Friday, 26 August 2011

இத மாதிரி பேசி நான் பாத்ததே இல்லைங்க

அன்றாட வாழ்கை அனுபவத்தை மகிழ்ச்சியாக மாற்றிக்கொள்ள சில நல்ல வழிகள்.....


முதலில் பிறருடைய விருப்பங்களை தெரிந்து கொள்ளவேண்டும். 
அவருக்கு விருப்பமான ஆர்வமுள்ள டாபிக் பற்றி பேசுங்கள்.

 பிறருடைய ஆர்வத்தில் மூழ்கி விடுவதால் உங்களை நீங்கள் மறந்துவிட வேண்டும்.  

. பிறர் உங்களை விரும்புவதாக நினைத்துக் கொள்ள வேண்டும். அவர்களோடு பழக முனைந்து செயல்படுங்கள் . 


ரிசர்வடாக இருந்தால் நீங்கள் தனிமையை விரும்புகிறீர்கள் என்று எண்ணி அவர்கள் உங்களை ஒதுக்கி விடுவார்கள். 

உங்கள் நண்பர்களோடு மட்டுமே பேசிக்கொண்டு இல்லாமல் பிறரோடும் சேர்ந்து பேசு பழகுங்கள். 

ஒவ்வொரு நாளும் நண்பர்களை , சக ஊழியர்களை சந்திக்கும்போது ஏனோதானோ என்று குட்மார்னிங் வணக்கம் என்று சொல்லாமல்
உரக்க அழுத்தமாக மகிழ்ச்சியாக 'குட்மார்னிங் ' வணக்கம் என்று சொல்லுங்கள். நீங்கள் இதய பூர்வமாக சொல்வதை அவர்கள் உணர்வார்கள். 

பிறர் தாழ்வாக எண்ணுவதை கண்டுபிடித்து அவரிடம் உள்ள உயர்ந்த பண்புகளையும், திறமைகளையும் புகழ்ந்து கூறுங்கள். 

அவரைப்பற்றி பேசாமல் அவரின் நுண்ணரிவு, ஆற்றல் போன்ற செய்கைகளின் உயர்வை புகழ்ந்து பேசுங்கள். 

பெண்களுக்கு அவர்களுடைய அழகு, உடை பற்றி புகழ்ந்து பேசினால் பிடிக்கும். திருமணமானவர் என்றால் குழந்தைகளைப் பற்றி பேசலாம். 

இயல்பான முறையில் புகழ்ந்து பேசலாம். உங்களுக்கு கீழ் பணியாற்றுபவரின் திறமையைப் போற்றும் அதேசமயம் அவரின் பிரச்சனைப்பற்றியும் அதனை எப்படி சமாளித்தார் என்றும் கேட்கலாம். தெரிந்தால் சரியான யோசனையைச் சொல்லி வழிகாட்டலாம். 

தவறு செய்துவிட்டால் அதனை தமாஷாக வெளிப்படுத்துங்கள். 
நீங்கள்  இதற்காக உங்களை தாழ்த்திக் கொள்ள வேண்டியதில்லை. 
தவற்றை உணர்ந்துள்ளீர்கள் என்று பிறர் புரிந்து கொண்டால் உங்கள் மதிப்பு உயரும். 

 உங்களின் உரிமைகளைக் கேட்கும்போது அதற்காக வருந்தாதீர்கள். உங்கள் உதவியாளரை அவர் செய்ய வேண்டிய வேலையைச் செய்யச் சொல்லி விட்டு,  பின்பு சிரமம் கொடுத்து விட்டேன். மன்னிக்கவும் என்று சொல்லாதீர்காள்.....

எந்த வயதினரையும் மதிக்க கற்றுக்கொள்ள வேண்டும். 
அனைவருக்கும் உயர்ந்த மரியாதை கொடுப்பதில் உங்களுக்கு நிகர் வேறு யாரும் இருக்க கூடாது.

மனித உறவு மகத்தானது - இனிமையானது என்பதை உணர்ந்து செயல்படுங்கள். 

காதலிக்க கற்றுக்கொள்ளுங்கள். அன்பு செலுத்துவதற்கு நிகரானது வேறொன்றுமில்லை. மனைவியை காதலிக்க இயலாவிட்டால் குழந்தைகளை காதலிக்க வேண்டும். 
நேசிப்பது உங்களுக்கு நல்ல ஆளுமையை அளிக்கும்.


 பிராணிகளுடன் அன்போடு பழகுங்கள். 

சூழ்நிலைகளை மாற்றுங்கள். கோடை விடுமுறை, வார விடுமுறை, பண்டிகை போன்ற காலங்களில் வெளியூர் சென்று வாருங்கள்! 

புது நபர்களையும் , புது இடங்களையும் பார்க்க வேண்டும். 

அலுவலகத்தில் உள்ள அமைப்பைக்கூட மாற்றிப் பார்க்கலாம். அதனால் உற்சாகம் பிறக்கும். 

வெற்றி பெற்ற மனிதரோடு உரையாடுங்கள். 

சந்தோசமாக இருப்பவர்களை கண்டு பேசுங்கள். 

எல்லோரும் சமம் என்று எண்ணுங்கள்.

நன்றி - டாக்டர் திரு: எல்.பிரதாப்சிங் அவர்கள் (வெற்றிக்கு வித்திடலாம் வாங்க -ஹெல்த் மாத இதழ் )

64 comments:

ஆமினா said...

நாலு வார்த்த பேசுறத்துக்கு இவ்வளவும் கத்துக்கணுமா.................

Chitra said...

நல்ல பகிர்வு.

மாய உலகம் said...

ஆமினா said...
நாலு வார்த்த பேசுறத்துக்கு இவ்வளவும் கத்துக்கணுமா.................//

வாங்க ஹா ஹா ... கத்துக்குட்டு கலக்கிப்பாருங்க.... உங்க கிட்ட சந்தோசமா கத்துவாங்க... நன்றி

மாய உலகம் said...

Chitra said...
நல்ல பகிர்வு.//

வாங்க வாழ்த்துக்கு நன்றி

குறையொன்றுமில்லை. said...

ராஜேஷ் நீ சொல்ற மாதிரில்லாம் நான்
இல்லே.ரொம்ப ரிசர்வ்ட் தான் இருக்கேன். ஆனாலும் நீங்கல்லாம் என்கூட நல்லா பழகுரீங்கதானே அது
எப்படி?

Unknown said...

பகிர்வுக்கு நன்றி மாப்ள!

மாய உலகம் said...

Lakshmi said...
ராஜேஷ் நீ சொல்ற மாதிரில்லாம் நான்
இல்லே.ரொம்ப ரிசர்வ்ட் தான் இருக்கேன். ஆனாலும் நீங்கல்லாம் என்கூட நல்லா பழகுரீங்கதானே அது
எப்படி//

ஹா ஹா நீங்க நேர்ல தான் ரிசர்வட் டைப்பா இருப்பதாக சொல்கிறீர்கள்...ஆனால் பதிவுலகில் பதிவிலும் , கருத்துகளிலும் கலகலப்பாக கலக்கிக்கொண்டிருக்கிறீர்கள்...

மாய உலகம் said...

விக்கியுலகம் said...
பகிர்வுக்கு நன்றி மாப்ள!//

வாங்க மாம்ஸ் கருத்துக்கு நன்றி

இமா க்றிஸ் said...

பகிர்வு நன்றாக இருக்கிறது ராஜேஷ்.

துளசி கோபால் said...

நல்லாத்தான் சொல்லி இருக்கார் டாக்டர்.

பகிர்வுக்கு நன்றி

கூடல் பாலா said...

குட் ஷேரிங் !நன்றி !

Prabu Krishna said...

எதோ நோயாளி மாதிரியே சொல்லுறீங்களே அப்பு...

Unknown said...

நல்ல பதிவு மாய!

பல அல்லது சில முயற்சி
செய்யலாம்.

புலவர் சா இராமாநுசம்

சக்தி கல்வி மையம் said...

பயனுள்ள பதிவு ராஜேஷ்..
பாராட்டுகள்..

மகேந்திரன் said...

ம்ம்ம்
அருமை படைப்பு நண்பரே.
தாழ்வெண்ணம் கொண்டோரிடம்
அவரின் உயரிய பண்பை அவர் உணரும்படி
தெரிவித்து அவரின் சீரிய உயரிய பண்பினை
வெளிக்கொணரலாம் என்ற அழகிய கருத்து அருமை.
நன்றி நண்பரே பதிவுக்கு.

vidivelli said...

நல்ல நல்ல விடயங்களை எவ்வளவு கஸ்ரப்பட்டு சொல்லித்தாறீங்க...
அப்புறம் நாங்க அப்பிடி இப்பிடி என்று எப்படி இருக்க முடியும்..
நல்ல பகிர்வு சகோ..
பாராட்டுக்கள்

M.R said...

யதார்த்த உண்மைகள் சகோ..

பகிர்வுக்கு நன்றி

தமிழ் மணம் எட்டு

test said...

நல்ல பதிவு பாஸ்! :-)

முத்துலெட்சுமி/muthuletchumi said...

பகிர்வுக்கு நன்றிங்க..மாய உலகம்..

பிலஹரி:) ) அதிரா said...

மாயா.... சூப்பர் பதிவு... இதைத்தான் நீங்களும் பின்பற்றுறீங்க என நினைக்கிறேன்.

பிலஹரி:) ) அதிரா said...

அது மு. வயிற்றினுள் போய் வந்ததால பார்த்தீங்களோ கிட்னி எப்பூடியெல்லாம் திங் பண்ணுது...:))

இராஜராஜேஸ்வரி said...

நல்ல பகிர்வு.

Rizi said...

good

Tamilmanam 11

சென்னை பித்தன் said...

நல்ல பகிர்வு!

Yaathoramani.blogspot.com said...

நல்ல புத்தகத்தை
அறிமுகப் படுத்தியமாதிரியும்
அதிலுள்ள நல்ல விஷயங்களை
கோடிட்டுக் காட்டியமாதிரியும்
ஒரு பதிவைக் கொடுத்தமாதிரியும்
மிக அழகாக திட்டமிட்டுச் செய்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 13

கதம்ப உணர்வுகள் said...

ஒரு சிலர் தன் ஒரு கண் போனாலும் மத்தவங்களுக்கு ரெண்டு போகனும்னு நிப்பாங்க....

ஒரு சிலர் தான் பெற்ற நல்லவை எல்லாருக்குமே கிடைக்கனும்னு சந்தோஷமா பகிர்வாங்க....

நான் சொன்ன இரண்டாவது ரகம் தான் நீங்கள் மாய உலகம் ராஜேஸ்....

நல்லவைகளை நீங்க படிச்சீங்க அதோட நிறுத்திக்கொள்ளாம அட நல்லவைகளை நாம் படித்து பயன் பெற்றது போல எல்லோரும் பயன் பெறட்டுமே என்ற அருமையான நல்ல மனசு இருப்பதால் தான் எங்களுக்கும் பகிர கொடுத்திருக்கீங்க

அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் அருமையான சிந்தனை வரிகளை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு....

Anonymous said...

பகிர்வு நன்றாக இருக்கிறது.. ராஜேஷ்...

கோகுல் said...

நல்லா பாச காது கொடுதிடிங்க நண்பா இனிமே கலக்குவோம்ல!

மாய உலகம் said...

இமா said...
பகிர்வு நன்றாக இருக்கிறது ராஜேஷ்.//

வாங்க கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

துளசி கோபால் said...
நல்லாத்தான் சொல்லி இருக்கார் டாக்டர்.

பகிர்வுக்கு நன்றி//

வாங்க ஹா ஹா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

koodal bala said...
குட் ஷேரிங் !நன்றி !//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

பலே பிரபு said...
எதோ நோயாளி மாதிரியே சொல்லுறீங்களே அப்பு...//

வாங்க ஹா ஹா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

புலவர் சா இராமாநுசம் said...
நல்ல பதிவு மாய!

பல அல்லது சில முயற்சி
செய்யலாம்.

புலவர் சா இராமாநுசம்//

வாங்க ஐயா... கண்டிப்பாக முயற்சி செய்யலாம் கருத்துக்கு நன்றி ஐயா

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said...
பயனுள்ள பதிவு ராஜேஷ்..
பாராட்டுகள்..//


வாங்க பாஸ் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said...
ம்ம்ம்
அருமை படைப்பு நண்பரே.
தாழ்வெண்ணம் கொண்டோரிடம்
அவரின் உயரிய பண்பை அவர் உணரும்படி
தெரிவித்து அவரின் சீரிய உயரிய பண்பினை
வெளிக்கொணரலாம் என்ற அழகிய கருத்து அருமை.
நன்றி நண்பரே பதிவுக்கு.//

வாங்க நண்பா... புரிதாலான கருத்துக்கு நன்றி நண்பரே

மாய உலகம் said...

vidivelli said...
நல்ல நல்ல விடயங்களை எவ்வளவு கஸ்ரப்பட்டு சொல்லித்தாறீங்க...
அப்புறம் நாங்க அப்பிடி இப்பிடி என்று எப்படி இருக்க முடியும்..
நல்ல பகிர்வு சகோ..
பாராட்டுக்கள்//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி சகோ

மாய உலகம் said...

Unknown said...
ரஜினி கிட்டத்தட்ட ஏனெனில் அவர் செய்யும் ஒவ்வொரு நடவடிக்கையில் அது சித்தரிக்கப்பட்ட உள்ளது வழியில், அசல் வார்த்தை பொருள்படுவதாகவே மாறிவிட்டது. ஒரு படி மேலே இந்த எடுத்து, ரஜினி இப்போது அசல் இருப்பது எப்படி அது நீண்ட கால பலன் பற்றி பேசுகிறது. இங்கே கிளிக் செய்வதன் மூலம், அவர் அது பற்றி செல்கிறது எவ்வாறு மேலும் கண்டுபிடிக்கவும்
http://bit.ly/n9GwsR//

வாங்க நண்பா இதோ பார்க்கிறேன்... வருகைக்கு நன்றி

மாய உலகம் said...

வாங்க சகோ...கருத்துக்கும் வாக்குக்கும் நன்றி

மாய உலகம் said...

ஜீ... said...
நல்ல பதிவு பாஸ்! :-)//

வாங்க ஜி கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

முத்துலெட்சுமி/muthuletchumi said...
பகிர்வுக்கு நன்றிங்க..மாய உலகம்..//

வாங்க மேடம்... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

athira said...
மாயா.... சூப்பர் பதிவு... இதைத்தான் நீங்களும் பின்பற்றுறீங்க என நினைக்கிறேன்.//

வாங்க மியாவ்! பின்ன பின்பற்றாம... சமாளிப்போம் ஹி ஹி

athira said...

இதமாதிரிப் பேசி நான் பார்த்ததேயில///

நீங்க எதைத்தான் ஒழுங்காப் பார்த்திருக்கிறீங்க:)), தொபுக்கடீர்ர்ர் என விழுந்திடுவீங்களே... நான் தேம்ஸ் ஐச் சொன்னேன்:)).

மாய உலகம் said...

athira said...
அது மு. வயிற்றினுள் போய் வந்ததால பார்த்தீங்களோ கிட்னி எப்பூடியெல்லாம் திங் பண்ணுது...:))

மு. வைத்துக்குள்ள போனதிலருந்து கிட்னி பயங்கரமா வேலை செய்யுது ஆனா முதலையோட கிட்னிய ஆரோ களாவாடிட்டாகலாம்...அவ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said...
நல்ல பகிர்வு.//

வாங்க மேடம் கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Raazi said...
good

Tamilmanam 11//

வாங்க வாக்குக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said...
நல்ல பகிர்வு!//

வாங்க நண்பரே ! கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Ramani said...
நல்ல புத்தகத்தை
அறிமுகப் படுத்தியமாதிரியும்
அதிலுள்ள நல்ல விஷயங்களை
கோடிட்டுக் காட்டியமாதிரியும்
ஒரு பதிவைக் கொடுத்தமாதிரியும்
மிக அழகாக திட்டமிட்டுச் செய்கிறீர்கள்
தொடர வாழ்த்துக்கள்
த.ம 13

தங்களது புரிதலான கருத்துக்கும் வாழ்த்துக்கும் வாக்குக்கும் மனமார்ந்த நன்றி

மாய உலகம் said...

மஞ்சுபாஷிணி said...
ஒரு சிலர் தன் ஒரு கண் போனாலும் மத்தவங்களுக்கு ரெண்டு போகனும்னு நிப்பாங்க....

ஒரு சிலர் தான் பெற்ற நல்லவை எல்லாருக்குமே கிடைக்கனும்னு சந்தோஷமா பகிர்வாங்க....

நான் சொன்ன இரண்டாவது ரகம் தான் நீங்கள் மாய உலகம் ராஜேஸ்....

நல்லவைகளை நீங்க படிச்சீங்க அதோட நிறுத்திக்கொள்ளாம அட நல்லவைகளை நாம் படித்து பயன் பெற்றது போல எல்லோரும் பயன் பெறட்டுமே என்ற அருமையான நல்ல மனசு இருப்பதால் தான் எங்களுக்கும் பகிர கொடுத்திருக்கீங்க

அன்பு நன்றிகள் மாய உலகம் ராஜேஸ் அருமையான சிந்தனை வரிகளை எங்களுக்கும் பகிர்ந்தமைக்கு....//

தங்களது வாழ்த்து மனதை குளிர செய்தது.... மனமார்ந்த நன்றிகள்

மாய உலகம் said...

ரெவெரி said...
பகிர்வு நன்றாக இருக்கிறது.. ராஜேஷ்...//

வாங்க ரெவரி..வாழ்த்துக்கு நன்றி

மாய உலகம் said...

கோகுல் said...
நல்லா பாச காது கொடுதிடிங்க நண்பா இனிமே கலக்குவோம்ல!//

காது கொடுத்துட்டோம் கலக்குங்க நண்பா...

athira said...

மு. வைத்துக்குள்ள போனதிலருந்து கிட்னி பயங்கரமா வேலை செய்யுது ஆனா முதலையோட கிட்னிய ஆரோ களாவாடிட்டாகலாம்...அவ்வ்வ்வ்வ்//

உங்கட கைவரிசையை முதலையிடமும் காட்டிட்டீங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அதுதான் நீண்ட நேரமா ஒரு முதலை ம்யா.. ம்யா... என வாலை வாலை அடிக்குது:), நான் சந்தேகப்பட்டேன் சரியாத்தான் இருக்கு.... நான் இப்போ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.. தேம்ஸ்சிலிருந்து:))).

shanmugavel said...

பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் நண்பா!

shanmugavel said...

த.ம.15

மாய உலகம் said...

athira said...
இதமாதிரிப் பேசி நான் பார்த்ததேயில///

நீங்க எதைத்தான் ஒழுங்காப் பார்த்திருக்கிறீங்க:)), தொபுக்கடீர்ர்ர் என விழுந்திடுவீங்களே... நான் தேம்ஸ் ஐச் சொன்னேன்:)).//

ஆஹா...! நம்ம வீகனஸ் வெளிய தெரிய ஆரம்பிச்கிடுச்சே.... தேம்ஸ சொன்னிகளா... நான் அப்படியே சாகாயிட்டேன்...அவ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said...
மு. வைத்துக்குள்ள போனதிலருந்து கிட்னி பயங்கரமா வேலை செய்யுது ஆனா முதலையோட கிட்னிய ஆரோ களாவாடிட்டாகலாம்...அவ்வ்வ்வ்வ்//

உங்கட கைவரிசையை முதலையிடமும் காட்டிட்டீங்களோ அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்:)) அதுதான் நீண்ட நேரமா ஒரு முதலை ம்யா.. ம்யா... என வாலை வாலை அடிக்குது:), நான் சந்தேகப்பட்டேன் சரியாத்தான் இருக்கு.... நான் இப்போ எஸ்கேப்ப்ப்ப்ப்ப்.. தேம்ஸ்சிலிருந்து:)))//

ஆஹா இதா போட்டு வாங்கறதா..ரெண்டு கிட்னி மிச்சாயிடுச்சே... எங்க போயிடப்போவுது ஒன்னு தேம்ஸ் இல்லன்னா முருங்க மரம்.... தோ முருங்க மரத்துல யாரோ யார்ராங்க உற்றாதடா கிளிப்பிள்ளை...புடீ

மாய உலகம் said...

shanmugavel said...
பயனுள்ள பதிவு.வாழ்த்துக்கள் நண்பா!

த.ம.15//

வாங்க நண்பா... வாழ்த்துக்கும் வாக்குக்கும் நன்றி

பிலஹரி:) ) அதிரா said...

அதாரது ஹை...ஃபை... குடுக்கிறது அவ்வ்வ்வ்வ்வ்:)).

மாய உலகம் said...

athira said...
அதாரது ஹை...ஃபை... குடுக்கிறது அவ்வ்வ்வ்வ்வ்:)).//

தூர எங்குலிஸ் பேசுது வெரி ஹுயுமர ஸ் கேர்ள்

kobiraj said...

பதிவு அருமை நண்பரே

நிரூபன் said...

வணக்கம் பாஸ்,
தாமதமான வருகையுடன் நிரூபன்,

ஹி...ஹி...


வாழ்க்கையில் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் எவ்வாறு பேச வேண்டும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.

சாந்தி மாரியப்பன் said...

அருமையான கருத்துகள்.. நீங்க மட்டும் பயனடையாம, எல்லோரோடயும் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.

மாய உலகம் said...

kobiraj said...
பதிவு அருமை நண்பரே//

வாங்க நண்பா... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
வணக்கம் பாஸ்,
தாமதமான வருகையுடன் நிரூபன்,

ஹி...ஹி...


வாழ்க்கையில் மனித உணர்வுகளைப் புரிந்து கொண்டு, நாம் எல்லோரும் எவ்வாறு பேச வேண்டும் என்பதனை அழகாகச் சொல்லியிருக்கிறீங்க.//

வாங்க தல... புரிதலான கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

அமைதிச்சாரல் said...
அருமையான கருத்துகள்.. நீங்க மட்டும் பயனடையாம, எல்லோரோடயும் பகிர்ந்துக்கிட்டதுக்கு நன்றி.//


வாங்க அமைதி... பாராட்டுக்கு நன்றி


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out