Friday 19 August, 2011

உங்களுக்கு திருப்தி அளிக்கிறதா

உங்களது பணியைப் பிறர் கண்காணித்து மதிப்பீடு செய்து குறைகளைக் கண்டுபிடிக்கும் முன், நீங்கள் செய்துள்ள பணியை நீங்களே கண்காணித்து மதிப்பீடு செய்யுங்கள்.



 நீங்கள் செய்துள்ள வேலை  உங்களுக்குத் திருப்தி அளிக்கிறதா  என்று பாருங்கள்.

அவ்வாறு நீங்கள் செய்துள்ள வேலை உங்களுக்கே திருப்தி அளிக்கவில்லை என்றால் மற்றவர்களுக்கு ஒருக்காலும் திருப்தி அளிக்காது என்பது உறுதி.

உதாரணமாக, ஒரு தட்டச்சர் தான் டைப் செய்த கடிதத்தைத் தனது மேலதிகாரியிடம் கொண்டு போகும் முன்னர், தானே ஒரு முறை கவனமுடன் படித்துப்பார்த்தால், அதிலுள்ள தவறுகளில் தொண்ணூறு சதவீத்திற்கு மேல் கண்டுபிடித்து சரி செய்ய முடியும்.

தன்னால் கண்டுபிடித்து சரி செய்யக்கூடிய தவறை அலட்சியமாக விட்டுவிட்டு, நமது கடன் தீர்ந்தது என்று அந்தக்கடிதத்தை அவ்வாறே மேலதிகாரியுடம் எடுத்துச்சென்றால் எப்படி நற்பெயரும், நம்பிக்கையும் உயரும்?
உங்கள் பணிகளை நீங்களே ஆய்வு செய்து உங்களுக்குப் புலப்படும் தவறுகளையும், குறைகளையும் நீங்களே சரி செய்து கொள்ளுங்கள். 

அவ்வாறு செய்வதால் உங்களுக்கு அவப்பெயர் உண்டாவதற்கான சந்தர்ப்பங்கள் குறைவதுடன், மதிப்பும் பணி ஆற்றலும் மிகும். உங்களின் மதிப்பும் உயரும்.

பெரிய அணையில் சிறிய துவாரம் ஏற்பட்டு, நீர் கசியத் தொடங்கினாலும், அது நாளடைவில் பெரியதாகிய அணையையே அழித்துவிடும்.
அது போலவேதான் நமது வெற்றிபயணத்திலும் ஏதாவது ஒரு அடியில் சறுக்கு ஏற்பட்டாலும், உங்கள் வெற்றியை அது பாதிக்கக்கூடும்
ஆகவே, ஒவ்வொரு அடியையும் கவனமுடனும்,விழிப்புடனும் எச்சரிக்கையுடனும் எடுத்து வையுங்கள்.
வெற்றியின் விலாசம் உங்களுக்கு அகப்படும். 

நன்றி – சிகரங்களைத் தொடுவோம் புத்தகத்திலிருந்து ஆசிரியர் சிந்தனைக் கவிஞர் திரு. கவிதாசன் அவர்கள் ( சிகரங்களை தொடுவோம் – குமரன் பதிப்பகம்,3,முத்துக்கிருஷ்ணன் தெரு, பாண்டி பஜார், சென்னை -17 )

51 comments:

கோகுல் said...

வந்துட்டோம்ல!

கோகுல் said...

திருப்தி தரும் பதிவு!

மாய உலகம் said...

கோகுல் said... 1
வந்துட்டோம்ல!
திருப்தி தரும் பதிவு!//

வாங்க கோகுல் கருத்துக்கு நன்றி

Anonymous said...

உங்க பக்கம் இன்று அழகாயுள்ளது...பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்...

மாய உலகம் said...

Reverie said... 4
//உங்க பக்கம் இன்று அழகாயுள்ளது...பகிர்வுக்கு நன்றி ராஜேஷ்...//

வாங்க.. வாழ்த்துக்கு நன்றி

மகேந்திரன் said...

சரியாகச் சொன்னீர்கள் நண்பரே....
நாம் செய்த வேலை நமக்கு திருப்தி அளிக்க வேண்டும்.
அப்போதுதான் அது நிறைவு பெற்று பலனைக்கொடுக்கும்.
அருமையான பதிவுக்கு நன்றி.

செங்கோவி said...

//பெரிய அணையில் சிறிய துவாரம் ஏற்பட்டு, நீர் கசியத் தொடங்கினாலும், அது நாளடைவில் பெரியதாகிய அணையையே அழித்துவிடும்.//

சூப்பர் மாயா!

செங்கோவி said...

நல்ல அறிவுரைகள்..வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் பயன்படும்!

மாய உலகம் said...

மகேந்திரன் said... 6
//சரியாகச் சொன்னீர்கள் நண்பரே....
நாம் செய்த வேலை நமக்கு திருப்தி அளிக்க வேண்டும்.
அப்போதுதான் அது நிறைவு பெற்று பலனைக்கொடுக்கும்.
அருமையான பதிவுக்கு நன்றி.//

வாங்க நண்பா..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

செங்கோவி said... 7
//பெரிய அணையில் சிறிய துவாரம் ஏற்பட்டு, நீர் கசியத் தொடங்கினாலும், அது நாளடைவில் பெரியதாகிய அணையையே அழித்துவிடும்.//

சூப்பர் மாயா!

நல்ல அறிவுரைகள்..வேலைக்குச் செல்லும் அனைவருக்கும் பயன்படும்!//

தங்களது வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது..நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிறிய விளக்கத்தோடு கூடிய
புத்தக அறிமுகம் அருமையிலும் அருமை
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்

சாந்தி மாரியப்பன் said...

நல்லதொரு பகிர்வு, வித்தியாசமான புத்தக அறிமுகம்.

rajamelaiyur said...

அருமையான பதிவு

rajamelaiyur said...

தமிழ்மணம் 5 th vote

இராஜராஜேஸ்வரி said...

பயனுள்ள அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
சின்ன விஷயம். சிந்திக்க வேண்டிய விஷயம். நன்றி.

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
என் இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக,
பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை.

நிரூபன் said...

ஒரு வேலையினை, எவ்வாறு முழுமையாகச் செய்து முடிப்பதென்பது பற்றிய அருமையான டிப்ஸ்களை வழங்கியிருக்கிறீங்க.

மாய உலகம் said...

Ramani said... 11
//சிறிய விளக்கத்தோடு கூடிய
புத்தக அறிமுகம் அருமையிலும் அருமை
பயனுள்ள பதிவு
தொடர வாழ்த்துக்கள்//

வாங்க சகோ...வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said... 12
//நல்லதொரு பகிர்வு, வித்தியாசமான புத்தக அறிமுகம்.//

வாங்க அமைதி... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

என் ராஜபாட்டை"- ராஜா said... 13
அருமையான பதிவு
தமிழ்மணம் 5 th vote//

வாங்க நண்பரே வாக்குக்கும் வாழ்த்துக்கும் நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 15
//பயனுள்ள அருமையான பகிர்வுக்கு பாராட்டுக்கள்.
சின்ன விஷயம். சிந்திக்க வேண்டிய விஷயம். நன்றி.//

வாங்க..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said... 16
வணக்கம் பாஸ்,
எப்படி இருக்கிறீங்க?
என் இணைய இணைப்பில் ஏற்பட்ட கோளாறு காரணமாக,
பதிவுலகப் பக்கம் வர முடியவில்லை.

ஒரு வேலையினை, எவ்வாறு முழுமையாகச் செய்து முடிப்பதென்பது பற்றிய அருமையான டிப்ஸ்களை வழங்கியிருக்கிறீங்க.//

வாங்க..வாழ்த்து மகிழ்ச்சி நன்றி

shanmugavel said...

பயனுள்ள பகிர்வு.

M.R said...

கருத்துக்கள் அருமை

கடைப்பிடித்தால் பெருமை

M.R said...

தமிழ் மணத்தில் ஒன்பதாவதாய் மனக்கிறேன்

தமிழ்வாசி பிரகாஷ் said...

அருமையான பகிர்வு. வாழ்த்துகள் நண்பா

இந்திரா said...

வெறுமனே, புத்தகத்தினைப் பற்றிய பொதுவான கருத்தினை வெளியிடாமல், அதில் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்தமைக்கு முதலில் உங்களைப் பாராட்டணும்.

இந்திரா said...

மேலோட்டமா பாத்தா இது சின்னதொரு தகவல்“னு தோணலாம். ஆனா அடிப்படைல நமது முன்னேற்றத்தை நிர்ணயிக்கிற ஒரு காரணினு கூட சொல்லலாம்.

செய்யிற வேலைய தேமேனு கடமைக்கு செய்யாம, ஈடுபாட்டோட முழு திருப்தி ஏற்பட்ற வகைல செய்யணும்னு சொன்னது.. உண்மையிலேயே நல்ல விசயம்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..

மாய உலகம் said...

shanmugavel said...
//பயனுள்ள பகிர்வு.//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

M.R said...
கருத்துக்கள் அருமை
கடைப்பிடித்தால் பெருமை

தமிழ் மணத்தில் ஒன்பதாவதாய் மனக்கிறேன்//

வாங்க சகோ நன்றி

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said...
//அருமையான பகிர்வு. வாழ்த்துகள் நண்பா//


வாங்க வாசி நண்பா..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

இந்திரா said...
வெறுமனே, புத்தகத்தினைப் பற்றிய பொதுவான கருத்தினை வெளியிடாமல், அதில் ஒரு சிறு பகுதியைப் பகிர்ந்தமைக்கு முதலில் உங்களைப் பாராட்டணும்.

மேலோட்டமா பாத்தா இது சின்னதொரு தகவல்“னு தோணலாம். ஆனா அடிப்படைல நமது முன்னேற்றத்தை நிர்ணயிக்கிற ஒரு காரணினு கூட சொல்லலாம்.

செய்யிற வேலைய தேமேனு கடமைக்கு செய்யாம, ஈடுபாட்டோட முழு திருப்தி ஏற்பட்ற வகைல செய்யணும்னு சொன்னது.. உண்மையிலேயே நல்ல விசயம்.

பகிர்வுக்கு நன்றி நண்பரே..//

வாங்க தோழி..தங்களது வருகையும் வாழ்த்தும் மகிழ்ச்சி அளிக்கிறது நன்றி

சக்தி கல்வி மையம் said...

ஒரு பயனுள்ள ..பாராட்டப் பட வேண்டிய பதிவு..

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
ஒரு பயனுள்ள ..பாராட்டப் பட வேண்டிய பதிவு..//

வாங்க நண்பா... பாராட்டுக்கு நன்றி

ஆமினா said...

நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துக்கள்

படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது

கவி அழகன் said...

அசத்தல் பதிவு

மாய உலகம் said...

ஆமினா said...
நல்லதொரு பதிவுக்கு வாழ்த்துக்கள்

படிக்கும் ஆர்வத்தை தூண்டுகிறது//

தங்களது வருகை மகிழ்ச்சி..கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

கவி அழகன் said...
அசத்தல் பதிவு//

வாங்க நண்பா..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
நல்ல பகிர்வு!//

வாழ்த்துக்கு நன்றி ஐயா

முற்றும் அறிந்த அதிரா said...

மாயாவா இப்பூடியெல்லாம் நல்ல நல்ல சிந்தனைகளை எமக்காக அள்ளி வழங்குவது!!!!... நல்ல நம்பிக்கையூட்டும் தகவல்கள்.

முற்றும் அறிந்த அதிரா said...

தொடர்ந்து இப்பூடித் தகவல்களை எதிர்பார்க்கிறேன் மாயாவிடமிருந்து.

ஊசிக்குறிப்பு:
அடிக்கடி “தொபுக்கடீர்ர்ர்ர்”:))) என தேம்ஸ்க்குள் குதிப்பதாலதான் இப்பூடியெல்லாம்.. கிட்னி வேர்க் பண்ணுது.. கீப் இற் அப்(நான் குதிப்பதுக்குச் சொன்னேனாக்கும் தேம்ஸ்ல:))).

முற்றும் அறிந்த அதிரா said...

90 வீதமும் மாயாவின் புதுத்தலைப்பு, எனக்கு வருவதில்லை, நானாகத்தான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டி இருக்கு, ஏனெனத் தெரியவில்லை:(.

மாய உலகம் said...

athira said...
மாயாவா இப்பூடியெல்லாம் நல்ல நல்ல சிந்தனைகளை எமக்காக அள்ளி வழங்குவது!!!!... நல்ல நம்பிக்கையூட்டும் தகவல்கள்.//

வாங்க..அள்ளிக்கொள்ளுங்கள்

மாய உலகம் said...

athira said...
தொடர்ந்து இப்பூடித் தகவல்களை எதிர்பார்க்கிறேன் மாயாவிடமிருந்து.

ஊசிக்குறிப்பு:
அடிக்கடி “தொபுக்கடீர்ர்ர்ர்”:))) என தேம்ஸ்க்குள் குதிப்பதாலதான் இப்பூடியெல்லாம்.. கிட்னி வேர்க் பண்ணுது.. கீப் இற் அப்(நான் குதிப்பதுக்குச் சொன்னேனாக்கும் தேம்ஸ்ல:))).//

ஆஹா கண்டுபுடுச்சுட்டாங்க்ய... இனிமே யாருக்கும் தெரியாம தேம்ஸ்ல குதிக்கோனும்...

மாய உலகம் said...

athira said...
90 வீதமும் மாயாவின் புதுத்தலைப்பு, எனக்கு வருவதில்லை, நானாகத்தான் தேடிக் கண்டு பிடிக்கவேண்டி இருக்கு, ஏனெனத் தெரியவில்லை:(.//

நீங்க ஃபாலோயராக சேர்ந்தது டேஸ்போர்டில் வருகிறது.. அதில் எப்படி ஃபாலோயரா சேர்கிறீர்கள் என தெரியவில்லை... ஒரு வேளை தேம்ஸ் நதியில் இருந்தே சேர்கிறீர்களோ... மெனக்கெட்டு மாய உலகம் இணைய நண்பர்கள் என்ற கேட்ஜட்டை ரெடி செய்துவைத்திருக்கிறேன்..ஆனால் நீங்கள் டேஸ்போர்டில் சேர்கிறீர்கள்... அது எப்படி இதோ கண்டுபிடிக்கிறேன்...ஹி ஹி ஹி

முற்றும் அறிந்த அதிரா said...

கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 003024980

என்னை இணைய விடுகுதில்லையே உங்கட நண்பர்கள் விட்ஜெட்டில்.. கர்ர்ர்ர். அதனாலதான் டாஸ்போர்ட்டூடாக(இமா உபயம்:)) இணைந்தேன்... பூஸ் படம் ஒருநாள் இங்கு தெரிஞ்சுது பின்பு... துரத்திட்டீங்கபோல காணவில்லை கர்ர்ர்ர்ர்ர்:).

மீண்டும் இணந்தேன் படம் வருகுதில்லை, சரி அது போகட்டும்.. நான் இன்னுமொரு புளொக்போல உருவாக்கி அதில் போட்டு வைத்திருக்கிறேன்.

சரி இப்போ என் பக்கத்தில் இணைக்கிறேன் அதில வருகுதோ பார்ப்போம் ஓக்கை.... அதிலயும் மேல வராவிட்டால்... தேம்ஸ்ல, அதுவும் முதலை இருக்கும் பக்கம் புடிச்சுத் தள்ளி விட்டிடுவேன்:)).

மாய உலகம் said...

athira said...
கர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்* 003024980//

அதென்ன நம்பரூஊஊஊஊ....அவ்வ்வ் ஆவி உலகத்துக்காஆஆஆஆஆஆஆஆ ஓடிர்ராஆஆஆ......


//என்னை இணைய விடுகுதில்லையே உங்கட நண்பர்கள் விட்ஜெட்டில்.. கர்ர்ர்ர். அதனாலதான் டாஸ்போர்ட்டூடாக(இமா உபயம்:)) இணைந்தேன்... பூஸ் படம் ஒருநாள் இங்கு தெரிஞ்சுது பின்பு... துரத்திட்டீங்கபோல காணவில்லை கர்ர்ர்ர்ர்ர்:).

மீண்டும் இணந்தேன் படம் வருகுதில்லை, சரி அது போகட்டும்.. நான் இன்னுமொரு புளொக்போல உருவாக்கி அதில் போட்டு வைத்திருக்கிறேன்.

சரி இப்போ என் பக்கத்தில் இணைக்கிறேன் அதில வருகுதோ பார்ப்போம் ஓக்கை.... அதிலயும் மேல வராவிட்டால்... தேம்ஸ்ல, அதுவும் முதலை இருக்கும் பக்கம் புடிச்சுத் தள்ளி விட்டிடுவேன்:)).//

தேம்ஸல ஒரு முதல வலம்வருத்தாஆஆஆஆஆஆ முதலைக்கு என்ன புடிக்கும்.... முதலை கூட டீல் வச்சுக்க வேண்டியதேன்....

குறையொன்றுமில்லை. said...

ஆமா நம்ம வேலை முதல்ல நமக்கு
திருப்தி தரனும். ஆனாதான்
மத்தவங்களையும் சரியாக சென்றடையும். சரியா சொன்னீங்க.

மாய உலகம் said...

Lakshmi said...
ஆமா நம்ம வேலை முதல்ல நமக்கு
திருப்தி தரனும். ஆனாதான்
மத்தவங்களையும் சரியாக சென்றடையும். சரியா சொன்னீங்க.//

வாங்க மேடம்... கருத்துக்கு நன்றி மேடம்

RAMA RAVI (RAMVI) said...

பயனுள்ள அறிவுரை. வாழ்த்துக்கள்.

மாய உலகம் said...

RAMVI said...
பயனுள்ள அறிவுரை. வாழ்த்துக்கள்.//


வாங்க வாழ்த்துக்கு நன்றிங்க


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out