Saturday, 20 August, 2011

இதை கேப்பார் யாருங்கோ....?

பாட்டியிடம் சுட்ட பழமொழிகள்


அவனே இவனே என்பதை விடச் சிவனே சிவனே என்பதே மேல்.

கடவுளிடம் கேட்டால் – கிடைக்காதது ஒன்றுமில்லை.


பக்தியோடு பிரார்த்தனை செய், ஆனால் சுத்தியலைப் பலமாய் அடி.


உதட்டினால் மட்டும் செய்யப்படும் பிரார்த்தனை பலன் தராது.

ஒருவன் கடவுளை நோக்கி நொண்டிச் செல்கிறான், ஒருவன் சைத்தானை நோக்கி குதித்தோடுகிறான்

தூய அன்பு அமைதிக்கு இருப்பிடம்.

தீயோர் நேசத்தை விட தனிமை மேலானது.

அறையில் ஆடினால் தான் அம்பலத்தில் ஆட முடியும்.

ஆடிய காலும், பாடிய நாவும் சும்மா இராது.

கலைகளில் ஈடுபாடுடையவன் கவலைகளை மறக்கிறான்.அறிவின் தந்தை ஞாபகசக்தி; அதன் தாய் சிந்தனை.

வதந்தி தந்தியை விட வேகமானது.

முறத்தடி பட்டாலும் முகத்தடி படக்கூடாது.

நீண்ட கால விரோதியை நம்பாதே.

இனிய முகம் உறவை வளர்க்கும்.

கெட்டிக்காரப் பெண் – தான் காதலிப்பவனை விட்டுவிட்டுத் தன்னைக் காதலிப்பவனைத் தான் மணப்பாள்.

பெண்ணில்லாத வீடு பேய் வாழும் இடம்.

தாயைப்பார்த்து மகளை மணம் செய்.

நூலைப் போல செலை, தாயைப் போல சேய்.தன் முகத்தைப் பற்றியே பெருமைப்படும் ஒரு பெண்ணால், வீடானது பாழாகும்.

சமையல் மோசமானால் ஒரு நாள் நஷ்டம்; அறுவடை மோசமானால் ஓராண்டு நஷ்டம்; விவாகம் மோசமானால் வாழ்நாள் முழுதும் நஷ்டம்!


தாயை யாருடனும் ஒப்பிடலாகாது; அவள் ஒப்பற்றவள், ஆனால் அவள் நல்லவளாக – இருந்தால் மட்டுமே.

மகன் செத்தாலும் பரவாயில்லை-மருமகள் கொட்டம் அடங்கட்டும்.

பணிவோடு பேசுபவனைப் பயந்தாங்கொள்ளி என்று நினைப்பவன் படுமுட்டாள்.டிஸ்கி: ஆஹா மறந்துட்டீங்களே! எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க

39 comments:

athira said...

உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பாஆஆஆஅ படையப்பா... பெரீய படைப்பைப் போட்டு நிறையப் படிக்க வச்சிட்டீங்க என்னை, நல்ல நல்ல பொன் மொழிகள், பழமொழிகள்...

athira said...

ஐஈ இண்டைக்கு மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)).

4 குத்துக் குத்தச் சொன்னீங்க ... குத்து குத்தெண்டு குத்தி வச்சிருக்கிறேன்...:)).. ஆ யூ ஓக்கே நவ்?:))).

Anonymous said...

அப்பாடீடீடீடீடீடீடீடீடீடீடீ...என்ன ஒரேயடியா நீட்டி எழுதியாச்சுது. நல்ல பொன்மொழிகளும், பழமொழிகளும் வாழ்த்துகள்...
வேதா. இலங்காதிலகம்.

மாய உலகம் said...

athira said...
//உஸ்ஸ்ஸ்ஸ்ஸ்ஸ் யப்ப்பாஆஆஆஅ படையப்பா... பெரீய படைப்பைப் போட்டு நிறையப் படிக்க வச்சிட்டீங்க என்னை, நல்ல நல்ல பொன் மொழிகள், பழமொழிகள்...//


வாங்க... வாழ்த்துக்கு நன்றி முதல்ல வந்துட்டீங்க..முதலையோட வர்லல்ல ஹா ஹா

மாய உலகம் said...

athira said...
ஐஈ இண்டைக்கு மீ ட 1ஸ்ட்டூஊஊஊஊஊஊ:)).

4 குத்துக் குத்தச் சொன்னீங்க ... குத்து குத்தெண்டு குத்தி வச்சிருக்கிறேன்...:)).. ஆ யூ ஓக்கே நவ்?:))).//

ஹி ஹி ஹி ஐ ஆம் ஸேட்டிஸ்ஃபைடு... ஹேப்பிபீஈஈஈஇ.. நன்றீஈஈஈஈஈ

மாய உலகம் said...

kovaikkavi said...
அப்பாடீடீடீடீடீடீடீடீடீடீடீ...என்ன ஒரேயடியா நீட்டி எழுதியாச்சுது. நல்ல பொன்மொழிகளும், பழமொழிகளும் வாழ்த்துகள்...
வேதா. இலங்காதிலகம்.//

வாங்க வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

செங்கோவி said...

3 பதிவுகளுக்கான மேட்டரை இப்படி ஒரே பதிவில் போட்டிருகிறீர்களே..

செங்கோவி said...

மேலேயிருந்து படிக்க ஆரம்பித்தால், கேழே வரும் முன் முதலில் படித்தது மறந்து விடுகிறது..

ஆகுலன் said...

பாஸ் எல்லாமே நல்லா இருக்குது நானும் ஒன்றை குறிப்பிடு சொல்லுவம் என்டுதான் நினைதேன் ஆனா எல்லாமே நல்லா இருக்குது............

கோகுல் said...

டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!

கோகுல் said...

அனைத்தும் அசத்தல்.

நிரூபன் said...

வணக்கம் மாப்பு,
நீங்க தூங்கலை?
உங்களின் வித்தியாசமான கிரியேட்டிவிட்டி மெதேட் ஒவ்வோர் பதிவுகளிலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
என் அடுத்த பதிவர் அறிமுகத்தில் நீங்க தான் ஹீரோ.

மாய உலகம் said...

செங்கோவி said...
3 பதிவுகளுக்கான மேட்டரை இப்படி ஒரே பதிவில் போட்டிருகிறீர்களே.


மேலேயிருந்து படிக்க ஆரம்பித்தால், கேழே வரும் முன் முதலில் படித்தது மறந்து விடுகிறது.//

தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது.. இதோ இரண்டு பதிவாக மாற்றி விடுகிறேன்...நன்றி

நிரூபன் said...

தத்துவங்கள் எல்லாம் தூள் கிளப்புகின்றன.

அருமையான தத்துவங்கள்.
நோட் பண்ணி வைக்கிறேன்.
வருங்காலத்தில் உதவுமில்லே.

மாய உலகம் said...

ஆகுலன் said...
பாஸ் எல்லாமே நல்லா இருக்குது நானும் ஒன்றை குறிப்பிடு சொல்லுவம் என்டுதான் நினைதேன் ஆனா எல்லாமே நல்லா இருக்குது............//

வாங்க ஆகுலன்...தங்களது வருகை மகிழ்ச்சி...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

கோகுல் said...
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!

அனைத்தும் அசத்தல்.//

வாங்க கோகுல்..வாழ்த்துக்கு மனதார நன்றி

மாய உலகம் said...

கோகுல் said...
டில்லிக்கு ராஜான்னாலும் பாட்டி சொல்ல தட்டாதே!

அனைத்தும் அசத்தல்.//

வாங்க கோகுல்..வாழ்த்துக்கு மனதார நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் மாப்பு,
நீங்க தூங்கலை?
உங்களின் வித்தியாசமான கிரியேட்டிவிட்டி மெதேட் ஒவ்வோர் பதிவுகளிலும் பிரமிப்பை ஏற்படுத்துகிறது.
என் அடுத்த பதிவர் அறிமுகத்தில் நீங்க தான் ஹீரோ.//

வாங்க தங்களது வருகை மகிழ்ச்சி அளிக்கிறது..வாழ்த்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

நிரூபன் said...
தத்துவங்கள் எல்லாம் தூள் கிளப்புகின்றன.

அருமையான தத்துவங்கள்.
நோட் பண்ணி வைக்கிறேன்.
வருங்காலத்தில் உதவுமில்லே.//

நோட் பண்ணி வையுங்கள் சகோ..வருங்காலத்தில் மட்டுமல்ல நிகழ்காலத்திலும் உதவும் நன்றி

மகேந்திரன் said...

அருமை அருமை
தத்துவத் துணுக்குகள் அனைத்தும்
வாழ்க்கைக்கு தேவையானவை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.

ஜெய்லானி said...

//தாயைப்பார்த்து மகளை மணம் செய்.//

ஒன்னும்புரியலையே அவ்வ்வ்வ்வ்வ்

ஜெய்லானி said...

//4 குத்துக் குத்தச் சொன்னீங்க ... குத்து குத்தெண்டு குத்தி வச்சிருக்கிறேன்...:)).. ஆ யூ ஓக்கே நவ்?:))).//

பாவம் யாரு பெத்த பிள்ளாயோ ஏன் இந்த கொலவெறி...!! கடைசியில் ஆ யூ ஓக்கை நவ்..???? ஹி...ஹி....

மாய உலகம் said...

மகேந்திரன் said...
அருமை அருமை
தத்துவத் துணுக்குகள் அனைத்தும்
வாழ்க்கைக்கு தேவையானவை.
பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

வாழ்த்து சந்தோசம்..நன்றி நண்பரே

மாய உலகம் said...

ஜெய்லானி said...
//தாயைப்பார்த்து மகளை மணம் செய்.//

ஒன்னும்புரியலையே அவ்வ்வ்வ்வ்வ்//

ஆஹா... என்ன கூத்துயா இது... நாம ஒண்னு சொன்னா இவர் ஒண்னு புரிஞ்சுக்குறாரு... ஜனங்களே பாத்துக்குங்க இந்த பாவத்துக்கெல்லாம் நான் ஆளாகவே மாட்டேன்...அத்தனையும் பொய்யி.. கேக்கறதும் கேட்டுட்டு திருவிழாவுல காணோம போன...அவ்வ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

ஜெய்லானி said...
//4 குத்துக் குத்தச் சொன்னீங்க ... குத்து குத்தெண்டு குத்தி வச்சிருக்கிறேன்...:)).. ஆ யூ ஓக்கே நவ்?:))).//

பாவம் யாரு பெத்த பிள்ளாயோ ஏன் இந்த கொலவெறி...!! கடைசியில் ஆ யூ ஓக்கை நவ்..???? ஹி...ஹி....//

ஆமாங்க நான் ஒரு புள்ள பூச்சிங்க...பால் வடியற முகத்தப்பாத்து கொலவெறியோட பாத்துட்ட்ப்போறாங்க...அவ்வ்வ்வ்வ்வ்

Geetha6 said...

வாழ்த்துகள்!
பகிர்வுக்கு நன்றி .

மாய உலகம் said...

Geetha6 said...
வாழ்த்துகள்!
பகிர்வுக்கு நன்றி .//

வாங்க வாழ்த்துக்கு நன்றி

சென்னை பித்தன் said...

த.ம.7.

சிறப்பான பகிர்வு!

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
த.ம.7.

சிறப்பான பகிர்வு!//

வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி நண்பரே

ஸாதிகா said...

அருமையான பொன்மொழிகள்.வாழ்த்துக்கள்!

இமா said...

அருமையாக இருக்கிறது ராஜேஷ். முதலில் இரண்டாவது பகுதியைப் படித்து கமண்ட் சொல்லிவிட்டேன். ;)

மாய உலகம் said...

ஸாதிகா said...
அருமையான பொன்மொழிகள்.வாழ்த்துக்கள்!//

வாங்க மகிழ்ச்சி வாழ்த்துக்கு சந்தோசம் நன்றி

மாய உலகம் said...

இமா said...
அருமையாக இருக்கிறது ராஜேஷ். முதலில் இரண்டாவது பகுதியைப் படித்து கமண்ட் சொல்லிவிட்டேன். ;)//

வாங்க ஹா ஹா வாழ்த்துக்கு நன்றி

அம்பாளடியாள் said...

தள்ளாடிய தேகம்
தள்ளாடாத நோக்கம்!...

பொய்யான நடிப்பு
அதில அடங்கி இருப்பதோ
மெய்யான பிடிப்பு!..........

எல்லா அப்புமாரையும் வச்சு
இவரு வச்சாரே பெரிய ஆப்பு....

எதுக்குயா?.. எதுக்கு?... இத்தன வருசமா
நினைக்காதவகள நினைக்க வச்ச?.....
அருமையான வாசகத்தால....
ஓட்டுப் போட்டாச்சு போ தாத்தா...

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
தள்ளாடிய தேகம்
தள்ளாடாத நோக்கம்!...

பொய்யான நடிப்பு
அதில அடங்கி இருப்பதோ
மெய்யான பிடிப்பு!..........

எல்லா அப்புமாரையும் வச்சு
இவரு வச்சாரே பெரிய ஆப்பு....

எதுக்குயா?.. எதுக்கு?... இத்தன வருசமா
நினைக்காதவகள நினைக்க வச்ச?.....
அருமையான வாசகத்தால....
ஓட்டுப் போட்டாச்சு போ தாத்தா...//


வாங்க வாங்க ஹா ஹா ஆஹா இவங்களையில்லாம் மறந்து போயிட்டீங்களா...ஹா ஹா கருத்தே காமெடியா கலக்கி சொல்லிட்டீங்களே... புரிதலான கருத்துக்கும் வாக்களிப்புக்கும் நன்றிகள்

புலவர் சா இராமாநுசம் said...

ஏனுங்க நானிருக்கேனுங்க
நீங்க இன்னும் நல்லவே
கேளுங்க!

எல்லாமே பழமுங்க அதுவும்
சுட்ட பழமுங்க
வணக்கமுங்க!

புலவ் சா இராமாநுசம்

புலவர் சா இராமாநுசம் said...

ஓட்டு எட்டுங்கோ

இராமாநுசம்

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
ஏனுங்க நானிருக்கேனுங்க
நீங்க இன்னும் நல்லவே
கேளுங்க!

எல்லாமே பழமுங்க அதுவும்
சுட்ட பழமுங்க
வணக்கமுங்க!

புலவ் சா இராமாநுசம்

ஓட்டு எட்டுங்கோ

இராமாநுசம்//

நீங்க இருக்குற வரைக்கும் நான் தைரியமா கேட்பேன்..ஹா ஹா.. கருத்துக்கும் வாழ்த்துக்கும் நன்றி ஐயா!

மாய உலகம் said...

வாக்களிப்புக்கும் நன்றி ஐயா


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out