Tuesday, 2 August, 2011

பிரபலங்களைப்பற்றி குறுஞ்செய்திகள்


திரு: வாரன் பஃபட் அவர்கள்…


      இவர் உலகின் no.1 பங்கு முதலீட்டாளர் 
     இவரை பணக்கடவுள் என்று சொல்கிறார்கள்   


பங்குசந்தையின் சூப்பர் ஸ்டார் என்று கருதப்படும் வாரன் பஃபட்
தன் வாழ் நாள் முழுக்க கஷ்டப்பட்டு சம்பாதித்த 37 பில்லியன் டாலர் பணத்தை உலக மக்களின் நல்வாழ்வுக்காக நன்கொடையாக அளித்திருக்கிறார்… 

37 பில்லியன் டாலரா?  1 பில்லியன் என்பது 100 கோடி
37 பில்லியன் டாலர் என்பது கிட்ட தட்ட இந்திய மதிப்பில் 1,66,500 கோடி ரூபாய்
இது 2007-ம் ஆண்டில் 57 பில்லியன் டாலராக வளர்ந்தது.. இந்திய மதிப்பு கிட்ட தட்ட 2,56,500 கோடி ரூபாய்
தற்பொழுது சொல்லவே வேண்டாம் அது இன்னும் பன்மடங்காக உயர்ந்திருக்கும்


    இவர் தனது 13 வயதில் சொன்னது – 30 வயதிற்குள் நான் மில்லியனர் ஆவேன், அப்படி ஆகாமல் போனால் ஒமாஹாவின் உயரமான கட்டடத்தின் உச்சியில் இருந்து குதித்து உயிரை விடுவேன்! – ஆனால் அவர் சொன்ன காலத்திற்கு முன்னதாகவே மில்லியராக ஆகியும் காண்பித்தார்… அதான் வாரன் பஃபட்…


நன்றி : திரு. செல்லமுத்து குப்புசாமி அவர்கள்..(வாரன் பஃபட் – பணக்கடவுள் என்ற புத்தகத்திலிருந்து.)

இந்த புத்தகத்தின் ஆசிரியர் திரு. செல்லமுத்து அவர்கள் இந்த புத்தகத்தை ப்ற்றி சொல்லியிருப்பது..
உங்களிடம் 100 ரூபாய் உள்ளது. இதை 100 கோடி ரூபாயாக மாற்றும் வழி தெரியுமா உங்களுக்கு? வாரன் பஃபட்டின் வாழ்க்கையைக் கவனமாகப் படியுங்கள். கொஞ்சம் கொஞ்சமாகப் பணம் குவிக்கும் டெக்னிக்குகள் உங்களிடமிருந்தே உற்பத்தியாக ஆரம்பிப்பதை உணர்வீர்கள். இந்த உலகமகா பணக்காரரின் வெற்றி ரகசியங்கள் மிகவும் வெளிப்படையானவை. உங்களை வாரிச் சுருட்டி பாக்கெட்டில் போட்டுக்கொள்ளப்போகிற வாழ்க்கை வரலாறு இது. 

ஷேர் மார்க்கெட்டா? அது சூதாட்டமாச்சே! என்று எல்லோரும் பிரசாரம் செய்து கொண்டிருந்த காலத்தில், இல்லை, அது ஒரு அறிவியல் பூர்வமான முதலீடு. யார் வேண்டுமானாலும் அதில் பணத்தைக் குவிக்க முடியும் என்பதைத் தெள்ளத் தெளிவாக எடுத்துச் சொன்னவர் வாரன் பஃபட். 

சொன்னது மட்டுமல்ல, தன் வாழ்நாளில் அதைச் செய்தும் காட்டினார். வெறும் 100 டாலர் பணத்தோடு ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்தார் வாரன். ஆனால், இன்று அவரிடம் இருக்கும் பணத்தின் மதிப்பு பல பில்லியன் டாலர்கள். 

ஷேர் மார்க்கெட்டுக்குள் நுழைந்து நாலு காசு சம்பாதிக்க நமக்கு முதலில் என்ன தெரிய வேண்டும்? லாபம் தரும் கற்பகத் தரு மாதிரியான கம்பெனிகளின் ஷேர்களைக் கண்டுபிடிப்பது எப்படி? என்ன விலையில் ஒரு ஷேரை வாங்கலாம்? அல்லது விற்கலாம்? கையைக் கடிக்காமல் இருக்கும் கலையைக் கற்றுக் கொள்வது? 

பொருளாதாரச் சூத்திரங்களின் பின்னால் ஒளிந்து கொள்ளாமல், வரைபடம் வரைந்து தலையைச் சுற்ற வைக்காமல், பட்டியல் போட்டுச் சாகடிக்காமல், ஷேர் மார்க்கெட்டின் சிதம்பர ரகசியங்களை ஒரு குழந்தைக்குச் சொல்லிக் கொடுக்கிற மாதிரி கற்றுத் தரும் பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை இது. 


27 comments:

மாய உலகம் said...

Chitra Solomon said...(in email)

" சுவையான தகவல்களுடன் நல்ல பகிர்வு. "
செய்திகளை தொகுத்த விதமும் நல்லா இருக்குது. தொடர்ந்து எழுதுங்க.

மாய உலகம் said...

தொடர்ந்து எழுதுகிறேன்... தங்களது வாழ்த்துக்கு நன்றி மேடம்

V.KAVEANANTH & V.NANDHANA said...

நன்றி

VENKAT said...

படங்களுடன் பதிவுகள் அமர்க்களமாக இருக்கு. நல்ல விபரங்களும் இருக்கு. பாராட்டுக்கள்.

அமைதிச்சாரல் said...

எக்கச்சக்க தகவல்கள் உங்க தளத்தில்.. அருமையான தொகுப்பாக.

மாய உலகம் said...

V.KAVEANANTH & V.NANDHANA said...
//நன்றி//

தங்கள் வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

VENKAT said...
//படங்களுடன் பதிவுகள் அமர்க்களமாக இருக்கு. நல்ல விபரங்களும் இருக்கு. பாராட்டுக்கள்.//

வாங்க சகோ வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...
//எக்கச்சக்க தகவல்கள் உங்க தளத்தில்.. அருமையான தொகுப்பாக.//

வாங்க அமைதி... வாழ்த்துக்கு நன்றி

மோகன்ஜி said...

ஸ்வாரஸ்யமான தகவல்கள்! கலக்குங்க!

மாய உலகம் said...

மோகன்ஜி said...
//ஸ்வாரஸ்யமான தகவல்கள்! கலக்குங்க!//

வாங்க சகோ வாழ்த்துக்கு நன்றி

நிரூபன் said...

வணகம் மாப்ளே, நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கனும் எனும் உணர்வினை உங்களின் இப் பதிவு தருகிறது.

நிரூபன் said...

பங்கு வர்த்தகம் தொடர்பில் எமக்கும் ஆவலையும், ஆர்வத்தினையும் ஏற்படுத்தும் வண்ணம் வாரன் பட் பற்றிய விளக்கப் பதிவு அமைந்துள்ளது சகோ.

M.R said...

ஆமாம் ,வாரன் தான் சம்பாதித்ததை பில்கேட்சிடம் கொடுத்து சமூகத்திற்காக உதவ சொல்லி கொடுத்தார் .

சிறு வயதிலேயே பேப்பர் போடும் பையனாக தன் தொழிலை ஆரம்பித்து பிற்காலத்தில் அந்த பேப்பெரில்
தன்னைப் பற்றிய உயர்ந்த செய்தி வருமாறு உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது .

Abdul Basith said...

வாரன் பஃபட் பற்றி முன்பு இணையத்தில் படித்த போது, நாமும் சேர் மார்க்கெட் மூலம் பணக்காரனாக ஆனால் எப்படியிருக்கும்? என்று கற்பனை செய்ததுண்டு.

:) :) :)


பகிர்வுக்கு நன்றி நண்பா!

shanmugavel said...

சுவையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி.

மாய உலகம் said...

நிரூபன் said...
//வணகம் மாப்ளே, நாமும் வாழ்க்கையில் ஏதாவது சாதிக்கனும் எனும் உணர்வினை உங்களின் இப் பதிவு தருகிறது.பங்கு வர்த்தகம் தொடர்பில் எமக்கும் ஆவலையும், ஆர்வத்தினையும் ஏற்படுத்தும் வண்ணம் வாரன் பட் பற்றிய விளக்கப் பதிவு அமைந்துள்ளது சகோ.//

வாங்க சகோ..வாழ்த்துக்கு நன்றிகள்.. பேப்பர் டிரேடிங் பயிற்சி எடுங்கள் சகோ சாத்தியமாக்கலாம்

மாய உலகம் said...

M.R said...
//ஆமாம் ,வாரன் தான் சம்பாதித்ததை பில்கேட்சிடம் கொடுத்து சமூகத்திற்காக உதவ சொல்லி கொடுத்தார் .

சிறு வயதிலேயே பேப்பர் போடும் பையனாக தன் தொழிலை ஆரம்பித்து பிற்காலத்தில் அந்த பேப்பெரில்
தன்னைப் பற்றிய உயர்ந்த செய்தி வருமாறு உயர்ந்துள்ளது பாராட்டுக்குரியது //

ஆம் சகோ! முன்னேற நினைக்கும் ஒவ்வொருவரும் அவர் வழியை பின்பற்றினாலே போதும்

மாய உலகம் said...

Abdul Basith said...
//வாரன் பஃபட் பற்றி முன்பு இணையத்தில் படித்த போது, நாமும் சேர் மார்க்கெட் மூலம் பணக்காரனாக ஆனால் எப்படியிருக்கும்? என்று கற்பனை செய்ததுண்டு.

:) :) :)


பகிர்வுக்கு நன்றி நண்பா!//

வாங்க நண்பா... கற்பனை ஒரு நாள் நிஜமாகலாம் கருத்துக்கு நன்றி நண்பா...

மாய உலகம் said...

shanmugavel said...
//சுவையான தகவல்கள் .பகிர்வுக்கு நன்றி.//

வாங்க நண்பரே... கருத்துக்கு நன்றி

கோகுல் said...

உண்மையிலே வெற்றிக்கதைதான்.

மாய உலகம் said...

கோகுல் said...

// உண்மையிலே வெற்றிக்கதைதான்.//

வாங்க கோகுல் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

ponnakk marutha said to in email...
//ஒரு ம‌னித‌ன் தான எப்படி வரவேண்டும் என்று நினைக்கிறானே அப்படியே
வருகிறான்..என்பதை நிருப்பித்திருக்கிறார்...தனது 13 வயது கனவை
நனவாக்கிருக்கிறார்...இதற்க்கு பின்னால் அவரின் முயற்ச்சி கடுமையான
விடாப்பிடியான உழைப்பும் இருந்திருக்கிறது..அதனால் ஆசைப்படுங்கள்..அது
நியாயமான ஆசையாக இருக்கட்டும்..அசைப்படுதலோடு நின்று
விடாமல்...அதற்க்கான, முயற்ச்சியில் இறங்குங்கல்...இந்த பதிவு
ஒவ்வொருவருக்கும் ஊக்கத்தை கொடுக்கும்....நன்றி.//

வாங்க சரியாக சொன்னீர்கள்... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Chitra Solomon to me in mail
" சுவையான தகவல்களுடன் நல்ல பகிர்வு. "

♔ம.தி.சுதா♔ said...

இதிலிருந்த நல்ல வர்த்தகத் தகவல்கள் பெற்றேம்பா நன்றி நன்றி..

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
ஜனாதிபதியையே மதிக்காதா ஜனநாயக நாடு இந்தியா தான்.

மாய உலகம் said...

♔ம.தி.சுதா♔ said... 24
//இதிலிருந்த நல்ல வர்த்தகத் தகவல்கள் பெற்றேம்பா நன்றி நன்றி..//

வருகைக்கும் கருத்துக்கும் நன்றி நண்பா

இராஜராஜேஸ்வரி said...

பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை அருமை பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 26
//பங்குச் சந்தை சூப்பர் ஸ்டாரின் வெற்றிக் கதை அருமை பாராட்டுக்கள்.//

வாங்க உண்மைதான் பங்குசந்தை சூப்பர் ஸ்டார் தான் அவர்...வாழ்த்துக்கு மனமார்ந்த நன்றிகள்


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out