Friday 7 October, 2011

ஏ.ஆர்.முருகதாஸ் - பிரபலங்களைப் பற்றிய குறுஞ்செய்திகள்

ஏ.ஆர்.முருகதாஸ் :

சினிமா ஆசையில் சென்னைக்கு வந்த நேரம்.
அப்ப நான் தங்கியிருந்த மேன்ஷன் ரூம்மேட் திடீர் திடீர்னு மலை மலையா துணிகளைக் குவிச்சுவெச்சுத் துவைச்சுக்கிட்டு இருப்பார்.


'என்ன நண்பா மேட்டரு? 'ன்னு கேட்டப்ப, பிசினஸ் சீக்ரெட் அப்படின்னு சொன்னார். பக்கத்து லாண்டரியில துணிக்கு ஒரு ரூபாய்னு பேசி வாங்கிட்டு வந்து, இங்கே பில்டிங் ஓனருக்குத் தெரியாமத் துவைச்சுக் கொடுக்கனும்.

படைப்பாளி ஆகுற வரைக்கும் துவைப்பாளியா இருக்கலாமேன்னு நானும் அந்த பார்ட் டைம் ஜாப்ல பார்ட்னர் ஆனேன். எக்ஸ்ட்ரா லோடு துணிகள் அள்ளிட்டு வந்து அவர் கும்மிக் கொடுக்க, நான் அலசிப் பிழியன்னு கொஞ்ச நாள் ஓடுச்சு. நாங்க காயப் போடுற துணிகள் மொட்டை மாடியின் ஒரு சதுர அடி விடாம படபடக்கும்.

ஒரு நாள் மொட்டை மாடிக்கு வந்த ஹவுஸ் ஓனர் அவ்வளவு துணிகள் காயுரதைப் பார்த்துட்டு அதிர்ச்சி ஆயிட்டாரு, அவர் பார்வையை சமாளிக்க முடியாம, நான் உண்மையைச் சொல்லிட்டேன்.

' அடப்பாவி! சினிமாவை நம்பி ஊரைவிட்டு வந்து இப்படி ஊர் பேர் தெரியாதவன் துணிகளை யெல்லாம் துவைச்சுட்டு இருக்கியேடா.... பேசாம ஊருக்குத் திரும்பிப் போயிரு'ன்னாரு .

'இதுல என்ன சார் தப்பு? லாண்டரில போடுற நம்ம துணியை யாரோ துவைக்கிற மாதிரி, யாரோ ஒருத்தங்க துணியை நான் துவைக்கிறேன்'னு சொன்னேன். ஆழமா.... அமைதியா என்னையே பார்த்தார். 'இப்ப சொன்னதைத் திரும்பவும் சொல்லுன்னாரு. சொன்னேன்.

கொஞ்ச நேரம் யோசிச்சவர். 'நீ இன்னும் ஆறு மாசம் கழிச்சு கொடு. அப்ப நிச்சயம் வாடகை கொடுக்கிற நிலைமையில் நீ இருப்ப. இனிமே இப்படித் துணி துவைக்காதே. இந்த மனநிலையை எப்பவும் மாத்திக்காதே. நீ எங்கே போனாலும் அது தான் உனக்கு துணையா நிக்கும்'னார் . கிழக்கு மேற்கு தெரியாம சென்னையில் எப்படிக் காலம் தள்ளப் போறோம்னு அதுவரை எனக்குள் இருந்த தயக்கம்,மயக்கம் எல்லாம் உருகி உருத் தெரியாம அழிஞ்ச நாள் அது.

 எப்பவும் எந்த நிலைமையிலும் நாம மாறக்கூடாதுன்னு மனசுல பதிஞ்ச நாளும்கூட!"

( 'சினிமாத்தான் ஆசைன்னா தைரியமா போப்பா..
எந்த தொழிலும் தப்பு கிடையாது..உன் மேல நம்பிக்கை வை!'
அப்படின்னு சொல்லி வளர்த்தவர் அப்பா. )
சின்ன சின்ன வாய்ப்புகள் சினிமாவுல கிடைச்ச நேரத்துல..
எதிர்பாராத நாள்ல அப்பா இறந்துட்டாரு...

.மயான சடங்குகள் முடிந்து கிளம்பிட்டு இருந்தப்போ, அப்பாவோட நண்பர்கள்ல ஒருத்தர், 'பாவம் அருணாச்சலம், நல்லா உழைச்சான். புள்ளைகளைத் தறுதலையா வளர்த்துட்டதால, எந்தச் சுகத்தையும் அனுபவிக்காம கஷ்டப்பட்டே காலத்தை முடிச்சுக்கிட்டான்னு சொல்லிட்டாரு.

அவருக்கு பின்னாடி நான் நின்னுக்கிட்டிருந்ததை அவர் கவனிக்கலை.
எனக்கு நெஞ்சுக்குள்ள ஆணி அறைஞ்ச மாதிரி சுரீர்னு இருந்துச்சு.
அப்ப தீர்மானிச்சேன். நாம சினிமாவுல தொலைஞ்சு போனாலும் ,
தோத்து மட்டும் போகக்கூடாது.
எங்கப்பா என்னை சரியாத்தான் வளர்த்துருக்காருன்னு
அவங்க உணரனும்னு நினைச்சேன்................
        
 ======================================================================

உண்மைதானே அன்பர்களே அவர் அப்பா சரியாத்தான் வளர்த்திருக்கிறார்.. பள்ளிபருவத்தில் தாழ்வு மனப்பானமை உள்ளவரா இருந்தவர்...  இன்று திரையுலகில் மிகப்பெரிய இடத்தில் தடம் பதித்திருக்கிறார்... தூற்றியவர் கண்டிப்பாக இவரது திறமையை உணர்ந்து மூக்கின் மேல் விரலை வைத்திருப்பார்.

இனிமேல் நாமெல்லாம் முன்னேற வாய்ப்பே இல்லைன்னு மூலையில் ஒதுங்கி இருக்குறவங்க கூட மனம் வைத்து விடாமல் உழைத்தால் மிகப்பெரிய இடம் உண்டு என்பதை உணர்த்தும் விதமாக இவர் ஓர் நல்ல உதாரணம்.

தீனா, ரமணா, ஸ்டாலின், கஜினி , ஹிந்தியில் கஜினி, இப்போ ஏழாம் அறிவு... எல்லாம் அவருக்கு ஏறுமுகமே... அவரது வெற்றியில் அவரது கடின உழைப்பு தெரிகிறது.....    
 ( ஹிப்னாடிசம் சம்பந்தமாக கதை வைத்திருந்தேன்.. தமிழ் படத்தில் இதுவரை யாரும் ஹிப்னாடிசத்தைப் பற்றி யாரும் சொல்லியதில்லை என நினைத்தேன்.. ஏழாம் அறிவில் வில்லன் ஹிப்னாடிசம் தெரிந்தவராக காட்டியிருக்கிறார்.. அதிர்ச்சியாக இருந்தாலும் மகிழ்ச்சியாக இருக்கிறது.)

ஒவ்வொரு தமிழனும் பெருமை படும் விதமாக அமைந்த படம் ஏழாம் அறிவு என சொல்லியிருக்கிறார்...வெற்றி பெற வாழ்த்துவோம் நண்பர்களே....

=======================================================================
ஒரு நிமிசம்;

ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....

உங்கள் பிரியமானவன்,

96 comments:

Riyas said...

இயக்குனர் முருகதாஸ் பற்றி தெரியாத பல பக்கங்கள்,, தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா பகிர்விற்கு,,

Riyas said...

ஒஹ்ஹ்ஹ் me the first வடையும் கிடைச்சது நல்ல தகவலும் கிடைச்சது,,

முருகதாஸ் இன்னும் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்

Dr. Butti Paul (Real Santhanam Fanz) said...

நிச்சயாமாக, முருகாதாஸ் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.

Unknown said...

ராஜேஷ்,
நம்பிக்கை கொடுக்கும் செய்திகளை முருகதாஸ் வழியாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
கடந்த கட்டுரை போலவே இதுவும் நம்பிக்கையை விதைக்கும் கட்டுரை.
தொடரட்டும்.

தமிழ்வாசி பிரகாஷ் said...

நண்பரே, முருகதாஸ் பற்றிய விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.

K said...

நண்பா! எ.ஆர்.முருகதாஸ் பற்றிய குறிப்புக்கள் அருமை! கடைசியில சொல்லியிருக்கற தத்துவம்! சூப்பர்ர்!!

அம்பாளடியாள் said...

தன்னம்பிக்கை தரவல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........
(இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் கவிஞரே!..)

Unknown said...

தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள!

நண்டு @நொரண்டு -ஈரோடு said...

ம் ...

சக்தி கல்வி மையம் said...

இயக்குனரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி..

இராஜராஜேஸ்வரி said...

அவரவர் வாழ்க்கையில்
அவரவர் தாமாய் மலரவேண்டும்!

முத்தாய்ப்பான முழுமையான முருகதாஸின்
அருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்!

M.R said...

தன்னம்பிக்கை தரும் மனிதர் ,அவரின் தகவல் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,பகிர்ந்தமைக்கு நன்றி சகோ

thendralsaravanan said...

தன்னம்பிக்கை தரும் பதிவு!வாழ்த்துக்கள்...

சி.பி.செந்தில்குமார் said...

பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்

பாலா said...

எல்லா வெற்றியாளர்கள் பின்னாடியும் கடின உழைப்பு இருக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

தன்னம்பிக்கை ஊட்டிப் போகும் தரமான பதிவு
பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9

rajamelaiyur said...

பல புதிய தகவல்கள் நன்றி

rajamelaiyur said...

இன்று என் வலையில் ...

இது நியாயமா ? யாராவது பதில் சொல்லுங்கள்.

மகேந்திரன் said...

பக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து ஒரு மனிதனை
பற்றி எழுதும் பொது எழுதும் எழுத்துக்களே அழகாகிறது.
தெரியாத பல விஷயங்கள்.
முண்டியிட்டு முன்னேறும் முயற்சி வீரர்கள் வெற்றி பெறுவார்கள்
என்ற வார்த்தைக்கு ஏற்ப இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
முன்னேறட்டும் வாழ்வில்...

அன்பு நண்பர் ராஜேஷ்
உங்களின் எழுத்துக்களில் அழகு மெருகேறுகிறது..
கூடியவிரைவில் உங்களையும் ஒரு நல்ல இயக்குனராக
காணவேண்டும் என உள்ளம் கொண்டாடுகிறது...
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இறைவன் துணைபுரிவான்.

Radha rani said...

எத்தணை கை ஆதரவு கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதன் பள்ளத்தில் இருந்து மேலே வருவதற்கு தன்னம்பிக்கைதான் வலிமையான கை. ஏ.ஆர் முருகதாஸ் வாழ்க்கையில் இதை அனுபவித்து ஏற்றம் கண்டிருக்கிறார்.நல்ல பதிவு.

முற்றும் அறிந்த அதிரா said...

ஆஆஆஆஆஅ மாயா.. நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊ..

ஆரம்பம் படிச்சதும், இது மாயா தன் கதை சொல்றாரோ இருக்காதே எனக் குழம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்:)).

முற்றும் அறிந்த அதிரா said...

ஏ ஆர் முருகதாஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா வயதான ஆள் என நினைச்சிருந்தேனே :)))

முற்றும் அறிந்த அதிரா said...

இவ்ளோ கதை இருக்கா, இவருக்குப் பின்னால....

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcS71hw5E1jMU_SQusM0HqUFAaUjLK4MvwbuhEQ539-OwJn_A3W4Sw[/im]

முற்றும் அறிந்த அதிரா said...

ஒவ்வொரு சினிமாவில் பெரிய இடத்தில் இருப்போரின் பின்னணிக்கதை எல்லாம் இப்படித்தான் இருக்கு.

“உளி இறங்குவது, வலி என நினைத்தால் எந்தக் கல்லும் சிலையாகாது”

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTSQxVv5P2teW4tZAlzj_uYRa3Ccf48bM7TpOoAQaDI4dLcGJogwA[/im]

maya, siyaa miyaa...பிறகு வாறேன்... நேரம் போட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ

ஸாதிகா said...

பரவாஇல்லை.நல்லாவே சினி சிப்ஸ்களை அள்ளி வழங்குறீங்க.

தனிமரம் said...

தன் திறமையில்  வலுவான நம்பிக்கை கொண்ட இயக்குனர் அவர்! நல்ல பகிர்வு!

கோகுல் said...

எனக்கு இவரைப்பற்றி தெரிந்த ஒரு விஷயம்.
இவரிடம் உதவி கேட்டு இவருக்கு ஒரு கடிதம் வந்ததாம் .அதில் ஒரு மாணவி +2 வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் மேலே படிக்க முடியாமல் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.இவரும் உதவலாம் என பார்த்தல் கடிதத்தில் முகவரி இல்லையாம்.கடிதத்தில் இருந்த முத்திரையை வைத்து தேடி அந்த கஷ்டப்படும் பெண்ணை கண்டுபிடித்து இன்று மருத்துவத்துக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
யாருக்கு இப்படி செய்யத்தொன்றும்?

சினிமாவையும் தவிர்த்து இவர் ஒரு சிறந்த மனிதர் தான் .

நன்றி ராஜேஷ்!பகிர்வுக்கு!

சசிகுமார் said...

நல்லா இருக்கு....

செங்கோவி said...

முருகதாஸ் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக எப்போதும் குறிப்பிடப்படுவார்..

ராஜா MVS said...

முருகதாஸ் கதைகளை கையாளும் விதம் வித்தியாசமான கோணமாக இருக்கும்... மிக அருமையான இயக்குனர்... அவர்களை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நண்பா...

ராஜா MVS said...

ராஜேஷ்... இவரின் படபட்டியலில் 'ஸ்டாலின்' என்று குறிப்பிட்டிருக்கிங்களே.. அது தமிழ் படமா? எப்ப வந்தது? நான் இப்பெயரில் படங்கள் ஏதும் கேள்வி படவே இல்லையே..நண்பா...
இது அவர் தயாரிப்பிலா.. அல்லது இயக்கிய படமா...

சந்திர வம்சம் said...

[im]http://i981.photobucket.com/albums/ae300/rsimbu/shankarp071_original.jpg[/im]

RAMA RAVI (RAMVI) said...

தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் எந்த அளவு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை முருகதாஸ் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அருமையான பதிவு ராஜேஷ்.வாழ்த்துக்கள்.

Unknown said...

நல்ல அருமையான பகிவு நண்பா

Anonymous said...

நானும் ஒரு படத்தை வச்சு...அவரை தலைல வச்சு தூக்குறாங்கலேன்னு அடிக்கடி சொல்லுவேன்...
ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் இந்த கடின உழைப்பு...இலக்கு நோக்கி தவ பயணம் இருப்பதை மறுபடியும் எனக்கு நினைவு படுத்தியதுக்கு நன்றி நண்பரே ...

Anonymous said...

இனி அவருடைய முதல் விசிறி நான் தான்...

மாய உலகம் said...

Riyas said... 1
இயக்குனர் முருகதாஸ் பற்றி தெரியாத பல பக்கங்கள்,, தெரிந்து கொண்டேன் நன்றி நண்பா பகிர்விற்கு,,//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

Riyas said... 2
ஒஹ்ஹ்ஹ் me the first வடையும் கிடைச்சது நல்ல தகவலும் கிடைச்சது,,

முருகதாஸ் இன்னும் வெற்றிகள் படைக்க வாழ்த்துக்கள்//

ஆரியபவன் ஓடர்வடை உங்களுக்கே.... நன்றி

மாய உலகம் said...

Dr. Butti Paul said... 3
நிச்சயாமாக, முருகாதாஸ் வாழ்க்கை ஒவ்வொருவருக்கும் ஒரு படிப்பினை. பகிர்வுக்கு நன்றி நண்பரே.//

வாங்க நண்பா... கரெக்டா சொன்னீங்க நண்பா.... நன்றி

shanmugavel said...

//ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....//அருமை.

மாய உலகம் said...

அப்பு said... 4
ராஜேஷ்,
நம்பிக்கை கொடுக்கும் செய்திகளை முருகதாஸ் வழியாகப் பகிர்ந்துள்ளீர்கள்.
கடந்த கட்டுரை போலவே இதுவும் நம்பிக்கையை விதைக்கும் கட்டுரை.
தொடரட்டும்.//

வாங்க சார்! தங்களது கருத்துக்கு மனம் கனிந்த நன்றி!

மாய உலகம் said...

தமிழ்வாசி - Prakash said... 5
நண்பரே, முருகதாஸ் பற்றிய விசயங்களை பகிர்ந்தமைக்கு நன்றி.//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

Powder Star - Dr. ஐடியாமணி said... 6
நண்பா! எ.ஆர்.முருகதாஸ் பற்றிய குறிப்புக்கள் அருமை! கடைசியில சொல்லியிருக்கற தத்துவம்! சூப்பர்ர்!!//

வாங்க நண்பா.. கருத்துக்கு மனப்பூர்வமான நன்றி

மாய உலகம் said...

அம்பாளடியாள் said... 7
தன்னம்பிக்கை தரவல்ல பகிர்வு .வாழ்த்துக்கள் சகோ .
மிக்க நன்றி பகிர்வுக்கு ........
(இன்று என் தளத்தைக் காணத் தவறாதீர்கள் கவிஞரே!..)//

வாங்க சகோ! கருத்துக்கு நன்றி... தங்களது தளத்திற்கு வந்து கவிதை படித்து கருத்தும் வாக்கும் அளித்துவிட்டேன் சகோ... நன்றி

மாய உலகம் said...

விக்கியுலகம் said... 8
தெரியாத விஷயங்கள் தெரிந்து கொண்டேன் நன்றி மாப்ள!//

வாங்க மாம்ஸ்.. கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

நண்டு @நொரண்டு -ஈரோடு said... 9
ம் ...//

வாங்க சகோ நன்றி!

மாய உலகம் said...

!* வேடந்தாங்கல் - கருன் *! said... 10
இயக்குனரைப் பற்றி தெரியாத பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன். நன்றி..//

வாங்க சகோ.... கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

இராஜராஜேஸ்வரி said... 11
அவரவர் வாழ்க்கையில்
அவரவர் தாமாய் மலரவேண்டும்!

முத்தாய்ப்பான முழுமையான முருகதாஸின்
அருமையான பகிர்வுக்கு மனம் நிறைந்த வாழ்த்துக்கள்!
பாராட்டுக்கள்!//

வாங்க மேடம்... தங்களது கருத்துக்கு மிக்க நன்றி!

மாய உலகம் said...

M.R said... 12
தன்னம்பிக்கை தரும் மனிதர் ,அவரின் தகவல் அறிந்ததில் மிக்க மகிழ்ச்சி ,பகிர்ந்தமைக்கு நன்றி சகோ//

வாங்க சகோ கருத்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

thendralsaravanan said... 13
தன்னம்பிக்கை தரும் பதிவு!வாழ்த்துக்கள்...//

வாங்க வாழ்த்துக்கு மிக்க நன்றி

மாய உலகம் said...

சி.பி.செந்தில்குமார் said... 14
பல விஷயங்கள் தெரிந்து கொண்டேன்//

வாங்க சகோ! வருகைக்கும் கருத்துக்கும் நன்றி

மாய உலகம் said...

பாலா said... 15
எல்லா வெற்றியாளர்கள் பின்னாடியும் கடின உழைப்பு இருக்கிறது.//

கண்டிப்பாக உண்மை நண்பா... கருத்துக்கு நன்றி!

மாய உலகம் said...

Ramani said... 16
தன்னம்பிக்கை ஊட்டிப் போகும் தரமான பதிவு
பதிவிட்டமைக்கு நன்றி
தொடர வாழ்த்துக்கள்
த.ம 9//

வாங்க சகோ! தங்களது வாழ்த்துக்கு மனம் கனிந்த நன்றி!

மாய உலகம் said...

"என் ராஜபாட்டை"- ராஜா said... 17
பல புதிய தகவல்கள் நன்றி//

வாங்க நண்பா.. நன்றி

மாய உலகம் said...

மகேந்திரன் said... 19
பக்கத்தில் இருந்து பார்த்து பார்த்து ஒரு மனிதனை
பற்றி எழுதும் பொது எழுதும் எழுத்துக்களே அழகாகிறது.
தெரியாத பல விஷயங்கள்.
முண்டியிட்டு முன்னேறும் முயற்சி வீரர்கள் வெற்றி பெறுவார்கள்
என்ற வார்த்தைக்கு ஏற்ப இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ்.
முன்னேறட்டும் வாழ்வில்...

அன்பு நண்பர் ராஜேஷ்
உங்களின் எழுத்துக்களில் அழகு மெருகேறுகிறது..
கூடியவிரைவில் உங்களையும் ஒரு நல்ல இயக்குனராக
காணவேண்டும் என உள்ளம் கொண்டாடுகிறது...
எல்லாம் நல்லபடியாக நடக்கும்.
இறைவன் துணைபுரிவான்.//

தங்களது அழகான கருத்துக்கும்.. மனப்பூர்வமான வாழ்த்துக்கும் இதயம் கனிந்த நன்றிகள் நண்பா.. நன்றி

மாய உலகம் said...

ராதா ராணி said... 20
எத்தணை கை ஆதரவு கொடுத்தாலும்,கொடுக்காவிட்டாலும் ஒரு மனிதன் பள்ளத்தில் இருந்து மேலே வருவதற்கு தன்னம்பிக்கைதான் வலிமையான கை. ஏ.ஆர் முருகதாஸ் வாழ்க்கையில் இதை அனுபவித்து ஏற்றம் கண்டிருக்கிறார்.நல்ல பதிவு.//

வாங்க... சரியான கருத்து.. மிக்க நன்றி

மாய உலகம் said...

athira said... 21
ஆஆஆஆஆஅ மாயா.. நான் தான் 1ஸ்டூஊஊஊஊஊஊ..

ஆரம்பம் படிச்சதும், இது மாயா தன் கதை சொல்றாரோ இருக்காதே எனக் குழம்பிட்டேன் அவ்வ்வ்வ்வ்:)).//

என் கதைய ஒரு நாள் இன்னொருவர் சொல்வாங்க.... அவ்வ்வ்வ்வ்வ்

மாய உலகம் said...

athira said... 22
ஏ ஆர் முருகதாஸ் கேள்விப்பட்டிருக்கிறேன், ஆனா வயதான ஆள் என நினைச்சிருந்தேனே :)))//


ஹா ஹா அவர் யூத்துங்க என்னைவிட இரண்டுவயது மூத்தவர்...
அவர் 1978 27 ஏப்ரல்... ஹி ஹி நான் 1980 27 பிப்ரவரி..

மாய உலகம் said...

athira said... 23
இவ்ளோ கதை இருக்கா, இவருக்குப் பின்னால....//

இன்னும் நிறைய இருக்கு அவரது கல்யாணம் காதல் கல்யாணம் அவரது காதல் கைகூட அஜித்குமார் கூட உதவியதாக கேள்வி...இன்றும் சாலிகிராமத்தில் ஒரு சாட்ஸ் போட்டுக்கொண்டு சாதாரணமாக வந்து டீ சாப்பிடுவார்.. தலைகனம் இல்லாத இயக்குநர்களில் இவரும் ஒருவர்... அவரைப்பற்றி நிறைய சொல்லிக்கொண்டே போகலாம்.. பள்ளியில் படிக்கும்போது தனது தோழியை இம்பரஸ் செய்வதற்காக பழைய புத்தக கடையில் பழைய கதை புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்து கொடுப்பார்... ஆனால் இவருக்கு போட்டியாக சக மாணவன் புது புது புத்தகங்களை வாங்கி கொடுத்து அந்த பொண்ணை இவரைக்காட்டிலும் இம்ப்ரஸ் செய்ய.... முருகதாஸ் பத்திரிக்கையில் எழுதி அது கதையாக வர.. மீண்டும் இவரே ஜெயித்தார்... இன்னும் நிறைய இவரைப்பற்றி சொல்லிக்கொண்டே போகலாம்...கிரேட் மேன்... இவருக்கு ரெக்கமண்டும் பிடிக்காது..[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcSvngMWTzW4sOACPN8LzclHXqFrAm6VgQEhp_ruz4O2KkXlU7lUXQ[/im]

மாய உலகம் said...

athira said... 24
ஒவ்வொரு சினிமாவில் பெரிய இடத்தில் இருப்போரின் பின்னணிக்கதை எல்லாம் இப்படித்தான் இருக்கு.

“உளி இறங்குவது, வலி என நினைத்தால் எந்தக் கல்லும் சிலையாகாது”



maya, siyaa miyaa...பிறகு வாறேன்... நேரம் போட்டுதூஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஊஉ//

சூப்பர் தத்துவம் மியா... மிக்க நன்றி வெய்ட்டிங்க்

மாய உலகம் said...

ஸாதிகா said... 25
பரவாஇல்லை.நல்லாவே சினி சிப்ஸ்களை அள்ளி வழங்குறீங்க.//

வாங்க கருத்துக்கு நன்றி.. வழங்குவதே உங்களை போன்ற நண்பர்கள் வந்து படிக்க தானே நன்றி

மாய உலகம் said...

தனிமரம் said... 27
தன் திறமையில் வலுவான நம்பிக்கை கொண்ட இயக்குனர் அவர்! நல்ல பகிர்வு!//

வாங்க தனிமரம்... கருத்துக்கு மிக்க நன்றி!

மாய உலகம் said...

கோகுல் said... 28
எனக்கு இவரைப்பற்றி தெரிந்த ஒரு விஷயம்.
இவரிடம் உதவி கேட்டு இவருக்கு ஒரு கடிதம் வந்ததாம் .அதில் ஒரு மாணவி +2 வில் நல்ல மதிப்பெண் கிடைத்தும் மேலே படிக்க முடியாமல் இருப்பதாக எழுதப்பட்டிருந்தது.இவரும் உதவலாம் என பார்த்தல் கடிதத்தில் முகவரி இல்லையாம்.கடிதத்தில் இருந்த முத்திரையை வைத்து தேடி அந்த கஷ்டப்படும் பெண்ணை கண்டுபிடித்து இன்று மருத்துவத்துக்கு படிக்க வைத்துக்கொண்டிருக்கிறார்.
யாருக்கு இப்படி செய்யத்தொன்றும்?

சினிமாவையும் தவிர்த்து இவர் ஒரு சிறந்த மனிதர் தான் .

நன்றி ராஜேஷ்!பகிர்வுக்கு!//

சூப்பர் நண்பா.. உண்மை இவர் மிகவும் நல் உள்ளம் கொண்டவர். வெளிவேசம் நம்பாதவர் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம்... சூப்பர் கோகுல் கருத்துக்கு மனம் கனிந்த நன்றி.

மாய உலகம் said...

சசிகுமார் said... 29
நல்லா இருக்கு....//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி

சென்னை பித்தன் said...

முருகதாஸ் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.

மாய உலகம் said...

செங்கோவி said... 30
முருகதாஸ் இந்தியாவின் முக்கியமான இயக்குநர்களில் ஒருவராக எப்போதும் குறிப்பிடப்படுவார்..//

வாங்க நண்பரே! சரியாக சொன்னீங்க கருத்துக்கு நன்றி.

மாய உலகம் said...

ராஜா MVS said... 31
முருகதாஸ் கதைகளை கையாளும் விதம் வித்தியாசமான கோணமாக இருக்கும்... மிக அருமையான இயக்குனர்... அவர்களை பற்றி அறியாத செய்திகளை பகிர்ந்து கொண்டமைக்கு நன்றி... நண்பா...//

வாங்க நண்பா... கருத்துக்கு மிக்க நன்றி நண்பா

மாய உலகம் said...

ராஜா MVS said... 32
ராஜேஷ்... இவரின் படபட்டியலில் 'ஸ்டாலின்' என்று குறிப்பிட்டிருக்கிங்களே.. அது தமிழ் படமா? எப்ப வந்தது? நான் இப்பெயரில் படங்கள் ஏதும் கேள்வி படவே இல்லையே..நண்பா...
இது அவர் தயாரிப்பிலா.. அல்லது இயக்கிய படமா...//
[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcTvS9shaUXPztR9SiL4sInnXDO728D5GFILa8uOTimSlI2FDUmW[/im]
ஸ்டாலின் படம் தெலுங்கில் ஆந்திர சூப்பர் ஸ்டார் சிரஞ்சீவிய வச்சு எடுத்த படம் சோசியல் சைன் லிங் சம்பந்த பட்ட கதையம்சமுள்ள படம். தயாரிப்பு நாகேந்திர பாபு அவர்கள்..எழுதி இயக்கியது ஏ.ஆர்.முருகதாஸ்...ஆனால் திரைக்கதை பஞ்சரி பிரதர்ஸ்..2006 ல 16 கோடியில வெளிவந்து 30 கோடி ரூபாய் பாக்ஸ் ஆபிஸ் செய்தது.....

மாய உலகம் said...

சந்திர வம்சம் said...//

வாங்க சந்திரவம்சம்...வணக்கம்

மாய உலகம் said...

RAMVI said... 34
தன்னம்பிக்கையும் விடாமுயற்சியும் இருந்தால் ஒருவர் எந்த அளவு வாழ்க்கையில் முன்னேறலாம் என்பதை முருகதாஸ் அவர்களை பார்த்து தெரிந்து கொள்ளலாம்.
அருமையான பதிவு ராஜேஷ்.வாழ்த்துக்கள்.//

வாங்க..கரெக்டா சொன்னீங்க... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மிக்க நன்றி

மாய உலகம் said...

வைரை சதிஷ் said... 36
நல்ல அருமையான பகிவு நண்பா//

வாங்க நண்பா கருத்துக்கு நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

ஹா..ஹா..ஹா... எல்லாம் சொல்லிட்டீங்களோ:))))

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcRsnzEEI13OUmARqnZCepUtPPcvKZy2u4KBw-4I6lY8jetw-tmP0Q[/im]

மாய உலகம் said...

ரெவெரி said... 37
நானும் ஒரு படத்தை வச்சு...அவரை தலைல வச்சு தூக்குறாங்கலேன்னு அடிக்கடி சொல்லுவேன்...
ஒவ்வொரு வெற்றிக்குப்பின்னும் இந்த கடின உழைப்பு...இலக்கு நோக்கி தவ பயணம் இருப்பதை மறுபடியும் எனக்கு நினைவு படுத்தியதுக்கு நன்றி நண்பரே ...//

நிறைய பேர் சிலரை பற்றி தெரியாமலயே வசைப்பாடுவது உண்டு.. ஒரு வெற்றியானாலும் அது சாதாரணமானதல்ல நண்பா.. இப்பொழுது நன்றாக புரிந்துக்கொண்டீர்கள் அல்லவா அது போதும் நண்பா மனதுக்கு திருப்தி அளிக்கிறது.

மாய உலகம் said...

ரெவெரி said... 38
இனி அவருடைய முதல் விசிறி நான் தான்...//

சபாஷ்,,, சூப்பர் நண்பா...

மாய உலகம் said...

shanmugavel said... 42
//ஒவ்வொரு தனி மனிதரும் அவருடைய முழுமையை உணர வேண்டும். அப்போது தான் வாழ்க்கை அற்புதமாகும். அவரவர் வாழ்க்கையில் அவரவர் தாமாக மலர வேண்டும்.....//அருமை.//

வாங்க நண்பா நன்றி

மாய உலகம் said...

சென்னை பித்தன் said... 68
முருகதாஸ் பற்றி அருமையாகச் சொன்னீர்கள்.
7 October 2011 8:47 PM //

வாங்க ஐயா கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

athira said... 76
ஹா..ஹா..ஹா... எல்லாம் சொல்லிட்டீங்களோ:))))//

மியா கேட்டா சொல்லிதானே ஆகனும். :-)))))))))
[im]http://t3.gstatic.com/images?q=tbn:ANd9GcSKkxc8GRdTWHw239BkBayC9wFoN1B3EPpgtgwI7njd9Sa5IyZH[/im]

Anonymous said...
This comment has been removed by the author.
Anonymous said...

முருகதாஸ் எவ்வளவு ஒசரத்துக்கு போனாலும் மனுஷன் இவ்வளவு எளிமையா இருக்காரேன்னு ஆச்சரியப்பட வைக்கிறாரு.... நேத்து சன் டிவி பாடல் வெளியீட்டு விழாலயும் மனுஷன் வழக்கம்போலவே ஆர்பாட்டம் இல்லாமலே இருந்தாரு....வாழ்த்துவோம்....

மாய உலகம் said...

மொக்கராசு மாமா said...
முருகதாஸ் எவ்வளவு ஒசரத்துக்கு போனாலும் மனுஷன் இவ்வளவு எளிமையா இருக்காரேன்னு ஆச்சரியப்பட வைக்கிறாரு.... நேத்து சன் டிவி பாடல் வெளியீட்டு விழாலயும் மனுஷன் வழக்கம்போலவே ஆர்பாட்டம் இல்லாமலே இருந்தாரு....வாழ்த்துவோம்....//

[im]http://i1099.photobucket.com/albums/g389/rajeshnedveera80/111.png[/im] வாங்க... கருத்துக்கு நன்றி

முற்றும் அறிந்த அதிரா said...

ஹையோ... என்ன இது முதல மேல பேபீஈஈஈஈஈஈஈ:))) அப்போ மாயா எங்ங்ங்ங்ங்ங்ஙே....:))).. ஒருவேளை தண்ணிக்கு அடியிலயோ?:))))

[im]http://t1.gstatic.com/images?q=tbn:ANd9GcSeOszwZsRHYZcKNremTYMOPrxjhOPrysW3RZpZJXDbXEA1YC5E[/im]

மாய உலகம் said...

athira said...
ஹையோ... என்ன இது முதல மேல பேபீஈஈஈஈஈஈஈ:))) அப்போ மாயா எங்ங்ங்ங்ங்ங்ஙே....:))).. ஒருவேளை தண்ணிக்கு அடியிலயோ?:))))//

தண்ணிக்குள்ள ரெஸ்ட் எடுத்தாலும்.... மியாவ் கண்டு பிடிச்சுபுடுதூஊஊஊ

[im]http://t2.gstatic.com/images?q=tbn:ANd9GcQoEv1eDmXA6ag9us04oALPQdVqDxf82k-oWi_TPFr7_CvhRmGd[/im]

ராஜா MVS said...

ஸ்டாலின் படம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி... நண்பா...

மாய உலகம் said...

ராஜா MVS said... 87
ஸ்டாலின் படம் பற்றிய தகவலுக்கு மிக்க நன்றி... நண்பா...//

உங்களது மீண்டும் வருகைக்கு மிக்க நன்றி நண்பா.

காட்டான் said...

நல்லதோர் பதிவு முருகதாஸ் என்ற உழைப்பாளியின் வெற்றி போல நீங்களும் சினிமாவில் சாதிக்கவேண்டும்...!!! வெற்றி பெற்ற உங்கள் பேட்டியை ஆனந்தவிகடனின் ஓன்லைனில் பார்த்து  அதற்கும் கொமன்ஸ் போடும் நாள் எனக்கு வெகு தூரத்தில் இல்லை வாழ்த்துக்கள் மாப்பிளை..

சத்ரியன் said...

ராஜேஷ்,

முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முருகதாஸ் ஒரு சிறந்த முன்மாதிரி!

பகிர்விற்கு வாழ்த்துக்கள் தோழா!

Anonymous said...

[box]எனக்குள் ஒரு புத்துணர்வை தந்த பதிவு[/box]

மாய உலகம் said...

காட்டான் said... 89
நல்லதோர் பதிவு முருகதாஸ் என்ற உழைப்பாளியின் வெற்றி போல நீங்களும் சினிமாவில் சாதிக்கவேண்டும்...!!! வெற்றி பெற்ற உங்கள் பேட்டியை ஆனந்தவிகடனின் ஓன்லைனில் பார்த்து அதற்கும் கொமன்ஸ் போடும் நாள் எனக்கு வெகு தூரத்தில் இல்லை வாழ்த்துக்கள் மாப்பிளை..//

வாங்க மாம்ஸ்... உங்களது அன்பான ஆசிர்வாதத்திற்கு அன்பு கனிந்த நன்றிகள் மாம்ஸ்

மாய உலகம் said...

சத்ரியன் said... 90
ராஜேஷ்,

முன்னேறத் துடிக்கும் இளைஞர்களுக்கு முருகதாஸ் ஒரு சிறந்த முன்மாதிரி!

பகிர்விற்கு வாழ்த்துக்கள் தோழா!//

வாங்க நண்பா.... கருத்துக்கும் வாழ்த்துக்கும் மனம்கனிந்த நன்றி.

மாய உலகம் said...

கணினி மஞ்சம் said... 91
எனக்குள் ஒரு புத்துணர்வை தந்த பதிவு
//

வாங்க நண்பா... க்ருத்துக்கு நன்றி

Karthikeyan Rajendran said...

உங்களோட சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன், வாழ்த்துக்கள் தாஸ்!!!!!!!

நிரூபன் said...

மீண்டும் வணக்கம் பாஸ்,.
போராடி வாழ்வில் வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க;
ஒவ்வோர் தோல்வியும் வாழ்வின் வெற்றிப் படி என நினைத்துப் பயணம் செய்ய்யும் முருகதாஸ் அவர்களின் வாழ்க்கை எமக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.

மாய உலகம் said...

! ஸ்பார்க் கார்த்தி @ said...
உங்களோட சேர்ந்து நானும் வாழ்த்துகிறேன், வாழ்த்துக்கள் தாஸ்!!!!!!!//

தாஸுக்கு வாழ்த்து சொன்ன பாஸ்.. வாங்க... கருத்துக்கு நன்றி

மாய உலகம் said...

நிரூபன் said...
மீண்டும் வணக்கம் பாஸ்,.
போராடி வாழ்வில் வெற்றி பெற்ற ஏ.ஆர்.முருகதாஸ் பற்றிய அருமையான தகவல்களைப் பகிர்ந்திருக்கிறீங்க;
ஒவ்வோர் தோல்வியும் வாழ்வின் வெற்றிப் படி என நினைத்துப் பயணம் செய்ய்யும் முருகதாஸ் அவர்களின் வாழ்க்கை எமக்கும் ஒரு பாடமாக அமையும் என்பதில் ஐயமில்லை.//

வாங்க நண்பா... விரிவான கருத்துக்கு மனம்கனிந்த நன்றி நண்பா

RAMA RAVI (RAMVI) said...

ராஜேஷ்,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.

மாய உலகம் said...

RAMVI said...

ராஜேஷ்,தங்களின் பதிவு பற்றி வலைச்சரத்தில் குறிப்பிட்டுள்ளேன்,நேரம் கிடைக்கும் பொழுது சென்று பார்க்கவும்.//

தாமதமான வருகைக்கு மன்னிக்கவும்... எனது பதிவை வலைச்சரத்தில் அறிமுக படுத்தியமைக்கு மனம் கனிந்த நன்றி.


Popular Posts

எழுத்தின் அளவை மாற்ற

Related Posts Plugin for WordPress, Blogger...

New Post | Settings | Design | Edit HTML | Moderate Comments | Sign Out