Saturday 20 August, 2011

இதை கேப்பார் யாருங்கோ....? பகுதி 2

(நண்பர்களின் விருப்பத்திற்கிணங்க இரண்டு பதிவாக பிரித்து இடுகிறேன்..சுட்டிக்காட்டிய நண்பர்களுக்கு நன்றி)

பாட்டியிடமிருந்து சுட்ட பழமொழிகள்

வெறும் காகிதமானாலும் – இரண்டு பேர் பிடித்தால் இன்னும் இலகுவாகத் தூக்கலாம்.


ஒன்றுபட்டால் உண்டு வாழ்வு.

வாழ்க்கையின் துன்பங்களுக்கு – புகழ் ஓர் எளிமையான பிரதிபலன்.

தேவையில்லாமல் – இடி இடிப்பது போலச் சிரிப்பவன், மழை கொட்டுவது போலக் கண்ணீர் விட நேரிடும்.

தேளுக்கு கொடுக்கில் விசம், தே………….…….ளுக்கு உடம்பு எங்கும் விசம்

இருப்பவனுக்கு எல்லாரும் உறவு, இல்லாதவனுக்கு எல்லோரும் பகை!

ஏழைச் சுற்றத்தாரையும் – சிறிய காயத்தையும் அலட்சியம் செய்யாதே.

ஒரு மனிதனுக்கு நூறு நன்மையைச் செய்துவிட்டு, ஒன்றைச் செய்யத் தவறினால் – அவன் எல்லாவற்றையும் மறந்து விடுகிறான்.

நியாயத்தைக் கடைப்பிடிப்பவன் – பொறாமையின் மத்தியிலும் மேலாக விளங்குவான்.
.

உழைப்பு உடலை பலப்படுத்தும், கஷ்டம் மனதைப் பலப்படுத்தும்.

உடனே நம்புபவன் மோசம் போவான்.

எவ்வளவு செலவு என்பதல்ல, எதற்காக செலவு என்பதே முக்கியம்.

எல்லோரும் பல்லக்கினில் ஏறினால் பல்லக்கை யார் தூக்குவது.

எண்ணமெல்லாம் பொய்யாகும்; மௌனமே மெய்யாகும்.

ஐயம் நீங்க அளவிலா நூலைத்தேடு!

செருப்பின் அருமை வெயிலில் தெரியும்; நெருப்பின் அருமை குளிரில் தெரியும்.

நரி வலம் போனால் என்ன? இடம் போனால் என்ன? மேலே விழுந்து பிடுங்காமல் போனால் சரி.

பகலில் பசுமாடு தெரியாதவனுக்கு இருட்டில் எப்படி எருமை மாடு தெரியும்?


பணத்திற்கு அடிமையாகி பாவத்தை செய்யாதே.

ஒரு பாவம்-நூறு பாவங்களை அதன் பின்னே இழுத்துச் செல்லும்.

பொய் சொல்லி வாழ்ந்தவனுமில்லை, மெய் சொல்லிக்கெட்டவனுமில்லை.

வேகமாக முடிவெடுப்பதை விட விவேகமாக முடிவு செய்ய வேண்டும்.


குழந்தை தன்னை தூக்கி வைத்துக்கொஞ்சுகிறவரைத் தான் அறியும். தன்னிடம் உண்மையான அன்பு செலுத்துவோரை அறியாது.

இரண்டு முயல்களை விரட்டினால் – ஒரு முயலைக் கூடப் பிடிக்க முடியாது.

இருதயம் மட்டும் உறுதியாக இருந்தால் – சுண்டெலியால் கூட யானையைத் தூக்க முடியும்.

நீ நூறு ஆண்டு வாழ்பவனைப் போல வேலை செய்; நாளையே இறந்து விடுபவனைப் போல் சிந்தனை செய்.

சோம்பேறியின் மூளை – சைத்தானின் தொழிற்சாலை!



மகிழ்ச்சி ஒரு மனிதன் பலத்தில் பாதி.

தூக்கியெறியும் குதிரையை விட சுமந்து செல்லும் கழுதை மேலானது.

கோபத்தால் சாதிப்பதை விட பொறுமையால் ஒருவன் அதிகம் சாதிக்கிறான்.

தீங்கு செய்யாதிருத்தலே நன்மைகளிலெல்லாம் முதன்மையானது.



நண்பனை கஷ்ட காலத்தில் தெரிந்து கொள்ளலாம்;
வீரனை போர்க்களத்தில் தெரிந்து கொள்ளலாம்;
நேர்மையானவனை கடன் கொடுத்துத் தெரிந்து கொள்ளலாம்;
 துணைவியை செல்வம் போனபின் தெரிந்து கொள்ளலாம்;
உறவினரை துன்ப காலத்தில் தெரிந்து கொள்ளலாம்.

டிஸ்கி: ஆஹா மறந்துட்டீங்களே! எப்பவும் போல ஓட்டு பொட்டியில நாலு ஊமக்குத்து குத்திட்டுப்போங்க

49 comments:

Unknown said...

சூப்பர் பாஸ்!

மகேந்திரன் said...

தத்துவ மழையில் நனைந்தேன்
அருமை அருமை.

Yaathoramani.blogspot.com said...

பயனுள்ள பழமொழிகளை
மிக அருமையாகதேர்ந்தெடுத்துக்
கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
(கமென்ட் பாக்ஸ் ரொம்ப தொந்தரவு செய்கிறது
இப்போது நான்காவது முறையாக முயற்சிக்கிறேன்)

தமிழ்வாசி பிரகாஷ் said...

பொன்மொழிகள் சூப்பரு... அந்த நடிகைகள் படங்கள் என்ன சொல்ல வருது?

ஆமினா said...

//தேவையில்லாமல் இடி இடிப்பது போல சிரிப்பவன் மழை கொட்டுவது போல் கண்ணீர் விடக்கூடும்//

இடி மாதிரி சிரிக்கும் போதே மழ மாதிரி கண்ணுல தண்ணீ வருதே.... அத சொல்றாங்களோ??
இருந்தாலும் ஜாக்ரதையா இருக்கேன் :)

ஆமினா said...

சைட்ல இருக்குற பாலோவர்ஸ் கெட்ஜெட்???

சக்தி கல்வி மையம் said...

அசத்தல் சகோ..

குறையொன்றுமில்லை. said...

எல்லாமே நல்லா இருக்கு.
எல்லாருமே பல்லக்கில்
ஏறினால் பல்லக்கைத் தூக்கு
வதுயாரு?

M.R said...

அருமையான பொன்மொழிகள் அருமை
தமிழ் மணம் நாலு

arasan said...

பொன் மொழிகளின் தொகுப்பில் திளைத்து போனேன் ..
வாழ்த்துக்கள்

Unknown said...

சபாஷ் ...அர்த்தமுள்ள பதிவு ...
நன்றி

கவி அழகன் said...

அறிவும் ஆர்வமும் உள்ள பதிவு
பிடிச்சிருக்கு

மாய உலகம் said...

ஜீ... said...
சூப்பர் பாஸ்!//

வாங்க பாஸ் வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
தத்துவ மழையில் நனைந்தேன்
அருமை அருமை.//

வாங்க நண்பா... வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said...
பயனுள்ள பழமொழிகளை
மிக அருமையாகதேர்ந்தெடுத்துக்
கொடுத்தமைக்கு நன்றி வாழ்த்துக்கள்
(கமென்ட் பாக்ஸ் ரொம்ப தொந்தரவு செய்கிறது
இப்போது நான்காவது முறையாக முயற்சிக்கிறேன்)//

வாங்க சகோதரரே! ஆம் சகோ ஏற்கனவே இந்த ப்ராப்ளம் பற்றி அண்ணன் சி.பி சொல்லியிருந்தார்...அது என்ன ப்ராப்ளம் எனத் தெரியவில்லை..சிரமத்திற்கு மன்னிக்கவும் விரைவில் சரி செய்ய முயற்சிக்கிறேன்...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
பொன்மொழிகள் சூப்பரு... அந்த நடிகைகள் படங்கள் என்ன சொல்ல வருது?//


வாங்க நண்பா...அதானப்பாத்தேன் ஆருமே கேக்கலையேன்னு, நடிகைக்கள் பக்கத்திலே இருந்தா பழமொழிகள் கூட பொன்மொழிகளாகிவிடாதா அப்படின்னு சொல்லுவேன்னு பாத்தீங்களா ஆசையப்பாரு.... அந்த படங்களுக்கு ஏற்ற பழமொழிகள் அடுத்து இருக்கு பாருங்க... ஹி ஹி எப்படி எல்லாம் சமாளிக்க வேண்டியிருக்கு?

மாய உலகம் said...

ஆமினா said...
//தேவையில்லாமல் இடி இடிப்பது போல சிரிப்பவன் மழை கொட்டுவது போல் கண்ணீர் விடக்கூடும்//

இடி மாதிரி சிரிக்கும் போதே மழ மாதிரி கண்ணுல தண்ணீ வருதே.... அத சொல்றாங்களோ??
இருந்தாலும் ஜாக்ரதையா இருக்கேன் :)//

அது ஆனந்த கண்ணீர்ங்க... இது ஆணவ கண்ணீர் ஹி ஹி... தங்கள் கருத்து மகிழ்ச்சி ...நன்றி

மாய உலகம் said...

ஆமினா said...
சைட்ல இருக்குற பாலோவர்ஸ் கெட்ஜெட்???//

அந்த கூத்த ஏங்க கேக்குறீங்க... மியாவ் வந்து , இரண்டு முறை பாலோயரா உங்க தளத்துல ஜாயின் பண்ணியிருக்கேன்...என் போட்டோவ காணோமேன்னு கேட்டாங்க... அவங்க சேர்றது டேஸ்போர்டு பக்கத்துல வருது எப்படி அதுல ஜாயின் பண்றாங்கன்னு தெரியல... அந்த கேட்ஜட் எடுத்து தளத்தில போட்டுட்டேன்... இரண்டு கேட்ஜட்டையும் ஒன்றாக இணைக்கும் வழி யாருக்கேனும் தெரிந்தாலும் சொல்லுங்கோ....

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
அசத்தல் சகோ..//

வாங்க சகோ வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

Lakshmi said...
எல்லாமே நல்லா இருக்கு.
எல்லாருமே பல்லக்கில்
ஏறினால் பல்லக்கைத் தூக்கு
வதுயாரு?//

வாங்க மேடம்... ஹா ஹா நெறைய எடத்துல அந்த கூத்து தான் நடக்குது..கருத்துக்கு நன்றி மேடம்

மாய உலகம் said...

M.R said...
அருமையான பொன்மொழிகள் அருமை
தமிழ் மணம் நாலு//

வாங்க சகோ..வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

அரசன் said...
பொன் மொழிகளின் தொகுப்பில் திளைத்து போனேன் ..
வாழ்த்துக்கள்//

வாங்க நண்பா..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

ரியாஸ் அஹமது said...
சபாஷ் ...அர்த்தமுள்ள பதிவு ...
நன்றி//

வாங்க நண்பா வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

கவி அழகன் said...
அறிவும் ஆர்வமும் உள்ள பதிவு
பிடிச்சிருக்கு//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

இந்திரா said...

இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்..

http://blogintamil.blogspot.com/2011/08/6.html

மாய உலகம் said...

இந்திரா said...
இன்றைய வலைச்சரத்தில் உங்கள் தளத்தினை அறிமுகப்படுத்தியுள்ளேன்.
நேரமிருந்தால் வருகை தரவும்..

http://blogintamil.blogspot.com/2011/08/6.html//

என்னை அறிமுகபடுத்தியதிற்கு நன்றிகள்

Unknown said...

பழமொழிகளின் பொக்கிஷமாக இருக்கிறது உங்களின் இந்த பதிவு. பகிர்வுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..

மாய உலகம் said...

பாரத்... பாரதி... said...
பழமொழிகளின் பொக்கிஷமாக இருக்கிறது உங்களின் இந்த பதிவு. பகிர்வுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்..//

வாங்க வருகை மகிழ்ச்சி அளிக்கிறது வாழ்த்துக்கு நன்றி

Anonymous said...

பகிர்வுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...நண்பா...

மாய உலகம் said...

Reverie said...
பகிர்வுக்கு பாராட்டுக்களும், வாழ்த்துக்களும்...நண்பா..//

வாங்க நண்பா வாழ்த்துக்கு நன்றி

shanmugavel said...

படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.

RAMA RAVI (RAMVI) said...

இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டேன். நல்ல பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றி.

மாய உலகம் said...

shanmugavel said...
படிப்பதற்கு இனிமையாக இருக்கிறது.பகிர்வுக்கு நன்றி.//

வாங்க நண்பா..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

RAMVI said...
இரண்டு பகுதிகளையும் படித்துவிட்டேன். நல்ல பொன்மொழிகள். பகிர்வுக்கு நன்றி.//

வாங்க வாழ்த்துக்கு நன்றிங்க...

Unknown said...

பழமொழி என்பது பொய்-இவை
பொன்மொழி எனபதே மெய்

புலவர் சா இராமாநுசம்

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
பழமொழி என்பது பொய்-இவை
பொன்மொழி எனபதே மெய்

புலவர் சா இராமாநுசம்//

வாங்க..ஐயா.,தாங்கள் சொன்னால் அது சரியாகத்தான் ஐயா இருக்கும் தங்களது கருத்து மகிழ்ச்சி அளிக்கிறது

முற்றும் அறிந்த அதிரா said...

அடடா பாகம் ரெண்டு, பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கே.... தூள் கிளப்புங்க மாயா... கவனம் பார்த்து, ஸ்லிப் ஆனா முதலை பதம் பார்க்கும்:)).

அந்நியன் 2 said...

ஹா...ஹா...எல்லோரும் பல்லக்கில் ஏறினால் பல்லக்கை யார் தூக்குவது ?

அதானே யார் தூக்குவது?

இது நூற்றுக்கு நூறு காங்கிரசுக்கு பொருந்தும்.
அனைத்தும் சூப்ப்பர் சகோ

வாழ்த்துக்கள்.

தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு

இமா க்றிஸ் said...

ரொம்ப நல்லா இருக்கு ராஜேஷ். அருமை. பாராட்டுக்கள்.

மாய உலகம் said...

athira said...
அடடா பாகம் ரெண்டு, பரபரப்பாகப் போய்க்கொண்டிருக்கே.... தூள் கிளப்புங்க மாயா... கவனம் பார்த்து, ஸ்லிப் ஆனா முதலை பதம் பார்க்கும்:)).//

வாங்க ஆஹா முதலருந்து முதல துரத்ததே...ஸ்லிப்பானா தான ஸ்ட்ராங்கா முருங்க மரத்தை புடிச்சுக்கிட்டு நின்னுக்குவோம்....

மாய உலகம் said...

அந்நியன் 2 said...
ஹா...ஹா...எல்லோரும் பல்லக்கில் ஏறினால் பல்லக்கை யார் தூக்குவது ?

அதானே யார் தூக்குவது?

இது நூற்றுக்கு நூறு காங்கிரசுக்கு பொருந்தும்.
அனைத்தும் சூப்ப்பர் சகோ

வாழ்த்துக்கள்.

தமிழ் மணம் ஓட்டும் போட்டாச்சு//

வாங்க அந்நியன் சரியாக சொன்னீர்கள்..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

இமா said...
ரொம்ப நல்லா இருக்கு ராஜேஷ். அருமை. பாராட்டுக்கள்.//

வாங்க வாங்க வாழ்த்துக்கு நன்றி

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

மாய உலகம் said...

விக்கியுலகம் said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!//

வாங்க மாம்ஸ் வாழ்த்துக்கு நன்றி

கதம்ப உணர்வுகள் said...

பொன் மொழிகள் அருமை ராஜேஸ்....

ரசித்தேன்.....

அன்பு வாழ்த்துகள்...

கதம்ப உணர்வுகள் said...

ஓட்டும் போட்டுட்டேன் :)

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
பொன் மொழிகள் அருமை ராஜேஸ்....

ரசித்தேன்.....

அன்பு வாழ்த்துகள்...

ஓட்டும் போட்டுட்டேன் :)
//


தங்களது வாழ்த்துக்கும் வாக்களீப்புக்கும் அன்பு நன்றிகள்

அம்பாளடியாள் said...

இங்க புடியுங்க சகோ கூசாவ .பறங்கி மலையில உங்களுக்காக
ஒரு ஆசிரமம் ஒழுங்கு படுத்தீற்ரன் நீங்க அங்க போகவேண்டியதுதான்
மிச்சம் .பக்தர் கூட்டமே அலைமோதச் செஞ்சுடுறேன் என்ன நம்புங்க ம்ம்ம்ம் ...
தமிழ் மணம் 13 வட்டியோட நாளைக்கு வந்திடுங்க மறக்காம .....
எல்லாம் அருமை சகோ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .புறப்படுறேன் ....

மாய உலகம் said...

அம்பாளடியாள் said...
இங்க புடியுங்க சகோ கூசாவ .பறங்கி மலையில உங்களுக்காக
ஒரு ஆசிரமம் ஒழுங்கு படுத்தீற்ரன் நீங்க அங்க போகவேண்டியதுதான்
மிச்சம் .பக்தர் கூட்டமே அலைமோதச் செஞ்சுடுறேன் என்ன நம்புங்க ம்ம்ம்ம் ...
தமிழ் மணம் 13 வட்டியோட நாளைக்கு வந்திடுங்க மறக்காம .....
எல்லாம் அருமை சகோ பாராட்டுக்கள் வாழ்த்துக்கள் .புறப்படுறேன் ....//

குடுங்க கூசாவ...நான் கூச்ச்ப்படாம் எதக்கொடுத்தாலும் வாங்கிப்பேன்...பரங்கிமலையில ஏக்கர வலைச்சுபோடுங்கப்பா மாயா வரேன்..ஆஹா பக்தர் கூட்டம் வேறையா..அஹா ஆஹா... ஹா ஹா சிரிச்சு முடியலைங்க...வட்டி முதலும் முன்னமே கொடுத்துட்டங்க வாழ்த்துக்களுக்கு நன்றி சகோ


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out