Tuesday, 23 August, 2011

ஆத்தா நான் பாசாயிட்டேன்நமக்கு தன்னம்பிக்கை எவ்வளவு இருக்கிறது என்பதை அறிய இதோ ஒரு சிறிய தேர்வு... (யாரும் பிட்டு அடிக்க கூடாது).
Success Pictures, Images and Photos
1. இது தான் சரியான தீர்மானம் என்று நீ நேர்மையுடன் நம்பியதை எடுத்துள்ளாய். பிறர் அதை ஏற்கவில்லை
(அ) மனதை மாற்றி, பிறர் கருத்தை ஏற்றுக்கொள்வேன்.
(ஆ) பிறர் சலிப்படைந்து, அமைதியாகும் வரை விவாதிப்பேன்.
(இ) என் தீர்மானத்தில் உறுதியாய் இருப்பேன்.
====================================
2. இக்கட்டான சூழ்நிலை ஒன்றில் உன்னால் இயன்றதைச் செய்கின்றாய்.அதற்கு பிறரிடமிருந்து ஒத்துழைப்பு இல்லை. மாறாக உன் முதுகுக்குப் பின்னால் பிறர் அதைக் குறை கூறுகின்றனர்.
(அ) குறை கூருபவர்களிடம் உன்னைவிட நன்றாகச் செய்கிறேன் என  சவால் விடுவேன்.
(ஆ) செய்வதைச் சரி என்று காட்ட அதிக சிரத்தை எடுத்து சோர்வடைவேன்.
(இ) செய்வதை அமைதியாகத் தொடர்ந்து செய்வேன்.
=====================================
3. பொறுப்பான வேலை ஒன்றை உன்னிடம் கொடுத்துள்ளனர்.

(அ) பயமின்றி, பிறர் தரும் வேதனையைத் தாங்கிக் கொள்வேன்.
(ஆ) வேதனை என்னைச் சோர்வடையச் செய்யும்.
(இ) தேடி வரும் சவாலை ஏற்றுக் கொள்கிறேன்.
==================================
4. ஒன்று நடந்தே தீர வேண்டும். அதைச்செய்ய யாரும் முன் வர விருப்பமில்லாதிருக்கின்றனர்.
(அ) நான் ஒரு தவறு செய்தால் என்னைக் குறை கூறுவார்கள்.
(ஆ) இன்னொருவர் முன் வந்தால் அவரோடு ஒத்துழைக்கத் தயார்.
(இ) நானே முன் வந்து சவாலாக ஏற்பேன்.
========================================
5. ஒருவர் உன்னிடம் அறிவுரை கேட்கின்றார்.
(அ) போ போ எனக்கே போதுமான கவலைகள் இருக்கின்றன, நீ வேற..என்று சலித்துக்கொள்வீர்கள்.
 (ஆ) வேண்டாம்பா! நான் தவறானதைச் சொல்லக்கூடும்.
(இ) என் கருத்தை உனக்குச் சொல்கிறேன். ஆனால் முடிவு உன்னுடையதாக இருக்க வேண்டும்.
============================================
6. நீ ஒரு முக்கியமான பேட்டிக்குச் (நேர்முகப் பரிட்சைக்கு) செல்ல வேண்டும்.
(அ) அவர்களைப் போல நானும் சிறந்தவன் என்பதை அவர்களுக்குப் புரிய வைப்பேன்
(ஆ) என்னை அவர்களுக்குப் பிடிக்காது என்பதைத் தெளிவாக உணர்கிறேன்.
(இ) முயற்சி எடுத்து அவர்களும் நானும் மகிழ்ச்சி அடையும் விதத்தில் செய்வேன்.
===========================================
7. ஒரு புதிய காரியத்தில் நீ ஆர்வம் காட்டுகின்றாய். அதில் உன் நபர்களுக்கு ஆர்வம இல்லை.
(அ) ஒருவரை தூண்டி என்னுடன் சேரும்வரை அப்படியே விட்டு விடுவேன்.
(ஆ) பிறருக்கு விருப்பமில்லாததால் இதைப் பற்றி மறந்துவிடுவேன்.
(இ) நானே தனியாகச் செய்து முடிப்பேன்.
=====================================
8. படுதோல்வி அடைகிறாய்.
(அ) இன்னொரு முறை முயற்சித்து நேரத்தை வீணாக்கமாட்டேன்.
(ஆ) நான் ஒன்றிருக்கும் உதவாதவன் என்று நினைப்பேன்.
(இ) இங்கே தவறினேன் என்பதைக் கண்டுணர்ந்து நிவர்த்தி செய்ய முயற்சிப்பேன்.


9. எதுவேமே திட்டத்தின் படி (நான் நினைப்பது போல) நிறைவேறுவதில்லை .
(அ) இவையாவும் என் தவறுகள் ஆகும்
(ஆ) என் பிடியைத் தளர விட்டிருக்க வேண்டும்.
(இ) இந்த தடவை நான் தோல்வியடைந்திருந்தாலும் அடுத்த முறை எனக்கு வெற்றி கிடைக்கும்.

==============================================
10. நீ அன்பு செய்யும் ஒருவரை இழந்து விட்டாய். நீ அதிகமாக பாதிப்படைகின்றாய்.
(அ) கோபம் ஆதங்கம் கசப்பு உன் வாழ்க்கை கசப்பாக இருக்கின்றது
(ஆ) சோர்வு: ஏக்கம் தோல்வி தற்கொலை நினைவு.
(இ) தவிர்க்க முடியாததை ஏற்றுக்கொண்டு எனக்கென புதுவாழ்வை அமைத்துக்கொள்வேன. அதை அவ்வாறு ஆரம்பிக்கலாம்?
 ===================================================
விடை
அ க்கு மதிப்பெண் 3
ஆ க்கு மதிப்பெண் 5
இ க்கு மதிப்பெண் 10
65-ம் அதற்கு மேலும் சிறந்த மதிப்பெண். 60-க்கு மேல் நல்ல மதிப்பெண்: 50-க்கு மேல் திருப்திகரமானது. 40-க்கு மேல் பரவாயில்லை அதற்கும் கீழ் திருப்தியானதல்ல என்று கணிக்க வேண்டும். கணித்துவிட்டீர்களா....


70 comments:

கோகுல் said...

எது எப்படியோ நான் முதல் மார்க்!

கோகுல் said...

அட போங்க பாஸ்! நாங்க வெத்து பேப்பரயே பாத்து எழுதற ஆளு!எங்ககிட்ட போய் கேள்வி கேட்டுகிட்டு!

மகேந்திரன் said...

நமக்கு 55 மார்க் வந்துடுச்சே ......

மாய உலகம் said...

கோகுல் said...

எது எப்படியோ நான் முதல் மார்க்!


அட போங்க பாஸ்! நாங்க வெத்து பேப்பரயே பாத்து எழுதற ஆளு!எங்ககிட்ட போய் கேள்வி கேட்டுகிட்டு!//

ஹா ஹா நன்றி பாஸ்

மாய உலகம் said...

மகேந்திரன் said...

நமக்கு 55 மார்க் வந்துடுச்சே ......//

அப்ப பாசாயிட்டீங்க வாழ்த்துக்கள்

Anonymous said...

நானும் fail ...ராஜேஷ்..நீங்களும் fail ...

மாய உலகம் said...

ரெவெரி said...

நானும் fail ...ராஜேஷ்..நீங்களும் fail ...//


ஆஹா கண்டு புடுசாச்சா

தமிழ்வாசி - Prakash said...

என்னமோ போங்க... உங்க கேள்விகள் எல்லாமே அவுட் ஆப் சிலபஸ்ல இருந்து வந்திருக்கு...

Rathnavel said...

நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html

மதுரன் said...

என்ன பாஸ் இது டெஸ்ட்டு...
பக்கத்தில ஒரு ஆள் கூட இல்லாம
நமக்கு எப்பவுமே பிட் அடிச்சுத்தானே பழக்கம்

vidivelli said...

எல்லாம் சரிக்கரவாசியாக பிளஸ்பொயின்ரிலையும் மைனஸ்சிலையும் நிக்கு...கூட்டி கழிச்சிட்டு வாறேன்..haha

!!!எங்களையே கணக்குப்போடும் நல்ல பதிவு...
பாராட்டுக்கள் சகோ..

விக்கியுலகம் said...

மாப்ள மார்க்குன்னாலே எனக்கு அலர்ஜி ஹிஹி!

சாகம்பரி said...

நல்ல முயற்சி. மார்க் என்னவாகிலும், எப்படியிருக்க வேண்டும் என்பதை இவை மறைமுகமாக சொல்கின்றன..

Lakshmi said...

ஹை, எனக்கும் முதல் மார்க்.
நானும் பாசாயிட்டேனே.

ரியாஸ் அஹமது said...

நண்பா கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் ...அதுதான் வர முடியலை .. மனிக்கவும்
நல்ல பதிவு நண்பா

voted

"என் ராஜபாட்டை"- ராஜா said...

நானும் பாஸ்

"என் ராஜபாட்டை"- ராஜா said...

அன்புள்ள நண்பர்களே

இன்று என் வலையில்

தங்கபாலுவின் சித்தப்பாவா காமராஜர்? நள்ளிரவில் குழப்பம்!

"என் ராஜபாட்டை"- ராஜா said...

தமிழ்மணம் போட்டசு

செங்கோவி said...

டெஸ்ட்டா..விடு ஜூட்!

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
என் தளத்தில் இன்று, யாரோ HTML கோடிங்கில் கலக்கல் கமெண்டெல்லாம் போடுவாரே,
அப்புறமா வலையுலகில் போட்டோக் காமெடி மூலம் நகைச்சுவை நாடகம் எல்லாம் அரங்கேற்றியிருக்காரே.

அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் எழுதியிருக்கேன்.

http://www.thamilnattu.com/2011/08/blog-post_24.html

நிரூபன் said...

எங்கள் மனதினை டெஸ்ட் செய்து கொள்ள ஓர் எளிமையான பதிவு.

நன்றி பாஸ்.

நிரூபன் said...

எம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற சிறப்பான பதிவு பாஸ்.

!* வேடந்தாங்கல் - கருன் *! said...

ஹ..ஹா...

shanmugavel said...

கலக்கல் நண்பா!

shanmugavel said...

தமிழ் 10 எங்க போச்சு?

Abdul Basith said...

எனக்கு உடம்பு சரியில்லை நண்பா! அதனால பரீட்சைக்கு வரமுடியல... இறுதியாண்டு தேர்வுல பாத்துக்குறேன்..

:) :) :)

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
என்னமோ போங்க... உங்க கேள்விகள் எல்லாமே அவுட் ஆப் சிலபஸ்ல இருந்து வந்திருக்கு...//

எப்படி எல்லாம் எஸ்கேப் ஆவுராரு...நண்பா அரியர் வச்சிட்டு போறீங்க ஞாபகம் வச்சிக்குங்க

மாய உலகம் said...

Rathnavel said...
நல்ல பதிவு.
வாழ்த்துக்கள்.
http://rathnavel-natarajan.blogspot.com/2011/08/blog-post_23.html//

வாழ்த்துக்கு நன்றி ஐயா

மாய உலகம் said...

மதுரன் said...
என்ன பாஸ் இது டெஸ்ட்டு...
பக்கத்தில ஒரு ஆள் கூட இல்லாம
நமக்கு எப்பவுமே பிட் அடிச்சுத்தானே பழக்கம்//

ஆஹா... நீங்களும் நம்ம லிஸ்ட்டா...

மாய உலகம் said...

vidivelli said...
எல்லாம் சரிக்கரவாசியாக பிளஸ்பொயின்ரிலையும் மைனஸ்சிலையும் நிக்கு...கூட்டி கழிச்சிட்டு வாறேன்..haha

!!!எங்களையே கணக்குப்போடும் நல்ல பதிவு...
பாராட்டுக்கள் சகோ..//

நீங்கள்லாம் பரிட்ஷை எழுதாமலே பாஸ் தான் சகோ...ஹி ஹி பாராட்டுக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
மாப்ள மார்க்குன்னாலே எனக்கு அலர்ஜி ஹிஹி!//

மாம்ஸூ எஸ்கேப் ஆவுறீங்க பாத்தீங்களா... நீங்கள்லாம் ஆல்ரெடி பாஸ் மாம்ஸ்

மாய உலகம் said...

சாகம்பரி said...
நல்ல முயற்சி. மார்க் என்னவாகிலும், எப்படியிருக்க வேண்டும் என்பதை இவை மறைமுகமாக சொல்கின்றன..//

வாங்க... தங்களது புரிதலான கருத்துக்கு நன்றிகள்

மாய உலகம் said...

Lakshmi said...
ஹை, எனக்கும் முதல் மார்க்.
நானும் பாசாயிட்டேனே.//

வாங்க அம்மா.. முதல் மார்க் எடுத்துருக்கீங்க.. மறக்காம எல்லாருக்கும் ஸ்வீட் கொடுத்திருங்க.. நன்றி

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said...
நண்பா கொஞ்சம் பிஸியாக இருக்கிறேன் ...அதுதான் வர முடியலை .. மனிக்கவும்
நல்ல பதிவு நண்பா //

வாங்க... பரவாயில்லை நண்பா பதிவு பக்கம் வந்தால் கண்டிப்பாக நீங்கள் வருவீர்கள் என தெரியும் நண்பா...நன்றி

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
நானும் பாஸ்//

பாஸ் பாஸாயிட்டாரே

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said...
தமிழ்மணம் போட்டசு//

நன்றி நண்பா

மாய உலகம் said...

செங்கோவி said...
டெஸ்ட்டா..விடு ஜூட்!//

வாங்க.. என்ன ஓடுறீங்க... பரிட்ஷைக்கு நேரமாச்சு...

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
என் தளத்தில் இன்று, யாரோ HTML கோடிங்கில் கலக்கல் கமெண்டெல்லாம் போடுவாரே,
அப்புறமா வலையுலகில் போட்டோக் காமெடி மூலம் நகைச்சுவை நாடகம் எல்லாம் அரங்கேற்றியிருக்காரே.

அவரைப் பற்றி ஒரு சிறு அறிமுகம் எழுதியிருக்கேன்.

http://www.thamilnattu.com/2011/08/blog-post_24.html//

ஆஹா தாமதத்திற்கு மன்னிக்கவும் தலைவா... சிஸ்டம் ப்ராப்ளம்.. இதோ படை எடுத்துவிட்டேன் உங்கள் தளத்திற்கு...

மாய உலகம் said...

நிரூபன் said...
எங்கள் மனதினை டெஸ்ட் செய்து கொள்ள ஓர் எளிமையான பதிவு.

நன்றி பாஸ்.//

பாஸ் நீங்க ஆல்ரெடி பாஸ்

மாய உலகம் said...

நிரூபன் said...
எம்மை நாமே சுயபரிசோதனை செய்து கொள்வதற்கேற்ற சிறப்பான பதிவு பாஸ்.//

பாஸ்க்கு மேல பாஸாகி மெரிட் லெவலுக்கு போய்விட்டீர்களே நண்பரே,,, பாராட்டுக்கு நன்றி பாஸ்

மாய உலகம் said...

* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஹ..ஹா...//

ஹா ஹாவா ஆஹா

மாய உலகம் said...

shanmugavel said...
கலக்கல் நண்பா!

shanmugavel said...
தமிழ் 10 எங்க போச்சு?//

பாராட்டுக்கு நன்றி நண்பா... தமிழ் 10ல ஏதோ ப்ராப்ளம் என நினைக்கிறேன் நன்றி

மாய உலகம் said...

Abdul Basith said...
எனக்கு உடம்பு சரியில்லை நண்பா! அதனால பரீட்சைக்கு வரமுடியல... இறுதியாண்டு தேர்வுல பாத்துக்குறேன்..

:) :) :)//


வாங்க நண்பரே...! ஹா ஹா என்னது உடம்புக்கு சரியில்லையா... கடந்த பதிவுக்கு சென்றால் ஊசி போடுவார்கள் நண்பா ஹி ஹி... இறுதியாண்டில் உறுதியாக குருதி சூடேற வெற்றி வாகை சூடுங்கள் நண்பரே... கருத்துக்கு நன்றி நண்பரே

புலவர் சா இராமாநுசம் said...

நான் முதல் வகுப்பில்
தேர்வு பெற்றேன்
புலவர் சா இராமாநுசம்

சென்னை பித்தன் said...

நானும் முதல் வகுப்புத்தான்!

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
நான் முதல் வகுப்பில்
தேர்வு பெற்றேன்
புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா... நீங்கள் கண்டிப்பாக தேர்வில் வெற்றி பெருவீர்கள் என அறிவோம் ஐயா...நன்றி ஐயா

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
நானும் முதல் வகுப்புத்தான்!//

ஒரு வேளை கேள்வித்தாள் எளிதாக அமைந்துவிட்டதா... ஹா ஹா நன்றி நண்பரே

M.R said...

நல்ல முயற்சி சுய பரிசோதனை செய்துகொள்ள .

தமிழ் மணம் 16

மாய உலகம் said...

M.R said...

நல்ல முயற்சி சுய பரிசோதனை செய்துகொள்ள .

தமிழ் மணம் 16//

நன்றி சகோ...!

koodal bala said...

போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட்

koodal bala said...

நீண்ட நாட்களுக்கு பிறகு இதோ ...மீண்டும் வந்துட்டேன் போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட் ..

Ramani said...

கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில்தான் வருகிறேன்
சரிசெய்ய்ய முயலவேண்டும்
பயனுள்ள வித்தியாசமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17

ஆமினா said...

பிட் அடிக்க கூடாதுன்னு கன்டிஷன் போட்டு பரிட்சைக்கு கூப்டா நான் அட்டன் பண்றதில்லை :-)

மாய உலகம் said...

koodal bala said...
நீண்ட நாட்களுக்கு பிறகு இதோ ...மீண்டும் வந்துட்டேன் போராட்டங்களுக்கு சின்ன ரெஸ்ட் ..//

வாங்க நண்பா...ஆம் நண்பா ரெஸ்ட் எடுத்தால் தான் வலுவாக போராடமுடியும்..

மாய உலகம் said...

Ramani said...
கொஞ்சம் பரவாயில்லை ரகத்தில்தான் வருகிறேன்
சரிசெய்ய்ய முயலவேண்டும்
பயனுள்ள வித்தியாசமான பதிவு
தொடர வாழ்த்துக்கள்
த.ம 17//

தங்களது வருகைக்கும் வாழ்த்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றி சகோ

மாய உலகம் said...

மாய உலகம் said...
ஆமினா said...
பிட் அடிக்க கூடாதுன்னு கன்டிஷன் போட்டு பரிட்சைக்கு கூப்டா நான் அட்டன் பண்றதில்லை :-)//

முன்னயே சொல்லியிருந்தீங்கன்னா பிட் அடிக்கலாம் என போட்டிருந்திருப்பேனே... ஹி ஹி ஹி

athira said...

மாயா நான் பாசாகிட்டேன்...:)).

மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பல தடவை கூட்டிப் பார்த்திட்டேன், ஆனா 110 எண்டெல்லோ வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).

athira said...

நான் எங்கேயும் கொப்பியடிக்கேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))

பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாக்குகளும்..

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தன் மதிப்பீடு..

ஜெய்லானி said...

ஆத்தா நானும் பாஸாயிட்டேன் :-)

ஜெய்லானி said...

எனக்கு 130 மார்க்கு வருது ..நடுவிலிருந்தும் கூட்டி கழித்து பார்த்துட்டேன் ஹா..ஹா... :-))

athira said...

ஜெய்லானி said... 62

எனக்கு 130 மார்க்கு வருது ..நடுவிலிருந்தும் கூட்டி கழித்து பார்த்துட்டேன் ஹா..ஹா... :-))
//

நம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... இது கொப்பி அடிச்சிருக்கிறார்... அதுதான் 100 ஐவிடக் கூட வருதூஊஊஊஊஊஊ:)). நான் கொப்பி அடிக்கேல்லை ஆனா கூட வருதூஊஊஊஊ ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே:))).

ஊசிக்குறிப்பு:
முதலையின் வயித்தில இருந்து... ம்யா...ம்யா.... எண்டு சத்தம் வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). மாயாவையும் காணேல்லை:))).

மாய உலகம் said...

athira said... 57

மாயா நான் பாசாகிட்டேன்...:)).

மேலிருந்து கீழாகவும், கீழிருந்து மேலாகவும் பல தடவை கூட்டிப் பார்த்திட்டேன், ஆனா 110 எண்டெல்லோ வருது அவ்வ்வ்வ்வ்வ்வ்:))).//
athira said...

நான் எங்கேயும் கொப்பியடிக்கேல்லை கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்:))//எந்த ஊரு நியாபம்பா இது ... ஜனங்களே பாத்துக்குங்க அத்தனையும் பொய்யி... இந்த பாவத்துக்கு நான் ஆளாகவே மாட்டேன்....

பிட்டுடிக்கிறது அடிசுட்டு ...திருவிழாவுல காணாம போன மியாவ் மாதிரி .... இதுல காப்பி வேற அடிக்கலயான்..அப்ப டீ அடிப்பிங்க்களா

மாய உலகம் said...

Delete
Blogger பாரத்... பாரதி... said...

வணக்கங்களும், வாக்குகளும்..//

வாங்க மிக்க நன்றி பாரத் பாரதி

மாய உலகம் said...

முனைவர்.இரா.குணசீலன் said...

நல்ல தன் மதிப்பீடு.//

வாங்க வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

ஜெய்லானி said...

ஆத்தா நானும் பாஸாயிட்டேன் :-)//

பாஸ் இன்னும் உங்க பேப்பர் தாள திருத்தவே இல்ல அதுக்குள்ளே உங்களுக்கு யார் ராங் ரிசல்ட் சொன்னது

மாய உலகம் said...

ஜெய்லானி said...

எனக்கு 130 மார்க்கு வருது ..நடுவிலிருந்தும் கூட்டி கழித்து பார்த்துட்டேன் ஹா..ஹா... :-))//

பாஸூ கூட்டி கழிச்சு பாத்து இருக்க மாட்டீங்க பெருக்கி பாத்திருப்பீங்க ... ஹா ஹா

மாய உலகம் said...

நம்பிடாதீங்க மக்கள்ஸ்ஸ்ஸ்ஸ்... இது கொப்பி அடிச்சிருக்கிறார்... அதுதான் 100 ஐவிடக் கூட வருதூஊஊஊஊஊஊ:)). நான் கொப்பி அடிக்கேல்லை ஆனா கூட வருதூஊஊஊஊ ஏனெண்டால் நான் ரொம்ப நல்ல பொண்ணு சிக்ஸ் வயசிலிருந்தே:))).//

என்னது காப்பி அடிச்கிட்டாரா ...யாரங்கே ...அப்ப அஞ்சு வயசு வரைக்கும் கெட்ட பொண்ண அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஊசிக்குறிப்பு:
முதலையின் வயித்தில இருந்து... ம்யா...ம்யா.... எண்டு சத்தம் வருதே அவ்வ்வ்வ்வ்வ்வ்:)). மாயாவையும் காணேல்லை:))).//

நூல் குறிப்பு: முதல வைத்துல ரெஸ்ட் எடுத்துட்டுருக்க்மாக்கும்... நான் தேடும்...


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out