடிப்பைக் காட்டிவிட வேண்டும். 

வசனங்களில் உள்ள உணர்வுகளை, உணர்ச்சிகளை சரியான விகிதத்தில் வெளிப்படுத்திவிட வேண்டும். 

மின்சார சக்தி இருந்தால் தான் விளக்கு எரியும் மின்சார சக்தி இல்லை என்றால், விளக்கு எரியாது, அது போல உணர்வு, உணர்ச்சி இருந்தால் தான் முகபாவம் 
பிரகாசிக்கும்; இல்லை என்றால் பிரகாசிக்காது.

 முகத்தில் உள்ள கண்கள், நெற்றி, இமைகள், புருவங்கள், கன்னங்கள், மூக்கு , வாய், உதடுகள், பற்கள், நாக்கு, முகவாய் மூலம் மனக்கொந்தளிப்பையும், மனக்குமறல்களையும் அமைதியையும் சாந்தத்தையும் நொடியில் முகப்பாவத்தில் வெளிபடுத்திவிட வேண்டும். சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கும் , மகிழ்ச்சியில் இருந்து வீரத்திற்கும், வீரத்தில் இருந்து கோபத்திற்கும் ,கோபத்தில் இருந்து சிரிப்பிற்கும் என எந்த உணர்ச்சியில் இருந்தும், எந்த உணர்ச்சிக்கு வேண்டுமானாலும் மாறி விட வேண்டும். தாவி விட வேண்டும்.

மின்னல் மறைவது போல் மின்னல் வேகத்தில் மாற வேண்டும். 

காட்சிக்கு ஏற்ப மெதுவாகவோ வேகமாகவோ மாற்றிக்கொள்ள வேண்டும். 

ஆயிரமாயிரம் உணர்ச்சி பாவங்களை முகத்தில் வெளிப்படுத்த முயற்சிக்க வேண்டும். பயிற்சிகளும் எடுத்துக் கொள்ள வேண்டும்.
நன்றி - திரு.கு.சுதர்சனா அவர்கள் (நடிப்பு கலை புத்தகத்திலிருந்து..)
டிஸ்கி: பாத்தீங்களா.... ஓட்டு பொட்டியில நாலு ஊம குத்தா குத்திட்டு போங்க

52 comments:

Chitra said...

பதிவை விட, வோட்டு பெட்டிகள் நீள வரிசையாக போகுதே .... ஹி,ஹி,ஹி,ஹி...

மாய உலகம் said...

Chitra said... 1
//பதிவை விட, வோட்டு பெட்டிகள் நீள வரிசையாக போகுதே .... ஹி,ஹி,ஹி,ஹி...//

வாங்க... எதுலாயாவது ஓட்டு போட்ற மாட்டீங்களான்னு தான் ஹி ஹி புதுசா எந்த ஓட்டு பொட்டி கேள்வி பட்டாலும் என் சந்தையில உக்கார வச்சிருவேன்... ஒரு விளம்பரம்...ஹி ஹி ஹி

"என் ராஜபாட்டை"- ராஜா said...

சூப்பர் சூப்பர் சூப்பர்

ஆகுலன் said...

நல்லா இருக்குது பாஸ்.........

ஒருநாள் விடியும்............

Rathi said...

அந்தப் போட்டோவில இருக்கிறவிக அல்லாருக்கும் நீங்க தான் நடிக்க கத்துகுடுத்திகளா சாமி.... :)) என்னமா நடிக்கிறாவோ!!!

vidivelli said...

என்ன கொஞ்சநாளா ஆ,உ,இ யில நிக்கிறீங்க...
.ஹி ஹி
நல்லா கலக்கிறீங்க ...
சுப்பர் பதிவு...
உண்மைதான் பேச தொடங்கினால் ஒவ்வொரு அங்கமும் தனது பாவனைகளை காட்ட தொடங்கும்...
அவை இயல்பாகவே எல்லோருக்கும் அறியாமல் வந்துவிடுமே..
வாழ்த்துக்கள்..

M.R said...

உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்கள் அருமை .
பகிர்வுக்கு நன்றி

M.R said...

தமிழ் மணம் இரண்டு

அரசன் said...

நல்ல இயக்குனரா வரும் வாய்ப்பு உள்ளது நண்பரே

♔ம.தி.சுதா♔ said...

அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம் என்பார்களே இது தானோ..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று

மகேந்திரன் said...

நடிப்பின் பரிமாணங்கள் அருமை.

ரியாஸ் அஹமது said...

நாலு ஊமை குத்து ....

ரியாஸ் அஹமது said...

நல்லாஇருக்கு பாஸ்

பலே பிரபு said...

நடிப்புக் கலைக்கு நீங்க போட்ட படத்த விட, மேல இருக்க ஸ்லைடுல வர உங்க போட்டோ சூப்பர்.

athira said...

நீங்க ஹீரோ ஆகிட்டீங்க:), இப்போ எங்களை ஆக்கப் பார்க்கிறீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).

ஜீ... said...

சூப்பர் பாஸ்! :-)

koodal bala said...

நல்ல பீலிங் !

ஜெய்லானி said...

ஃபீலிங்ன்னா இன்னா பாஸ் ...!! ? :-))

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 3
//சூப்பர் சூப்பர் சூப்பர்//

வாங்க நண்பா....போட்டோவ மாத்திட்டீங்களா...அதான் அடையாளம் தெரியல...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

ஆகுலன் said... 4
//நல்லா இருக்குது பாஸ்.........

ஒருநாள் விடியும்............//


வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி...கண்டிப்பா ஒரு நாள் விடியும் நண்பா..ஓ உங்க பதிவா தோ உடனே வரேன்

மாய உலகம் said...

Rathi said... 5
//அந்தப் போட்டோவில இருக்கிறவிக அல்லாருக்கும் நீங்க தான் நடிக்க கத்துகுடுத்திகளா சாமி.... :)) என்னமா நடிக்கிறாவோ!!!//

வாங்க வாங்க... நாங்க சொல்லிக்குடுத்தா ஸ்ட்ரைட்டா ஆஸ்கர் வாங்கியிருப்பாங்களே.... ஜஸ்ட் மிஸ்...பிண்ணி பெடலடுக்குறாங்கய்யா.....கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

vidivelli said... 6
//என்ன கொஞ்சநாளா ஆ,உ,இ யில நிக்கிறீங்க...
.ஹி ஹி
நல்லா கலக்கிறீங்க ...
சுப்பர் பதிவு...
உண்மைதான் பேச தொடங்கினால் ஒவ்வொரு அங்கமும் தனது பாவனைகளை காட்ட தொடங்கும்...
அவை இயல்பாகவே எல்லோருக்கும் அறியாமல் வந்துவிடுமே..
வாழ்த்துக்கள்..//

வாங்க சகோ! உண்மை தான் சகோ..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

M.R said... 7
//உணர்ச்சிகளை வெளிப்படுத்தும் முக பாவங்கள் அருமை .
பகிர்வுக்கு நன்றி
தமிழ் மணம் இரண்டு//

வாங்க சகோ... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

அரசன் said... 9
//நல்ல இயக்குனரா வரும் வாய்ப்பு உள்ளது நண்பரே//

வாங்க நண்பா...வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றி

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said... 10
//அகத்தின் அழகை முகத்தில் பார்க்கலாம் என்பார்களே இது தானோ..


அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
என்னை கடுப்பேற்றும் பதிவர்களின் செயற்பாடுகள் மூன்று//

வாங்க சகோ...ஹா ஹா..

சென்னை பித்தன் said...

தமிழ்மணம் ஏழு!

மாய உலகம் said...

மகேந்திரன் said... 11
//நடிப்பின் பரிமாணங்கள் அருமை.//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said... 12
நாலு ஊமை குத்து ....

நல்லாஇருக்கு பாஸ்//

ஹா ஹா வாங்க நண்பா...வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

முக்காத செய்தி & கழுத வந்திடப் போகுது சூப்பர் மாய உலகம் வித்தியாசமான உலகம்..

மாய உலகம் said...

பலே பிரபு said... 14
//நடிப்புக் கலைக்கு நீங்க போட்ட படத்த விட, மேல இருக்க ஸ்லைடுல வர உங்க போட்டோ சூப்பர்.//

வாங்க நண்பா...ஹா ஹா வாழ்த்துக்கு நன்றி நண்பா

Anonymous said...

//நீங்க ஹீரோ ஆகிட்டீங்க:), இப்போ எங்களை ஆக்கப் பார்க்கிறீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).// பூஸ் ஹீரோ ?? அப்புடியே கற்பனை பண்ணி பாருங்க ?? நோ மோர் கமெண்ட்ஸ் ...:))

மாய உலகம் said...

athira said... 15
//நீங்க ஹீரோ ஆகிட்டீங்க:), இப்போ எங்களை ஆக்கப் பார்க்கிறீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).//


வாங்க..ஹா ஹா..யாரங்கே மேக்கப்மேன் வாயா இங்க புஸ்ஸூக்கு மேக்கப் போட்டு அழைச்சுட்டு வரச்சொன்னா அப்படியே வந்து நிக்கறாங்க பாரு... பயமாருக்குல்ல...மேக்கப்போட்டு அழைச்சுட்டு வாயா...அவ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஜீ... said... 16
//சூப்பர் பாஸ்! :-)//

வாங்க பாஸூ... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

koodal bala said... 17
//நல்ல பீலிங் !//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ஜெய்லானி said... 18
//ஃபீலிங்ன்னா இன்னா பாஸ் ...!! ? :-))//

ஃபீலிங்ன்னா என் சமையல்ல அமை ஸ்பிரே அடிச்ச ப்ப்பிர்ர்ரியாஆஆஆணிய சாப்பிடும் போது அத பரிமாறுன புஸ்ஸ ஒரு பார்வை கண்ணீரோட பாப்பீங்க பாருங்க அதான் பாஸ் ஃபீலிங்... அவ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 26

ஆஹா நன்றி ஐயா...

மாய உலகம் said...

En Samaiyal said... 29
//முக்காத செய்தி & கழுத வந்திடப் போகுது சூப்பர் மாய உலகம் வித்தியாசமான உலகம்..//

வாங்க வாங்க ஹா ஹா அது வருகைகும் வாழ்த்துக்கும் நன்றி

கோகுல் said...

என்னையும் மைண்டுல வச்சுக்கிரிங்களா

மாய உலகம் said...

En Samaiyal said... 31
//நீங்க ஹீரோ ஆகிட்டீங்க:), இப்போ எங்களை ஆக்கப் பார்க்கிறீங்களா அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:))).// பூஸ் ஹீரோ ?? அப்புடியே கற்பனை பண்ணி பாருங்க ?? நோ மோர் கமெண்ட்ஸ் ...:))//

புஸ் ஹீரோ ....ஆஹா ஆஹா... கரகாட்டக்காரன் படத்துல வர்ற கோவைசரளாவும் காந்திமதியும் பாத்தமாதிரியே இருக்குய்யா.. யாய்யாய்.. எத வச்சி இந்த மூஞ்சி கோவைசரளா காந்திமதிமாதிரி இருக்குன்னு சொல்ற... இல்லைங்க என் சமையல் கி.... வந்தாங்க பத்துருபா காசு கொடுத்து அவங்க தான் சொல்ல சொன்னாங்க... ஏங்க இந்த விளம்பரம்....அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் எஸ்கேஏஏப்

மாய உலகம் said...

கோகுல் said... 38
//என்னையும் மைண்டுல வச்சுக்கிரிங்களா//

வாங்க கோகுல்... உங்க மைண்ட்ல மட்டுமல்ல கிட்னியிலயும் வச்சிருக்கேன்... மறக்க முடியுமா உங்கள... டெக்னாலஜி வளந்ததிலேருந்தே..உங்க ஞாபகம் தான ஹா ஹா

shanmugavel said...

நல்லாருக்கு நண்பா! தொடருங்கள்.

மாய உலகம் said...

shanmugavel said... 41
//நல்லாருக்கு நண்பா! தொடருங்கள்.//

வாங்க நண்பா வாழ்த்துக்கு நன்றி

கவி அழகன் said...

சூப்பர் சூப்பர்

Lakshmi said...

ஓட்டுப்பெட்டிலல்லாம் தாராளமா குத்திட்டேன்.
இப்ப உங்கமுகத்துல என்ன எக்ஸ்ப்ரெஷனிருக்கு?

Real Santhanam Fanz said...

நீங்க போட்டு இருக்குற படத்த எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு பாஸ்... ராத்திரி தூக்கம் வரும்னு தெரியல...
நம்ம பிளாக்ல என்ன விசேஷம்னா:
எந்திரனில் வீராசாமியில் இருந்து சுடப்பட்ட சீன்

மாய உலகம் said...

கவி அழகன் said... 43
//சூப்பர் சூப்பர்//

வாங்க அழகன்...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said... 44
//ஓட்டுப்பெட்டிலல்லாம் தாராளமா குத்திட்டேன்.
இப்ப உங்கமுகத்துல என்ன எக்ஸ்ப்ரெஷனிருக்கு?//

வாங்க மேடம் தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது. ஆஹா..என் முகத்துல சந்தோச கலை தாண்டவமாடர எக்ஸ்பிரஸன் மேடம்..நன்றிகள்

மாய உலகம் said...

Real Santhanam Fanz said... 45
//நீங்க போட்டு இருக்குற படத்த எல்லாம் பார்க்கும்போது பயமா இருக்கு பாஸ்... ராத்திரி தூக்கம் வரும்னு தெரியல... //

ஹா ஹா வாங்க santhanam Fanz...தொடர்ந்து வாங்க தூங்க மாட்டீங்க

இராஜராஜேஸ்வரி said...

படங்களும் பகிர்வும் அருமை .பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 49
//படங்களும் பகிர்வும் அருமை .பாராட்டுக்கள்.//

தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

அம்பாளடியாள் said...

சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கும் , மகிழ்ச்சியில் இருந்து வீரத்திற்கும், வீரத்தில் இருந்து கோபத்திற்கும் ,கோபத்தில் இருந்து சிரிப்பிற்கும் என எந்த உணர்ச்சியில் இருந்தும், எந்த உணர்ச்சிக்கு வேண்டுமானாலும் மாறி விட வேண்டும். தாவி விட வேண்டும்
ஓரளவுக்கு குத்துமதிப்பாக் காட்டினா ஏத்துக்க மாட்டாங்களோ!......இது றொம்ப கஸ்ரம்....பகிர்வுக்கு நன்றி சகோ.ஓட்டுப் போட்டாச்சு.

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 51
//சோகத்தில் இருந்து மகிழ்ச்சிக்கும் , மகிழ்ச்சியில் இருந்து வீரத்திற்கும், வீரத்தில் இருந்து கோபத்திற்கும் ,கோபத்தில் இருந்து சிரிப்பிற்கும் என எந்த உணர்ச்சியில் இருந்தும், எந்த உணர்ச்சிக்கு வேண்டுமானாலும் மாறி விட வேண்டும். தாவி விட வேண்டும்
ஓரளவுக்கு குத்துமதிப்பாக் காட்டினா ஏத்துக்க மாட்டாங்களோ!......இது றொம்ப கஸ்ரம்....பகிர்வுக்கு நன்றி சகோ.ஓட்டுப் போட்டாச்சு.//

வாங்க சகோ தங்களது கருத்துக்கள் மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out